-
14th August 2015, 02:46 PM
#1971
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
இனிய நண்பர் திரு கலைவேந்தன்,
தங்கபதக்கத்தின் வசூலை அதற்க்கு முன்னரும் அதற்க்கு பின்னரும் திரிசூலம் வரும் வரை எந்த படமும் முறியடிக்கவில்லை என்று தான் கூறினேன்...
உலகம் சுற்றும் வாலிபன் வசூலை பற்றி குறை ஒன்றும் கூறவில்லையே...சார் !
நீங்கள் எப்படி உலகம் சுற்றும் வாலிபன் வசூலை பற்றி நம்பிக்கை வைகிரீர்களோ, நாங்களும் தங்கபதக்க வசூல் பற்றி நம்பிக்கை வைக்கிறோம் அவ்வளவே..உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எங்கள் நம்பிக்கை எங்களுக்கு.....!
மேலும்...உலகம் சுற்றும் வாலிபன் வசூல் மொத்த வசூலும் திரை அரங்கு வாரியாக நாட்கள் வாரியாக தயாரிப்பாளரோ அல்லது விநியோகச்தரோ பத்திரிகை விளம்பரம் கொடுத்து வந்துள்ளதா ? ( அதாவது ரிக்க்ஷாகாரன் 51 நாள் வசூல் விளம்பரம்...அல்லது பட்டிக்காடா பட்டணமா 6 வார திரை அரங்கு வாரியான விளம்பரம் போல ) அல்லது அப்படி வந்த விளம்பரத்தை அடிபடையாக வைத்து வசூல் பற்றி இங்கு தகவல் புனயபட்டுள்ளதா ? அதுவும் இல்லை...! இதே நிலை தான் தங்கபதக்கம் திரைப்படத்திற்கும்....!
நீங்கள் எப்படி உங்கள் ரசிகர் மன்ற நோட்டீஸ் மற்றும் அவர்கள் கூறும் தகவலை வைத்து எதுவும் முறியடிக்கவில்லை...இல்லை..என்று கூறுகிறீர்களோ...அதே போல எங்களிடம் உள்ள தகவலை வைத்து நாங்களும் எங்கள் திரைப்படத்தின் வசூல் அதற்க்கு முன்னர் வந்த வசூல் சாதனையை முறியடித்தது ..தங்கபதக்க வசூலை திரிசூலம் முறியடித்தது என்று கூறினேன்....இதில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை..!
உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எங்கள் நம்பிக்கை எங்களுக்கு ! அவ்வளவே !
அன்புடன்
rks
நண்பர் திரு.ரவிகிரண் சூர்யா அவர்களுக்கு,
தங்கள் விளக்கத்துக்கு நன்றி. தங்கப்பதக்கம் திரைப்படம் அதற்கு முன் வந்த படங்களின் வசூலை முறியடித்தது என்று நீங்கள் குறிப்பிட்டது, உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலையும் அது முறியடித்தது என்பதாகத்தான் அர்த்தம். அதனால்தான் நான் விளக்கம் அளித்தேன்.
நீங்கள் கூறியிருப்பது போல, உங்கள் நம்பிக்கை உங்களுக்கு, எங்கள் நம்பிக்கை எங்களுக்கு, என்ற அடிப்படையில் உலகம் சுற்றும் வாலிபன் வசூல் விவரத்தை நாங்கள் வெளியிடவில்லை. அப்போதைய வசூல் விவரங்களை தெரிந்து கொண்டுதான் ரசிகர் மன்றத்தினர் வெளியிட்டுள்ளனர். திருச்சியிலும், சென்னையிலும் உலகம் சுற்றும் வாலிபனை விட, தங்கப்பதக்கம் அதிகம் வசூலித்தது என்பதையும் அந்த நோட்டீஸ்களில் நேர்மையாக குறிப்பிடப்பட்டுள்ளன.
நேற்று நீங்கள் கூறியிருப்பது போல, (அதுவும் திரு. பம்மல் சுவாமிநாதன் பற்றி நானாக சொல்லவில்லை) உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் வசூலை தங்கப்பதக்கம் முறியடித்தது என்று உங்கள் திரியின் எந்த பாகத்திலும் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் கூறியிருப்பதாக எனக்கு நினைவு இல்லை. அப்படி இருந்தால் அதை பதிவிடுங்களேன்.
இன்னொன்றும் சொல்கிறேன். ஒருவருடைய மார்க்கெட் வேல்யூவையும் அவரது படங்களுக்கு வசூலாகும் தொகையையும் வைத்துத்தான் நடிகர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்படும். தலைவர் திரைப்படத்துறையில் இருக்கும் வரை, தமிழில் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகர் அவர்தான். இது எல்லாருக்கும் தெரியும். தலைவர் படங்களை தயாரித்த எந்த தயாரிப்பாளரும் நஷ்டமும் அடைந்ததில்லை. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Last edited by KALAIVENTHAN; 14th August 2015 at 03:50 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th August 2015 02:46 PM
# ADS
Circuit advertisement
-
14th August 2015, 02:48 PM
#1972
Junior Member
Diamond Hubber
வணக்கம்,
"உலகம் சுற்றும் வாலிபனின் வெள்ளி விழா விளம்பரம் பத்திரிக்கைகளில் வந்தபோது கடந்த 6 மாதங்களில் 60 லட்ச ருபாய் தமிழக அரசிற்கு வரி வசூலித்துக் கொடுத்திருக்கிறது இந்த படம் என்ற வரிகளைத்தான் கொடுத்திருந்தார்கள்" என்பது இருக்கட்டும்.
அதுபோல மற்ற நடிகர்களின் படங்களும் " தமிழக அரசிற்கு வரி வசூலித்துக் கொடுத்திருக்கிறது" என்று பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்க வேண்டும் / வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லையே!
நன்றி
Last edited by saileshbasu; 14th August 2015 at 02:54 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
14th August 2015, 02:51 PM
#1973
Junior Member
Seasoned Hubber
திரு.சைலேஷ் சார்,
இதயக்கனி படத்தின் வசூல் பற்றி திரு.முக்தா சீனிவாசன் அவர்கள் தெரிவித்த கருத்தை ஏற்கனவே நமது திரியில் பதிவிட்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
14th August 2015, 03:00 PM
#1974
Junior Member
Seasoned Hubber
30 ஆண்டுகள் தொடர்ந்து தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் , அதிக வெற்றி படங்கள் தந்த நடிகர் ,வசூலில் என்றென்றும் முதலிடம் பெற்ற நடிகர் , உலகமெங்கும் அதிகமான மன்றங்களையும் , கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகர் எதிலும் , எங்கும் , என்றென்றும்
முதலிடம் வகித்த நடிகர் என்றால் அது நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதில் மாற்று கருத்துக்கு
இடமில்லை .
30 ஆண்டுகள் தொடந்து கதாநயாகன் .
115 படங்கள் .... 6 வெள்ளி விழா படங்கள் . 10 படங்கள் ஒரு கோடிக்கு மேல் வசூலில் சாதனை .
1977 வரை மக்கள் திலகத்தின் சாதனைகளை முறியடிக்கவில்லை .இன்னும் சில சாதனைகள் தக்க வைக்கப்பட்டுள்ளது .
தவிர்க்க முடியாத நிலையில் இந்த மீள் பதிவை தருகிறேன் .
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
14th August 2015, 03:13 PM
#1975
Junior Member
Seasoned Hubber
இதயக்கனி வெற்றி விழாவில் முக்தா சீனிவாசன் ( தயாரிப்பாளர் ) பேசியது.
நாள் 4.1.1976.
1975-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் மிகப் பெரிய வெற்றியைப் படைத்த படம் சத்யா மூவிஸின் இதயக்கனி இது தமிழ்ப் படவுலகுக்கு பெருமை. ஆகவே அப்படத்தை பாராட்டுவதிலோ கூச்சமோ, வெட்கமோ, தேவையில்லை. 1975ம் ஆண்டில் தமிழ்ப் படங்கள் 59 வெளிவந்துள்ளன. 8 அல்லது 9 படங்கள் 100 நாட்கள் ஓடி வழக்கமாகியுள்ள தமிழ் நாட்டில் 4 படங்கள் மட்டும் தான் கடந்த ஆண்டில் 100 நாட்கள் ஓடின. இந்தப் படங்களில் சென்னை மட்டுமல்லாமல் சென்னையை விட்டு வெளியூர்களிலும் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி மட்டும் தான்.
தற்போதுள்ள வரி அமைப்பின்படி, எந்த தமிழ்ப்படமும் நீண்ட நாட்கள் ஓடுவதோ – லாபத்தை தருவதோ இயலாத சூழ்நிலை உள்ளது. அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் இதயக்கனி மிகக் சிறந்த படமாக கடந்த ஆண்டில் வெற்றி படைத்திருக்கிறது என்றால் அதைப் பாராட்டுவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும். 1975ம் ஆண்டில் அதிகமாக கேளிக்கை வரி செலுத்திய ஒரே படம் இதயக்கனி தான் மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.
இதன் படி சர்க்காருக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பவர் எம்.ஜி.ஆர். தான். அதிகப்படியான வரி கொடுப்பதின் மூலம், அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகச் சிறந்த நண்பராக எம்.ஜி.ஆர். இருக்கிறார்.
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
-
14th August 2015, 03:15 PM
#1976
Junior Member
Seasoned Hubber
மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
14th August 2015, 03:46 PM
#1977
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Varadakumar Sundaraman
30 ஆண்டுகள் தொடர்ந்து தென்னிந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் , அதிக வெற்றி படங்கள் தந்த நடிகர் ,வசூலில் என்றென்றும் முதலிடம் பெற்ற நடிகர் , உலகமெங்கும் அதிகமான மன்றங்களையும் , கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகர் எதிலும் , எங்கும் , என்றென்றும்
முதலிடம் வகித்த நடிகர் என்றால் அது நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதில் மாற்று கருத்துக்கு
இடமில்லை .
30 ஆண்டுகள் தொடந்து கதாநயாகன் .
115 படங்கள் .... 6 வெள்ளி விழா படங்கள் . 10 படங்கள் ஒரு கோடிக்கு மேல் வசூலில் சாதனை .
1977 வரை மக்கள் திலகத்தின் சாதனைகளை முறியடிக்கவில்லை .இன்னும் சில சாதனைகள் தக்க வைக்கப்பட்டுள்ளது .
தவிர்க்க முடியாத நிலையில் இந்த மீள் பதிவை தருகிறேன் .
திரு.குமார் சார்,
நாடோடி மன்னன் திரைப்படம் தமிழில் முதன் முதலாக ரூ.1 கோடி வசூல் செய்த படம் என்று பிலிம்பேர் பத்திரிகையில் (1973ம் ஆண்டு என்று நினைவு) குறிப்பிட்டிருந்தார்கள். ரூ.1 கோடிக்கு மேல் தலைவரின் 10 படங்கள் வசூலித்ததாக ஒரு வார இதழில் படங்களின் பட்டியலோடு வெளியிட்டு அதை திரு.எஸ்.வி. அவர்கள் ஸ்கேன் செய்து நமது திரியில் பதிவிட்டுள்ளார். 3 அல்லது 4வது பாகம் என்று நினைக்கிறேன். நினைவுபடுத்தியதற்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
14th August 2015, 03:53 PM
#1978
Junior Member
Diamond Hubber

ALL ARE CORDIALLY INVITED. அனைவரும் வருக.
-
14th August 2015, 05:40 PM
#1979
Junior Member
Diamond Hubber
-
14th August 2015, 05:41 PM
#1980
Junior Member
Diamond Hubber
Bookmarks