அன்புள்ள வாசுதேவன் சார்,
'தானே' புயல் தங்கள் பகுதிகளில் ஏற்படுத்திய பாதிப்புக்களின் நிழற்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் நெஞ்சத்தை கலங்கடித்தன. எவ்வளவு கோரத்தாண்டவம். இதிலிருந்து மக்க்ள் மீண்டு வந்து இயல்பு நிலைக்குத்திரும்ப பிரார்த்திக்கிறோம். சற்று நேர கோரப்புயலால் பல ஆண்டுகள் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்த கொடுமை இனியொருமுறை நிகழாவண்ணம் அனைவரையும் இறைவன் காப்பாற்றட்டும். பலநூறூ ஏக்கர் நிலங்களில் வேரோடு பிடுங்கியெறியப்பட்ட முந்திரி மரங்கள், இன்றைக்கு மீண்டும் பயிரிடப்பட்டாலும் பலன் தர குறைந்தது பத்தாண்டுகள் ஆகும் என்ற உண்மைநிலையறியும்போது, அதனால் பாதிப்படைந்த மக்களின் வாழ்வாதாரம் திடுக்கிட வைக்கிறது. அரசுகள் தாயாக இருந்து அவர்களைக் கரைசேர்க்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.
தங்கள் பதிவுகளுக்கு நன்றி..