ராஜேஷ் சார்,
வருக!வருக! என தங்களை 'மனதை மயக்கும் மதுரகானங்கள்' திரிக்கு பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
தங்களின் சுவைமிகு பதிவுகளை இங்கே இட்டு திரிக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்று திடமாக நம்புகிறேன்.
அன்பு நன்றிகள்.
Printable View
எல்லோரையும் கவர்ந்த 'உனக்கென்ன மேலே நின்றாய்' பாடலை உறக்கத்தின் தருவாயில் தந்து மகிழச் செய்ததற்கு நன்றி ராகவேந்திரன் சார்.
இன்றைய ஸ்பெஷல் (3)
மிக மிக அபூர்வ பாடல்.
1955 -ல் வெளிவந்த இந்திப்படம். 'உரன் கடோலா'.
நௌஷாத் என்ற அற்புத இசையமைப்பாளரின் மிரள வைக்கும் இசை மற்றும் பாடல்கள் இப்படத்தில் ஆட்சி புரிந்தன. இசைக்குயில் லதாவின் (நடிகர் திலகத்தின் உடன்பிறவா சகோதரி) இளங்குருத்துக் குரல் நம்முடைய இரத்த அணுக்களில் அப்படியே ஊடுருவும். ஆனால் வரிகளை புரிந்து கொள்வது சிரமம். எப்படியானால் என்ன! அந்த காந்தக் குரலும், கிறங்கடிக்கும் இசையும் போதுமே! திலீப் இப்படத்தின் நாயகன். நிம்மி நாயகி.
இப்படம் அதற்கடுத்த வருடத்தில் 'வானரதம்' என்ற பெயரில் 'டப்' செய்யப்பட்டு தமிழில் வெளிவந்தது.
இலங்கை வானொலி இப்பாடலை தினமும் அப்போதெல்லாம் ஒலிபரப்பி நம் இதயத்தில் ஆழமாக ஊடுருவியது.
http://i1.ytimg.com/vi/Ufu-xrQ7IOE/hqdefault.jpghttps://i1.ytimg.com/vi/4VJ_4dlZpJo/hqdefault.jpg
இந்தியில் இப்பாடலைப் பாடியிருந்த லதாவே தமிழிலும் இப்பாடலைப் பாடியதுதான் இப்பாடலின் மகத்துவமான மகோன்னதமான விஷேசம். இந்தியைப் போலவே தமிழிலும் மிகவும் பிரபலமடைந்த பாடல். லதா என்ற அந்த இசை சாம்ராஜ்யத்தின் ராணி இந்த ஒரே பாடலின் மூலம் தமிழர்களின் மன சிம்மானங்களில் அமர்ந்து கொண்டார்.
கம்பதாசன் என்ற கொம்பர் தமிழில் டப்பிங் ஆன படங்களுக்கெல்லாம் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தார்.
அவர் ஹிந்தி வெர்ஷனுக்கு தகுந்த மாதிரி (More Saiyan Ji Utrenge Paar) தரம் மற்றும் பொருள் குறையாமல் இப்பாடலை அற்புதமாக தமிழில் எழுதி இருந்தார்.
http://i1.ytimg.com/vi/9QPSqN7U02c/hqdefault.jpg
எந்தன் கண்ணாளன்
எந்தன் கண்ணாளன்
கரை நோக்கிப் போகிறான்
நதியே நீ மெல்லப் போ.
நிறைபுனல் நதியே
ஓடமும் பழமை
நீரின் சுழல் உன்னைப் பாடுதே
கண்ணாளன் (திலீப்) கப்பலில் தன் ஜோடியுடன் அமர்ந்திருப்பார். அவரை ஒருதலையாய்க் காதலிக்கும் நிம்மி சோக உள்ளுணர்வு கொண்டு (தலையில் ஆபரேஷன் நடக்குமுன் மொட்டையடித்து கவர் பண்ணுவார்களே! அந்தக் கோலத்தில் பரிதாபமாக இருப்பார்) நதி வேகமானால் காதலன் துன்புறக்கூடும் என்று நதியை மெதுவாகப் போகச் சொல்லி துடுப்புகள் போட்டு, விண்ணப்பம் விடுத்தபடி பாடுவார்.
இந்தப் பாடலின் ஒளிப்பதிவுத் தரம் அப்போது மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. ஆண்களும் பெண்களுமாக கப்பலை' ஹையாஹோ ஹைய்யர ஹையா ஹையாஹோ' என்று துடுப்பிட்டபடி ஓட்டுவதும், நிம்மி மெய்மறந்து பாடுவதும் அருமையோ அருமை! (திலீப் வழக்கம் போல முகத்தில் சலனமில்லாமல்)
சாதனை படைத்த கூட்டணி. (நௌஷாத் அலியும், இசைக்குயிலும்)
http://4.bp.blogspot.com/-BTLJxiCJ-L...nd+Naushad.png
சலீல் சௌத்ரி இசையோ என்று நினைப்பவருக்கு ஏமாற்றம். அவருக்கு இணையாக நௌஷாத் பட்டை கிளப்பி இருப்பார்.
இப்பாடலைக் கேட்கும் போது இனம் புரியா இன்பமும், ஒரு மெல்லிய சோகமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நம்முள் இழையோடுவதை பரிபூரணமாக உணர முடியும்.
இனி 'இசைக்குயில்' நம்மை 'வானரத'த்தில் தாலாட்டியபடி அழைத்துச் செல்வார்.
http://www.youtube.com/watch?v=JFHMU...yer_detailpage
வாசு,
திரி படு சுவாரஸ்யம். பழைய ஹிந்தி பட டப்பிங் பாடல்கள் படு புதுமையான பதிவு .தெலுங்கிற்கு புரட்சி தாசன் போல் ஹிந்திக்கு கம்ப தாசன்.தொடரு.நான் இந்த திரியின் முழு நேர அங்கத்தினன்.(ஊழியன்)
சிந்து பைரவி.(என் ஊன் உயிருடன் கலந்த ராகம்)
இன்னும் எனக்கு பிடித்த இந்த ராக பாடல்கள்.
காற்றினிலே வரும் கீதம்- மீரா.
நெஞ்சினிலே நெஞ்சினிலே-தில் சே.
நிலவு பாட்டு நிலவு பாட்டு -கண்ணுக்குள் நிலவு.
வளை யோசை கல கல கலவென -சத்யா.
பேசுவது கிளியா -பணத்தோட்டம்.
துணிந்த பின் மனமே-தேவதாஸ்.
தெய்வம் இருப்பது எங்கே-சரஸ்வதி சபதம்.
வாராயென் தோழி வாராயோ-பாசமலர்.
மணியே மணிக்குயிலே-நாடோடி தென்றல்.
எங்கே எனது கவிதை- கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.
எங்கே நீயோ நானும் அங்கே- நெஞ்சிருக்கும் வரை.
சினிமா காரர்கள் அடித்து துவைத்த ராகங்கள்.(மெல்லிசைக்கு தோது)
கல்யாணி.
மோகனம்.
சண்முக பிரியா.
சங்கராபரணம்.
சிவரஞ்சனி.
சுபபந்துவவராளி.
பேஹாக் .
நட பைரவி.
சாருகேசி.
கானடா.
கீரவாணி.
காப்பி.
அடுத்து சுபபந்துவராளி.
வாசு சார்..எந்தன்கண்ணாளன் பாடல் சூப்பர்.. நல்ல தகவல்கள்
சி.பை ராகம் கோபால் சார்..இவ்ளோ பாட்டா..மோஸ்ட் பாடல்கள் எனக்கும் பிடிக்கும்..குறிப்பாய் எங்கே எனது கவிதை..
ராகங்களைப் பற்றிக் கேட்க ஆவலாக உள்ளோம் என்று சம்பூர்ண ராமயணப் பாட்டுப் போல நாங்களும் ஆவலாக உள்ளோம்..தொடருங்கள்
கோ,
நன்றி!
ஓஹோ! ஓஹோஹோ!
நாங்கள் ஒரு ட்ராக்கில் போனால் நீங்கள் தங்களுக்கே உரித்தான வேறு பாதையில் பீடுநடை போடுகிறீர்கள். எனக்கு ராகங்களைப் பற்றி சுத்தமாகத் தெரியாது. ஆனால் இசையை பாடல்களை ரசிப்பதில் குறைவில்லை.
என்றாலும் உங்கள் இசையறிவு, ராகங்கள் பற்றிய அறிவு வியப்படையச் செய்கிறது.
நமக்கு வாய்த்திருக்கும் அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்....ஆனால் வாய்தான்.....:)
நன்றி சின்னக் கண்ணன் சார்,
திரியைப் பெருமைபடுத்தும் விதமாக உள்ள தங்கள் பதிவுகள் நகைச்சுவை இழையோட வெகு நளினம்.
அதுவும் உங்கள் சின்ன வயசு அவதார் பட விளக்கம் படித்து இரவு முழுதும் விழுந்து விழுந்து சிரித்தேன். கனவில் நல்ல நேரமாகவே வருகிறது.
கார்த்திக் சார் மற்றும் நண்பர்களுக்கு,
இந்தத் திரியை மேலும் மெருகூட்ட இன்னொரு சிறு முயற்சி. இசைத்துறை சம்பந்தப்பட்டவர்களின் பத்திரிகை பேட்டிகள், புகைப்படங்கள், பாடலுக்கு நடித்த நடிக, நடிகையரின் ஆவணத் தொகுப்புகள், அவர்களின் பேட்டிகள், பழைய பத்திரிக்கையின் இசைப் பக்கங்களை இத்திரியில் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
கார்த்திக் மிகுந்த சந்தோஷமடைவீர்கள் என்று தெரியும்.
மற்ற நண்பர்களும் கருத்தைக் கூறலாம். பின்னர் முடிவு செய்யலாம்.