Originally Posted by
mr_karthik
அன்புள்ள ராகவேந்தர் சார்,
தச்சோளி அம்பு திரைப்படத்தின் வெற்றிவிழாவில் நடிகர்திலகம் வெற்றிக்கேடயம் பெறும் காட்சியைக்கண்டு பெருமகிழ்ச்சியடைந்தேன். இவற்றை இதுபோன்ற புகைப்பட ஸ்டில்களில் பார்த்து ஆவலைத்தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஏனென்றால் நடிகர்திலகத்துக்கு 'நினைவு இல்லம்' அமையப்போவதுமில்லை. அதில், இவையெல்லாம் இடம்பெறப்போவதுமில்லை. அவற்றை நாம் பார்க்கப்போவதுமில்லை.
"தாத்தா, நீங்கள் வாழும்போது பார்க்க ஆசைப்பட்ட சிவாஜி தாத்தாவின் நினைவு இல்லம் இப்போ ஒருவழியாக உருவாகி விட்டது. அதை உங்கள் சார்பில் நான் போய்ப்பார்த்து வந்தேன்" என்று என் பேரன் என் கல்லறையின் முன் நின்று சொல்லும் காலமாவது வருமா? அல்லது அதுவும் கனவாகவே போய்விடுமா?.