Sirappu Nizharpadam.
http://i37.tinypic.com/25jy1bn.jpg
Printable View
Sirappu Nizharpadam.
http://i37.tinypic.com/25jy1bn.jpg
திரு சவுரி சார்
நீங்கள் பதிவிட்ட ஒரு தொலைகாட்சியின் '' மிக சிறந்த நடிகர்கள் '' பட்டியல் சற்றும் பொருந்தாத ஒன்றாகும் .
இந்திய திரைப்பட நடிகர்கள் என்று பொதுவாக எடுத்து கொண்டால் பல்வேறு மொழிகளில் பல நடிகர்கள் ஒரு
குறிப்பிட்ட கால கட்டங்களில் சில குறிப்பிட்ட படங்களில் மட்டும் மிகவும் சிறப்பாக நடித்து பெயர் வாங்கி
இருப்பார்கள் .
தமிழ் - கன்னடம் - தெலுங்கு - மலையாளம் - இந்தி - பெங்கால் போன்ற மொழி படங்கள் - அதில் நடித்த நடிகர்கள்
என்று நடு நிலையோடு பார்த்தால் ஒரு சில நடிகர்களே புகழ் அடைந்து மக்களால் படிப்படியாக
மறக்கப்பட்டு வந்துள்ளனர் .
உலகளவில் இன்றும் ரசிகர்களாலும் , மக்களாலும் ,நேசிக்கபடுவர்களில் முதலானவர் நமது மக்கள் திலகம் .
இந்த அடையாளம் ஒன்றே போதும் .எந்த ஒரு தொலைகாட்சியின் பாராட்டும் தேவையில்லை .
மக்கள் திலகம் புகழ் ஓர் இரவில் கிடைத்தது அல்ல .
கடுமையான உழைப்பு - நீண்ட போராட்டம் - தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தக்க வைத்து முன்னேறி
1950 களில் கதாநாயகனாக புகழ்பெற்று -1977 வரை திரை உலகை ஆண்டு பின்னர் 10 ஆண்டுகள் தமிழ்
நாட்டை ஆண்டு- மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் புகழுடன் வாழும் தெய்வம் மக்கள் திலகம் .
மக்கள் திலகத்தின் கலை - அரசியல் வெற்றியினை ஜீரணிக்க முடியாதவர்கள் - புலம்பும் கட்டுரைகளும்
கவிதைகளையும் - பார்த்தால் சிரிப்புதான் வருகிறது .
சாதனைகளுக்கு சொந்தக்காரர் எம்ஜியார் .
வாழும் சரித்திரம் - எம்ஜியார் .
ஏழைகளின் கடவுள் - எம்ஜியார் .
எதிரிகளுக்கும் நண்பன் - எம்ஜியார்
இன்றும் பலரது வாழ்வில் வளம் சேர்க்கும் எம்ஜியார் .
இப்படி கூறி கொண்டே போகலாம் சவுரி சார்
நீங்களே சொல்லுங்கள் ....
மக்கள் திலகம் பற்றி யார் குறைத்து மதிப்பிட்டாலும் அது சரியல்ல என்று அறிவீர்கள் அல்லவா ?
'' படித்த - மிகவும் படித்த - அறிவு ஜீவிகளுக்கு தனிப்பட்ட முறையில் தான் விரும்பிய , நேசிக்கும் நாயகன்
சாதிக்க முடியாத சாதனைகளை விட இன்னொருவர் அதிகம் பெற்று புகழ் அடைந்தால் அந்த புகழை
விளம்பரத்தால் வந்தது
திராவிடத்தால் வந்தது
பணம் கொடுத்து வாங்கியது
நடிக்கவே தெரியாது
என்றெல்லாம் எதிர் மறை தாக்குதல் நடத்தி மனதளவில் சந்தோஷப்படும் கனவான்கள் பற்றி
என்ன சொல்ல ?
உண்மையான ரசிகன் உள்ளவரை மக்கள் திலகம் என்றென்றுமே எதிலுமே முதல்வர் .
இனிய நண்பர் வாசுதேவன் சார்
பெரிய இடத்து பெண் - நிழற் படங்கள்
10வது வார விளம்பரம்
அசத்தி விட்டீர்கள் நன்றி . நன்றி
உலகம் சுற்றும் வாலிபன் -1973
11.5.2013
40 வது ஆண்டு நிறைவு நாள் .
சில வரி செய்திகள் .......கேள்விபட்டதும் - கேள்வி படாததும் .
1970ல் ஜூன் மாதத்தில் முதல் விளம்பரம் வந்தது .
''உலகம் சுற்றும் தமிழன் ''.
இயக்கம் - ப . நீலகண்டன் .
இசை - குன்னக்குடி வைத்தியநாதன் .
பின்னர் அறிவிப்பு
'' உலகம் சுற்றும் வாலிபன் ''
இயக்கம் - எம்ஜியார் .
இசை - மெல்லிசை மன்னர் .
லக்ஷ்மி - ஸ்ரீவித்யா - ராஜஸ்ரீ - முதலில் நடிப்பதாக இருந்தது .
பின்னர் மஞ்சுளா - லதா - சந்திரகலா என்று முடிவானது .
மெல்லிசை மன்னரின் இசையில் இரவும் பகலும் பதிவான பாடல்கள் .
பாடகர் திலகம் டி எம் எஸ் - எஸ் பி பாலசுப்ரமணியம் - ஜேசுதாஸ் - சுசீலா - ஜானகி - ஈஸ்வரி இனிய குரல்களில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டது .
உலகம் சுற்றும் வாலிபனோடு .......
நினைக்கும் போது தனக்குள் ...சிரிக்கும் போது
இரண்டு பாடல்கள் இடம் பெறவில்லை .
படம் முடியும் தருவாயில் சீர்காழியின் வெண்கல குரலில்
''நமது வெற்றியயை நாளை சரித்திரம் சொல்லும் '' பாடல் பதிவானது .
1971 - ஜூன் மாதத்தில் முதல் முறையாக எச் எம் வி இசைத்தட்டு வெளியானது . பரபரப்புடன் விற்பனையானது .
1971- பொம்மை சினிமா மாத இதழில் மக்கள் திலகம் தனது
வெளி நாட்டு படப்பிடிப்பு அனுபவ தொடரை ''திரைக்கடல் ஓடி திரைப்படம் எடுத்தோம் '' என்ற தலைப்பில் அக்டோபர்
1972 வரை எழுதினர் .
1970 செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்கி 1973 ஏப்ரல் வரை
பல தடங்கல்கள் - அதிகார மிரட்டல் - நெருக்கடி - போன்ற தொல்லைகளை தாண்டி மக்கள் திலகம் படத்தை முடித்து
11.5.1973 அன்று சென்னை மற்றும் 36 இடங்களில் 39 அரங்கில் வெளியிட்டார்.
''1931-1973 வரை தென்னிந்திய பட வரலாற்றில் முதல் முறையாக இந்த படம் எல்லா சாதனைகளை முறியடித்து 1977 வரை no -1 இடத்தில இருந்தது உலகமறிந்ததே .
உலகம் சுற்றும் வாலிபன் படம் 40 வருடங்களை கடந்தாலும்
இன்றும் எண்ணி பார்த்தால் .............
1970 களில் மக்கள் திலகம் தொழில் நுட்பங்களை மிகவும் அருமையாக கையாண்டிருப்பார் .
திரைக்கதை - எடிட்டிங் - பின்னனி இசை - காமிரா - பாடல்கள்
என்று எல்லா துறையிலும் தனது திறமைகளை பதித்திருப்பார் .
இரட்டை வேடம் - நான்கு நாயகிகள் - அசோகன் - நம்பியார் - மனோகர் - கோபலகிருஷ்ணன் - ஜஸ்டின் -
நாகேஷ் - தேங்காய் ஸ்ரீனிவாசன்
என்ற நட்சத்திர பட்டாளம் .
மக்கள் வெள்ளத்தில் எக்ஸ்போ -70 படப்பிடிப்பு
விறுவிறுப்பான காட்சிகள்
மக்கள் திலகம் உண்மையிலே சகலகலா வல்லுநர் என்று நிருபித்த படம் .
AGAIN AND AGAIN NADODI MANNAN STRIKES AT KOVAI CREATING RECORDS.
http://i43.tinypic.com/256eana.jpg
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் குறித்த தகவல்கள் அனைத்தும் அருமை.
வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படங்களிலேயே பெரும் வெற்றி பெற்ற தமிழ்ப்படம் உலகம் சுற்றும் வாலிபன் மட்டும் தான். பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சிறந்த தொழில் நுட்பத்திலும் மக்கள் திலகத்தின் இயக்கத்தில் வந்து மாநகரம், நகரம் மற்றும் சிறு நகரம் என்று அனைத்து சென்டர்களிலும் வசூலில் சாதனை புரிந்த திரைப்படம்.
http://srimgr.files.wordpress.com/20...eatre_list.jpg
வினோத் அவர்களே..வாழ்த்துக்களுக்கு நன்றி
Thanks Eswe but this was not the image I was talking about although it was from the same film. MGR appeared very handsome with his usual signature smile complemented with the loose scarf around his neck. But that unbuttoned trousers made him a laughing stock. That is the still I was talking about.
I learnt from reliable sources in Kodambakkam that the film 'Panakkari' where MGR acts as a villain is no more in the film archives as it was deliberately destroyed so as to preserve MGR's image as the erstwhile hero. Can anyone in the know throw some light?
Panakari was re-released in 1982 period in my place when the same MGR was the Chief Minister of Tamil Nadu and how that movie might have released when he had destroyed.
That Panakari and some V.N.Janaki acted movies were talk of Kodambakkam people who mediates in movie rights. I know them very well Sir.
It was one late evening when dawn was quickly transforming into dusk somewhere in October 1970 in the heart of Kuala Lumpur, the Malaysian capital city. I worked late in office and decided to call it quits for the day and walked across the busy Chinese-dominated Bukit Bintang area for a quick cup of tea. Thereafter I crossed the road back at the traffic signal junction to get to the bus stop. Whilst crossing I saw a cream colored Rolls Royce car waiting at the traffic lights which I just glanced. Suddenly it dawned on me that the figure seated in the back seat of the car looked very familiar. I took a few backward steps out of curiosity to confirm my curiosity. Although it was already early night time that figure was shiny with its unique rosé apple face and the gold-colored pattu shirt. That was enough to brighten the night at that spot. I quickly tapped on the window screen which was opened by none other than MGR himself. Those days the windows have to be wound down manually. I was shocked, petrified and couldn't believe my eyes. I immediately stretched out my right hand and he stretched his and gave me a warm and friendly grip. I could feel his thick and muscular palm radiating a wonderful friendly energy into me. He spoke very briefly to me but I cannot exactly recall what were the words because I was on cloud nine at that electric moment. Without wasting anytime I asked him for his autograph and he asked me for my fountain pen which was displayed in my upper pocket. I quickly handed it to him and he again asked me for a paper. At that time I only had a receipt as acknowledgement to develop a roll of film in the photo studio. Without hesitating further I gave him that and after smiling at me for giving an 'inferior' piece of pink-coloured paper he reversed the receipt deftly with his left palm and with his right hand quickly scribbled the words 'Endrum Anbudan - Unggal M.G. Ramachandran' in Tamil. He did not sign it as 'MGR' but in his gull name. By this time the traffic lights changed to green and in the haste MGR accidentally dropped my pen onto his lap. Sensing that his car was about to move he quickly lifted up his sandal-colored pattu veshti to locate the pen. Alas, it was no where to be found. But he was magnanimous enough to blurt out 'mannichudunga' in his post-surgery gruff voice with his palms clasped as though seeking forgiveness.
Only when the Rolls Royce started to move did I realize that Manjula, Chandrakala and Latha were sharing the back seat with him. In the front was Nagesh, Ashokan and Tan Sri Krishnan. The latter is a prominent local film maker and was the official in attendance to MGR and his troupe when they visited Malaysia for the 'Ulagam Sutrum Vaaliban' shoot.
While I was walking back to the bus stop in a delirium-like state after being mesmerized with the sudden and surprise meeting with the legend I saw a huge crowd further down the road. It seemed MGR was scheduled to attend a private dinner function in a fine dine restaurant in this part of the city hosted by Indian hair saloon owners. The crowd was too massive and MGR had to sneak in from the back entrance and only the lucky ones managed to catch a glimpse of him.
Later, when I showed to my friends and associates the signed autograph of the legend most, if not all, thought of it as a prank I am trying to play on them. Who will ever believe that I was one of the rare and lucky chaps to meet him in, of all the places, in a busy traffic lights junction when the nearly whole South Indian population was waiting for him at the national stadium the following day? Yes, the stadium was filled to the brim with full security given by the Malaysian police force.
Although I lost my sentimental fountain pen in MGR's veshti I deem it an honor. I feel that I was the chosen one because it was because of me MGR had to lift his veshti high up enough to expose his cream-colored legs unwittingly. The warm handshake, the friendly glean in his eyes and the pleasantries he spoke to me is still etched deep in my memory. When I went to take out the developed roll of my film I just showed the receipt to the Chinese shop owner. I told him why I cannot give him back the receipt and he understood my sentiments. Unfortunately this treasure of a priceless piece of paper was lost when my office was burgled about three decades later.
மக்கள் திலகம் அவர்களை நேரில் தற்செயலாய் சந்தித்த அனுபவத்தை மிகவும் அழகாக விரிவாக பதிவு செய்த நண்பர் திரு .மகேந்திரன் அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகத்தின் அணுகுமுறை - மற்றவர்களிடம் நேரில் பழகும் முறை -பற்றி அறிந்து கொள்ள உங்களின் பதிவு மூலம் அறிய முடிகிறது .
மக்கள் திலகம் என்ற பட்டம் எந்த அளவிற்கு அவருக்கு பொருந்தும் என்பதை இந்த கட்டுரை நிரூபிக்கிறது .
11.5.1973
உலகம் சுற்றும் வாலிபன் தமிழகத்தில் நடத்திய . சாதனை துளிகள் .
தமிழ் நாட்டில் 36 இடங்களில் 39 திரை அரங்கில் வெளியானது .
39 அரங்கிலும் 50 நாட்களை கடந்தது .
25 அரங்குகளில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .
30 அரங்குகளில் 75 நாட்களை கடந்தது .
20 அரங்குகளில் 100 நாட்களை கடந்தது .
4 அரங்குகளில் வெள்ளி விழா ஓடியது .
மதுரை - திருச்சி நகரம் - 200 நாட்களை கடந்தது .
1941-இல் வெளிவந்த எம்ஜியார் அவர்கள் நடித்த 'சாயா' படத்தின் அபூர்வ விளம்பரம்.
http://sangam.org/wp-content/uploads...nouncement.jpg
KAVALKARAN -1967
SUPER FIGHT SCENE
http://youtu.be/H3fyRJcQ6ok
Dear Sir,
A very nice compilation of events and statistics of Makkal Thilagam Starrer Ulagam Sutrum Valiban especially on the multiple hindrances he faced and problems that was deliberately created for him by once his own people of the DMK.
I am sure, you will also remember, while competition between artists was set aside and Nadigar Thilagam the then president of Nadigar Sangam, declared openly his support to Makkal Thilagam mentioning if that harassment continues by mis using the power of DMK, his theater would not hesitate to screen Ulagam Sutrum Valiban.
I am quite surprised even now, how come this magnanimity of Nadigar Thilagam was never quoted by anybody? This shows, the nature of others Vs nature of Nadigar Thilagam and how NT's various good deeds was deliberately put to back-burner on many occasions.
Not only Ulagam Sutrum Valiban was the highest grosser breaking all the previous records of Tamil Film Industry, Ulagam Sutrum Valiban turned out to be the highest grosser retaining no.1 position among Makkal Thilagam MGR Films till 1977 be it is Tamilnadu based collection (or) Chennai based Collection. None of the Makkal Thilagam Films post Ulagam Sutrum Valiban could manage to break the record of Ulagam Sutrum Valiban.
It is one of my favorite movie too as you are aware of.
I am quite surprised even now, how come this magnanimity of Nadigar Thilagam was never quoted by anybody? This shows, the nature of others Vs nature of Nadigar Thilagam and how NT's various good deeds was deliberately put to back-burner on many occasions.
sowri sir
only kumudham weekly magazine quoted the matter in cine news at the time of usv released in may 1973.
படம் சொல்லும் பாடம்
http://i44.tinypic.com/wrxl45.jpg
மரம் நடுவீர்..மழை பெறுவீர்...பிராண வாயு பெற்று உயிர் வாழ்வீர்..
பெருகி வரும் வாகனங்களாலும், தொழிற்சாலைகளில் ஏற்படும் புகையினாலும் வளிமண்டலத்தில் கரியமில வாயு அதிகரித்து பிராண வாயு குறைந்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.அதே போல் மரங்களின் குறைவினால் மழையும் பொய்த்து போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறது..அதனால் அரசாங்கமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்..இப்படி சத்தமில்லாமல் புதுச்சேரியில் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஒருவர் சுமார் 20 ஆண்டுகளாக மரங்களை நட்டு வருகிறார்.இவர் பெயர் எம்ஜிஆர் சிவா...இவர் சொந்தமாக, மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார்..அப்படி வளர்த்த கன்றுகளை கோயில்கள் மற்றும் பள்ளிகளில், பூங்காக்களில் தன் நண்பர்களுடன் சென்று நடுகிறார்..இவர் சொந்தமாக புதுச்சேரியில் நட்ட மரங்கள் 20 ஆயிரத்தை தாண்டும்..லட்சக்கணக்கான மரங்களை வழங்கியிருக்கிறார்...அந்த மரங்கள் தழைத்து வளர்ந்து இன்னும் இவர் புகழ் பாடுகின்றன..மேலும் இவர் அன்னை தெரசா அவர்களை சந்தித்து நினைவு பரிசு வழங்கி இருக்கிறார்..
இவருக்கு எப்படி மரக்கன்று நடுதலில் இந்த ஆர்வம் வந்தது என்று கேட்டபோது அவர் கூறியது...நான் சிறு வயதிலிருந்தே எம்ஜிஆரின் தீவிர ரசிகன்..அவரது நற்பண்புகள், கொடைத்தன்மை என்னை மிகவும் கவர்ந்தது..அவரை போல நிறைய செய்யாவிட்டாலும் நம்மால் முடிந்த எதாவது செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தினால் அவரது பெயரிலே 'பாரத ரத்னா எம்ஜிஆர் சமூக நலப்பேரவை என்ற அமைப்பை தொடங்கினேன்..அந்த அமைப்பின் மூலம் நிறைய நற்பணிகள் செய்து வருகிறேன்.அதில் முதன்மையாக மரம் நடும் சேவையை செய்து வருகிறேன்..மேலும் இந்த அமைப்பின் மூலம் ரத்த தானமும் செய்து வருகிறேன்..இதற்கெல்லாம் மூல காரணம் நான் தெய்வமாக வழிபடும் எம்ஜிஆர்தான் என்று கூறுகிறார்..மேலும் இவர் வேறு வீட்டுக்கு மாறும்போது, எந்த தெய்வத்தின் படத்தையும் வைக்காமல் எம்ஜிஆர் படத்தை மட்டும் வைத்து கற்பூரம் ஏற்றி குடி போனார் என்பதை அவர் சொல்லும்போதே உணர்ச்சிவசப்பட்டு போகிறார்.மேலும் இவரது தோட்டத்தில் அடிபடும் பறவைகள் நிறைய வந்து விழுகின்றன..அந்த பறவைகளை பாதுகாப்புடன் கூண்டில் வைத்து சிகிச்சை செய்து, தினமும் அவற்றிற்கு உணவு கொடுத்து பராமரிக்கிறார்..இவற்றில், பருந்து மைனா குயில்கள், புறாக்கள், பச்சை கிளில்கள் இன்னும் பல...குணமானதும் அவற்றை வானில் பறக்க விடுகிறார்..இவர் செய்யும் சேவையை மறக்காத பறவைகள் இவர் தோட்டத்திற்கே வந்து கூவும் காட்சிகள் இன்றும் மனதை கொள்ளை கொள்ளும்..இப்போது கூட அவர் கூண்டில் ஒரு பருந்து சிகிச்சை பெற்று வருகிறது..இவர் போன்ற லட்சக்கணக்கான எம்ஜிஆர் பக்தர்களை தந்த நமது தெய்வத்தை போற்றுவோமாக..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நிச்சயம் தவறுதான் எஸ்வி சார்...யாரையும் யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஒவ்வொரு நடிகருக்கும் அவருடயதான தனித்தன்மை நிச்சயம் உண்டு.
மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் மட்டுமே அனைத்து திரை உலக துறைகளிலும் தலைசிறந்து விளங்கினார்கள் என்பது யாராலும் மறுத்து பேச முடியாது.
மக்கள் திலகம் அவர்கள் நல்ல நடிப்பையும் வசனம் பேசும் புலமையும் பெற்றவர் என்பது உண்மையான ஒத்துகொள்ளகூடிய ஒரு விஷயம் தான்..உதாரணம் : பாசம், பெட்ட்ரால்தான் பிள்ளையா, காஞ்சி தலைவன், நாடோடி மன்னன், மதுரை வீரன் etc .
அதேபோல நடிகர் திலகம் அவர்களும், காதல், நடனம் மற்றும் சண்டைகாட்சியில் பட்டையை கிளப்பியவரே. அதையும் யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. காதல் காட்சிகள், படங்கள் ஆயிரம் வந்தாலும்..காதல் காட்சிகளில் திறமை காட்டிய பல நடிகர்களை விட, அவர்கள் படங்களை விட என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பது ஒரே ஒரு வசந்த மாளிகை தான் என்பது நடிகர் திலகத்தின் மிகபெரிய எதிரி கூட ஒத்துகொள்வார்கள். அதே போல வாள்பயிர்ச்சி, குதிரையேற்றம், சிலம்பம், மற்றும் மசாலா சண்டைகாட்சிகள் இதிலும் கூட நடிகர் திலகத்தின் வல்லமை, அனைவருக்கும் புரியவைத்த ஒன்று...உதாரணம் : காத்தவராயன், உத்தமபுத்திரன், என்தம்பி, சிவந்த மன், தர்மம் எங்கே, தங்கசுரங்கம், ராஜா மற்றும் பல படங்களை கூறலாம்.
இதில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால், MGR என்றால் ஒரு மக்களை கவரும் மசாலா மற்றும் Entertainment வகையை சேர்ந்த திரைப்படம் என்ற ஒரு formulavai தயாரிபாளர்களும், விநியோகஸ்தர்களும் வைத்திருந்தார்கள் அந்த வட்டத்தை விட்டு அவர்கள் வர விரும்பவில்லை.
அதைப்போல நடிகர்திலகத்தை எடுத்துகொண்டால் நல்ல ஒரு குடும்ப படம், இதிகாச சரித்திர காவியங்கள், வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்கள், தெய்வாம்சம்கொண்ட படங்கள் இதை தான் பெரும்பாலும் தயாரிபாளர்களும் விநியோகஸ்தர்களும் விரும்பினார்கள்..
இது மக்கள் திலகத்தின் குற்றமோ அல்லது நடிகர் திலகத்தின் குற்றமோ அல்ல...ஆயினும் அவர்கள் இருவருமே தங்களுடைய Domain அல்லது Speciality விட்டு விலகி அவ்வபோது மற்ற விஷயங்களை கொண்ட படங்களை செய்து வெற்றியும் கண்டிரிகிரார்கள் என்பது தான் உண்மை.
இதை அனைவரும் உணர்ந்தால் வாக்குவாதம் என்ற ஒன்று வராது ! ஆனால் விறுவிறுப்பு என்பது இரு ரசிகர்களுமே இழப்பார்கள்..!
எம்ஜிஆர் சிவாவின் தோட்டம்
http://i41.tinypic.com/33lgsyg.jpg
திரு மாசனம் அவர்களுக்குQuote:
Originally Posted by masanam;1041717[U
நீங்கள் மேற்கூறியதை மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்று நான் இதை கூறவில்லை.
ஆனால், உலகம் சுற்றும் வாலிபனின் வசூலை மட்டும் அல்ல மற்ற வசூல் சாதனை படங்களை கூட மக்கள் திலக சமகால நடிகர் ஒருவர் மட்டுமே உடனுக்குடன்..உடனுக்குடன் முறியடித்து வந்துள்ளார் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
மக்கள் திலகத்தின் வசூல் திறன் பற்றி சந்தேகம் எள்ளளவும் இல்லை. ஆனால் அவர் படம் மட்டும் தான் வசூல் என்ற ஒரு கண்மூடித்தனமான கூற்றை நீங்கள் தயவு செய்து மாற்றிகொள்ளுங்கள். இது என்னுடைய விண்ணப்பம்.
எம்ஜிஆர் சிவாவின் தோட்டத்தின் மரக்கன்றுகள்
http://i39.tinypic.com/2u8htmu.jpg
சவுரி சார்*
குமுதம் - வார இதழ் எப்போதுமே *மக்கள் திலகத்தின் *படங்கள் - செய்திகள் *பற்றி * நடு *நிலையோடு *எழுதியதில்லை .கிண்டலும் கேலியுமாக எழுதிதான் *பழக்கம் .
1973 உலகம் சுற்றும் வாலிபன் - திண்டுக்கல் * இமாலய *வெற்றிக்கு பிறகு *முதல் முறையாக 1973 தீபாவளி அன்று *மக்கள் திலகத்தின் *அட்டைப்படத்துடன் *அவரது *பேட்டியும் *வந்து * குமுதம் விறபனையில் *சாதனை *புரிந்தது .*
கல்கி - ஆனந்த விகடன் - தினமணிக்கதிர் - குமுதம்*
பேசும்படம் -*
நவமணி - நவசக்தி - சுதேசமித்திரன்*
தினமணி - தினமலர் *- தினத்தந்தி *[1967-1972- *1977-1987நீங்கலாக ]
ஆங்கில பத்திரிகைகள் *அனைத்தும்*
மக்கள் திலகத்தின் *படங்களை *பற்றியும் ,எம்ஜியாரை *பற்றியும்*
அவரது ரசிகர்களை பற்றியும் சற்று *நெருடலாகவே *எழ்தினார்கள் .
ஆனாலும் *மக்கள் திலகம்*
தன்னுடைய *நடிப்பு திறமை*
தன்னுடைய *ரசிகர்கள்*
மக்கள் ரசனை*
மூன்றை மட்டும் நம்பி *படங்கள் தந்தார் .
மக்களும் - ரசிகர்களும் *- ரசித்தார்கள்*
எம்ஜியார் வெற்றி மேல் வெற்றி அடைந்தார் .
பத்திரிகை *பலம் *எல்லாவற்றையும் *மீறி *வெற்றி பெற்ற *மக்கள் திலகம் - ஒரு தனிப்பிறவிதான் .
மக்கள் திலகம் திரியில் தேவையில்லாமல் வலுவில் வந்து, திரையிலும் அரசியலரங்கிலும் உச்சத்தில் இருந்த மக்கள் திலகம் மட்டுமல்லாத பிற விசயங்கள் மற்றும் மற்ற நடிகர்களுடன் ஒப்பீடு என்று சிலர் இங்கே பதிவிடுவது ஏன்?
மக்கள் திலகம் வசூல் சாதனை நகரம் மற்றும் சிறு நகரம் என்று எல்லா பகுதிகளையும் உள்ளடக்கியது. நகரப்புறம் மட்டுமல்ல. அப்படி இல்லாவிடில் எப்படி மக்கள் திலகம் முதலிடத்தில் இருந்திருப்பார்?
ஏன் என்றால் மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகம் புகழை மட்டுமே எழுதினால் இந்த நிலை வராது !
உண்மையை எழுதுகிறேன் என்ற நினைப்புடன் அபத்தமாக மற்ற சமகால நடிகர்களை எப்போதும் வம்பிழுபதை வாடிக்கையாக ஒரு சிலர் செய்வதால் அவர்களுக்கு மட்டுமே இங்கு பதில் உரைக்கபடுகின்றன...!
எங்கள் தலைவரின் திரைப்படம் வசூல் சாதனை செய்தது என்று எழுதினால் இந்த பிரச்சனை இல்லை...அதை விடுத்து சமகால நடிகர்கள், எந்த நடிகனும், எந்த திரைப்படமும் என்று எழுதுவதை வழக்கமாக கொண்டால் அதற்க்கு பதில் இடும் கட்டயத்திற்கு மற்றவர்கள் தள்ளபடுகிறார்கள் என்பதை நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
அன்னை தெரசாவிற்கு நினைவு பரிசு வழங்கும் எம்ஜிஆர் சிவா
http://i43.tinypic.com/ok9y5w.jpg