http://i60.tinypic.com/1znamae.jpg
Printable View
dear Muthaiyan Ammu sir. It seems you have an amazing photo bucket collection of MGR stills.May I request you to add salt and pepper :) to these displays by adorning these lifetime photos/monuments with few lines of the movie name, situation of that pose, ...like that ..for the benefit of visitors like me? If you don't mistake..though I am a hubber of another thread.
நீதியரசர் திரு.கற்பக விநாயகம் அவர்களுக்கு தலைவருடன் ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிய தகவல்களை பதிவிட்ட திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி. தனக்காக பாதுகாப்புக்கு வந்த போலீசார் சாப்பிட்ட பிறகே தலைவர் சாப்பிட்டிருக்கிறார். திரு.கற்பக விநாயகம் அவர்களின் அழைப்பை ஏற்று அவர் வீட்டிலும் சாப்பிட்டு, தொண்டர்கள் வருத்தப்படாமல் இருக்க அவர்களின் வீட்டில் காப்பி சாப்பிட்ட தலைவரின் பண்பு, நமக்கெல்லாம் பாடம். நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
[QUOTE=g94127302;1186834]எல்லோருக்கும் என் இனிய வணக்கங்கள் - ஒரு புதிய முயற்சியாக , "என் கண்ணோட்டத்தில் MGR " என்ற ஒரு பாகத்தை ஆரம்பித்து அதில் அவர் செய்துள்ள மகத்தான சேவைகளை தொடுத்து ஒரு புஷ்பாஞ்சலியை அவருக்கு சமர்ப்பிக்கலாம் என்று நினைக்கிறேன் - புதிய முயற்சி - தவறுகள் ஏதாவது இருந்தால் ( எழுத்து பிழைகளையும் சேர்த்து ) தயவு செய்து மன்னிக்கவும் . இங்கு வரும் சுறாவளி பதிவுகளில் என் பதிவுகள் அடித்து செல்ல படலாம் - இருந்தாலும் அது என் முயற்ச்சியை பாதிக்காது . சில பாடல்களையும் , அவருடைய மிகவும் எனக்கு பிடித்த படங்கள் சிலவற்றையும் , இதன் மூலம் அவர் சமுதாயத்திற்கு கொடுத்த நல்ல புத்திமதிகளையும் வேறு ஒரு கோணத்தில் அலசினால் அவைகள் அனைத்துமே இன்னும் அதிகமாகவே தித்திக்கின்றன --- - பார்த்த படங்கள் , கேட்ட பாடல்கள் - ஆனால் இன்னும் மனதை விட்டு ஏன் நீங்குவதில்லை ?? - சொல்ல முடியாத ஒரு சக்தி நம்மையெல்லாம் கட்டி போட்டு விடுகின்றது - ஒரு பாணபத்திரருக்கு பாண்டிய நாடு அடிமையானது போல , இந்த படங்களுக்கும் பாடல்களுக்கும் நாமும் , நம் சந்ததிகளுக்கும் என்றுமே அடிமை தானே ? ஏன் என்று அலசினால் வரும் ஒரே பதில் MGR - அவர் எடுத்துக்கொண்ட முயற்ச்சிகளும் , நல்ல விஷயங்கள் மக்களை அடைய வேண்டும் என்று அவர் அதற்காக உழைத்த உழைப்பும், சொல்லவேண்டுமென்றால் இந்த ஒரு பிறவி போதாது
ஒரு பிரிவினரை , அவர் படும் கஷ்ட்டங்களை பாடல் மூலம் தெரிவித்து அதன் மூலம் அந்த பிரிவினருக்கும் ஒரு முக்கியத்துவத்தை வாங்கி கொடுத்தவர் .. இந்த பாடலை கேட்ட மீன்களும் , சுறாக்களும் அந்த பிரிவினருக்கு மிகவும் சந்தோஷமாக தங்களை அற்பணித்ததாம் - அவைகளுக்கு அவைகளின் பிறவி பயனை கொடுத்த ஒரே பாடல் இதுதான் - மீனவர்களை மையமாக கொண்டு வெளி வந்த படங்களில் குறவஞ்சியும் , படகோட்டியும் முதல் இடங்களில் நிற்கின்றன - அதுவரை அந்த பிரிவினரை கண்ணெடுத்தும் பார்க்காத இந்த சமுதாயம் - இந்த பாடல் மூலம் தன தவறை திருத்திகொண்டது
இராமயணத்தில் , அந்த ராமன் , வாலியை மறைந்து இருந்து கொன்றான் - ஆனால் இந்த கலியுகத்தில் இந்த ராமன் வாலியை கொல்லவில்லை , மாறாக இருந்தும் , இறந்தும் வாழவைத்தான் - அந்த வாலி அமைத்த கவிதைகளின் பாலத்தில் என்றுமே நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறான் இந்த ராமன் - வரிகளில் எங்காவது ஈரபசை இருக்குமா ? இதோ இந்த வரிகளை கவனியுங்கள் எவ்வளவு ஈரமாக உள்ளது - ஆம் அந்த ஈரம் வெறும் தண்ணீர் இல்லை , நாம் சிந்தும் கண்ணீர்
உலகத்தின் தூக்கம் கலையாதோ -----------
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ------
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ -----
ஒரு நாள் பொழுதும் புலராதோ -----
----------------------------------
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு --
முடிந்தால் முடியும் , தொடர்ந்தால் தொடரும் - இதுதான் எங்கள் வாழ்க்கை -------
கடல் நீர் மேல் பயணம் போனால் , குடிநீர் தருபவர் யாரோ ??
தனியாய் வந்தோர் துணிவை தவிர துணையாய் வருபவர் யாரோ ??
ஒரு நாள் போவார் , ஒரு நாள் வருவார் - ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சான் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் ----
இந்த பாடல் , பாடலின் வரிகள் , பாடலின் இசை , TMS குரல் வளம் - இவைகள் எல்லாவற்றையும் மீறி நம்மை கட்டி போட்ட அந்த காந்த கண்கள் - அந்த கண்களில் ஊறிக்கிடக்கும் மீனவர்களின் நிலைமை - எதை விடுவது , எதை சொல்வது ----
இந்த , பாடலும் படமும் என்னை மிகவும் கட்டி போட்டதன் காரணம் -
1. சிறிய வயதில் அன்னையுடன் சென்று பார்த்த படம் - அன்னையை பார்க்க விடாமல் அங்கு கிடைக்கும் தின் பண்டங்களுக்காக அழுது நின்ற படம்
2. விவரம் தெரிந்தவுடன் அன்னையை அழைத்து சென்ற படம் - என் அன்னை என்னை பார்க்க விடவில்லை - சில மன சச்சரிவினால்
3. ஒரு பிரிவினரை மேல் தூக்கி நிற்க வைத்த படம்
4. சமுதாயத்தை தட்டி கேட்ட படம்
5. மீனவர்கள் நன்றி சொல்லும் படம்
பாடல்கள் சிரஞ்சீவியாக என்றும் நம் மனத்தில் இருக்கும் - MGR யாரை போல
அன்புடன்
ரவி
அருமையான கோணத்தில் பாடலை அலசியுள்ளீர்கள் திரு.ரவி சார். மிக்க நன்றி. இருந்தாலும், இவ்வளவு அழகாக விமர்சனம் தந்துவிட்டு ‘இங்கு வரும் சூறாவளி பதிவுகளில் என் பதிவுகள் அடித்து செல்லப்படலாம்..’ என்று நீங்கள் கூறியிருப்பது உங்கள் பெருந்தன்மையையும் உயர் பண்பையும் தன்னடக்கத்தையுமே காட்டுகிறது. தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறோம் திரு.ரவி சார். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மக்கள் திலகம் திரி பாகம் 12 ஐ துவங்கியதற்காக வாழ்த்து தெரிவித்ததற்கும், விமர்சனங்களுக்கான பாராட்டுக்களுக்கும், தலைவருடன் இருப்பவர் கலைவாணரின் தாயார் என்ற விவரத்தை தெரிவித்ததற்கும் மிக்க நன்றி திரு.ஜெய்சங்கர் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு.எஸ்.வி. சார். இணையதளத்தில் இருந்து எடுத்து நீங்கள் பதிவிட்ட, மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டின்போது தலைவரை அருகில் இருந்து பார்த்தவரின் இனிய அனுபவம் சூப்பர். பணம் படைத்தவன் - கற்பகம் ஒப்பீடு வித்தியாசமாக இருந்தது நன்றி.
திரு.யுகேஷ் பாபு அவர்களிடம் இன்னும் எவ்வளவு அபூர்வ புகைப்படங்களான பொக்கிஷங்கள் இருக்கிறதோ, தெரியவில்லை. ஆவலோடு காத்திருக்கிறோம்.
இரண்டே மாதங்களில் 1,000 பதிவுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ள திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நமது திரியில் பங்கேற்று பதிவுகளை அளித்துக் கொண்டிருக்கும் திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு நன்றி.
திரு.ராமமூர்த்தி சார், உங்களது தாய்லாந்து புகைப்பட அணிவகுப்பை பார்க்க மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i62.tinypic.com/2s6u4ih.jpgஅன்பு நண்பர் சிவாஜி செந்தில் அவர்கள் நான் பதிவிடும் படங்களின் படபெயரையும் அதை பற்றிய குறிப்புகளையும் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்..அதில் தான் மாற்று திரியை சேர்த்தவர் என்று குறிப்பிட்டு உள்ளார்... நண்பரே..நீங்கள் எங்கள் திரியின் தலைவரின் அன்பு தம்பி அவர்களின் பக்தர்...நாங்களும் நீங்களும் ஒன்றுதான்..நன்றி...நான் இப்போதுதான் இந்த திரியில் இணைந்து உள்ளேன்... நிறைய நான் பதிவிடும் விசயங்கள் உள்ளது... இது ஒரு முன்னோட்டம்தான் just trailer... என் மீது அக்கரைகொண்டு ஆலோசனை வழங்கிய அன்பு நண்பர் சிவாஜி செந்தில் அவர்களுக்கு என் நன்றி...
http://i59.tinypic.com/sfdze9.jpg
மதுரை மீனாட்சியில் கடந்த 23/11/2014 முதல் நடிக மன்னன் /நடிகபேரரசர்
எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள்
வெளியாகி வெற்றிநடை போட்டது. அதன் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களுக்காக அனுப்பியவர் மதுரை திரு. எஸ். குமார்.
புகைபடத்தில் மதுரை திரு. எஸ். குமார் தன் சக நண்பர்களுடன்
http://i62.tinypic.com/2a5bwnt.jpg
மதுரை புதூர் விஜய் சினி பாரடைசில்
28/11/2014 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "அன்பே வா "
என ரசிகர்களை அழைத்தார். அதன் சுவரொட்டி நமது திரியில் பதிவிட அனுப்பியவர்
மதுரை திரு. எஸ். குமார். அவர்கள்.
http://i62.tinypic.com/1zxw9c3.jpg
சென்னை மகாலட்சுமியில் வெள்ளி முதல் (05/12/2014) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
(பேரறிஞர் அண்ணாவின் ) "இதயக்கனி " தினசரி 2 காட்சிகள் வெளியாகிறது.
http://i62.tinypic.com/9qzbyd.jpg
அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு, வணக்கங்கள். தாங்கள் வெளியிட்ட இந்தப் பதிவு வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது. தங்களுடைய கருத்து அல்ல என்பது தெளிவாகிறது. ஆனாலும் இதில் கீழ்க்காணும் வரிகளை என்னால் துளியும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
[Bஅதே போல், அவரது முகம் நுணுக்கமான, நெகிழ்வான உணர்வுகளை பளீரென பிரதிபலிக்காத தன்மை கொண்ட 'Metallic' என்றும் 'தூண்' என்றும் விமர்சித்து பலர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சான்ஸ் தராமல் நிராகரித்தார்களாம். இந்த பலவீனத்தையும் புரிந்துக் கொண்ட எம்.ஜிஆர்., அதற்கேற்ப மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பிழம்பான கதையம்சங்களை தவிர்த்தார். தனக்கு தோதான கதாபாத்திரங்களையேத் தேர்ந்தெடுத்தார். [/B]
தங்களது கருத்தும் அதுவாகவே இருக்கும் என்பது என் எண்ணம். தயவு செய்து மக்கள் திலகத்தினைப் பற்றிய செய்திகளை பதிவிறக்கம் செய்யும் போது இது போன்ற தவறான கருத்துக்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் திலகத்தின் ஒவ்வொரு படத்தையும் பல முறை பார்த்து நவரசத்தையும் கொட்டி உணர்ச்சியுடன் அவரது மாறுபட்ட நடிப்புத் திறனைப் பார்த்துப் பார்த்து பரவசம் அடைந்த நம் போன்றோருக்குத் தெரியும் அவர் எப்படிப்பட்ட மிக மிக மிக சிறந்த நடிகர் என்று. இது போன்ற துளிகூட உண்மையில்லாத கருத்தை அதன் பின்னால் வரும் பாராட்டுரைகளுக்காகக் கூட மன்னிக்க இயலாது. சேலத்தைச் சார்ந்த அருமை நண்பர் முத்தையன் அவர்கள் வெகு அற்புதமாக மக்கள் திலகத்தின் முகம் மாறுபட்ட பல்விதமான உணர்ச்சிகளைக் காட்டும் புகைப்படங்களைப் பதிவிட்டு மக்கள் திலகத்தின் படங்களைப் பார்க்காதவர்கள் கூடப் புரிந்து கொள்ளும் வகையில் நடிகர் பேரரசரின் முகம் எவ்வளவு அழகாக எல்லாவிதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டுகிறது என்பதை விளக்கி மாபெரும் சேவை புரிந்திருக்கிறார். தயவு செய்து எங்களது மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள் , நெட்டில் கிடைக்கும் கட்டுரைகளை முழுமையாகப் படித்துவிட்டு பதிவேற்றுங்கள்என்று கேட்டுக் கொள்கிறேன். மக்கள் திலகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட யாரோ ஒருவர் தான் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இக் கட்டுரையைப் படிக்க வேண்டும் என்பதற்காக அவரைப் பாராட்டுவது போல் எழுதிவிட்டு நடுவே நஞ்சைக் கக்கி இருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். எந்தத் திறமையிலும் எவருக்கும் எங்கள் எம்.ஜி.ஆர் சளைத்தவர் அல்ல என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். He had no minus points, only plus points. All that he had in him is Good, All that he said is Good. All that he done is also Good.
இனிய நண்பர் திருஜெய்சங்கர்
இணையத்தளத்தில் இருந்து எடுத்து பதிவிட்ட மக்கள் திலகத்தை பற்றிய சிறப்பு கட்டுரையில் தவறுகள் இருப்பது உண்மை .ஏற்று கொள்ள முடியாத சில வரிகளை எடிட் செய்யாமல் பதிவிட்டதின் காரணம் எந்த அளவிற்கு மக்கள் திலகம் அவர்களை திரை உலகினர் மற்றும் விமர்சகர்கள் தவறான கண்ணோட்டத்தில் அவரை விமர்சனம் செய்தார்கள் என்பதை இன்றைய தலை முறையினர் அறிந்து கொள்ளவே பதிவிட்டேன்
நீங்கள் குறிப்பிட்டதை போல இனிய நண்பர் திரு முத்தையன் அவர்கள் பதிவிட்டு வரும் மக்கள் திலகத்தின் பல்வேறு நடிப்பு முகபாவங்கள் ஒன்று போதுமே நம் மக்கள் திலகத்தின் நடிப்பின் வெளிப்பாடுகள் . கட்டுரையை முழுமையாக படித்த பின்னர்தான் பதிவிட்டேன் . உங்கள் மனதுபுண்பட்டதால் என்னுடைய பதிவை நீக்கி விட்டேன் . நன்றி .திரு ஜெய்சங்கர் .
இனிய நண்பர் லோகநாதன் சார்
மதுரை நகரில் வெளிவந்த மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை மற்றும் அன்பே வா போஸ்டர்ஸ் மற்றும் திரை
அரங்கு நிழற் படங்கள் அருமை .
இனிய நண்பர் திரு முத்தையன் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஸ்டில்ஸ் - ராக்கெட் வேகத்தில் செல்கிறது .
Thank you Yukesh Babu sir for uploading such rare and unseen pictures of Makkal thilagam MGR. Great !
Hope, Reserve bank would issue coin on Makkal thilagam MGR's 100th birthday
http://i60.tinypic.com/5nma2a.jpg
Evergreen Hero of Tamil Film Industry...
http://i59.tinypic.com/2mw5o55.jpg
Very Good Morning to all MGR fans..
http://i59.tinypic.com/rkn1gy.jpg
My greeting card collections...
http://i58.tinypic.com/ncl5kl.jpg