Originally Posted by
mr_karthik
தமிழ் திரைப்படங்களில் எத்தனையோ வகையான டூயட்டுகள் வந்துள்ளன. காதலன் காதலி டூயட் அல்லது கணவன் மனைவி டூயட்தான் என்றில்லை, அண்ணன் - தங்கை டூயட் (உம்: இந்த மன்றத்தில் ஓடிவரும்) அப்பா - மகள் டூயட் (உம்: அன்புள்ள அப்பா உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா) இப்படி பல. ஆனால் சித்தப்பாவுக்கும் அண்ணன் மகளுக்கும் டூயட் வந்திருக்கிறதா?. எனக்குத்தெரிந்து இது ஒன்றுதான். மீண்டும் சொல்கிறேன், எனக்குத்தெரிந்து (ஒருவேளை தெரியாமல் ஏதாவது இருக்கலாம்).
கல்யாண ஊர்வலம் (1970)
நாகேஷ் கதாநாயகனாகவும், கே.ஆர்.விஜயா கதாநாயகியாகவும், மணிமாலா நாகேஷின் அண்ணன் மகளாகவும் நடித்த கருப்பு வெள்ளைப்படம். எஸ்.பி.பி.யும் ஜேசுதாஸும் திரையுலகில் மும்முரமாகி பி.பி.எஸ்.ஸை முற்றிலும் ஓரம் கட்டும் முன் ஜேசுதாஸ் தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பாடிக்கொண்டிருந்த நேரம். சரி இப்பாடலில் ஜேசுதாஸின் குரல் நாகேஷுக்கு பொருந்தியதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் இசை தேவராஜன் ஆயிற்றே. யாருக்காக இருந்தாலும் ஜேசுதாசையும் மாதுரியையும்தானே கொண்டு வருவார். இதிலும் கொண்டுவந்து விட்டார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தன் மணநாளை மனதில் எண்ணி மகிழ்ச்சியுடன் பாட, அவளுடைய சித்தப்பாவும் அந்த குதூகலத்தை எண்ணி பாடலைத் தொடர்வதாக அமைந்த பாடல்.
மாதுரி:
கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மைதடவி
காத்திருக்கும் கன்னிமகள்
காதல்மனம் ஒரு தேனருவி
புது மனையில் புகுந்து மணவறையில் கலந்திருக்க
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....
மாப்பிள்ளை நெஞ்சம் மஞ்சம் - அதில்
மங்கல சங்குகள் கொஞ்சும்
காதலி உள்ளம் வெள்ளம் -அதில்
காதலின் ஓடம் செல்லும்
கை வளையல் குலுங்கிவர கனவு கலந்துவர
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....
ஜேசுதாஸ்:
நெஞ்சமெனும் ஆலயத்தில்
நின்றதெல்லாம் என் அண்ணன் மகள்
என் மனதை தன்னுடனே
எடுத்துச்செல்வாள் அந்த அன்புமகள்
புது மனையில் புகுந்து மணவறையில் கலந்திருக்க
கல்யாண ஊர்வலமோ..... கல்யாண ஊர்வலமோ.....
ஆயிரம் காலத்தை கடந்து
விழி நீரினை கண்கள் மறந்து
அன்பெனும் வானத்தில் பறந்து
நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து
இளம்பருவ மழையில் இரு
புருவம் நனைந்து வர
கல்யாண நாள் வருமோ... கல்யாண நாள் வருமோ...