Originally Posted by
mr_karthik
அன்புள்ள முரளிசார்,
பாராட்டுக்கு நன்றி. குறிப்பிட்ட இந்த சம்பவங்கள் பற்றி இதுவரை சொல்லவில்லையே தவிர, பல ஆண்டுகளாக நடிகர்திலகத்தின் ரசிகர்மன்ற உறுப்பினராகப் பணியாற்றியதையும், சாந்தி வளாக ரசிக நண்பர்களுடன் பத்தாண்டுகளுக்கும் மேலாக நேரடியாக செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததையும், அத்தகைய காலகட்டத்தில் நடிகர்திலகத்தின் திரைப்பட வெளியீடுகளின்போது நடந்த சம்பவங்களையும் எல்லோருடனும், குறிப்பாக ராகவேந்தர் சார் அவர்களுடன் பலமுறை இத்திரியில் வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டிருக்கிறேன். குறிப்பாக அவருடன் பகிர்ந்துகொள்ளக் காரணம், அவரும் அப்போது அங்கு நடந்தவைகளுக்கு சாட்சியாக இருக்கிறார் என்பதுடன், எனக்குத்தெரிந்த பல சாந்தி வளாக நண்பர்களை அவருக்கும் தெரியும். இதுபற்றி இதே பாகத்தில் சில பக்கங்களுக்கு முன் நாங்கள் பேசியிருப்பதை பார்த்திருப்பீர்கள்.
அடுத்து கழக அனுதாபி என்று நீங்கள் சொல்லியிருப்பதற்கான விளக்கம். நான் எப்போதும், இப்போதும் காங்கிரஸ் அனுதாபிதான், இடையில் தமிழக முன்னேற்ற முன்னணி தொண்டனாக இருந்த காலம் நீங்கலாக, எப்போதும் காங்கிரஸ்காரன்தான். இப்போது நான் பதிப்பவை தி.மு.கழக ஆதரவுப் பதிவுகள் அல்ல. ஜெயலலிதா எதிர்ப்புப்பதிவுகள். ஜெயலலிதா எதிர்ப்புப்பதிவு எனும்போது, அது தானாகவே தி.மு.க. ஆதரவு பதிவுகளாகத் தோற்றம் தரத்துவங்கி விடும், தமிழக அரசியலில் இருப்பது இரண்டே சாய்ஸ் என்பதனால். தவிர, கருணாநிதி பற்றி எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், திரு மு.க.ஸ்டாலின் மீதுள்ள தனிப்பட்ட அபிமானம். (இவற்றையெல்லாம் பறிமாறிக்கொள்ள இந்த திரி சரியான இடமில்லையாதலால் வேறு இடத்தில் தொடருவோம்).
தவிர நான் இப்போது பணி நிமித்தம் வெளி மாநிலத்தில் இருப்பதால் (கர்னாடகாவிலுள்ள ரெய்ச்சூர்) என்னுடைய ஆதரவாலோ, எதிர்ப்பாலோ ஒரு ஓட்டுக்கூட எந்தக்கட்சிக்கும் கூடவோ, குறையவோ போவதில்லை. நான் சென்னை வரும்போது உங்கள் அனைவரையும் அவசியம் சந்திக்க வேண்டும்.
என் முந்தைய பதிவைப்பாராட்டிய ஜோ, ராகேஷ், பார்த்தசாரதி, சாரதா, ராகவேந்தர் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.