நண்பர் திரு.ரவிகிரண் சூர்யா அவர்களுக்கு,
தங்கள் விளக்கத்துக்கு நன்றி. தங்கப்பதக்கம் திரைப்படம் அதற்கு முன் வந்த படங்களின் வசூலை முறியடித்தது என்று நீங்கள் குறிப்பிட்டது, உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலையும் அது முறியடித்தது என்பதாகத்தான் அர்த்தம். அதனால்தான் நான் விளக்கம் அளித்தேன்.
நீங்கள் கூறியிருப்பது போல, உங்கள் நம்பிக்கை உங்களுக்கு, எங்கள் நம்பிக்கை எங்களுக்கு, என்ற அடிப்படையில் உலகம் சுற்றும் வாலிபன் வசூல் விவரத்தை நாங்கள் வெளியிடவில்லை. அப்போதைய வசூல் விவரங்களை தெரிந்து கொண்டுதான் ரசிகர் மன்றத்தினர் வெளியிட்டுள்ளனர். திருச்சியிலும், சென்னையிலும் உலகம் சுற்றும் வாலிபனை விட, தங்கப்பதக்கம் அதிகம் வசூலித்தது என்பதையும் அந்த நோட்டீஸ்களில் நேர்மையாக குறிப்பிடப்பட்டுள்ளன.
நேற்று நீங்கள் கூறியிருப்பது போல, (அதுவும் திரு. பம்மல் சுவாமிநாதன் பற்றி நானாக சொல்லவில்லை) உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை தங்கப்பதக்கம் முறியடித்தது என்று உங்கள் திரியின் எந்த பாகத்திலும் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் கூறியிருப்பதாக எனக்கு நினைவு இல்லை. அப்படி இருந்தால் அதை பதிவிடுங்களேன்.
இன்னொன்றும் சொல்கிறேன். ஒருவருடைய மார்க்கெட் வேல்யூவையும் அவரது படங்களுக்கு வசூலாகும் தொகையையும் வைத்துத்தான் நடிகர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்படும். தலைவர் திரைப்படத்துறையில் இருக்கும் வரை, தமிழில் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் அவர்தான். இது எல்லாருக்கும் தெரியும். தலைவர் படங்களை தயாரித்த எந்த தயாரிப்பாளரும் நஷ்டமும் அடைந்ததில்லை. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்