இறைவன் குடிசை எரித்து கப்பலில் வந்தவனை காப்பாற்றிய கதை அருமை. நம்பிக்கையே மனிதனது சாதனம். அதை தங்களது குட்டிக்கதை அருமையாக உணர்த்துகிறது.
பாலமுரளி கிருஷ்ணாவின் உன்னதக் குரல் 'அருள்வாயே' பாடலை எங்கோ உயரத் தூக்கிச் செல்கிறது.
நல்ல பாடலுக்கு நன்றி ரவி.
Printable View
இறைவன் குடிசை எரித்து கப்பலில் வந்தவனை காப்பாற்றிய கதை அருமை. நம்பிக்கையே மனிதனது சாதனம். அதை தங்களது குட்டிக்கதை அருமையாக உணர்த்துகிறது.
பாலமுரளி கிருஷ்ணாவின் உன்னதக் குரல் 'அருள்வாயே' பாடலை எங்கோ உயரத் தூக்கிச் செல்கிறது.
நல்ல பாடலுக்கு நன்றி ரவி.
கருவின் கரு - பதிவு 52
ஜனணியின் தொடர்ச்சி :
உண்மை சம்பவம் -7
அம்மாவின் " அயிகிரி நந்தினி " குரல் வந்தால் , கடிகாரத்தை சரியாக காலை 5மணிக்கு திருத்திக்கொள்ளலாம் . விடிந்தும் விடியாத அந்த காலைபொழுதில் அந்த மதுர கானம் அந்த தெருவையே தூங்கினது போதும் , எழுந்திரு , உனக்கு நன்றாக வாழ இன்னும் ஒரு நாள் வாயிப்பை இறைவன் கொடுத்திருக்கிறான் என்று சொல்வது போல இருக்கும் - அந்த தெருவில் அம்மாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது . அவளின் ஞாபக சக்தி , 10 தெருவைத் தாண்டி கௌரி என்னும் பசுவிற்கு சீமந்தம் செய்யும் நாள் முதல் கன்றை ஈன்றும் நாள் வரை , என் மகள் அணுவின் ஸ்கூல் பீஸ் கட்டும் கடைசி நாள் வரை எல்லாமே அம்மாவிற்கு அத்துப்படி -- காண்டக்ட் நம்பரை எல்லாம் மொபைலில் ஸ்டோர் செய்யும் அவசியமே அம்மாவிடம் கிடையாது - என்றோ பஸ்சில் சந்தித்த நபர் கொடுத்த நம்பரைக்கூட சாதரணமாக அயிகிரி நந்தினி சொல்வதுபோல சொல்லுவாள் . படிக்காதவள் - ஆனால் படித்த எவருக்கும் ஒரு சவாலாக இருப்பவள் . இப்படிப்பட்ட அம்மா எனக்கு கிடைத்ததை எண்ணி பெருமை படாத நாளே கிடையாது .
அன்று இவ்வளவு நாள் பொறுமையாக இருந்த விதி சற்றே என்னைப்பார்த்து சிரிக்க ஆரம்பித்தது . அம்மா என்னிடம்
" கோபி , மறந்து விடுகிறதடா - நீயும் சொல்லேன் மகிஷாசுர மர்த்தினியை " - சிரித்தேன் - அம்மா அம்பிகைக்கு வேண்டுமானாலும் மறந்து போகலாம் - நீ மறப்பது என்பது நடக்காத ஒன்று --- அம்மாவிற்கு யாரவது புகழ்ந்தால் கூட பிடிக்காது -- "போதும் கோபி - மேலே சொல்லு ---"
அம்மாவின் போக்கில் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன - ஒரு நாள் அணு எந்த கிளாஸ் இல் படிக்கிறாள் என்று கேட்டதும் சற்றே விழித்துக்கொண்டேன் .மது , என் மனைவி கண்டிப்பாக அம்மாவை டாக்டர் கிட்ட கூட்டிண்டு போக வேண்டும் என்று அடம் பிடித்தாள் .
"Alzheimer's disease (AD), also known as Alzheimer disease, or just Alzheimer's, accounts for 60% to 70% of cases of dementia. It is a chronic neurodegenerative disease that usually starts slowly and gets worse over time. The most common early symptom is difficulty in remembering recent events (short-term memory loss). As the disease advances, symptoms can include: problems with language, disorientation (including easily getting lost), mood swings, loss of motivation, not managing self care, and behavioural issues. As a person's condition declines, she or he often withdraws from family and society. Gradually, bodily functions are lost, ultimately leading to death. Although the speed of progression can vary, the average life expectancy following diagnosis is three to nine years." டாக்டர் பெரிய சொற்பொழிவையே நிகழ்த்தினார் - தலையே எனக்கு சுற்றியது .
"Mr கோபால கிருஷ்ணன் - கவலைப்படாதீர்கள் - உங்கள் அம்மா stage 1 . மிகவும் அன்புடனும், பொறுமையுடனும் அவளிடம் நடந்துகொள்ளுங்கள் - ---
அம்மா என்னையும் நீ மறந்து விடுவாயா ??? எண்ணங்களை சுமந்துகொண்டு வீடு வந்தடைந்தேன் - அம்மா சிரித்தாள் --- கோபி யாரை யாரால் மறக்க முடியும் - இந்த வியாதிகள் எல்லாம் நம்மிடம் இருந்து பணம் பிடுங்கவே வருகின்றன - இதையெல்லாம் தாண்டி , யாருமே பிடிக்க முடியாத இடத்தில் இருப்பதுதான் ஒரு தாயின் உள்ளம் , அவளின் அன்பு - இதற்க்கு ஒரு பெயர் கிடையாது - காலம் காலமாக உலகம் சுழல்கின்றது இந்த ஒரு சக்தியினால் தான் . போய் படு ---
அம்மாவை தினமும் குளிப்பாட்டும் ஒரு பாக்கியத்தைப்பெற்றேன் . அம்மாவுடன் தினமும் அமர்ந்து அவள் மறந்துபோகும் அயிகிரி நந்தினியை சொன்னேன் .
பொறுமை கிலோவிற்கு என்ன விலை என்று கேட்டவன் , பொறுமையின் அவதாரம் என்ற பெயரைப்பெற்றேன் . அந்த சில மாதங்கள் , கங்கையில் குளித்த புண்ணியம் , 1000 கோயில்களை கட்டிய சந்தோஷம் எனக்கு கிடைத்தது .
மதுவிடம் சொன்னேன் - அம்மாவை Alzheimer அழைத்துக்கொண்டு போய் விட்டது - இல்லை இல்லை அம்மாவை மறந்தவர்கள் தான் இந்த வியாதிக்கு அடிமையாகுகிறார்கள் - அம்மாவின் புகைப்படம் ஒரு மகிஷாசுர மர்த்தினியாக என்னைப்பார்த்து " உண்மைதான் " என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றது ------
https://youtu.be/G_HwShd-vso
கருவின் கரு - பதிவு 53
கண்ணே கண்ணுருங்கு
https://youtu.be/Py1nibxW2Bg?list=PL9A1B433D505A6A1E
கருவின் கரு - பதிவு 54
"மலர்ந்தும் மலராத "- கண்ணீர் முட்டுகின்றதே !!!
https://youtu.be/shQfxUaJBa4
கருவின் கரு - பதிவு 55
காலமிது காலமிது ------
https://youtu.be/4mKDOiLnD-k
ஜனனியின் அடுத்த பருவம் நாளை
டியர் ரவி சார்,
விளம்பர தண்டிப்பு பற்றிய உங்கள் பதிவு மிகவும் அருமை. அனைவர் மனத்திலும் உள்ளதை கொட்டிவிட்டீர்கள்.
தரக்கட்டுப்பாட்டு வாரியம்,
அனுமதித்த அரசுத்துறை,
சர்ச்சைக்குரிய பொருட்களை தயாரித்தவர்கள்,
மக்களிடம் கொண்டுபோய் சேர்த்த ஊடகங்கள்
அனைவரும் தண்டனைக்குரியவர்களே.
நட்சத்திரங்களுக்கும் இதுபோன்ற குட்டுக்கள் தேவையே.
இந்த விஷயத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் பாராட்டுக்குரியவர். விளம்பரத்துக்காக அவரை அணுகியபோது, "நான் உபயோகிக்காத எந்த பொருளையும் நான் விளம்பரப படுத்த மாட்டேன்" என்று மறுத்து விடுவாராம். எப்படியும் காசு பார்க்கவேண்டும் எனும் திரையுலகத்தில் இப்படியும் ஒரு அபூர்வ மனிதர். பாராட்டுக்குரியவர்.
டியர் வாசு சார்,
தங்கள் அன்புக்கு மிக்க நன்றி. தங்களின் "பழைய பாலா" தொகுப்பு மிக மிக இனிமை மட்டுமல்ல அபூர்வமும் கூட. ஒவ்வொரு பாடலும் மனதை கொள்ளை கொள்கிறது. என்னவொரு இனிமை, இந்தப்பதிவை எழுதும்போது நான் கேட்டுக்கொண்டிருப்பது "தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே". இந்தப்பாடலை ஐந்து நிமிடங்களில் எழுதிக் கொடுத்தாராம் கண்ணதாசன். அப்போது ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் கீ போர்டு வாசித்துக் கொண்டிருந்த இளையராஜா சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியின்போது சொன்ன தகவல்.
அந்தப்பாடல் முடிந்து அடுத்த பாடல் துவங்கிவிட்டது. "கீதா... ஒருநாள் பழகும் உறவல்ல".
ஹாய் குட்மார்னிங் ஆல்
கடுமையான ஜலதோஷம் ஜூரம் என டேப்லட் போட்டு ஞாயிறு வீக் ஆரம்பத்திற்கு வேலை பார்க்க வந்தாயிற்று.. ஆதிராம் நீங்க்ள் இருப்ப்து ஜித்தாவா ரியாத்தா.. இங்கு தண்ணீர் கஷ்டம் ஆரம்பித்தாகி விட்டது ..கடந்த இரண்டு தினங்களாக தண்ணீர் வராமல் கொஞ்சம்ப்ளாட் காம்பெளண்டில் இருக்கும் கிணற்றுத்தண்ணீர் மோட்டாரில் எடுக்கப் பட்டு பின் பக்கெட்டால் வீட்டிற்குக் கொண்டு வருகிறோம் (எந்த நேரத்தில் வாசு சாரைக் கிண்டல் பண்ணினேனோ.. )
மற்ற படி.. தண்ணீர் கண்ட பின்பு மாறும் எங்கள் கண்ணீர்..
பின்ன வாரேன்..
கல் நாயக் தான் காணோம்.. ரவி.. அஸ் யூஸ்வல் அருமை..பட் முடித்த பிறகு தான் முழுமையாக கமெண்ட்டுவேன்..ராஜேஷையும் காணோம்..
ஆதிராம் பதிலுக்கு நன்றி 15 ம் தேதிவரை இப்படித்தான் இருக்குமாம்..அப்புறம்.. பழகிவிடுமாம் :)
//கடல்நீரை குடிநீராக்கி தருவதால் செங்கடல் வற்றும்வரை தண்ணீர் பஞ்சம் இருக்காது.// இங்கும் அப்படித் தான்..ஆனால் ஏதோ ரிப்பேர் அல்லது ஏன் இப்படி என சரியான காரணம் தெரியவில்லை. டார்செய்ட் என்று ஒரு இடம் உண்டு அதில் கடந்த ஒருமாதமாக தண்ணீர் வரவில்லை.. இப்போது ஏரியா ஏரியாவாக வராமல் போய்க் கொண்டிருக்கிறது,..
ஆதிராம் சார் - நீங்கள் இங்கு வந்து பதிவுகளை படிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது . பதிவுகள் போடவும் வேண்டுகிறோம் . உங்கள் தாயார் எப்படி இருக்கிறார்கள் ? என் பணிவான வணக்கங்களை அவர்களுக்குச்சொல்லவும் .
இந்த "கருவின் கரு " ஆரம்பித்ததே மையம் திரியில் உள்ள அனைத்து நல்ல உள்ளகளைப்பெற்ற அந்த இனிய தாய் தந்தைகள் அனைவருக்கும் என் பதிவுகள் மூலம் ஒரு புகழாஞ்சலியத்தந்து வணங்கவே ..... பார்க்காத முகங்கள் - ஆனால் கையெடுத்து கும்பிட வேண்டிய நடமாடும் தெய்வங்கள் அவர்கள் இருவர் மட்டுமே
பதிவுகளில் தவறுகள் இருந்தால் எடுத்துச்சொல்லுங்கள் . திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன்
வாழ்க்கை வெறுத்துப் போகும் தருணங்கள் யாவை..
கொஞ்சம் யோசித்தால் எக்கச்சக்கமாகப் புலப்படும்..எனது சுதா ஸ்டீஃபன் சுந்தர்ராஜன் என்ற கதையில் பின் வருமாறு எழுதியிருந்தேன்:
1. கஷ்டப் பட்டு க்யூவில் பிடித்த நடிகரின் படமென்று முதல் நாளே மணிக்கணக்காய் நின்று கவுண்டர் அருகே சென்றதும் டிக்கட் இல்லை என்று மூடி விட, அழுக்காய் கைலி கட்டி இருந்த ஆளிடம் பேரம் பேசி 200 ரூபாயில் டிக்கட் வாங்கி உள்ளே சென்று படம் திராபையாய்ப் போய்விட, தலைவலியுடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தால் குறுக்கே மைக்கை நீட்டி 'நாங்கள் சன் டிவியில் இருந்து வருகிறோம் படத்தைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன ' என்று கேட்கும்போது.
2. அழகாய் இருக்கிறாளே என்று நினைத்து கஷ்டப் பட்டு அப்துல் ரகுமான், மீரா போன்றவர்களின் கவிதையையெல்லாம் கோட் பண்ணி வெகு நேரம் செலவழித்து ஒரு கடிதம் எழுதி ஒரு பெண்ணிடம் ஒரு வாலிபன் சேர்த்தால் அதைப் படிக்காமலேயே அவனிடம் அவள் 'ஐ, லவ் யூ ' சொன்னால், அந்த வாலிபனுக்குச் சப்பென்று போய் வெறுத்து விடும்,
அது சரி இப்போது கோட் பண்ணுமளவிற்கு என்ன நேர்ந்தது..
என்ன நேரவில்லை.. தண்ணீர் திடீரென நின்று விட்டது .. பின் நண்பரிடம் பேசலாமென்றால் இன் டர் நெட் போனின் சிக்னல் வீக் காகி விக் விக்கென்று அழுகிறது.. போதாக்குறைக்குப் பொன்னியம்மா வந்தாளாம் என்ற சொலவடை போல என்னாச்சுன்னாக்க….
வெளியில் வெய்யில் எனில் வீட்டுக்குள்ளாறேயே இருந்தததால் ஏசி காற்றா அல்லது இன்னபிறவா தெரியவில்லை.. வீட்ல தாண்டா உனக்குத் தண்ணீர் வரவில்லை..இதோ உன் மூக்கிலேயே வரவழைக்கிறேன் என்று யாரோ கண்பட்டாற் போல ஸாரி மூக் பட்டாற்போல ஜலதோஷம் அதனால் தலைவலி அதனால் கண் கனத்தல் அதனால் சனி க்கிழமை முடிந்து அதனால் ஞா.கி வீக் ஆரம்ப ஆஃபீஸ்..
ஆஃபீஸில் போய் எல்லாரிடமும் மெல்லினமாய்ப் பேசப் பயந்து கொஞ்சம் முறுவல் கொஞ்சம் முகச்சீற்றம் என வைத்துக் கொண்டுவேலைபார்த்துக்கொண்டிருந்தேனா.. சரி லிட்டில் ஃபீவர் வர்றாமாதிரி இருக்கே என நினைத்து கொஞ்சூண்டு ரெண்டே ரெண்டு பனடால் நான்கு மணி நேர இடைவெளியில் போட்டுக் கொண்டால்.. ஜுரம் கூடுதற்போன்ற பிரமை..இலவச இணைப்பாய் லொக் லொக்..
வீட்டுக்கு கிளம்பும் போதாவது சும்மா இருக்கலாமில்லையா.. எடை பார்க்கலாம் டயட்டில் இருந்தோமே எனப் பார்த்தால் பழைய அதே எடை மூன்றிலக்க எண்.. கூட்டல் இரண்டு வரும்.. சோ ஓஓகம்.. பத்துகிலோ உடல் எடை மிச்சம் மூளை தான் (ஹை) என நினைத்தாலும் டயட்டில் இருந்த போது பத்து நாள் முன் மூன்றோ நான்கோ கிலோ குறைய அதனால் டயட்டை அலட்சியமாக விட்டு விட்டதில் இப்படி ஆகிவிட்டதே என வருத் வருத் தமா க இருந்தது..
சே இந்த எடை இருக்கிறதே..(ஹப்பாடி விஷயத்துக்கு வந்துட்டியா) எப்படியாவது குறைக்கவேண்டும் என்று சங்கல்பம்..ஆனால் விடுமுறையில் ஃபணால் ஆகுமா எனத் தெரியவில்லை..
சரி எடை போடும் பாடல்களைப் பார்க்கலாமா..ஹிஹி..
கண்ணில் துளிர்த்த நீருடன் பார்ட்டியில் ஹீரோயின் பாடும் போது மற்றவர்களெல்லாம் எப்படி சிரித் சிரித் ஆடுவார்களோ தெரியவில்லை..ஒருவேளை தமிழ் சினிமாவில் மட்டுமே இப்படியா..
சர்ரூ.. காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலைமோதும் நிலை கூறவா
அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா- பொங்கும்
விழி நீரை அணை போடவா
என விக் விக்கென அழ சுற்றியிருப்பவர்கள் ஆட பின் எடைக்கு – எடை வார்த்தைக்கு வருவார்..
பொருளோடு வாழ்வும் உருவாகும் போது
புகழ் பாட பலர் கூடுவார்
அந்த புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உறையாடுவார்
ஏழை விதியோடு விளையாடுவார்
அன்பை மலிவாக எடை போடுவார்
சே..இங்கே எடைபோடப் படுவது அன்பு..அதுவும் சீப்பாக..ஐயோ பாவம் சர்ரூ..
*
அடுத்த இடை..ஸாரி எடை..
கையில் மிதக்கும் கனவா நீ
கை கால் முளைத்த காற்றா நீ என்று ஜாலியாக க் காதல் பாட ஆரம்பிக்கும் ஹீரோ ரட்சகனில் என்ன சொல்றார்..
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...
நுரையால் செய்த சிலையா நீ...
எனக் கேட்டு விட்டு
நிலவில் பொருள்கள் எடை இழக்கும்..
நீரிலும் பொருள்கள் எடை இழக்கும்..
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி..
அதை கண்டு கொண்டேனடி...
என்றும் சொல்கிறான் காதலன்..அதாவது
இடையேன் மெலிந்தது ஏந்திழையோ காதல்
நடைபயின்று நின்றதால் தான்
என்பதையே காதலால தான் அந்தப் பொண்ணு லாஸ்ட் வெய்ட் என்கிறான்..சுஷ்மிதாசென் (இவங்க மூன்மூன்சென்னுக்கு ரிலேஷனா (ஹை வலை வீசியாச்சுன்னுல்லாம் சொல்ல மாட்டேனே))
*
காதல் நா என்ன செய்யும்.. தலை சுத்தும்.. அவனுக்கு அவள் நினைப்பு அவளுக்கு அவன் நினைப்பு.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நெனச்சுக்கிட்டே அவன் அவன்வீட்டுமொட்டை மாடியிலிருந்து நிலவைப்பார்க்க
அவளோ அவள் வீட்டு பால்கனின்னு தமிழ்ல சொல்லப் படற சாளரத்திலிருந்து பார்த்து பெருமூச்சு விட்டு எண்ணங்களை அலைபாய விட்டு உடலையும் வருத்திக் கொள்வாங்களா.. ஸாரி பிரதர்.. இவையெல்லாம் அந்தக்காலத்தில்
இப்ப இங்க பாருங்க..காதல் வந்துடுச்சு பொண்ணுக்கும் பையனுக்கும் என்ன பண்றாங்க.. ஒண்ணுமே பண்ணலை.. ச்சும்மா இருக்காங்க பாஸ்…
சும்மா சும்மா பேசி சும்மா சும்மா பழகி
ஆசை காட்டி ஆசை காட்டி ஆளகொன்னுட்டா
சார்லி சாப்ளின் என்னும் படத்தில் காயத்ரி ரகுராம் என்ற நடனமாடும் கொழுக்கட்டை ச் சிலையைப் பார்த்து பிரபு தேவா பாடும் பாடல்..
இங்கயும் எடை வருது..
காதலன் சொல்றான்.. ரொம்ப கன்ஃபீஷன் ஆய்ட்டான் போல..வள்ளுவனும் உன்னைப் போல் காமத்துப் பால் வடிக்கலைன்னு சொல்ல அந்த ப் பொண்ணு உச்சிகுளிர்ந்து
எடைக்கு எடை எடைக்கு எடை முத்தமிடலாமாங்கறா.. எந்த எடைன்னு சொல்லவே இல்லை..
//கல் நாயக்கிற்காக க் கொசுறாக ஒன்று..
கல் நாயக் இந்தப் பாட்டில் முற்றிலும் தேமா ஆன எழுசீர் விருத்தத்திற்கான ஒருவரி வருகிறது..
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா.//
*
பெண்கள் நாங்கள்.. எங்களுக்கு விருப்பமான ஆடை அணிகலன்களை அணிவோம்..அதனாலேயே எங்களை மட்டமாக எடை போடக் கூடாது அது தவறு என்கிறார் ஊர்மிளா மடோன்கர். அப்படி எடைபோட்டால் உம்மைக் கைது செய்து சட்டப்படி உள்ளே வைத்துவிடுவாராம் என்கிறார் இந்தப் பாடலில்
அக்கடான்னு நாங்க உடைபோட்டா
துக்கடான்னு நீங்க எடைபோட்டா தடா உமக்குத் தடா..
*
ம.தி என்ன கேக்கறார்..
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு
களைப்பாற மடியில் இடம் போடு
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு
உலகையே மறந்து விளையாடு
இப்படிக் கவித்துவமாச் சொன்னா எல்.விஜயலஷ்மி மெல்ட் ஆகமாட்டாங்களா என்ன..
விம்மி வரும் அழகில் நடை போடு
வந்திருக்கும் மனதை எடை போடு
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு
அதாவது அந்தம்மா சமர்த்தா அழகா ஆடறாங்களாம்..அவங்க மனசு அவங்க கிட்ட இல்லையாம்.. ம.தி.கிட்ட சொல்றாங்க நாசூக்கா..
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே சுகம் சுகம் சுகம்.. அழகியபாட்டு..
*
இந்தக் காதலன் அதாவது அஜீத் ச்சும்மாவாவது இருந்துருக்கலாம் அந்தப் பொண்பாட்டுக்கு செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமமாகாதோன்னு கவித்துவமாப் பாடிக்கிட்டிருககியில டவுட்டா அவங்களைத்தூக்கிப்பாத்துட்டு டபக்குன்னு கீழே விட்டும் விட்டுட்டு கேள்வி கேக்கறார்..
பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
அந்தம்மா வோட பதில் கேள்வி..
மொத்தத்தில் காதலின் எடை
என்ன ஆகும் இப்படி சோதிக்கிறாய்
அழகான பாடல் பவித்ரா படம்.
*
கல்யாணத்துக்கப்புறம் நார்மலா பீப்பிள் வில் புட் ஆன் வெய்ட் தானே.. ஆனா இப்படி இல்லையாம்.. ஏற்கெனவே காதலிச்ச பொண்ணு தான்..வேற ஒருத்தரைக் கல்யாணம்கட்டி க் கிட்டதும் அவரிடம்கொஞ்சம் முழு ஈடுபாடுஇல்லாம் இருக்கப் பார்த்தும் கூட கொஞ்சம் சிலபல சம்பவங்களால மனசும் அசைந்து கொடுக்குதாம்.. ஹஸ்பெண்ட் பால் ஈடுபாடு பட்டு கொஞ்சம் கொஞ்சமா த் தன்னைத் தானே மாத்திக்கறாங்களாம்..அதனால எடையும் குறையுதாம்..
இதைத்தான் ஈரம் படத்துல சுசித்ரா வாய்ஸ்ல அழகா சொல்றாங்க
தரை இறங்கிய பறவை போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
கரை ஒதுக்கிய நுரையைப் போலவே
என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே
தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்
எடை எடை மிகக்குறைந்து போகிறேன்
https://youtu.be/p8Xhj7Ovz4g
*
இங்கபாருங்க ப்ரஷாந்த்தும் லைலாவும் வெளி நாட்டுக்கெல்லாம்போய் டூயட் பாடும் போதும் டவுட் வந்துடுச்சு.. (பார்த்தேன் ரசித்தேன்படம்)
ஆணா பெண்ணா யார் முதலில் காதல் சொல்வது சொல்
நீயே சொன்னால் Bridge-இன் எடை தாழ்ந்து போகுமா சொல்
இப்படிக் கேக்கச் சொல்ல அந்தப் பொண்ணு என்ன சொல்லணும்..ஆனாலும் அதுக்கு ரொம்ப்ப இதுங்க்க..அதான் குஷில சொல்வாரே விஜயகுமார் அடம்ங்க்க என்ன சொல்றாங்க குரல் கொடுத்த வசுந்தரா தாஸ்..(ஆண் குரல் சோனு நிகமாம்)
காதல் என்னும் பிச்சைதான் பெண்கள் இடுகிறோம் நில்
ஆண்கள் முதலில் கேளாமல் பிச்சை கிட்டுமா சொல்
இது கொஞ்சம் ஓவர் தான்..ஆனா க்க பாட்டு நல்லா இருக்கே. படம் பார்க்கும் போதுஓட்டி விட்டேன் என நினைக்கிறேன்..இப்ப கேக்கப் பாக்க நன்னா இருக்கு.. (ஆமா மஜ்னுவின் காதலி பெயர் கொண்டவர்க்கு கண்கள் சிரிக்கிறதா என்ன)
https://youtu.be/N5JnG5S9q4s
*
மறுபடியும் ம.தி.. பாட்டுக்குப் பாட்டெடுக்கும் போதுஎன்ன சொல்றார்
மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலை முடித்து
பின்னலாய் சடைபோட்டு என் மனச எடை போட்டு
மீன் பிடிக்க வந்தவளை நான் பிடிக்க ப் போனேனே
மையெழுதும்கண்ணாலே பொய்யெழுதிப் போனாளே..
கொயட் இண்ட்ரஸ்டிங்க் தானில்லை..
*
இப்படி எடையைத் தேடித் தேடிப் பார்த்ததில அனேகமா பத்துக் கலோரியாவது குறைஞ்சிருப்பேன்னு நினைக்கறேன்..
நிறைய எடை புதுப்பாட்டு எடையா இருக்கு.. விட்டுப் போன பழைய பாடல் எடை தருவீங்க தானே..
பின்ன வாரேன்..:)
*
கருவின் கரு - பதிவு 56
மூன்றாவது படிவம் : " அம்பா " - ஆரம்பம்
மூன்றாவது அம்பா ((One who nourishes the limbs of the child) - தன் குழந்தையின் ஒவ்வொரு அங்கத்தையும் அழகு பார்க்க தொடங்குகிறாள் - அவைகளை ஆராதிக்கின்றாள் .
பிறந்த குழந்தைகள் எல்லாமே நல்ல குழந்தைகள் தான் என்றாலும் - அவர்கள் நான்றாக வளரவேண்டும் என்ற ஒரு நல்லெண்ணம் அவளை , குழந்தைகளை அவள் இருக்கும் வரை சுமந்துகொண்டே இருக்க வைக்கின்றது ... முடியும் வாழ்க்கை - முடிவில்லாத தியாகங்கள் - தொடரும் எண்ணங்கள் - தொடராத அவள் இளமை ; மூடும் விழிகளாக அவளின் குழந்தை - மூடாமல் காக்கும் அவள் இமைகள் - அப்பப்பா எத்தனை கனவுகள் - பட்டாம் பூச்சிகளைப்போல என்றுமே ஓயாத அவள் உழைப்பு - விட்டில் பூச்சிகள் போல விரைந்து முடிவடைகிறது அவள் வாழ்க்கை -----
முதலில் ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் உறங்கும் மாயகண்ணைனை எழுப்பி விடுவோமா ?
https://youtu.be/WvJqVe_pxw0
கருவின் கரு - பதிவு 57
" அம்பா "
உண்மை சம்பவம் -8
பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன
அன்று வெள்ளிகிழமை - டெல்லியில் ஒரு மீட்டிங் - 3மணிக்கு இண்டிகோ flight . இப்பொழுது 12மணிதான் ஆகிறது - வீட்டிலிருந்து 30 நிமிடங்களில் ஏர்போர்ட் சென்று விடலாம் - மேலும் வெப் செக்கின் பண்ணிவிட்டதால் சற்றே பால்கனியில் நின்றுகொண்டு விஜி போட்டுக்கொடுத்த காபி யை சுவைத்துகொண்டிருந்தேன் --- என்னுடைய garage பக்கம் இருந்து அந்த கருப்பு நாயின் ஓலக்குரல் கேட்டுக்கொண்டே இருந்தது ...
"விஜி ! என்ன இந்த நாய் நேற்று முதல் நம் வீட்டு அருகில் இருந்துகொண்டு கத்திக்கொண்டே இருக்கிறது ?- சனியன் - தொரத்திவிட்டாலும் இங்கேயே சுத்துகிறது - சத்தம் கொடுமையாக இருக்கிறது ! - முனிசிபாலிட்டிக்கு கம்ப்ளைன்ட் கொடுத்தாயா ?"
எனக்கு நாய் என்றாலே அலர்ஜி - அதுவும் கருப்பு நாயென்றால் அதற்க்கு எதிர்புறமாக ஓடுவேன் ..
விஜி , என் மனைவி , எனக்கு எது பிடிக்காதோ அதை அவள் கண்டிப்பாக விரும்புவாள் -- எனக்கும் , என் மனைவிக்கும் சேர்ந்து பிடிக்கும் ஒரே விஷயம் ஜல தோஷம் ஒன்றுதான் .
" என்னங்க அது ரொம்ப பாவங்க - பிள்ளயாண்டிருக்கிறது - நிறை மாதம் - எப்பவேண்டுமானாலும் குட்டிகளை போட்டுவிடும் - அது பிரசவ வேதனையால் கத்துகிறது - கொஞ்சம் கருணை காட்டுங்கள் "
விஜியின் கண்களில் கங்கையின் பிரவாகத்தைக்கண்டேன் -- எங்களுக்கு கல்யாணமாகி 15 வருடங்கள் ஓடிவிட்டன - இதுவரை ஆண்டவன் எங்களுக்கு அந்த குழந்தை பாக்கியத்தை ஏனோ தரவில்லை - செய்யாத தருமம் இல்லை , போகாத கோயில் இல்லை, பார்க்காத மருத்துவர்கள் இல்லை - விஜியின் வயிற்றில் ஒரு புழு பூச்சி கூட வரவில்லை . இருவரிடமும் எந்த பிரச்சனையும் இல்லையாம் --- கடவுள் அருள் செய்தாலொழிய இந்த ஜென்மத்தில் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை . தத்து எடுத்துக்கொள்ளலாம் -- ஏனோ விஜிக்கு அந்த topic யை எடுத்தாலே அழுகை வந்து விடுகிறது -- அவள் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை - நான் இழந்து பல நாட்கள் ஆகி விட்டன .
" விஜி உன் விருப்பம் - நான் செல்கிறேன் - நான் திரும்பி வருவதற்குள் இந்த நாய் இங்கு இருக்ககூடாது "
என் வேலை முடியவில்லை , வருவதற்கு 10 நாட்கள் ஆகிவிட்டது -- ஒரு சந்தோஷமான விஷயத்துடன் வீட்டிற்க்கு திரும்பிக்கொண்டிருந்தேன் - வெகு நாட்களாக வரவேண்டிய என் உத்தியோக உயர்வு கிடைத்த செய்தியை விஜியுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் - வேண்டுமென்றே ,போன் sms , whatsapp , ஈமெயில் , twitter , facebook எதிலுமே இந்த செய்தியை அவளுக்கு தெரிவிக்கவில்லை - suspene தொடருட்டுமே !!
வீட்டை வந்தடைந்தேன் -- அந்த கருப்பு நாயை பார்க்க முடியவில்லை - அதன் சத்தமும் கேட்கவில்லை -- விஜி அதை அனுப்பியிருப்பாள் - என் கோபம் அவளுக்கு ஒரு அச்சத்தை தந்திருக்கலாம் .
வீட்டில் விஜியும் இல்லை - எல்லா இடத்திலும் தேடினேன் விஜி கிடைக்கவில்லை --- மெதுவாக என்னுடைய பெரிய தோட்டத்திற்கு சென்றேன் - அங்கு நான் கண்ட காட்சி - பிரமிக்க வைத்தது .. விஜியின் மடியில் பால் போன்ற வெண்மை நிறத்தில் மூன்று labrador retriver -- அருகில் அந்த மூன்றின் தாய் -- என்னைப்பார்த்ததும் ஓடி வந்து என் கால்களை ஈரமாக்கியது - நாக்கினால் என் முகத்தை அலம்பியது - கண்களில் முட்டிவரும் கண்ணீர் - நன்றிகள் தோய்க்கப்பட்ட கண்ணீர் --
விஜி " மன்னிச்சிடுங்க - நான் தான் இங்கே இவைகளை கொண்டுவந்தேன் - பிரசவ வலியை நான் அனுபவித்ததில்லை - ஆனால் இந்த நாயின் மூலம் உணர்ந்தேன் -- 6 குட்டிகள் - மூன்றை நம் டிரைவருக்கு கொடுத்துவிட்டேன் -- இந்த மூன்றையும் நாமே வளர்க்கலாமா ?
மீண்டும் அவைகளின் தாய் என் முகத்தை நன்றியுடன் நக்கியது - என் மடியில் அதன் குட்டிகள் -- என் பயம் எங்கோ ஒளிந்துகொண்டது -- அந்த தாயின் உணர்ச்சிகளை முதல் முறையாக புரிந்துகொண்டேன்
labrador family என் வீட்டில் வந்த நேரம் விஜியும் விரைவில் தாய்மை அடைந்தாள் -- இதைத்தான் வரம் என்று சொல்வார்களோ - ??தாய்மையின் சக்தியை , அதன் வலிமையை , அதன் புனிதத்தை அந்த labrador retriver மூலம் , விஜியின் உதவியுடன் புரிந்துகொண்டேன் -------
http://i818.photobucket.com/albums/z...psvexkxvcn.jpg
https://youtu.be/a7eEJ7Kl7BY
https://youtu.be/YMcg7TMj1RM
கருவின் கரு - பதிவு 58
" அம்பா "
என்னவெல்லாம் கனவுகள் - அந்த தத்திச்செல்லும் முத்துக்கண்ணன்னின் சிரிப்பில் - கனவுகள் வாழ்ந்தன - கனவாகவே !!
https://youtu.be/aGyhXnU05nk
கருவின் கரு - பதிவு 59
" அம்பா "
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானம் முடியும் இடம் நீதானே
காற்றைப்போல நீ வந்தாயே
சுவாசமாகி நீ நின்றாயே மார்பில் ஊரும் உயிரே -----
https://youtu.be/GH77H2MuKXc
கருவின் கரு - பதிவு 60:):smile2:
" அம்பா "
பல கோடி ரூபாய் பணம் கொடுத்தாலும் கடையில் கிடைக்காது அம்மாவின் அன்பு..
"கண்ணோடு இமை சேர்ந்த பந்தம் அம்மா நீ என்னோட சொந்தம்...
தாகம் தீராதே அம்மா உன் சொல்லில்...
வான் வரை பறந்தாலும் உன் காலடி என்கூடு
காலத்தால் அழியாதது என்றென்றும் நிலையானது
அது ஒன்று தான் "அம்மா உன்னோட அன்பு"-------
https://youtu.be/x7ElA695b08
" அம்பா " தொடருவாள்------
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
7
அடுத்த பாலாவின் பாடல் நம் எல்லோருடைய நெஞ்சிலும் பசுமையாய்ப் பதிந்த பாடல். அனைவரும் மனனம் செய்து வைத்திருக்கும் திருக்குறள் போல. 70 களின் பாடல்களில் மயங்கிய இப்போதைய 50 வயதைக் கடந்தவர்களுக்கு இப்பாடல் ஒரு காமதேனு. கற்பக விருட்சம்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? வயது, வரம்பு, காலம், இவற்றையெல்லாம் கடந்து நின்று காலம் வென்ற பாடல்.
ஒரு பாடகன் அதுவும் இளம் வயது வாலிபப் பாடகன்... அப்போதுதான் அறிமுகமாகி அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கிறான். தன் 'அல்வா'க் குரலால் அனைவரையும் அடிமையாக்கிக் கொண்டிருக்கிறான் கொஞ்சம் கொஞ்சமாக. இப்பாடலில் அவன் பாடவே இல்லை. உடன் பாடும் பாடகியுடன் சேர்ந்து வெறும் ஹம்மிங் மட்டுமேதான் தருகிறான். அதுவும் பாடலின் ஆரம்பத்தில், பாடலின் இடையில் மட்டுமே. கொஞ்ச வினாடிகள்தான்.
பாடல் முழுவதையும் ஆக்கிரமித்து இசை சாம்ராஜ்யத்தின் அரசி இன்ப அராஜகம் புரியும் வேளையில், இந்தப் பாடகன் அதையும் மீறி, அந்த இன்பத்தை இன்னும் அதிகமாக்கி, நம் மனசுக்குள் நம்மையே அறியாமல் அவனாக நுழைந்து, ஒரு சாதாரண ஹம்மிங் மூலம் இனம் புரியா இனிய சித்ரவதைகள் செய்கிறானே! நாடி நரம்புகளில் புகுந்து தன் குரல் ஜாலத்தால் அணுக்கள் ஒவ்வொன்றையும் சிலிர்க்க வைக்கிறானே! இவனை என்ன செய்தால் தகும்?
இவன் ஹம்மிங் மட்டும்தான் 'ஆஹாஹா' வா?
இல்லை...இவன் வாழைத்தண்டு குரல் 'ஆஹாஹா'
இவன் வாயைத் திறந்தால் 'ஓஹோஹோ'
இவன் குரல் குழைவுக்கு இணை யாரும் 'ம்ஹூம்' இல்லவே இல்லை.
இந்தப் பாடலிலும் இவன் மேலே சொன்ன மூன்று வார்த்தைகளைத்தான் உச்சரிக்கிறான். அதிலேதான் எத்தனை வகை நெளிவு! எத்தனை வகை சுளிவு!. என்ன ஒரு ஏற்ற இறக்கங்கள்! என்ன ஒரு குரல் பாவங்கள்! மாய ஜாலங்கள்! வழுக்கி விலகும் வெண்ணையை விடவும் மென்மையான குரல்.
இன்னும் கொஞ்சம் அந்த ஹம்மிங்கை இந்தப் பாடகன் நீட்டிப்பு செய்ய மாட்டானா என்று ஏக்கப் பெருமூச்சு நமக்கு ஏற்படாமல் போகாது.
http://www.photofast.ca/files/products/7115.jpg
'நவக்கிரகம்' படத்தில் நயமான பாடல். பாலச்சந்தரின் பட்டறையிலிருந்து தயாரான 'மெல்லிசை மாமணி' வி.குமாரின் இசையமைப்பில் சுசீலாம்மா தனக்கே உரிய தனி முத்திரையுடன் சுகந்த தென்றலாய் சுகம் தர, பாலா அவருடன் இணைந்து அந்த தென்றலினூடே கலந்து வரும் சந்தன வாசமாய் மணக்க, நம் நெஞ்சமெல்லாம் எப்போது இப்பாடலைக் கேட்டாலும் கற்கண்டாய் இனிக்க,
எவரும் மறக்க முடியாத 'எவர்கிரீன்' பாடலாக
இந்த
'உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது'
பாடல் நம் எல்லோர் நெஞ்சையும் தொட்டு விட்டது.
.
அப்போதைய ஒரே ஒரு இளம் ஜோடியாய் பல திரைப்படங்களில் வலம் வந்த சிவக்குமாரும் ,லஷ்மியும் நடித்த இளமை கொஞ்சும் பாடல். காதலர்கள் கடற்கரையில் பாடும் காவிய கானம். லஷ்மியின் எளிமை, நாணம், சிவாவின் அழகு என்று பாடலுக்கு மேலும் மெருகு.
வி.குமார் என்ற ஹார்மோனியப் பெட்டி நாடக இசையமைப்பாளர் ஒருவர் நம் ஹார்மோன்களில் கலக்க காரணமாய் இருந்த பாடல். ஹார்ட்டின் அடித்தளம் வரை ஊடுருவிய பாடல்
ஹா...ஹாஹாஹா...
ம்ஹூஹூம்... ம்ஹூஹூம்
ஹா..ஹா..ஹாஹா
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது
வரலாம் தொடலாம் மணநாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
உன் பாதம் தொட்ட அலைகளை என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலமிட்டது
இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலமிட்டது
கொஞ்ச நாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது
ஆஹாஹா! ஓஹோஹோ! ம்ஹூஹூம்! லல்லல்லா!
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது
மழை தூறல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்துத் தெறித்த போது என்னை நனைத்தது
ஆஹாஹா! ஓஹோஹோ!
ஓஹோஹோ! ஆஹாஹா!
மழை தூறல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது
அது துளித் துளியாய் எனது தோளில் இடம் பிடித்தது
இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்துப் பார்த்தது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது
வரலாம் தொடலாம் மணநாள் வரும்போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும்போது
உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது
https://youtu.be/TJt9u51RkKs
வாழ்க்கையே வெறுத்துப் போகும் தருணங்கள் ... சிக சாரின் பட்டியலில் மேலும் ஒன்று.
நன்றாக விறுவிறுப்பாகப் போய்க் கொண்டே இருக்கும் சமயத்தில் திடீரென்று நிறுத்தி விட்டு அடுத்த பதிவில் பார்ப்போம் என்று சி.க. சார் சொல்வது மட்டும் என்னவாம்...
அபூர்வ கானங்கள்
படம் இளைய பிறவிகள்
இசை சங்கர் கணேஷ்
குரல்கள் ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம்
https://www.youtube.com/watch?v=I9u4wadBuQU
அபூர்வ கானங்கள்
வாசு சார்
உங்களுக்கு நல்ல வேலை .... இந்தப் பாட்டைப் பற்றி எழுதி பட்டையைக் கிளப்பப் போகிறீர்கள்..
படம் - கண்ணாமூச்சி
குரல் - எஸ்.பி.பாலா
இசை -மெல்லிசை மாமணி வி.குமார்
https://www.youtube.com/watch?v=2LDlONlyDMQ
ஹாய் குட்மார்னிங்க் ஆல்
வாஸ்ஸூ, இன்னாங்க காலங்காலீல மனுஷன் வேலைபாக்கத்தாவலை..
//மழை தூறல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது
அது துளித் துளியாய் எனது தோளில் இடம் பிடித்தது
இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்துப் பார்த்தது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக் கொண்டது//
என்னா பாட்டு..அது துளித்துளியாய் - அப்படின்னு அந்த அம்மா பாடறது காதுல தேன் , காஜ்ல் அகர்வால் சாரி டைப்போ காஜர் அல்வா (முந்திரி அல்வா) பாய்ச்சறா மாதிரி இருக்கும்.. அதுவும் சில் ப்ளாக் அண்ட் ஒய்ட் படங்கள்ல லஷ்மியோட அழகு நன்னாயிட்டே இருக்கும்.. சமயத்துல காம்பஸ எடுத்து நடுமூக்கில குத்தினா வட்டம் வரையலாம் அப்படி முகமும் வட்டமா இருக்கும்!
சூப்பர் பாட்டு நைஸ் ரைட்டிங்க்.. நன்றி
*
//நன்றாக விறுவிறுப்பாகப் போய்க் கொண்டே இருக்கும் சமயத்தில் திடீரென்று நிறுத்தி விட்டு அடுத்த பதிவில் பார்ப்போம் என்று சி.க. சார் சொல்வது மட்டும் என்னவாம்...// :) நன்றி ராகவேந்தர் சார்..
*
தெய்வம் த்ந்த பூவே பாட்டுக்கே ஒரு வியாசம் எழுதலாம் ரவி.. விட்டுட்டீங்களே...
இலங்கைப் பிரச்னை அது இதெல்லாம் ஒழுங்காக் கையாளலைன்னு படம் வந்த புதுசுல என்னமெல்லாமோ மணிரத்னத்தைப் பேசினாங்க..ஆனா அதெல்லாம் எடுத்துக்கவே படாது..படமென்ன
ஒரு வளர்ப்புத் தாய்க்கும் அவள் வளர்க்கும் மகளுக்கும் உள்ள உறவைப் பற்றியது
பெத்தாத் தான் புள்ளீங்களா..
அதுவும் தன்னை ப் பெற்ற தாய் வேண்டாம் என விலக அவளிடமிருந்து விலகி வரும் சிறுமி வந்து- பார்த்திபன் மகள்- மெல்ல்லிய பச்சக் சிம்ரன் கன்னத்தில் கொடுக்க சிம்ரன் கண்ணோரம் மெல்லிய நீர்.. பார்ப்பவருக்கும் தான்..
கொஞ்சம் மிக நெகிழவைத்த படம்.. நன்றி ரவி..
அபூர்வ கானங்கள்
இதை கானம் என்று சொல்லலாமோ.. ஒரு வார்த்தை கூட இல்லாமல் ஒரு பாட்டு.. வெறும் ஹம்மிங் மட்டுமே...
இதயம் பார்க்கிறது... படத்தில் யாதோங் கீ பாராத் படப் பாடலின் மெட்டை வெறும் ஹம்மிங் மட்டும் பாட வைத்திருக்கிறார்கள்..
https://www.youtube.com/watch?v=cepigF1zGeA
பெண் குரல் சசிரேகா..
ஆண் குரல்... மலேசியா வாசு வின் குரலாய்த் தெரிகிறது. தவறுதலாக எம்.எஸ்.வி. என்று போட்டிருக்கிறார்கள்.
அபூர்வ கானங்கள்
படம் - அழைத்தால் வருவேன்
பாடல் - சொந்தங்கள் திரும்பத் திரும்ப அழைக்கும்
குரல்கள் - எஸ்.பி.பாலா, பி.சுசீலா
https://www.youtube.com/watch?v=wUxGO6puYAM
வாசு,
பாலாவின் பழைய பாடல்கள் சுகமான சுனாமியாக எங்களைத் தாக்கி இன்ப அதிர்வலைகளை எக்கச்சக்கமாக ஏற்றிக்கொண்டிருக்கிறது. சுவையான உணவும் அதிகமாக அதிகமாக திகட்டும். இந்த சுனாமி எங்களை தாக்கித் தாக்கி இன்னும் இன்னும் என்று ஏங்க வைக்கிறது.
'உன்னைத் தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது' - உங்களுக்கு கொடுத்த இன்பத்தை எங்களுக்கும் கொண்டுவந்துவிட்டது. உண்மைதான் இந்த பாடல் எப்போது கேட்டாலும் நெஞ்சில் இனிக்கும் கற்கண்டுதான். பழைய பாலா பாடலில் மறக்காமல் இணைத்ததற்கு நன்றி.
ரவி,
கருவின் கருவில் நீங்கள் மட்டும் என்னவாம், எல்லோரையும் கண்ணீர் சிந்த வைத்து படிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவரவர்கள் அம்மா, அப்பாவை நினைத்து நெக்குருக எல்லோருக்கும் புண்ணியம் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நன்றி.
சி.க.,
எடை போடும் பாடல்கள் அருமை. என்ன "கத்திரிக்காய், கத்திரிக்காய், குண்டு கத்திரிக்காய்" என்று எடை போட்டவரை உணர்ச்சி வயப்பட செய்யும் பாடலையும் சேர்த்திருக்கலாம். பரவாயில்லை. மற்றபடி நல்ல தொகுப்பு.
இதில் நீங்கள் "நிலவில் பொருள்கள் எடை இழக்கும்.." என்ற வரிகளை சொன்னவுடன் ராஜண்ணாவின் நினைவுதான் வந்தது. ஏன் என்றால் நானும் அவரும் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் நான் சொன்னேன், "பூமியில் இருக்கும் வெயிட், நிலாவிற்கு போனபின்பு ஆறில் ஒரு மடங்காக குறைந்து விடும். உதாரணத்திற்கு 60 கிலோ வெயிட் உள்ளவர் நிலாவிற்கு போனால் 10 கிலோ ஆகி விடுவார்" என்றேன். "அட அப்படியா?" என்று ஆச்சரியப்பட்டவர் சொன்னார் "அப்படியென்றால் வெயிட் குறைக்க ஆசைப் படுபவர்களை எல்லாம் நிலாவிற்கு அனுப்பி வைத்தால் எளிதாக வெயிட் குறைத்துக் கொள்வார்களே!!!" என்றார்.
வழக்கம் போல நான் ஒன்றும் பேச வில்லை. ஆனால் நினைத்துக் கொண்டேன் "அதைப் போல வயதைக் குறைக்க ஒரு கோளோ, துணைக் கோளோ கண்டு பிடித்தால், நமது திரியில் இருக்கும் நம்ம ரவி மற்றும் நான் இந்த விஷயத்தில் டூ விட்ட நம் நண்பர் ஒருவர் போன்றவர்களை அங்கே அனுப்பி வைத்தால் சந்தோஷமாக சென்று வருவார்கள்" என்று. நீங்க என்ன சொல்றீங்க?
சி.க.,
காஜோல் பிடிக்காது என்று சொல்லியே பக்கெட் பக்கெட்டாக தகவல் வாங்கி விட்டீர்கள். நுங்கு நுங்காக நுங்குடன் அடுக்கி வைத்து விட்டார்கள். பாராட்டுகள். அடுத்த தூண்டிலும் போட்டு விட்டீர்கள் சுஷ்மிதா சென் என்று சொல்லி. வாழ்த்துகள். தண்ணீர் வரலையே என்று கவலைப் பட்டு கவலைப் பட்டு ஜல தோஷம் வரவைத்துக் கொண்டு விட்டீர்கள். குழாயில் தண்ணீர் கண்ட பின்பாவது மூக்கு குழாயில் ஜலம் நிற்கட்டும். உடல் நலனை பேணுவீர்.
" தெய்வம் த்ந்த பூவே பாட்டுக்கே ஒரு வியாசம் எழுதலாம் ரவி.. விட்டுட்டீங்களே..."
ck - தேர்ந்தெடுக்கும் எல்லா பாடல்களுக்குமே வியாசம் தேவை - இந்த பாடலும் அதற்க்கு ஒரு விதிவிலக்கு அல்ல - எழுத ஆரம்பித்துவிட்டால் எங்கு முடிப்பது என்று தெரியவில்லை - எழுதும் விஷயங்களுக்கு உதவியாகத்தான் பாடல்களை தேர்ந்தெடுக்கிறேன் - பாடல்களுக்காக விஷயங்களை எழுதவில்லை . இருப்பினும் வியாசம் தேவைப்படும் பாடல்களில் கண்டிப்பாக எழுத முயற்சி செய்கின்றேன் - நன்றி
பூவின் பாடல் 24: "பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கேள்வி பதிலா வர்ற பாட்டு. சரோ அம்மா நடிச்சிருக்காக. கூட குழந்தையாக ஸ்ரீதேவி வர்றாக. கவியரசர் கண்ணதாசன் எழுதி இருக்காக. சுசிலாம்மா பாடியிருக்காக. கேளும்மா மின்னலு. மன்னிக்கணும். கேளுங்க நண்பர்களே.
நான் நெறைய பாட்டு எழுதனுமின்னு நெனைச்சுகிட்டு இருக்கேன். சட்டுன்னு பூவிலே சிறந்த பூ அன்புன்னுட்டாங்களே. நான் எழுதற பூ வரிசையிலே அன்பு பத்திய பாடல்களையும் எழுதணுமா? இல்லையின்னா சி.க. கேட்டுருவாரே. என்ன பாட்டு எழுதிருக்கீங்க. பூவிலே சிறந்த பூ அன்புன்னு கவியரசரே சொல்லியிருக்காரு. அதைப் பத்தி சொல்லாம வேற எல்லாப் பூக்களையும் எழுதி என்ன உபயோகம்?-ன்னு. சரி அவருக்கு அந்த சிறந்த பூவை எழுதிச் சொல்லிட்டு மத்த பூவையெல்லாம் நாம எழுதிடலாம். சரியா நண்பர்களே?
இப்ப இந்த பாட்டை கேட்போம்.
https://www.youtube.com/watch?v=1VgykXmqfhc
அது சரி குலவிளக்குக்கு அந்த சிறந்த பூவைச் சூட முடியுமா? சூடினால்தான் குலவிளக்கா இருக்க முடியுமா... யாருங்க சொல்றது?
நன்றி கல்நாயக் சார் , இந்த திரியில் இருக்கும்/ திரியைப்படிக்கும் எல்லா உள்ளங்களும் அம்மா, அப்பாவிற்கு சேவை செய்த, செய்துகொண்டிருக்கும் , கருணை நிறைந்த, கடமை உணர்சிகள் நிறைந்த உள்ளங்கள் ஆகத்தான் இருக்க முடியும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை -
எடுத்து எழுதும் எல்லா உண்மை சம்பவங்களும் , என் வாழ்வில் , என் உறவினர்கள் வாழ்வில் , எனது நண்பர்கள் வாழ்வில் நடந்த , நடக்கின்ற சம்பவங்களே ... இதில் எதுவுமே கற்பனை இல்லை , பெயர்களைத்தவிர ---- . ஆராதிக்க வேண்டியவர்களை அவமானம் படுத்துகிறார்கள் ; நடமாடும் தெய்வங்களை , முதியோர் இல்லங்களில் நடை ஒடிந்த கல்லறை சின்னமாக ஆக்குகிறார்கள் ; பேசும் தெய்வங்களை ஊமையாக்கி மகிழ்வதில் என்ன வாழ்க்கை இருக்கிறது ? position , possesion எதற்குமே ஒரு மதிப்பை உண்டாக்குபவள் ஒரு தாய் தான் - அவளை தீண்டாத உலகம் , தீண்டும் நெருப்பிற்கு இரையாகட்டும் - இப்படிப்பட்ட எண்ண குமறல்களுக்கு ஒரு மாறுதல் /ஆறுதல் தருவதற்காகத்தான் இந்த கருவின் கருவை ஆரம்பித்தேன் - இதை முடிக்கும் தருவாயில் இருக்கிறேன் - அம்மாவிற்கு முடிவில்லை , அவள் கருணை மடிவதில்லை - உங்கள் எல்லோருடைய ஆதரவு இருப்பதால் , என் எண்ண ஓட்டங்களுக்கும் தடை வருவதில்லை -----
Disaster Management Plan (DMP) , இந்த திரிக்கு உடனே தேவை என்று சற்று நாட்களுக்கு முன் எல்லோரையும் கேட்டுக்கொண்டேன் - யாருமே அதை படித்தமாதிரியும் , கவலைப்பட்டதாகவும் , கவலைப்படுவதாகவும் தெரியவில்லையே - அது ஏன் , ஏன் , ஏன் ????????
மீண்டும் இந்த திரியில் "பாலாவின்" சூராவளிப்பயணம் .. கூரைகள் தரைமட்டம் - வீடுகள் இடிந்தன , ஒயர்கள் அறுந்தன , தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன - கடைசியாக வந்த செய்தி நம்மையெல்லாம் கதி கலங்க வைக்கிறது - ஆமாம் எது நடக்ககூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது - ராஜேஷையும் , கிருஷ்னாஜியையும் காண வில்லை - வெள்ளம் அடித்து செண்டிருக்ககூடும் என் நம்பப்படுகிறது - இனி வரப்போகும் புயலில் நாமும் இருப்போமா என்பது சந்தேகமே !!
திரு CK , திரு கல்நாயக் , திரு ஆதிராம் , திரு ராகவேந்திரா , திரு கலை , எல்லோருக்கும் பணிவான வேண்டுகோள் - ஏதாவது உடனே செய்யுங்கள் ப்ளீஸ் -------நம்மை நாம் தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் !?
அன்பு நண்பர்களே
காலை வணக்கம்
மூன்று தினங்கள் உறவினர்கள் கல்யாண வேலையாக கோயம்புத்தூர் குருவாயூர் சென்றதால் திரியில் சங்கமிக்க முடியவில்லை.
மன்னிக்கவும்.
நல்லதொரு நட்பு திரியில் மூன்று நாட்கள் நடந்த சில அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசை.அனைத்தும் உண்மை . எதுவும் கற்பனை இல்லை. 7/6/15 சண்டே அன்று என் மனைவியின் தாய்மாமனின் பெண்வழி பேரனுக்கு கல்யாணம் . மணபெண் என் மனைவியின் சித்தப்பாவின் பெண் . மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் குருவாயூரில் நடப்பதாக நிச்சயக்கப்பட்டு கோயம்புத்தூர்இல் சனிகிழமை reception ,ஞாயிறு (நேற்று) குருவாயூரில் கல்யாணம் என்று தீர்மானிக்கப்பட்டு இருந்தது. என் மனைவிக்கு இரு வழி உறவு என்பதால் நிச்சயம் திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை. கட்டளையை நிறைவேற்ற தவறி விட்டால் சவுக்கடி தான் (பூவா தலையா ஜெமினி எஸ் வரலட்சுமியை அடிப்பது போல் :)) வெள்ளிகிழமை இரவே அனைவரும் சென்னையில் ஆஜர் ஆகிவிட்டனர். இரவு 8.45 alleppy எக்ஸ்பிரஸ்இல் பயணம்.பயணத்தின் போது மணப்பெண் ,மணப்பையன் இருவருமே ஒருவரை ஒருவர் கிண்டல்,கேலி,கலாய்ப்பு அடித்து கொண்டு தான் வந்தார்கள். எல்லோருமே மிக சந்தோசமாக இருந்த தருணம். சனிகிழமை காலை 4.15 கோயம்புத்தூர் ஜங்ஷன் இல் இருந்து எல்லோரும் கல்யாண சத்திரம் சென்றோம். காலையில் 10 மணிக்கு எங்கள் இன வழக்கப்படி பெண்ணுக்கும் பிள்ளைக்கும் காப்பு (சிலர் அதை கை விலங்கு என்பார்கள் :)) அணிவிப்பார்கள்.மணபையன் குளித்து ரெடி ஆகி காப்புக்கு தயாராகி விட்டான். சாஸ்த்ரிகள் அருமையாக வேத மந்திரம் ஓதி மணப்பையனுக்கு காப்பையும் கட்டி விட்டார். பிறகு 'பெண்ணை அழைத்து கொண்டு வாருங்கள். அவாளுக்கும் காப்பு கட்டி முடிந்தது என்றால் பிறகு சாப்பாடு தான் ' என்றார் தீடிர் என்று பரபரப்பு. .அங்கும் இங்கும் ஒரே ஓட்டம் சாட்டம். ஆளாளுக்கு. ஒருவர் 'போலீஸ் க்கு போன் போடு ' என்றார் . இன்னொருவர் "நேற்று ட்ரெயினில் பார்த்தேனே.இன்று என்ன ' என்று சந்தேகபட்டார் மற்றொருவர் 'எல்லா ரூமும் தேடி பார்த்தேளா' என்றார். இதில் காமெடி சத்திரத்தில் ரூம் என்று எதுவுமே கிடையாது. ஒரு நீண்ட ஹால் அதை ஓட்டிஒரு மணப்பெண் அறை.அதை அறை என்று சொல்ல முடியாது. ஒரு தடுப்பு தான் .இறுதியில் தான் தெரிந்தது.மணப்பெண்ணை காணவில்லை என்று. பிறகு விசாரித்ததில் காலை 4.15 மணிக்கு கோயம்புத்தூர் ஜங்ஷன்இல் இறங்கி பேங்க் atm இல் பணம் எடுத்து வருகிறேன் என்று சென்ற பெண் அப்படியே எஸ்கேப்.பெண்ணின் தாயாரும்,தந்தையும் கிட்டத்தட்ட 6 மணி நேரமாக எதையும் யாரிடமும் சொல்லாமல் மனதிற்குள் அப்படியே வைத்து கொண்டு பின் function நேரத்தில் சொல்கிறார்கள். மாப்பிள்ளை பையன் MBA . மணப்பெண் MA ,M Phil . பெண்ணின் தந்தை பெங்களுருவில் ஒரு பிரபல தொழில் அதிபர். எல்லோரும் நல்ல நிலையில் இருப்பவர்கள்.
"உன்னை சொல்லி குற்றமில்லை .என்னை சொல்லி குற்றமில்லை.காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி ' என்று பெரியவர்கள் எல்லோரும் பாட ஆரம்பித்து விட்டார்கள்
இதுவும் கடந்து போகும் என்பார்கள்.
என்னமோ போ கோபாலா . நடந்தது,நடப்பது,நடக்க போகிறது எல்லாமே வாசுதேவனின் (I mean கிருஷ்ண பரமாத்மா) செயல்
இது ஒரு பகிர்வு மட்டுமே . மன அழுத்தத்தை பகிரும் போது பாரம் சற்று குறையும் என்பார்களே அது போல் தான் . நமது திரியை நான் சாய்ந்து கொள்ளும் ஒரு தோள் போலவே கருதுகிறேன் .
ரவி அருமையாக எழுதுகிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால் சில சமயம் மனம் வெறுமையாக இருக்கும் போது உங்களின் பல பதிவுகளை படித்து தெளிவு அடைகிறேன் . எந்த சுனாமி வந்தாலும் தொடர வேண்டும்
lovely சாங் வாசு . பாலாவின் ஹம்மிங் (ரீங்காரம்) மற்றும் சுசீலாவின் தேன் குரல் இணைந்து பின்னி எடுக்குமே .அதுவும் சுசீலாம்மா குரல் வளைந்து நெளிந்து போகும் அழகு .கேரளாவின் மலை பாதைகளில் வண்டி வழுக்கி கொண்டு சொல்வது போல்
இந்த நாணம் என்ற சொல் தான் கவிஞர்கள் கையில் சிக்கி கொண்டு எப்படி எல்லாம் கற்பனை ஊற்றாக வருகிறது .
உன் பாதம் தொட்ட அலைகள் என் பாதம் தொட்டது
நம்மிருவரையும் ஒன்றுசேர்க்க பாலமிட்டது
இந்த நேரம் பார்த்து நாணம் வந்து கோலமிட்டது
கொஞ்சநாள் வரையில் பொறுத்திருக்க ஆணையிட்டது
இன்னொரு definition for நாணம் (இதுவும் வாலி தானே )
ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது அது எது
நாணமோ இன்னும் நாணமோ
https://encrypted-tbn2.gstatic.com/i..._HM8qzS-yVJsWQ