Originally Posted by
RAGHAVENDRA
டியர் செல்வகுமார்
திருவனந்தபுரம் திரு எஸ்.எஸ்.மணி அவர்களைப் பற்றிய அறிமுகத்திற்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள். தங்களுடைய பணி மெச்சத்தகுந்தது. அந்நாளில் பல்வேறு வார மாத மற்றும் நாளிதழ்களில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றியும் சிவாஜி அவர்களைப் பற்றியும் ரசிகர்கள் தொடர்ந்து கடிதங்கள் எழுதுவது வழக்கம். எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி ஏராளமான வாசகர்கள் எழுதினாலும் திரு எஸ்.எஸ்.மணி அவர்கள் எழுதிய கடிதங்கள் அளவிற்கு வேறு யாரும் எழுதியதில்லை. அதே போல் சிவாஜி பற்றிய கடிதங்கள் ஏராளமான வாசகர்கள் எழுதியுள்ளார்கள். எனக்குத் தெரிந்து சிவாஜி பாஸ்கர், திருவல்லிக்கேணி, சிவாஜி ராஜசேகர், சென்னை-5, ஊமைத்துரை பழநிசாமி பொள்ளாச்சி, குடந்தை சீனிவாச கோபாலன், மற்றும் அடியேன் உள்பட பலர் எழுதியிருக்கிறோம். ஏராளமானவை பத்திரிகைகளில் பிரசுரமாகியள்ளன.
திரு மணி அவர்கள் எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தாலும் நடிகர் திலகத்தின் படங்களையும் பல முறை பாராட்டி எழுதியுள்ளார். ஒரு முறை ஒரு பத்திரிகையில் வெளியான ஒரு சினிமா செய்திக்கு எங்கள் இருவரின் கடிதமும் பிரசுரமாகியிருந்தது.
திரு மணி அவர்களின் புகைப்படத்தையும் அவரைப் பற்றியும் பகிரந்து கொண்ட உங்களுக்கு என் பாராட்டுக்கள்.
அவர் தற்போது நிச்சயமாக 70 வயதைக் கடந்திருப்பார் என எண்ணுகிறேன். முடிந்தால் தற்போதைய அவருடைய உடல்நிலை போன்ற விவரங்களைத் தெரிவிக்க கோருகிறேன்.
அன்புடன்