சதீஷ், நான் அப்போது சென்னையில் இல்லை. திருநெல்வேலியில் படம் வெளியாகி 2 - 3 வாரம் கழித்துதான் -(6 ம் வகுப்பு கோடை விடுமுறையில்) பார்த்தேன். படம் Central திரையரங்கில் 5 வாரம் ஓடியது மட்டும் நினைவு இருக்கிறது.
Printable View
டியர் திரு. ராகவேந்தர், திரு. கார்த்திக், திரு. பம்மலார்,
நானெல்லாம் நடிகர் திலகத்தின் பரம வெறியன், பரம ரசிகன் என்று மட்டும்தான் சொல்லிக்கொள்ள முடியும். நீங்கள் எழுதிய பதிவுகளைப் படித்ததும், நானெல்லாம் ஒன்றுமேயில்லை என்றுதான் தோன்றுகிறது. உங்களைப் போன்ற பல லட்சக்கணக்கான ரசிகர்கள்தான் அவருடைய மிகப் பெரிய பலம். நானும் எங்கள் ஊரிலிருந்த மன்ற உறுப்பினர்களிடையே மிக நெருங்கிப் பழகியிருக்கிறேன்; சில காலம் உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன். உங்களைப் போன்ற பல ரசிகர்களின் அர்ப்பணிப்பையும் பார்த்திருக்கிறேன்; இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்களைப் போன்றோர் இருக்கும் இந்த ஹப்பில் நானும் ஒரு அங்கத்தினன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
அன்புடன்,
பார்த்தசாரதி
டியர் பார்த்தசாரதி,
அருமையான கட்டுரைத்தொடரை சீராகக்கொண்டு சென்று சிறப்பாக முடித்துள்ளீர்கள். நடிகர்திலகத்தின் படங்கள் பிற மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டபோது நேர்ந்த சுவையான செய்திகள் அருமை. சிரமப்பட்டு தொகுத்து அளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
இதுபோன்ற தங்களின் பணி மென்மேலும் தொடரட்டும்.
அத்துடன், நடிகர்திலகத்தின் பாடல் காட்சியைக்கண்டு களிப்பதற்காக நீங்கள் பிரியமாக வைத்திருந்த சைக்கிளையே தியாகம் செய்திருக்கிறீர்கள். அந்த வகையில் உங்களது தியாகமும் ஒன்றும் குறைவானதல்ல.
ரிஷிமூலம், சத்திய சுந்தரம், அமர காவியம், கல்தூண் மற்றும் அப்போதைக்கு வெளியான படங்களைப்பற்றிய நினைவூட்டல் பதிவுகளில் நம் கள நண்பர்கள் அனைவரின் பங்களிப்பும் மிகவும் அருமை. ஒவ்வொருவரும் இப்படங்களைப்பற்றி அழகாக தங்கள் கண்ணோட்டத்தில் பதிப்பித்துள்ளனர். சீரான இடைவெளி இல்லாமல், வழக்கம்போல அடுத்தடுத்து வெளியிட்டதால் வெற்றிவாய்ப்புக்கள் குறைந்தன. இவற்றில் தேறியது கல்தூண் மட்டுமே. அமர காவியம் போதிய அளவு வெற்றியை ஈட்டாமல் போனது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
நடிகர்திலகத்துடன் ரிஷிமூலம், கல்தூண் படங்களில் நடித்த சக நடிகர்களின் சோடையான தேர்வு பற்றிய விவரங்களும் ஒப்புக்கொள்ளக்கூடியதே.
டியர் முரளி,
வழக்கம்போல மதுரை நிகழ்வுகளை சுவைபடத்தந்துள்ளீர்கள். மணியன் குழுவினருக்கு கல்தூண் மூலம் மதுரையில் கிடைத்த மூக்குடைப்பு தேவையான ஒன்று, மகிழ்ச்சிக்குரியதும்கூட.
சிறந்த சிந்தனையாளரான டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியும் கூட மணியனோடு சேர்ந்துகொண்டு ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு ஜால்ரா தட்டியது வேதனையான விஷயம். ஆனால் நடிகர்திலகம் அத்தனை சதிகளையும் வென்றெடுத்தார்.
அவருக்கு ஒரே உறுதுணையாக இருந்தது, அவருக்காக எதையும் செய்யும் ரசிகர்கள் படை மட்டுமே.
டியர் ராகவேந்தர்,
அமரகாவியம் பட நினைவலைகள் மனதுக்கு இதமளிக்கின்றன. ஆனால் அதன் வெற்றிவாய்ப்பு இதமளிப்பதாக இல்லை. நல்ல படம். இப்படத்தை நினைக்கும்போதெல்லாம் 'ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்' என்ற பாடல் மனதுக்குள் ரீங்காரமிடும்.
இரண்டு படங்களும் ஒரு வார இடைவெளியில் ரிலீஸானபோது, பாரதவிலாஸ், ராஜராஜ சோழன் வெளியீடுகளை நினைவுபடுத்தின. எல்லோரும் ரா.ரா.சோழனை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும்போது சந்தடியில்லாமல் பாரதவிலாஸ் வெற்றிக்கனியைத் தட்டிச்சென்ரது போல, எல்லோரும் கல்தூணை எதிர்பார்த்திருக்கும்போது, அமர காவியம் சந்தடி சாக்கில் சிறந்த வெற்றியைப்பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கல்தூணே வெற்றிபெற்றது.
அமர காவியம் படத்துக்கு தாங்கள் டிசைன் செய்ததாக நீங்கள் இங்கு குறிப்பிட்ட பதாகை எப்படி இருந்திருக்குமோ என்று ஆவல் மேலிடுகிறது. என்ன செய்வது?. இப்போது போல இப்படியெல்லாம் ஆவணக்காப்பு செய்யும் வசதிகள் அப்போது இல்லை (உதாரணம்: செல்போன் கேமரா).
நீங்களே மிகவும் சிலாகித்துச் சொல்லும்போது நிச்சயம் அது மிகச்சிறந்த பேனராகத்தான் இருந்திருக்க வேண்டும். சகோதரி கிரிஜா அப்போதே ஆக்டிவாக களத்தில் இருந்தாரா?. ஆச்சரியமாக இருக்கிறது. தவிர உங்கள் பதிவில் நீங்கள் ஸ்ரீபிரியா வீடு என்று குறிப்பிடுவது மாதவியின் வீட்டைதானே?.
மொத்தத்தில் மலரும் நினைவுகள் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகின்றன.
அன்புச் சகோதரி சாரதா அவர்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
ஸ்ரீப்ரியாவுடன் தன்வானத்தை பாடலில் நடிகர் திலகம் நடிக்கும் காட்சியில் காணும் அழகூட்டப் பட்டதூண்கள் போன்று வரையப் பட்டிருந்தது. நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.
திருவருட் செல்வர் சென்னை சாந்தியில் அண்மையில் திரையிடப் பட்டபொழுது ஞாயிறு 17.04.2011 அன்று மாலைக் காட்சியில் அரங்கில் நடைபெற்ற கோலாகலங்களின் ஒளிக்காட்சி தங்கள் பார்வைக்கு...
http://www.youtube.com/watch?v=K4PCubQk3tM
அன்புடன்
டியர் கார்த்திக்,
உங்களது மலரும் நினைவுகள் கண்களைப் பனிக்க வைத்தன. இவை யாவும் இதுவரை நீங்கள் சொல்லாதவை. இதயம்பேசுகிறது பத்திரிகை எரிப்புப்போராட்டம், உண்ணாவிரதப்போராட்டம், கைது, நடிகர்திலகத்தின் கைகளால் உண்ணாவிரதத்தை முடித்தது யாவும் ஆச்சரியப்பட வைத்தன. நடிகர்திலகத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவருக்குப்பின்னும் இதுபோன்ற உணர்வுமிக்க சம்பவங்கள் ஒளிந்திருக்கும்.
(என் தந்தையாரும் ஒரு முறை ராணி பத்திரிகையில் வ்ந்த "சிவாஜி கணேசன் - கறுப்பு ஆடு" என்ற கட்டுரைக்காக அந்தப்பத்திரிகையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி, மறுநாள் விடுதலையானார். அதுபோல ஒருமுறை விலைவாசி உயர்வை எதிர்த்து நடந்த ஊர்வலத்தில், சைக்கிள் ரிக்ஷாவில் தோசை சுட்டு விற்கும் வித்தியாசமான போராட்டத்தை செய்தார்).
இதுபோல அன்றைய சிவாஜி ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தலைவனுக்காக சிறியதோ, பெரியதோ தியாகம் செய்து இயக்கத்தை வளர்த்தனர். சிவாஜி படை என்பது வெறுமனே விசிலடித்து வளர்ந்த கூட்டம் அல்ல. அந்த வகையில் உங்கள் தியாகத்தைப்போற்றுகிறேன்.
சத்யபாமா பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெற இருக்கும் இளைய திலகம் பிரபு அவர்களுக்கு நமது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
http://www.metromatinee.com/gallery/...anesan7189.jpg
அன்புடன்