என்றோ உள் அமிழ்ந்த
நினைவு விதைகளை
ஒவ்வொன்றாய்
துளிர்க்க வைத்து
நெஞ்சம் கீறி
மேலெழுப்புகிறது
நில்லாமல் பெய்யும் மழை..!
-- சண்முக வடிவு
http://fe867b.medialib.glogster.com/...e-rain-jpg.jpg
Printable View
என்றோ உள் அமிழ்ந்த
நினைவு விதைகளை
ஒவ்வொன்றாய்
துளிர்க்க வைத்து
நெஞ்சம் கீறி
மேலெழுப்புகிறது
நில்லாமல் பெய்யும் மழை..!
-- சண்முக வடிவு
http://fe867b.medialib.glogster.com/...e-rain-jpg.jpg
“மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
அப்பறவைகள் வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடும்”
-தேவதேவன்,,
https://scontent-a-iad.xx.fbcdn.net/...f8&oe=54D71478
Story of Rebel-loving Girl :)
பலமதங்களும்=பிறவி வேணாம்னு "சுயநலத்தால்" கதற
ஆண்டாள்
அவன் இருந்தால் போதும்,ஏழேழ்பிறவி வேணும்னு கேட்பதே
=மாறாஅன்பு;அதுவே மோட்சம் :)
https://pbs.twimg.com/media/B2-EJO6IEAAQ9fk.jpg:large
மொத்தம் 6 ஒளவை-கள், தமிழில்! இதோ..
https://pbs.twimg.com/media/B28PEafIYAA6xGF.jpg:large
துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.
•
பாரதி
அன்பு நண்பர் poem
சுந்தரர் 9வது நூற்றாண்டு என்று சொல்லியிருக்கிறீர்கள் . அப்பரும் சம்பந்தரும் 6வது நூற்றாண்டு என்று படித்து இருக்கிறேன் . ஏன் என்றால் அவர்கள் இருவரும் இணைந்து பாடிய பதிகத்தால் வேதாரண்யம் கோயில் கதவு திறக்கப்பட்டதாக பெரிய புராணம் சொல்கிறது. சுந்தரர் ஒரு முறை திருத்தலம் பெயர் தெரியவில்லை அங்கு செல்லும் போது அப்பர் அங்கு உழவார பணி அல்லது பதிகம் பாடி கொண்டு இருக்கும் போது சுந்தரர் பெருமான் அப்பர் செல்லும் வரை வெளியில் காத்து கொண்டு இருந்து விட்டு பின்னர் கோயிலுக்குள் சென்று சிவபெருமானை தரிசனம் செய்ததாக ஒரு செய்தி படித்து உள்ளேன் . மூவருமே ஒரே கால கட்டத்தை சேர்ந்தவர்களா ? அல்லது சுந்தரர் இவர்கள் இருவர் காலத்திற்கு பின் வந்தவரா ? ஐயபாடை நீக்கி கொள்ளவே இந்த கேள்வி வேறு எந்த நோக்கமும் இல்லை
நமீதா தமிழும் அமலா பாலும்
http://img.dinamalar.com/data/largen...ge_1121177.jpg
தமிழ் அரங்குகள், தமிழ் உரைகள், தமிழ்ச் சிந்தனைகள், தமிழ் இலக்கியப் படைப்புகள் குறித்த ஆர்வமும், தேடலும் இன்றைய தமிழ் இளைஞர்களுக்கு பெரும்பாலும், பெரிதும் குறைந்தே காணப்படுகிறது.
கலை அறிவியல் கல்லுாரிகளில், தமிழ்மொழி அல்லாத பிற துறை மாணவர்களை தமிழ்க் கூட்டங்களுக்கு அழைத்தால், தலைதெறிக்க ஓட விரும்புகின்றனர். ஆனாலும், கல்லுாரி நேரத்தில் அப்படி ஓடிவிட முடியாமல், நெளிந்தும், வளைந்தும், சோம்பியும், சுருண்டும் அரங்குகளில் அமர்ந்து, கொட்டாவி விடுகின்றனர்.'தமிழ் ஏன் வேப்பங் காயாக இருக்கிறது உங்களுக்கு?' என்று, என் நேரடி கேள்விக்கான நேர்மையான பதில், 'தமிழ் எங்களுக்கு வேப்பங்காயாக, கசப்பாக, கரடு முரடாக, வெறுப்பாக இருக்கிறது...' என்கின்றனர்.'பத்து திருக்குறள் உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டால், 'திருவள்ளுவரை நாங்க 'சாய்ஸ்'ல விட்டுருவோம்...' என்று தெளிவாகச் சொல்கின்றனர், மன வருத்தமோ, குறுகுறுப்போ இல்லாமல், 'ஏதாவது ஓர் அதிகாரம் முழுக்கப் படித்தாலும், தேர்வில் ஏதேனும் இரண்டு குறட்பாக்களைத் தான் எழுத நேர்கிறது. மற்ற எட்டு குறள் படித்தது வீண் தானே? எழுதும், அந்த இரண்டு குறளுக்கும் கூட மதிப்பெண் இரண்டு தான்; அப்புறம் ஏன் நாங்கள் முழுமையான அதிகாரம் படிக்க வேண்டும்?' என்ற, அவர்களின் பதிலிலுள்ள நியாயம், தாய்மைக் கனிவோடு அவர்களை அணுவோருக்குப் புரியும்.
திருவள்ளுவரின் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பாலை விட, அமலாபாலை இன்று இளைஞர்களுக்குப் பிடிக்கிறது. இந்த நிலைக்குத் தமிழைத் தள்ளி விட்டதற்கு, யார் பொறுப்பு? இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்று தமிழறிஞர்கள் பலரும், பழம் பெருமையில் தேங்கி நிற்க, 'மச்சான்ஸ்...' என்று கூவுகின்ற நமீதா தமிழ், நான்காம் தமிழாக விஸ்வரூபம் எடுத்திருப்பற்கும், அதை இளைஞர்கள் கொண்டாடுவதற்கும் யார் பொறுப்பு?
தொல்காப்பியனையும், சங்க காலக் கவிஞனையும் தாண்டி, தற்காலத் தமிழுக்கு வராத தமிழ்க் காவலர்கள் பலரும் கோபம் கொள்ளலாம்; உரக்கக் கருத்துரைக்கலாம். எல்லாம் சரி தான். நிதர்சனம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல், இருட்டில் வாளைச் சுழற்றுகின்றனர், அவர்கள்.தமிழை, என் தமிழ் இளைஞன், தாயின் கனிவோடும், காதலியின் வசீகரத்தோடும், தோழியின் அரவணைப்போடும், சகோதரியின் சர்வ எளிமையோடும் பேசவும், எழுதவும், சிந்திக்கவும் விரும்புகிறான்.
அவனுக்குக் கிடைப்பதோ, சனாதனத் தமிழ், ஆணவத் தமிழ், ராணுவச் சீருடை மாதிரி மொட மொடப்பான தமிழ். கம்பன், வள்ளுவன், சங்கம் என்று, 2000ம் ஆண்டுகளுக்கு முன்னால் சென்று கொக்கரிக்கும் தமிழ்.இவர்களை மொழியின் அடிவாரத்திலிருந்து, சிகர உச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அடிவாரத்தின் விஸ்தீரணத்தைச் சொன்னாலே போதும், அவனுக்குச் சிகரத்தின் பாதை பிடிபடும். அடிவாரம் - தற்கால இலக்கியம், சிகரம் - அக்கால இலக்கியம்.ஏனெனில், தற்கால இலக்கியம், அவனுக்குப் பழக்கமான சூழல், மனிதர்கள், வார்த்தைகள், உணர்வு எனப் பழக்கமான தமிழை அறிமுகப்படுத்தும்.மலை படுகடாம் என்றும், நம்பி அகப்பொருள் என்றும், நச்சினார்க்கினியர் என்றும்,'மகன் மார்பில் அழுந்துட, வெழுதுமிலைத்
தொழிற் றொய்யில், என்றும், 'கிளரொளிமகரவேறு அளவில் சீரணங்கள் வெற்றிக் கொடி...'- இப்படியான கடமுட கடமுட மொழியை அக்கால இலக்கியம் அறிமுகப்படுத்தும். அந்தத் தமிழ் மொழி, தமிழ் வாழ்வியல், தமிழ் விழுமியம் ஏதுமே இல்லை இன்றைக்கு. இயல்பாக வர வேண்டும், மொழிக் காதல்.
துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் குயிலைக் கூவு என்பதும், மயிலை ஆடு என்பதும், தமிழ் இளைஞனைத் தமிழை நேசி, தமிழைப் பேசி, தமிழை யோசி என்பதும் குரூரம் அல்லவா? தமிழ்க் கூட்டங்களிலும், கருத்தரங்குகளிலும் இளைஞர்கள் எதிர்பார்ப்பது - அவர்களின் வாழ்வியலை அறிஞர்கள் பேச வேண்டும் என்பதையே. ஆனால், மேடைகளிலோ, அறிஞர்கள், தங்களின் தமிழப் புலமையை வெளிப்படுத்த, ஒரே தாவாகத் தாவிச் சங்கத்துக்குள் நுழையும்போது தான், தமிழ் இளைஞனுக்குப் பங்கம் வருகிறது. கூடவே தொடர் கொட்டாவிகளும் வருகின்றன.சந்தமென்றும், சீர் என்றும், தளை என்றும், கொச்சகக் கலிப்பா என்றும், லம்போதரக் கலிப்பா, ஒச்சக்கலிப்பா, தாழிப்பா என்றும் ஒரே தாளிப்பாகக் கலையரங்க மேடைகளில் மரபுக் கவிஞர்கள், தமிழைத் தாளிப்பது பிடிக்காமல், இளைஞன் கலையரங்கிலிருந்து காலாவதியாகி ஓடிவிட்டான்.
போதும் என்று ஓடும் தமிழனைப் பிடித்து, நீ கம்பர் தமிழைக் கற்றால் தான் மதிப்பெண் என்று மிரட்டினால், அது அவனுக்கு வம்புத் தமிழாகத் தெரிகிறது; வேம்புத் தமிழாகத் கசக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகத்தின் உடனடித் தேவை, 'மாத்தி யோசி!' இன்னமும் பிடிவாதமாக, ஈராயிரம் ஆண்டுக்கு முன்னால் இப்படி இருந்த தமிழ் என்று பழம்பெருமை பேசினால், கேட்கத் தமிழ் இளைஞனின் காதுகள் கிடைக்காது. இன்றைய வாழ்வைப் பேசுதல், தற்கால இலக்கியம் தான் அவனுக்கான முதல் அறிமுகமாக இருக்க வேண்டும்.நம் அறிஞர்கள், தற்காலப் படைப்பிலக்கியத்தை விரும்புவதில்லை; நம் இளைஞர்கள், அக்காலப் படைப்பிலக்கியம் விரும்புவதில்லை. இரண்டு துருவங்கள், யார் இணைப்பது?
மொழி பெயர்ப்பும், புதுப்புது வார்த்தைகளை உருவாக்குவதும் கூட, ஆங்கிலத்துக்கான வார்த்தைத் தேடல் என்பதாக இருக்கிறது. 'Whats app' என்றும் இளைஞர்களின் நவீன தொப்புள் கொடிக்கான தமிழ் வார்த்தை, 'வாட்ஸ் அப்' என, இருந்தால் என்ன? அதை விடுத்து, நேரடி மொழி மாற்றாக 'வாட்ஸ் அப்' என்றால் கட்செவி அஞ்சல் என்று தடபுடா செய்வது சரியா? இளைஞன் என்ன செய்கிறான்? காதில் ஈயம் பாயும் முன் தன்னைக் காப்பாற்றி, ஆங்கிலத் தேனுக்குள் குதித்து விடுகிறான்.ஒற்றை வேரிலிருந்து புதிய பதங்களை ஆங்கிலம் தருகிறது; தமிழோ தடுமாறுகிறது. எனவே தான் தமிழ் இளைஞன் சொல்கிறான்: 'எங்களுக்கு நமீதா தமிழும், அமலா பாலும் போதும். முத்தமிழும், முப்பாலும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்' என்று. இன்றைய தமிழ் இளைஞனின் தாகத்துக்குக் கானல் நீர் தரும் தமிழ் அறிஞர்களே... மாறுங்கள்; மாற்றம் ஒன்று தான் புது வெளிச்சம், புதுக்காற்று, புதுவேர் கொண்டு வரும். சொல் புதிது சுவை புதிது என்றான் பாரதி. கொஞ்சம் நிதானித்து, தாய்மைக் கனிவோடு, என் தமிழ் இளைஞனைப் பாரதி புரிந்து கொண்டான். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.
இ-மெயில்: aandalpriyadarshini@yahoo.co.in
ஆண்டாள் பிரியதர்ஷினி
தமிழ் ஆர்வலர்
டூரிங் தியேட்டரில்
படம் பார்த்துநாளானதை விட
டூரிங் தியேட்டரே பார்த்து
வெகுநாளாகிப்போச்சு!
-kavitha kumaar
Mr. Krishna, இப்பொழுதுதான் பார்த்தேன். மன்னிக்கவும்.
அப்பர் -600-681- CE
சம்பந்தர் = 644- 660 CE
சுந்தரர் - 710-735 CE
மாணிக்கவாசகர் -660-692 CE
இதில் அப்பர் சம்பந்தர் ,மாணிக்கவாசகர் மூவரும் 6ம் நூறண்டிலும் சுந்தரர் ஏழாம் நூர்ரண்டிலும் இருந்தவர்கள் என்று ஒரு குறிப்பு சொல்லுது. நான் ரொம்ப புத்திசாலி எல்லாம் கிடையாதுங்க! எல்லாமே தெரிந்து கொண்டு எதுவுமே தெரியாதது போல இருக்கும் பல பேருக்கு நடுவில் அரை குறையான நான்!! :):) I am not offending you, just telling the truth !:)
சரித்திர கால சான்றுகள் எவ்வளவு தூரம் மிக சரியாக இருக்கும் என்பதில் எனக்கு எப்பவுமே ஒரு தயக்கம் உண்டு, கண் முன்னாலேயே பல சரித்திரங்கள் மாறுவதை பார்க்கிறோம். பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்ததை பற்றி சொல்லவும் வேண்டுமா ?
கொஞ்சம் டைம் கொடுங்க , கட்டாயம் சரியான பதிலை சீக்கிரம் சொல்லகிறேன்.
தேவாரத்தில் முதலாம் திருமுறை, இரண்டாம் திருமுறை, மூன்றாம் திருமுறை, மற்றும் ஏழாம் திருமுறை சுந்தர்ரரால் இயற்ற பட்டது.
சம்பந்தரின் மூன்றாம் திருமறையில் "மதுரையை" பற்றி
செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!
. சித்தனே! திரு ஆலவாய் மேவிய
அத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பத்தி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய்ச்
சொக்கனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பக்கமே சென்று, பாண்டியற்கு ஆகவே!
சிட்டனே! திரு ஆலவாய் மேவிய
அட்டமூர்த்தியனே! “அஞ்சல்!” என்று அருள்
துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பட்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய்
அண்ணலே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
எண் இலா அமணர் கொளுவும் சுடர்
பண் இயல் தமிழ்ப் பாண்டியற்கு ஆகவே!
“தஞ்சம்!” என்று உன் சரண் புகுந்தேனையும்,
“அஞ்சல்!” என்று அருள், ஆலவாய் அண்ணலே!
வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர்
பஞ்சவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய்
அங்கணா! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
கங்குலார் அமண்கையர் இடும் கனல்,
பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே!
தூர்த்தன் வீரம் தொலைத்து அருள் ஆலவாய்
ஆத்தனே! “அஞ்சல்!” என்று அருள்செய், எனை;
ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர்
பார்த்திவன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
தாவினான், அயன்தான் அறியா வகை
மேவினாய்! திரு ஆலவாயாய், அருள்
தூ இலா அமணர் கொளுவும் சுடர்
பாவினான், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய
அண்டனே! “அஞ்சல்!” என்று அருள் செய், எனை;
குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பண்டி மன், தென்னன், பாண்டியற்கு ஆகவே!
அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால்,
வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு
ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும்,
செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே.
அடுத்த முறை மதுரை சென்று மீனாக்ஷி அம்மன் கோவில் செல்லும் சந்தர்பம் கிடைத்தால் சுவாமி சன்னதிதையும் ( எப்பவும் கூட்டமே இருக்காது ) பொற்றாமரை குளத்தின் வலது பக்கத்தில் அமர்ந்து இருக்கும் விபூதி பிள்ளையாரையும் ( திருவிளயாடல் படத்தில் நாகேஷ் ஸ்பெசலாக வணக்கம் வைத்து விட்டு போவார் ) தவறாமல் வணங்கவும்.:)
krishna: You quoted Dinamalar article about Amala Paul and Namita Tamil. Here is an anecdote for you. I was in Madras in 1985. One of my friends doing his Ph.D in Tamil Literature under Sanjeevi, Head of the dept of Tamil, Madras university was giving a talk in Madras University. I wanted to meet him and went to his lecture. When he saw me at the door of the room where he was giving the lecture, he asked me to join him at the stage (mEdai). I took a seat next to Sanjeevi.
At the end of my friend's speech Sanjeevi surprised me with a request to speak to the students attending the lecture. I started my speech with this caveat : " I have not given a speech in Tamil in more than 25 years. You have to put up with my mistakes". At the end of my speech Sanjeevi had another surprise for me. Guess what he said?
" If my students could give a speech like you it would make me extremely happy". " ennudaiya maaNavargaL ungaLaippol pesinaal mikka magizhchi adaiven". That was the state of Tamil in 1985 ( in Tamilnadu). No wonder it has deteriorated further. :(
மிக்க நன்றி நண்பர் poem
அடுத்த முறை மதுரை செல்லும் போது நிச்சயம் விநாயகரை வணங்குகிறேன்.
பல நல் முன்னோர்கள் வாழ்ந்த நூற்றாண்டு சரியாக ஆவண படுத்தாததால் ஏற்படும் குழப்பம் இது. தேவார தலங்கள் 274 என்பது சமீபத்தில் மேலும் இரண்டு தலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 276 ஆக உயர்ந்து உள்ளது. இது போல் பிற்காலங்களில் இன்னும் எத்தனை சேரும் என்பது நாம் அறியமுடியாத ஒன்று. தொல் பொருள் துறை இது குறித்து சற்று விழிப்புடன் வேலை செய்தால் நிறைய தகவல்கள் கொணரலாம்
நட்புடன்
தேங்க்ஸ் ராஜ்ராஜ் சார் .அரிய தகவல்களை அறிய தருகிறீர்கள்
அன்பு நண்பர் poem அவர்களுக்கு
மதுரை தேவார பதிகம் சில நினைவுகளை கிளறி விட்டது. 2 ஆண்டுகளுக்கு முன் எனது இரண்டாவது மகள் மற்றும் எனது அதிகாரி ஒருவரின் இரண்டாவது மகன் தமிழ் நாடு பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான சமயம். எங்கள் இல்லத்தில் இந்த தேவார திருவாசக பதிகம் மீது மிகவும் நம்பிக்கை கொண்டு தினசரி 'மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஓத வேண்டிய பதிகம் ' என்ற தலைப்பில் திருகருபறியலூர் பதிகம் ஓதுவோம். இப்படி ஒரு வேண்டுதலுக்கு ஆக பதிகம் ஓதுவது கூட சுயநலம் தான் :) .திருவாடுதுறை ஆதீன மடத்தின் சார்பாக ஒரு புத்தகம் கூட வெளியிட்டு உள்ளார்கள் .
இந்த பதிகத்தை நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள்.
'சுற்றமொடு பற்று அவை துயக்க அறு அறுத்து
குற்றம் இல் குணங்களோடு கூடும் அடியார்கள்
மற்று அவரை வானவர் தம் வான் உலகில் ஏற்ற
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே ' என்று ஆரம்பிக்கும்.
இந்நிலையில் எனது அதிகாரி என்னிடம் 'ஒரு முறை நாம் ஏன் திருகருபறியலூர் சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு வர கூடாது ' என்று வினவினார். நானும் சரி என்று சொல்லி விட்டு map எல்லாம் எடுத்து திருகருபறியலூர் எங்கு உள்ளது என்று ஆராய்ந்தால் அந்த பெயரில் ஒரு ஊரே இல்லை. பிறகு சில பல இணைய தளங்கள் சென்று (முக்கியமாக சைவம்.org ) தலத்தை அறிந்தோம்.இந்நாளில் அதன் பெயர் தலை ஞாயிறு .வைதீஸ்வரன் கோயில் ஊரில் இருந்து 8 அல்லது 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு முன் திருப்புன்கூர் (நந்தனாருக்கு நந்தி விலகி தரிசனம் கொடுத்த இடம்) என்று தலம் உள்ளது.அங்கிருந்து தலை ஞாயிறு சென்று விட்டோம். மெயின் ரோடு இல் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அந்த கோவிலை கண்டு பிடிக்க நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே . நல்ல வேலையாக சென்னையில் இருந்து கார் அமர்த்தி கொண்டு சென்றதால் நிறுத்தி நிறுத்தி விசாரித்து கோயிலை அடைந்தோம் . இன்றும் அது என் நினைவில் கண் முன் உள்ளது . இறைவன் பெயர் 'குற்றம் பொறுத்த நாதர் ' .இறைவி நாமம் 'கோலவிழி நாயகி ' -மறக்க முடியாத அனுபவம் .
நன்றி poem நினைவலைகளை மீட்ட வாய்ப்பு தந்தமைக்கு
http://img1.dinamalar.com/Kovilimages/T_500_220.jpg
மன்னிக்கவும் மற்ற மதத்தின் நண்பர்கள் இருந்தால் தயவு செய்து மத பிராச்சாரம் என்று எண்ண வேண்டாம் . நமது பாரத மற்றும் தமிழக வரலாறு கோயில்களில் எண்ணற்ற வகையில் காண கிடைக்கின்றது என்பதை பகிர்ந்து கொள்ளவே .
என்றும் நட்புடன்
வலி என்பது !
’கழுத்து வலிக்கிறது’
என்றாள்
‘ எப்போதும் உன்னிடம்
ஏதாவது ஒரு வலியைப் பற்றித்தான்
சொல்லிக்கொண்டிருக்கிறேன்’
என்றாள்
இதைச் சொல்லும் போது
அவள் குரல் தணிந்து
இருண்டுவிட்டிருந்தது
அவளுக்குத் தெரியவில்லை
வலி என்பது ஒரு கோரிக்கை
வலி என்பது ஒரு நிபந்தனை
வலி என்பது ஒன்றைக் கடப்பதற்கான தத்தளிப்பு
வலி என்பது அன்பிற்கான ஒரு அழைப்பு
என்று
- மனுஷ்ய புத்திரன்
"In the midst of hate, I found there was, within me,
an invincible love.
In the midst of tears, I found there was, within me,
an invincible smile.
In the midst of chaos, I found there was, within me,
an invincible calm.
I realized, through it all, that…
In the midst of winter, I found there was, within me,
an invincible summer.
And that makes me happy. For it says that no matter how hard the world pushes against me, within me, there’s something stronger – something better, pushing right back."
~ (Albert Camus)
சமீபத்தில் 92வது வயதில் காலமான அமெரிக்க நகைச்சுவை நடிகர் sid ceaser ( 1922-2014) க்கு ஐன்ஸ்டீன் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு நெகிழ்ச்சி அனுபவம்:
1955 ஏப்ரல் 15’ம் தேதி சீஸர் தன்னுடைய டி.வி.காமெடி நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு தகவலை டி.வி. நிலயத்தினர் தெரிவித்தார்கள். “ சார்.. பிரின்ஸ்டனிலிருந்து ஐன்ஸ்டீனின் அலுவலகத்திலிருந்து உங்களுக்கு ஒரு போன் வந்தது. ஐன்ஸ்டீன் உங்களைப் பார்க்க விரும்புகிறார். வருகிற திங்கட்கிழமையன்று வந்து அவரைப் பார்க்க முடியுமா? என்று கேட்டார்கள். ஐன்ஸ்டீன் உங்கள் விசிறியாம்!” என்றார்கள்.
சீஸருக்குத் தலைகால் புரியவில்லை. அதே சமயம் நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறார்களோ என்ற சந்தேகமும் வந்தது.
உடனே சீஸர் “அது உண்மையான டெலிபோன்தான் என்று தெரியவந்ததும் ரிகர்ஸலை மூட்டைகட்டி வைத்துவிடுங்கள் என்றார்.
இனி இது பற்றி சீஸர் எழுதியதைத் தருகிறேன்:
“முதலில் ஐன்ஸ்டீன் எழுதிய புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வரச் சொன்னேன். நாளை, மறுநாள் இரண்டு நாளைக்குள் முடிந்தவரை படித்து விடுகிறேன். திங்கட்கிழமை அவரை சந்திப்பது என்பது மிக அரிய வாய்ப்பு.
அதன்படியே கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். முடிந்த வரைப் படித்தேன். புத்தகசாலைக்குச் சென்று அகப்பட்ட புத்தகங்களையெல்லாம் புரட்டினேன். திங்கட்கிழமை (ஏப்ரல் 18, 1955) காலை அவரைச் சந்திக்க பரபரப்புடன் தயார் செய்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு செய்தி வந்தது: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இரவு ஒரு மணிவாக்கில் காலமாகிவிட்டார்!
அது செய்தி அல்ல. என் தலைமேல் விழுந்த இடி!
பெரியவர் 'கடுகு' என்ற அகத்தியன் அவர்கள் பதிவில் இருந்து -
(குமுதம், கல்கி, தினமணி கதிர், குங்குமம், சாவி என்று பல பத்திரிகைகளில் அகஸ்தியன், கடுகு என்ற பெயர்களிலும், வேறு பல புனைப் பெயர்களிலும் 40 ப்ளஸ் வருஷங்களாக எழுதி இவர் பிரசித்தம் - இந்த குறிப்பு திரு அகஸ்தியன் அவர்களை அறியாதவர்களுக்காக :) )
http://3.bp.blogspot.com/_mPQizC4i3s...-Ithumattu.jpg
சுஜாதாவும் நானும் - பெரியவர் 'கடுகு'
ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்ற பெயரில் கணையாழியில் சுஜாதா எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். நானும் கணையாழியில் சில இதழ்களில் டில்லி வாழ்க்கை என்ற தலைப்பில் எழுதி உள்ளேன். கணையாழி ஆசிரியர் திரு.கஸ்துரிரங்கன் என் நண்பர்.குமுதத்தில் சுஜாதா என்ற பெயரில் ”இதுமட்டும்” என்ற அவருடைய கதை வந்ததும் அவர் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியவர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்தார்.
அவருடைய கதை வெளியான வாரம் நான் கரோல்பாக் போக வேண்டிய வேலை இருந்தது. அங்கிருந்த அவர் வீட்டிற்குச் சென்று பாராட்டினேன். அப்போது குமுதத்தில் நானும் ஒரு ஆஸ்தான வித்வானாக இருந்தேன்.
அவரது அலுவலகம் சப்தர்ஜங் விமான நிலையத்தில் இருந்தது.. பார்லிமெண்ட், கன்னாட் பிளேஸ் போன்ற மத்திய டில்லியிலிருந்து சற்றுத் தள்ளியிருந்தது. அதனால் யு.என்.ஐ கேன்டீன் ஜமாவிற்கு அவர் எப்போதாவதுதான் வருவார்.
வித்தியாசமான நடை மட்டுமல்ல, வித்தியாசமான பதப் பிரயோகங்கள், சற்று கவர்ச்சியான வர்ணணைகள் காரணமாகவும் குமுதத்தில் நைலான் கயிறு தொடர்கதை வெளியானதும் அவருடைய பெயர் இன்னும் ஒரு படி மேலே போய் விட்டது.
அச்சமயம் பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து படித்துக் கொண்டிருந்தேன்.
அந்தக் கதை மறந்து விட்டது. ஆனால் அதில் சில லே அவுட், சில வார்த்தைகளுக்கு வித்தியாசமான ஸ்பெல்லிங், சில எழுத்துக்களைத் திருப்பிப் போட்டிருந்தது, சில வரிகள் சாய்வுப் பாதையாக அமைந்திருப்பது போன்று பல சர்க்கஸ் வித்தைகள் செய்திருந்த அந்தப் புத்தத்தை சுஜாதாவிடம்கொடுத்தேன். ( உதாரணமாக அதில் வந்த ஒரு புதுமையைச் சொல்கிறேன். “அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. கண்ணை மூடிக் கொண்டு பத்து நிமிஷம் மௌனமாக இருந்தாள்” என்று எழுதிவிட்டு, அடுத்த ஒரு பக்கத்தைக் காலியாக விட்டிருந்தார்கள்,) ”என்னென்னமோ பண்ணியிருக்கான்” என்று வியந்து ரசித்தார். இந்த புஸ்தகத்திலிருந்து அவர் எந்த ஐடியாவையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் வித்தியாசமாக சிந்திக்க அந்தப் புத்தகம் ஒரு சதவிகிதமாவது அவருக்கு உதவியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
” WhatsApp…” …. ஒரு “கல கல” கலக்கள் ..!!!
Some of them are too good
” WhatsApp…” …. ஒரு “கல கல” கலக்கள் ..!!!
https://ci4.googleusercontent.com/pr...925159660.jpeghttps://ci4.googleusercontent.com/pr...345375843.jpeghttps://ci6.googleusercontent.com/pr...815112607.jpeghttps://ci6.googleusercontent.com/pr...749557147.jpeghttps://ci3.googleusercontent.com/pr...832529858.jpeghttps://ci5.googleusercontent.com/pr...952517225.jpeg
SOURCE::::www.dinamalar.com
thanks raagadevan for liking whatsapp kala kala
http://tamil.thehindu.com/multimedia...1_2225518g.jpg
தமிழ் சினிமாவின் முதல் சமூகப்படமான ‘மேனகா’வில் மொட்டைத் தலையுடன் அறிமுகமான என்.எஸ்.கே.
நவம்பர் 29: கலைவாணர் பிறந்த தினம்
பிரதீப் மாதவன்
எத்தனை சாதனைகள் படைத்திருந்தாலும் காலம் எல்லோரையும் பொக்கிஷமாகப் பொத்தி வைத்துப் பாதுகாப்பதில்லை. நூறாண்டு தமிழ்த் திரைக்கு ஆரம்ப அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டுத்தந்த ஜாம்பவான்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் சினிமா மறக்காத பொக்கிஷம். நகைச்சுவையைச் சமூக மாற்றத்துக்காகப் பயன்படுத்த முனைந்த முதல் முன்மாதிரி. ஒப்புமையும் மாற்றும் இல்லாத அசல் கலைஞன். ‘சிரிப்பு என்பது வியாதிகளை விரட்டும் மருந்து’ என்று மருத்துவர்கள் கண்டறிந்து சொல்லும் முன்பே, மக்களுக்குப் புரிய வைத்தவர்.
தனது முற்போக்குச் சிந்தனைகளால், கட்டியங்காரனுக்கும் கோமாளிக்கும் நாடக மேடையில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர். நாடகத்திலிருந்து திரைக்குப் பிரவேசித்ததும், அந்த ஊடகத்தின் வீச்சைப் புரிந்துகொண்டு, மூடத்தனங்களை வலிக்காமல் கிண்டி கிழங்கெடுத்தவர். இன்று தமிழ் சினிமாவின் நகைச்சுவை தரமிழந்து விட்டாலும் ஒரு சில நகைச்சுவை நடிகர்கள் கையாளும் கிண்டலும், கேலியும் கலைவாணர் போட்டுக்கொடுத்த பாதையைப் பின்பற்றித் தொடர்வதுதான்.
வறுமையும் இளமையும்
அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த நாஞ்சில் நாட்டில் ஒழுகினசேரி என்ற கிராமத்தில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29 அன்று கலைவாணர் பிறந்தார். தொடக்கக் கல்வியை மலையாளப் பள்ளியில் படித்த கலைவாணர் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். ஆனால் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல வீட்டின் வறுமையான சூழல் ஒத்துழைக்கவில்லை. அப்பா சுடலைமுத்து நாகர்கோவில் தபால் அலுவலகத்தில் கடைநிலை ஊழியர். தாயார் இசக்கி அம்மாளோ வீட்டிலேயே சாப்பாட்டுக் கடை நடத்தி வந்தார். பெற்றோரின் வருமானம் மொத்தக் குடும்பத்துக்கும் போதவில்லை. குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்த கலைவாணருக்கு இரண்டு அக்காள்கள், மூன்று தங்கைகள் ஒரு தம்பி எனப் பெரிய குடும்பமாக இருந்தது. பல வேளைகளில் அம்மாவுக்கும், மூத்த அக்காவுக்கும் காலை உணவு இல்லாமல் போவதைக் கண்டறிந்து உணவு உண்ண மறுத்துக் குடும்பத்துக்காக வேலைக்குச் செல்ல முன்வந்தார்.
அப்போது பலசரக்குக் கடை ஒன்றில் விற்பனைப் பையனாக அவருக்கு வேலை கிடைத்தது. மாதம் ஐந்து ரூபாய் சம்பளம். ஆரம்பத்தில் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேலைக்கும் ஆபத்து வந்தது. வீட்டு வேலைகளை முடித்துவிட்டுக் கொஞ்சம் தாமதமாகக் கடைக்குச் சென்றவரைத் திட்டி அவமானப்படுத்தினார் கடை முதலாளி. கடுமையாக வேலையும் வாங்கினார். கொஞ்சம் உட்கார்ந்துவிட்டாலோ கலைவாணரைப் பார்த்து “உழக்கு, கோம்பை “ ஆகிய சொற்களால் அடிக்கடி திட்டத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் மனம் கொதித்த கலைவாணர், தனது கணக்கைப் பைசல் செய்து அனுப்பும்படி கோபத்துடன் கேட்க, பயந்துபோன முதலாளி உடன் அந்த மாதத்திற்கான நாட்களைக் கணக்கிட்டு நான்கு ரூபாய் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.
கம்பீரமாகச் சக ஊழியரிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினார் கலைவாணர். வேலையை விட்டது வீட்டுக்குத் தெரியக் கூடாது என்று எட்டையபுரத்தில் இருந்த தனது அக்காள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். போகும்போது கிடைத்த நான்கு ரூபாய் சம்பளத்துக்கும் சீர் பொருட்களை வாங்கிச் சென்றார் அந்தப் பதிமூன்று வயதில்! தம்பி மீது பாசம் கொண்ட அக்காவோ தம்பியைப் பிள்ளைபோல் உபசரித்ததோடு, கலைவாணரின் கோபம் குறையட்டும் என்று மிருதங்கம் கற்றுக்கொள்ள அனுப்பினார். ஆறே மாதத்தில் மிருதங்கம் கற்றுமுடித்த கலைவாணருக்கு அதன் பிறகு அங்கே கால் தரிக்கவில்லை.
பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய கலைவாணர் 14 வயதுப் பையனாக நாடகக் கொட்டகை அருகே சோடா விற்கும் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தார். ஒருநாள் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றவரை நாடக மேடை மாயம் செய்து வசப்படுத்தியது. அதன்பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கும் சிறுவனாகத் தனது வேலையிடத்தை மாற்றிக்கொண்டார். ஆனால் நாடகக்குழு முகாமை முடித்துக் கிளம்பியதும் வெறுமையை உணர்ந்தார். அடுத்த நாடகக் குழு வந்து முகாம் அமைக்கும் வரை, அம்மாவின் புடவையையே திரைச் சீலையாக்கி, தனது சக நண்பர்களுடன் நாடகம் நடித்தார். அப்படி அவர் நடித்தது புராணம் அல்ல. அவரே எழுதிய நகைச்சுவை நாடகம் என்பதுதான் ஆச்சரியமான உண்மை. அதன்பிறகு தனது 17 வயதில் வில்லுப்பாட்டுக் குழுவில் சேர்ந்தார்.
பன்முகக் கலைஞன்
இப்படித்தான் நாடகமும் கலையும் அவரை அழைத்துக் கொண்டது. எஸ்.எஸ்.வாசன் கதை எழுதி எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் 1936-ல் வெளியான ‘சதிலீலாவதி’படத்தின் மூலம், எம்.ஜி.ராமச்சந்திரனோடு அறிமுகமானர். ஆனால் இந்தப் படத்துக்கு பின்னர் கலைவாணர் நடித்த ‘மேனகா’ என்ற திரைப்படமே முதலில் வெளியானது. தமிழ் சினிமாவுக்கு ‘சிரிப்பு மேதை’ கிடைத்தார்.
என்.எஸ்.கிருஷ்ணனிடம் எண்ணற்ற கலையாளுமைகள் இருந்தன. நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர். தன்னுடைய மென்மையான நகைச்சுவையால், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள், மூடத்தனங்கள், ஏமாற்றுக்காரர்கள் ஆகியோரை வன்மையான சொற்களைக்கூடப் பயன்படுத்தாமல் மென்மையாகப் பகடி செய்த சமூக விஞ்ஞானி அவர். பாடலையும் நகைச்சுவைக் காட்சியாக மாற்ற முடியும் என்ற மாயத்தைத் திரையில் முதலில் செய்துகாட்டியவர்.
‘என்.எஸ்.கே. நாடக சபா’ என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை அமைத்து, 1800 காட்சிகளை நிதி திரட்டுவதற்காகவே நடத்தினார். அதில் கிடைத்த வருவாய் முழுவதையும் நலிந்த கலைஞர்களுக்காக உதவிய கருணை உள்ளம் கொண்ட கலைஞர். தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தை 1953 ஸ்தாபித்து, அதற்கு ஐந்து ஆண்டுகள் தலைவராகவும் இருந்தவர். ஒரு நடிகனால் வள்ளலாகவும் இருக்க முடியும் என்று வாழ்ந்து காட்டியவர். தன் உதவியாளரிடம் ‘என்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் உயிரோடு இல்லாமல் இருக்க வேண்டும்!’ என்று கூறுவாராம். படப்பிடிப்புக்குக் கிளம்பும் முன் காலை 8 மணிக்கெல்லாம் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நின்றுவிடுவார். அப்போது அவர் சொல்லும் வார்த்தை “ ஐயா தர்மப் பிரபு…” என்பது. உடன் கலைவாணர் அவர் அருகில் போய் “ என்னைப் பிரபுன்னு சொல்லாதென்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்” என்று பணத்தைக் கொடுத்துவிட்டு வருவார். ‘அவர் உங்களை ஏமாற்றுகிறார்’ என்று வீட்டார் சொல்ல “என்னை ஏமாற்றி மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான்?” என்று சொல்வாராம் கலைவாணர்.
அழுதுகொண்டே சிரிக்க வைத்தவர்
அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களின் விருப்பத்துக்குரிய ஆளுமையாக இருந்த கலைவாணருக்குத் திரையுலகில் நெருங்கிய தோழராக இருந்தவர். எம்.கே.டி. லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தனது கலை வாழ்க்கையில் பிரச்சினைகள் வரிசை கட்டி நின்றபோதெல்லாம் உள்ளே அழுதுகொண்டே, தன்னை நம்பிய ரசிகர்களை சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்தார். இவரைத் தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் என்று புகழ்ந்தபோது… “ சார்லியை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!” என்று தன்னடக்கத்துடன் பதில் கூறினார். என்.எஸ்.கே.வின் வாழ்வைத் திரைப்படமாக்கினால் சுவைக்காகக்கூடத் திரைக்கதை யில் ஜோடனைகள் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. அத்தனை விறுவிறுப்பானது அவரது நிஜ வாழ்க்கை
மார்கழி மஹா உற்சவம் - இசை விழா என்று சென்னை டிசம்பர் மற்றும் ஜனவரியில் அல்லோலகபடும் . இப்போதும் அப்படித்தான் அல்லகோலபட்டு கொண்டு இருக்கிறது .எந்த கச்சேரிக்கு செல்ல என்று தெரியவில்லை. அத்துனை சபாக்கள் .அத்துனை கச்சேரிகள் . மேட்டு குடியினருக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்ல பட்டு வந்த கர்நாடக இசையை மற்றவர்களும் அறிய வேண்டும்,ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் திரு டி எம் கிருஷ்ணா அவர்கள் பெசன்ட் நகர் பீச் அருகில் உள்ள குப்பத்தில் இரண்டு தினங்கள் இசை விழா நடத்த ஏற்பாடு செய்து இருக்கிறார்கள் . இந்த நேரத்தில் திரு வாலி அவர்கள் விகடன் பத்திரிகையில் எழுதிய நினைவு நாடாக்கள் நினைவிற்கு வந்தது .அதில் இருந்து சில பகுதிகள்
http://4.bp.blogspot.com/-P6zOuYRAhk...1600/vaali.jpg
முரசொலி’யில் ஒரு செய்திக் கட்டுரை. 'சங்கீத வித்வான்கள் சபையில் பாட - எத்துணையோ தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன; இன்ன இன்னார் இயற்றிஇருக்கிறார்களே!’ என்று -
தமிழ்ப் பாடல்கள் யாத்துளோர் பட்டியலில் அடியேன் பேரும் இருந்தது!
கட்டுரையை எழுதிய பெரியவர் பெயர் திரு.திருவாரூர் தியாகராஜன். 'சின்னக் குத்தூசி’ என்றால் சகமறியும்!
இந்தக் கட்டுரை வெளியான இதழை நான் படித்துக்கொண்டிருக்கையில் -
ஓராண்டு என்னிலும் மூத்த ஒரு சங்கீத வித்வான் - என் பால்ய நண்பர் - என் வீட்டுக்கு வந்தார். என்னைப்பற்றிய தகவலை, அவரிடம் படிக்கக் கொடுத்தேன்.
'ஓய்! நீர் கீர்த்தனங்கள் எழுதுவீரா என்ன?’ என்று சற்று நமட்டுச் சிரிப்புடன் வினவினார்.
சங்கீத பூஷணம் தாராபுரம் திரு.சுந்தரராஜனின் ஸ்வரக் குறிப்புகளோடு - என் கீர்த்தனங்களை -
கலைஞன் பதிப்பகம் வெளியிட்டு இருப்பதை அவரிடம் காட்டினேன்.
அதைப் புரட்டிக்கொண்டே வந்த என் நண்பர் -
''ஓய்! உம்ம பாட்டா இது? நான் அந்தக் காலத்துல மதுரை சோமு; எம்.எல்.வசந்தகுமாரி; கல்யாணராமன்; சுதா ரகுநாதன்; பாம்பே ஜெயஸ்ரீ - இப்படி இந்தக் காலம் வரைக்கும் இந்தப் பாட்டைக் கேட்டு இருக்கேன்! அவ்வளவு ஏன்? நானே என் கச்சேரீல இதை ரொம்ப நாளா 'வலஜி’யில பாடிண்டிருக்கேன்; உம்ம பாட்டூன்னு - இப்பதான் தெரிஞ்சுண்டேன்; கிண்டலாப் பேசிட்டேன்; க்ஷமிக்கணும்!'' என்று கைகளைக் கூப்பினார்.
நண்பர் குறிப்பிட்ட என்னுடைய பாட்டு இதுதான்...
'கூவியழைத்தால்
குரல் கொடுப்பான்; பரங்-
குன்றமேறி நின்று
குமரா வென்று...’ ( 1)
வெகு காலமாக ஒரு வெகுஜன அபிப்பிராயம் இருக்கிறது - கோடம்பாக்கத்திற்கும் திருவையாறுக்கும் ஏழாம் பொருத்தம் என்று.
அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
கோவையில் 'வாணி பிலிம்ஸ்’ என்று ஒரு படக் கம்பெனி. அதன் பாகஸ்தர்கள் யார் தெரியுமா?
வயலின் வித்வான் டி.சௌடய்யா;
புல்லாங்குழல் வித்வான் டி.ஆர். மகாலிங்கம்;
மற்றும்
மஹா வித்வான் செம்பை திரு.வைத்யநாத பாகவதர்!
திருமதி. கே.பி.சுந்தராம்பாளும், மகாராஜபுரம் திரு.விஸ்வநாதய்யரும் நடித்த படம் 'நந்தனார்!’.
திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமியும் திரு.ஜி.என்.பாலசுப்ரமணியமும் சேர்ந்து நடித்த படம் 'சகுந்தலை!’.
திருமதி. என்.ஸி.வசந்தகோகிலம் கதாநாயகியாக நடித்த படம் 'ஹரிதாஸ்!’.
திரு.பாபநாசம் சிவன் நடித்த படங்கள் 'தியாக பூமி’; 'பக்த குசேலா’; திரு.எம்.எம். தண்டபாணி தேசிகர் நடித்த படம் 'நந்தனார்’.
திருமதி. எம்.எல்.வசந்தகுமாரியும், திரு. பி.யூ.சின்னப்பாவும் சேர்ந்து நடித்து, சிறிது தூரம் வளர்ந்து நின்று போன படம் 'சுதர்ஸன்’.
திரு.பாலமுரளி கிருஷ்ணா நாரதராக நடித்தது மட்டுமன்றி பல படங்களில் பாடிஇருக்கிறார்!
திரு.மதுரை டி.என்.சேஷகோபாலன், திரு.குன்னக்குடி படத்தில் கதாநாயகன்!
நாதஸ்வர மேதை திரு.டி.என்.ராஜரத்தினம் பிள்ளை கதாநாயகனாக நடித்த படம் 'கவிராஜ காளமேகம்’.
திருமதி. டி.கே.பட்டம்மாள் நிறைய படங்களில் பாடியிருக்கிறார்.
திரு.வி.வி.சடகோபன் கதாநாயகனாக நடித்த படம் 'மதன காமராஜன்’.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். சின்ன வயதிலிருந்தே எனக்கு சங்கீத வித்வான்களோடு, நிறையப் பரிச்சயம் உண்டு!
ஸ்ரீரங்கத்தில்தான் இருந்தார், மகாவித்வான் வயலின் திரு. மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யர்.
வருஷா வருஷம் தன் வீட்டில், தியாகராஜ உற்சவம் நடத்துவார். வந்து பாடாத வித்வான்களே இல்லை!
நான்தான் அங்கு எல்லாருக்கும் எடுபிடி.
சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையைக் காவேரிக்கு அழைத்துப் போய், ஸ்நானம் செய்விப்பது; மதுரை மணி அய்யரின் துணிகளை இஸ்திரி போட்டுவைப்பது; ஜி.என்.பி-யின் பொடி டப்பாவில் - நாசிகா சூர்ணத்தை, அவ்வப்போது நிரப்புவது; கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளைக்கு 'டிகிரி காபி’ ஏற்பாடு செய்வது...
இத்யாதி; இத்யாதி!
ஒரு சங்கீத வித்வான் மீது எனக்கும், என் ஸ்ரீரங்கத்து நண்பன் விட்டலுக்கும் பயங்கரப் பிரியம்.
அவர், திருச்சிப் பக்கம் கச்சேரிக்கு வந்தால் எனக்குக் கடிதம் போடுவார். நானும் நண்பன் விட்டலும், திருச்சி அசோகா ஹோட்டலுக்குச் சென்று அவரோடு அக்கம்பக்கத்து ஊர்க் கச்சேரிகளுக்குச் செல்வோம்.
என்னுடைய எத்துணையோ பாடல்களை அவர் இசையமைத்து விஸ்தாரமாகக் கச்சேரியில் பாடுவதுண்டு.
நான், நாளாவட்டத்தில் அவருக்குத் தம்புரா போடலானேன்.
ஒருமுறை விடியற்காலை வரை அவரது கச்சேரி, திருக்காட்டுப்பள்ளி என்னும் ஊரில் நடந்தது. ஜே ஜே என்று கூட்டம்.
ஒரு கட்டத்தில், நான் லேசாகக் கண்ணயர்ந்து - தம்புராவோடு அவர்மீது சாய்ந்து விட்டேன்.
அப்போதுதான், அவர் அனுபவித்து 'ராகம் தானம் பல்லவி’ பாடிக்கொண்டிருந்தார். என் செயலால், சுதி கலைய...
'பளீர்’ என்று என் கன்னத்தில் ஓர் அறை விட்டார். எனக்குப் பொறி கலங்கியது. அந்த வித்வான் குஸ்தி பழகியவர்!
நாள்கள் நகர்ந்தன. நான், சினிமாவில் பிரபலமாகிவிட்டேன்; நண்பன் விட்டல், எம்.ஜி.ஆர். மந்திரி சபையில் மந்திரியாகி விட்டான். திருச்சி சௌந்தரராஜனின் செல்லப் பெயர்தான் விட்டல்!
பல்லாண்டுகளுக்குப் பின் - அந்த சங்கீத வித்வான் -
'சஷ்டி விரதம்’ என்னும் தேவர் பிலிம்ஸ் படத்துக்காகப் பாட வந்திருந்தார். என் பாட்டுதான் அது.
என்னைப் பார்த்ததும் - என் கன்னத்தில் அவர் அறைந்தது நினைவுக்கு வந்து - மிகவும் கூச்சப்பட்டார். நான், அவரது கைகளைப்பற்றிக் கொண்டு சொன்னேன்.
'அண்ணே! நீங்க மஹாவித்வான்; சங்கீத சாகரம். இன்றும் நீங்கள் விடிய விடியப் பாடினால் - கூட்டம், கொட்டகை பிதுங்க நிற்கிறது. உங்கள் பேர் சொன்னாலே, சென்னை சபாக்கள் சந்தோஷித்துச் சிலிர்க்கின்றன!
உங்கள் கையால், பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஓர் அறைதான் -
நான் பாட்டுத் துறையில் இவ்வளவு பிரபலமாகக் காரணம்!’
- என்று அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.
உடனே, என்னை அள்ளி எடுத்து உச்சி முகர்ந்தார் -
மகா மகா வித்வான்
திரு. மதுரை சோமு அவர்கள்!
[ நன்றி : விகடன் ]
krishna: It will be very informative if you can search the internet and post articles from the Hindu of early 50s that asserted
that Tamil waas unfit for carnatic concerts ! :) What a change in 60 years? :)
இன்றைய மின் அஞ்சலில் எழுத்தாளர் ,விமர்சகர்,வங்கி ஊழியர் என்ற பன்முக திறமை கொண்ட திரு எஸ்வி என்ற எஸ் வேணுகோபாலன் அவர்கள் அனுப்பிய அஞ்சல் . நல்லதொரு தகவல் என்பதால் பகிர்ந்து கொள்ள ஆவல்
அன்பானவர்களுக்கு
மிகவும் தற்செயலாக சனிக்கிழமை மாலை அழைத்துப் பேசுகையில், மறுமுனையில் எழுத்தாளர் சமஸ், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தமது நூல் வெளியீடு நிகழ்வு நடக்க இருப்பதைத் தெரிவித்து அழைக்கவும் செய்தார்.
நல்லவேளையாக, தமுஎகச கே கே நகர் கிளையில் நிகழ்ந்த ஒரு கூட்டத்திற்குப் பிறகு அருகேயே டிஸ்கவரி புத்தக நிலைய அரங்கில் நடந்து கொண்டிருந்த நூல் வெளியீட்டுக்குச் சற்று தாமதமாகப் போய்ச் சேர்ந்துவிட முடிந்தது.
யாருடைய எலிகள் நாம் என்கிற தலைப்பில் 384 பக்கங்கள், துளி வெளியீடு என்ற முறையில் அவரது வாழ்க்கை இணை ரேகா அவர்கள் முயற்சியில் வெளிவந்திருக்கும் நூலின் ரூ 300/-
நான் உள்ளே நுழைகையில், தி இந்து தமிழ் சிறப்புப் பகுதிகளின் பொறுப்பாசிரியர் அரவிந்தன் பேசி நிறைவு செய்திருந்தார். ஞாநி அவர்களது பேச்சை முழுமையாகக் கேட்டேன்.
ஞாநி பேசியவற்றிலிருந்து:
என் வயது 61. எனக்கும் சமஸ் அவர்களுக்கும் வயது வித்தியாசம் 26. நான் இதழியலுக்கு வந்த ஆண்டு 1974. எனக்கு அப்போதைய வயது 20. இந்த விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு அப்போது இத்தகைய ஸ்பேஸ் கிடையாது. இப்போது சூழல் உதவுவதில்எழுத ஆட்கள் கிடையாது. அதில் வாராது போல வந்த மாமணி என்பதால், சமஸ் பங்களிப்பு போற்றவேண்டியது. அது இன்னும் தழைக்கவேண்டும்.
படைப்பாளி வேறு, செய்தியாளன் வேறு என்கிற சாதியம் இதழியல் உலகில் நிலவுகிறது. படைப்பாளிகளுக்குள்ளேயே கூட சிறுகதை, கவிதை, நாவல் என்கிற வகைக்கேற்ப சாதிப் பிரிவினைகள். ஆனால், புனைவு படைப்பாளியைப் போலவே செய்திக்கட்டுரை அளிப்பவரும் மதிக்கத் தக்கவர்.
ஆனால் நடைமுறையில் அது நிகழ்வதில்லை. நானே தொலைகாட்சி விவாதங்களுக்குப் போகையில் ஒரு சிறுகதையாளரும் கூட இடம்பெற்றால் அவருக்கு எழுத்தாளர் என்றும், எனக்கு பத்திரிகையாளர் என்றும்தான் பெயரோடு இணைத்துப் போடப்படுகிறது. எழுத்தாளன் என்று செய்திக் கட்டுரையாளரை ஏற்பதில் உடன்பாடு இல்லாத நிலைமை.
இரண்டு நிலையிலும் இயங்கிய உலகப் படைப்பாளி என்று சொல்வதானால், கேப்ரியேல் மார்க்வெஸ் அவர்களைத் தான் சொல்லவேண்டும். ஒருமுறை அவர் சொன்ன பதில் அருமையானது. அவர் சொன்னார், புனைவுகளில் எங்காவது ஓரிடத்தில் வாழ்வியல் உண்மை இருந்துவிடுமானால் அது அதற்குரிய கனத்தோடு மக்களைப் போய்ச்சேரும். அதே நேரம் செய்திக்கட்டுரைகளில் ஒரே ஓர் இடத்தில் தகவல் பொய்யாகப் போய்விடுமானால் அந்தப் படைப்பு அழிந்தே போகும்.
அப்படியான பணிகளில் நெறி பிறழாது, நேர்மை தவறாது இயங்கவேண்டும். இந்த அம்சம் மிகவும் முக்கியமானது.
விகடன் எஸ் எஸ் பாலன் அவர்களுக்கு இந்த நேரத்தில் அஞ்சலி தெரிவிக்க வேண்டியது அவசியம். அவரது குழுமத்தில் பணியாற்றியது முக்கியமான அனுபவம். அவரோடு பணியாற்றுவதில் இருந்த நல்ல அம்சம் என்னவெனில், அவரோடு கருத்து மாறுபாடு கொள்ளலாம். வாதிடவும் செயலாம். உங்கள் கருத்து தவறு என்று அவரிடம் சொல்ல முடியும். உங்கள் கருத்து முட்டாள்தனமானது என்று கூட சொல்லலாம். அவர் அதையெல்லாம் பொருட்படுத்தியதில்லை. ஆனால் அவர் சொல்வார், என்னை 'கன்வின்ஸ்' பண்ணு! அதற்கு நேரம் அவகாசம் அவரே கொடுப்பார். நாளைக்கு நாலு மணிக்கு நாம உட்கார்ந்து பேசுவோம் என்பார். மறுநாள் அவர் தனது கருத்துக்கு ஏற்ற ஆதாரங்களோடு வந்து விடுவார். நீங்கள் உங்கள் தரப்புக்கு நியாயங்கள் என்ன உண்டோ அவற்றோடு போய் உட்கார்ந்து வாதிட வேண்டும்.
பல பிரச்சனைகளில் நான் அவரோடு இப்படி தர்க்கம் செய்திருக்கிறேன். அணு ஆற்றல் பிரச்சனையில் நான் அவரோடு மாறுபட்டேன். அவர் அது அவசியம் என்றார். அணு குண்டு மற்றுமல்ல அணு ஆற்றல் கூட ஆபத்தானதுதான் என்று நான் அவரோடு முரண்பட்டேன். அவர் ஒதுக்கிய நேரத்தில் பேச்சு இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என்று தொடர்ந்தது. அவர் பொறுமையோடு பேசிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர், சரி, ஜூவியில் முப்பது வாரத் தொடர் ஒன்றை நீ எழுது என்றார். அதில் உன் வாதங்களை அடுக்கு என்றும் இடம் ஒதுக்கத் தயாரானார். அவரிடம் என்ன நிபந்தனை என்றால், முப்பது வாரம் என்ன எழுதப் போகிறோம் என்பதற்கான synopsis நீங்கள் முதலிலேயே எழுதிக் கொடுத்துவிட வேண்டும். நான் 32 வாரத்துக்கு எழுதிக் கொடுத்தேன். ஆனால் எனக்கு இதழ் பொறுப்பு என்பதால் வேறு வேறு கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் எழுத இயலாது என்றும் அவரிடம் தெரிவித்தேன். ஆர்கியு பண்ணிட்டு எழுதல என்றால் என்ன அர்த்தம் என்றார். பிறகு ஏ எஸ் பன்னீர்செல்வம் அவர்களை கேட்டுக் கொண்டேன். அவர் எழுத அந்தத் தொடர் ஜூவியில் வெளியானது.
வாசன் காலத்தில் தொடங்கிய ஜெமினி ஸ்டூடியோ, திரைப்பட உலகம் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், பாலன் அவர்கள் இதயம் பத்திரிகை உலகத்தில் இருந்தது.
நான் பல நிறுவனங்களில் பணியாற்றியவன். இந்தியன் எக்ஸ்பிரசில் இருந்தேன். பின்னர் விகடன் நிறுவனத்தில் ஜூவி பொறுப்பில், ஜூனியர் போஸ்ட் பொறுப்பில், சுட்டி விகடன் பொறுப்பில் என பணியாற்றியவன். எங்கும் பணியில் இல்லாதும் பழகி இருக்கிறேன்.
அதனால்தான் அரவிந்தன், சமஸ் போன்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நாம் யாருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவு இருக்கவேண்டும். வாசகருக்குச் சொல்லவேண்டிய உண்மைகளைச் சொல்பவனாக அவர்களுக்கே நமது விசுவாசம் - நிறுவனத்திற்கு அல்ல. அதற்காக, நிறுவனத்தை betray செய்யவேண்டும் என்றல்ல. நமது எழுத்தின் நேர்மை நம்மை கறாராக வழிநடத்தும்.
ஏற்புரை: சமஸ்:
இந்தப் புத்தகம் கொண்டுவரும் தகுதி உண்டா என்று யோசித்தேன். ஆனால் இது வந்திருப்பதன் பின்னணி, பல அன்பர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். பேப்பர் கட்டிங்க்ஸ் எடுத்து வைத்திருக்கிறோம். எத்தனை நாள் முடியும், தொகுப்பாகக் கொண்டு வாருங்களேன் என்றனர். முதல் புத்தகம், சாப்பாட்டுப் புராணம் வந்தபோது உடனே விற்றுப் போனது. அதற்காக வெளியீட்டு விழா எல்லாம் நடத்தவில்லை.
இந்த தொகுப்பை யாரிடம் கொடுக்கலாம் என்று யோசித்தோம். வாசகரும் அதிக விலை கொடுக்கக் கூடாது. நமக்கும் கையைக் கடிக்கக் கூடாது. என் மனைவியே வெளியிட முன்வந்தார். நண்பர் வேடியப்பன் இந்த விழாவை நடத்தலாம் என்றார்.
இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவும் வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப் பட்டவை. ஆனால் எப்போதும் பொருத்தப்பாடு உடையவை என்று தொகுத்திருக்கிறோம். தமிழ் இதழியலில் உள்ள சாதியம் குறித்து ஞாநி சொன்னார். குறிப்பிட்ட துறைக்குள்ளும் சாதியம் உண்டு. எனக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதக் கூடத் தெரியாது. இங்கே உயரம், நிறம், அது, இது என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டு. எழுதி எழுதிக் கொடுத்தாலும் குப்பைக் கூடைக்குத் தான் போகும் செய்திக் கட்டுரைகள். ஆனாலும் நான் சளைக்காமல் தொடர்ந்தேன். என் நண்பன் கேட்பான், ஏண்டா மாப்ள, அவனுங்க போடமாட்டாங்க என்றாலும் எதுக்கு ஓயாம எழுதிக் கொடுக்கிறன்னு. நடக்கற விஷயங்களைப் பார்த்தா என்னால் எழுதாம இருக்க முடியாது. என் இயல்பு அப்படி. எங்கும் பிரச்சனை. எல்லா இடத்திலும் கலகம். கேள்வி கேள்வி. ஒண்ணு நான் இதையெல்லாம் எழுதணும், இல்ல செத்துப் போயிரணும். என் மனைவிக்குத் தெரியும். இப்படி பல இதழ்கள் மாறி வந்தாயிற்று.ஞாநி சார் கிட்ட ஆலோசனை கேட்பேன்.எனக்கு எத்தனையோ ஆசிரியர்கள். அவரும் ஒருவர். அப்படித் தான் வளர்ந்து வந்திருக்கிறேன். அவர் ஒருமுறை சொன்னார். இடம் மாறிப் போகும்போது, புதிய இடத்தில் கூடுதல் சம்பளம் கிடைத்தால், இப்போ வாங்கற சம்பளத்தில் குடும்பம் நடத்தப் பழகிக்கணும். கூடுதல் தொகையை சேமிக்கக் கத்துக்கணும். ஏன்னா உன்ன மாதிரி, நம்ம மாதிரி ஆளுங்களுக்கு எப்போ வேலை போகும் என்பது தெரியாது. அப்போ அவஸ்தைப் படக் கூடாது என்றார். இப்போது வரை அதை நான் செய்து கொண்டிருக்கிறேன்.
இந்தத் தொகுப்பு பல்வேறு கட்டங்களில் எழுதியது. அந்தந்த ஆண்டு போடப்பட்டிருக்கிறது. ஆனாலும் இன்னும் அவை பொருத்தம் உள்ளவை. உதாரணமாக, இதில் மம்தா பானர்ஜி குறிப்பிட்ட சாலைகளில் சைக்கிள் ஓட்டத் தடை கொண்டுவந்ததைப் பற்றிய கட்டுரை இருக்கிறது. எந்த விமர்சனமும் இன்றி இருப்பதை அப்படியே கொடுத்திருந்த கட்டுரை. திருணாமூல் என்றால், புல்லின் வேர்-அடிப்பாகம் என்று பொருள். அப்படி கடைசியில் உள்ள மனிதருக்கான இயக்கம் என்று பேரை வைத்துக் கொண்டு, சாதாரண மனிதர்கள் சைக்கிள் ஓட்டத் தடை, மீறினால் அது வேக வாகனங்கள் செல்ல பிரச்சனை ஏற்படுத்துகிறது என்று அதற்கு ரூ 500 அபராதம் என்று ஓர் அரசு சொல்லுமானால் என்ன ஜனநாயகம் இது?
ஏற்புரைக்குப் பிறகு கலந்துரையாடல் தொடங்கியது.
வந்திருந்தோர் .பேசலாம் என்றனர். முதல் பார்வையாளராக எனது கருத்துக்களை அங்கே தெரிவித்தேன்:
அதன் சுருக்கம்:
அழகிய பெரியவன் கவிதை ஒன்று, மரணப் படுக்கையில் இருக்கும் பாட்டி குறித்துப் பேசுகிறது. அவள் சாவு வராது இழுத்துக் கொண்டிருப்பதை,
காலப் பூனையிடம்
சுண்டெலி போல
ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது
பாட்டியின் உயிர்
என்று தொடங்குகிறது. பிறகு,
பாட்டியிடம் கற்றுக் கொள்கிறோம்
அடங்க மறுத்தலை...
என்று முடிகிறது. சம காலத்தில் என்ன நடக்கிறது. அமெரிக்க சிந்தனையாளர் நோம் சாம்ஸ்கி சொல்வதுபோல், சம்மதத்தை உற்பத்தி செய்ய வைக்கின்றனர். (MANUFACTURING THE CONSENT ). நாமே ஏற்றுக் கொள்வதுபோல் அத்தனை அநியாயங்களும் நடக்கின்றன. அடங்க மறுப்பது, எதிர்ப்பது, கேள்விகளை எழுப்புவது இவற்றை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய காலமிது.
சுதேசி இயக்கத்தில் முகிழ்த்தது இந்தியன் வங்கி. பாரதி நவம்பர் 1906ல் இந்தியா பத்திரிகையில் செட்டி நாட்டு சீமான்களே என்று தொடங்கி உள்நாட்டு முதலாளிகள் ஏன் வங்கி தொடங்கக் கூடாதென்றார். 1907 ஆகஸ்ட் 15 அன்று இந்தியன் வங்கி பிறந்தது. இன்று எல்லாவற்றையும் விற்கத் துடிக்கின்றனர் ஆட்சியாளர்கள். கோயில் பூசை செய்வோன் சிலையைக் கொண்டு விற்றல் போலும் என்றார் மகாகவி.
சொத்துக்களை மட்டுமல்ல, விழுமியங்களை, பண்பாட்டின் கூறுகளை, கருத்துக்களை, எத்தனையோ அம்சங்களைப் பறிகொடுக்கும் அபாயமான காலம் இது.
மக்களுக்கு செய்தி சொல்பவர்கள் மட்டுமல்ல, புலம்புவது அல்ல, எதிர்ப்பின் குரலை எழுப்பும் செய்தியாளர்கள் தேவை. அரிதான வரிசையில் சமஸ் அற்புதமாக நமக்குக் கிடைத்திருக்கிறார். இன்னும் இன்னும் பரந்துபட்ட தளங்களில் மேலும் மேலும் கூர்மையான எழுத்துக்களை எதிர்பார்ப்போம் என்று சொல்லி வாழ்த்தி மகிழ்கிறேன்.
அன்புடன்
எஸ் வி வேணுகோபாலன்
***************
சமஸ் எழுதும் வலைப்பூ முகவரி:
http://writersamas.blogspot.in/
***********
யாருடைய எலிகள் நாம்
நூலுக்கு ஜெயமோகன், ஞாநி, எஸ் வி ராஜதுரை, அ முத்துலிங்கம் நால்வரும் அணிந்துரை எழுதி உள்ளனர்.
சமஸுடைய மொழிநடை அபூர்வமானது......
அ முத்துலிங்கம்
இந்தத் தொகுப்பு வெளிவந்ததும் பல நோக்கிலிருந்து எதிர்வினைகள் வரலாம். ஆனால் கட்டுரைகளில் உள்ள தரவுகளின் ஆதாரங்களை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது - எஸ் வி ராஜதுரை
சாமர்த்தியமான எழுத்தினால் தன்னை வித்தியாசமாகக் காட்டிக் கொண்டால் போதுமென்று நினைப்பவர் அல்ல சமஸ். மெய்யாகவே எது சரிஎன்று தான் நம்புபவரோ
அதன் பக்கம் நிற்பவர்.
- ஞாநி
மேலும் மேலும் வணிகமயமாகி நுகர்வுமயமாகி வரும் உலகில் ஜனநாயகம், மனிதாபிமானம், சமத்துவம் போன்ற விழுமியங்களின் இடமென்ன என்ற கேள்வியையும், ஐயத்தையும் எழுப்புகின்றன சமஸின் கட்டுரைகள் - ஜெயமோகன்
ட்வீட்டர்:
சவுளி என்பது தமிழ்ச் சொல்; ஜவுளி-ன்னு எழுதாதீர்கள்:)
--
சவளம்/ கவளம்= Piece
Piece துணி= சவுளி
-- கலைச் சவுளி, தலைக்கு உலவி= திருப்புகழ்
*சவுளி = ஜவுளி
*சல்லிக் (காசு) கட்டு = ஜல்லிக் கட்டு
*வேட்டி= வேஷ்டி ..
இப்படி, ஜ, ஷ திணிப்பு:) | புரிந்து கொண்டு, புறம் தள்ளுவீர்:)
# நெசவுத்தமிழ்: சவுளி= சவளம் (Piece Cloth)
--
வேட்டி= தறியில், வெட்டி எடுப்பதால் வேட்டி
--
புடைவை= புடை(பக்கம்) சுற்றுவதால், புடை-வை.
----------------
நன்றி @kryes
நன்றி விகடன் மற்றும் தகவல் தந்த எனது இனிய நண்பர் திரு வேணுகோபால் அவர்களுக்கு
யாக்கை
சிறுகதை: பாஸ்கர் சக்தி
ஓவியங்கள்: ஸ்யாம்
குமார் ரொம்ப உற்சாகமான ஆள். எப்போதும் எதற்காவது சிரித்துக்கொண்டே இருக்கிறவன். அவன் சிரிக்க வேண்டுமெனில், பெரிய நகைச்சுவைகள் தேவை இல்லை. 'ஆபீஸ் வாசல்ல பாத்தியா குமார்... ஒருத்தன் ரௌடி மாதிரி நிக்கிறான். முதுகுல ஏதோ பொருளைச் சொருகிவெச்சிருக்கான்’ என்றால்கூட சிரித்தபடியே, 'ஆமாமா... நானும் பாத்தேன். யாரைப் போட வந்திருக்கான்னு தெரியலியே’ என்பான். அந்த அளவுக்கு கேனத்தனமான ஹ்யூமர்சென்ஸ்.
அன்றும் உற்சாகமாகத்தான் இருந்தான். ஒரு வாரப் பத்திரிகையில் உதவி ஆசிரியர். சக உதவி ஆசிரியர்களில் பலருக்கு இருக்கும் டென்ஷனை, இவன் முகத்தில் பார்க்கவே முடியாது. அன்று இன்னும் ரொம்ப உற்சாகமாக இருந்தான். காரணம், காலையில் ஆபீஸுக்கு பைக்கில் வரும்போது, எதிர்ப்புறம் பைக்கில் ஒருவனின் முதுகில் கை வைத்தபடி சென்ற ஒரு தேவதை, இவனைப் பார்த்து தெள்ளத் தெளிவாகச் சிரித்தாள். ஒரு விநாடி இவன் பைக்கின் பேலன்ஸைத் தவறவிட்டு, அடுத்து வந்த யு டர்னில் வெகுவேகமாகத் திரும்பி, அந்தப் பெண்ணை சுமந்து செல்லும் பைக்கைத் தொடர்ந்தான். சென்னையின் சபிக்கத்தக்க டிராஃபிக் அவன் பொறுமையைச் சோதிக்க, பல கார்களையும் பஸ்களையும் கடந்து அவளை நெருங்கிச் செல்லும்போது, அவள் மறுபடியும் இவனைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்த, இவன் நாடி நரம்புகள் தடதடத்தன. விடாமல் தொடர்ந்தான்.
வள்ளுவர் கோட்டம் அருகே வந்த குப்பை லாரியின் சதியால் அவள் சென்ற பைக்கைத் தவறவிட்டு, ஆபீஸுக்குத் தாமதமாக வந்து ஸீட்டில் உட்கார்ந்தான். ஒருமணி நேரம் தாமதம். எனவே அரை நாள் லீவாகக் கணக்கிடப்படும். ஆனால், அதற்காகச் சிரிக்காமல் இருக்க முடியுமா? அந்தப் பெண்தான் தன்னைப் பார்த்து எவ்வளவு அழகாகச் சிரித்தாள்! நேருக்குநேர் கண்கள் பார்த்து ஓர் ஓவியப் புன்னகை! எத்தனை மாதச் சம்பளமும் அதற்கு ஈடாகாதே? இந்த மாதிரியான அங்கீகாரத்துக்குத்தானே ஆணாகப் பிறந்த பாவிகள் எல்லாரும் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.
காலையில் தன்னைப் பார்த்து புன்னகைத்த அந்தப் பெண்ணை மறுபடியும் பார்க்க நேர்ந்தால், காதலைச் சொல்லிவிட வேண்டும். வாய்ப்பு இல்லையென்றால், அவள் கைகளைப் பற்றி நன்றியாவது சொல்ல வேண்டும். இப்படி ஒரு சிரிப்பைச் சிரித்து 30 ஆண்டு கால வாழ்க்கையை அர்த்தப்படுத்தியதற்காக!
குமார், இப்படி வெட்டியாக யோசித்து நினைவுச் சுகத்தில் திளைத்துக்கொண்டிருந்தபோது, போன் அடித்தது. எடுத்தான்.
''அலைகடல் பத்திரிகை ஆபீஸுங்களா?''
''ஆமா, உங்களுக்கு யாரு வேணும்?'
''சப் எடிட்டர் குமார்?''
''நாந்தான்... சொல்லுங்க!''
''அய்யா, என் பேர் தங்கராஜ். நான் உங்களுக்கு ஒரு பேட்டி குடுக்கணும். எம் போட்டோ உங்க புஸ்தகத்துல வரணும். உங்க நம்பரை சோமு குடுத்தாப்ல...''
''எந்த சோமு?'
''விநாயகா ஃபைனான்ஸ் சோமு...''
குமாருக்கு சோமு யாரெனச் சுத்தமாகத் தெரியவில்லை. செய்தி சேகரிக்கச் செல்லும்போது, யார் கேட்டாலும் மொபைல் நம்பரைக் கொடுத்துவிடுவது குமாரின் வியாதி. அதனால் விளைகிற சங்கடம் இது.
''சரி... நம்பர் யார் வேணா குடுத்திருக்கட்டும். உங்க பேட்டி பத்திரிகையில வரணும்னா, நீங்க ஏதாவது பண்ணி இருக்கணுமே... எந்த பேசிஸ்ல உங்களை நான் பேட்டி எடுக்கறது?'
''நான் சிலை எல்லாம் செய்வேன் சார்!''
''சிற்பிங்களா... ஸ்தபதியா?''
''இல்லைங்க... ஸ்தபதி எல்லாம் பெரிய வார்த்தை. என்னை நான் அப்படிச் சொல்லிக்க மாட்டேன். ஆனா, எல்லா சிலைகளையும் சரியான அங்கலட்சணங்களோடு செய்வேன். நல்லா படம் வரைவேன். எல்லாமே சுயமா கத்துக்கிட்டேன். என் பேட்டியை நீங்க போட்டிங்கன்னா, என்னைப் பத்தி யாருக்காவது தெரியும். ஏதாச்சும் சான்ஸ் கிடைக்கும். ரொம்பக் கஷ்டத்தில இருக்கேன்.'' இதுவரை சிரித்தபடி பேசிக்கொண்டிருந்த குமாரின் முகம் மாறியது.
''சார்... நீங்க உங்களை விளம்பரப்படுத்திக் கிறதுக்கு எல்லாம் நாங்க பத்திரிகை நடத்தலை... புரியுதா? அதுமாதிரி பண்ண முடியாது. போனை வைங்க.''
''ஏன் சார்? இந்த வாரம் விதவிதமா பூட்டை உடைக்கிற ஒரு திருடன்கிட்ட பேட்டி எடுத்திருக்கீங்க. அவன் எப்படி எல்லாம் திறமையா பூட்டை உடைப்பேன்னு உங்ககிட்ட பெருமையா சொல்லி இருக்கான். போட்டோவோட அதைப் போட்டிருக்கீங்க. நான் ஒரு கலைஞன். என்கிட்ட பேட்டி எடுக்க முடியாதா?'' - அந்த நபர் குரலில் ஓர் ஆற்றாமை தெரிந்தது. ஆனாலும், குமாருக்கு கடுப்பாகிவிட்டது.
https://ci6.googleusercontent.com/pr...ages/p144a.jpg
''ஏங்க... அந்தத் திருடன் போலீஸ் குவார்ட்டர்ஸுக்குள்ள வீடு வீடா உடைச்சுத் திருடியிருக்கான். அது சென்சேஷன். அதனால அவன் பேட்டியைப் போட்டோம். புரியுதுங்களா?''
''அப்ப என் பேட்டி வரணும்னா, நானும் திருடணுமா?'' என்றதும் குமார் பொறுமை இழந்தான்.
''சார்... உங்களுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாது. போனை வைங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு.''
''திருடனைப் பேட்டி எடுக்கிற... கலைஞனை இன்சல்ட் பண்ற. என்னா ஜர்னலிஸ்ட் நீ? இந்த நாடு வெளங்குமா? நீ எல்லாம் ஒரு
சப் எடிட்டரா? மடப்பயலே.''
''இதுக்கு மேல பேசினா, நல்லா இருக்காது. போனை வைங்க.''
போனை கட் செய்த குமாரின் முகத்தில் சுத்தமாகச் சிரிப்பு இல்லை. 'சரியான லூஸா இருக்கான்’ என எரிச்சலுடன் எழுந்து போனான். ஒருமணி நேரத்தில் அந்த ஆளை மறந்துவிட்டான்.
அடுத்த நாள், ரிசப்ஷனில் ஒரு பெண் அவனுக்காகக் காத்திருப்பதாகத் தகவல் வந்தது. ரிசப்ஷனுக்குக் கீழே இறங்கும்போதே அவளைப் பார்த்துவிட்டான். நேற்று பைக்கில் சென்றவள். இவனைப் பார்த்துச் சிரித்தவள்!
குமாரின் கை-கால்கள் எல்லாம் ஜிவ் என்னும் உணர்வு பரவ, உடல் லேசானது. நாக்கு லேசாக உலர, தன் உடம்பு முழுவதும் பரபரப்பான ஒரு சூடு பரவியது. காய்ச்சல் போல... ஆனால் காய்ச்சல் இல்லை. இங்லீஷில் 'எக்ஸைட்டட்’ என சுலபமாகச் சொல்லிவிடுகிறார்கள். தமிழில் நிறைய வார்த்தைகள் தேவைப்படுகின்றன என ஒரு சப் எடிட்டர் யோசனை மனதுக்குள் ஓட, அவளை நெருங்கினான். அவள் இவனைப் பார்த்ததும் எழுந்தாள். அவள் மட்டுமா எழுந்தாள்?! அவளுடன் கொஞ்சம் இசையும், கொஞ்சம் சுகந்தமும், கொஞ்சம் வெப்பமும் எழுந்தன.
''ஹலோ சார்!''
''ஹலோ... நீங்க..?''
''என் பேர் பாவை.''
பாவைதான். பழைய கறுப்பு வெள்ளைப் படங்களில் வரும் தேவிகாவைப்போல, மதுபாலாவைப் போல இருக்கிறாள். என்ன கொஞ்சம் பழைய பெயராக இருக்கிறது. குமார், பாவையை இப்போது நன்றாக உற்றுக் கவனித்தான். பாவைக்கு வயது 30 இருக்கலாம். எளிமையான காட்டன் சேலை. கழுத்தில் ஒரு பாசிமாலை. சாதாரண செருப்பு எனத் தள்ளுபடியாகவும், கண்களும் முகமும் சிரித்த சிரிப்பில் அள்ளும்படியாகவும் இருந்தாள்.
''நல்ல பேருங்க...''
''என் அப்பா வெச்சது.''
''சூப்பருங்க... இப்பல்லாம் யாரு இந்த மாதிரி பேர் வைக்கிறாங்க'' - பாவை சிரித்தாள்.
''ஆக்ச்சுவலா நான் உங்களை ஏற்கெனவே பார்த்திருக்கேன்.''
''நேத்து பைக்ல பார்த்தீங்க; சிரிச்சீங்க.''
''கரெக்ட்... ஆனா, அதுக்கு முன்னாடியே ஒருநாள் ஒரு மீட்டிங்ல உங்களைப் பார்த்தேன். பட், அப்ப நீங்க என்னைப் பார்க்கலை.''
குமார் மனதில் அதற்குள் ஒரு கதைச் சுருக்கம் தோன்றிவிட்டது. பாவை, குமாரை எங்கோ பார்த்திருக்கிறாள். கண்டதும் காதல். இப்போது விசாரித்து வந்துவிட்டாள். கூட்டிப்போய் காதலைச் சொல்லப்போகிறாள்.
இவன் இப்படி நினைக்கும்போதே பாவை கேட்டாள்... ''டீ சாப்பிடலாமா?''
குமார் மனதுக்குள் கன்றுக்குட்டிகள் ஓடின.
''வாங்க போகலாம்.''
டீ குடிக்கும்போது பாவையின் சொற்களுக்காகக் காத்திருந்தான் குமார். பாவை சொன்னாள்... ''அன்னைக்கு ஃபங்க்ஷன்ல நீங்க யாரையோ பேட்டி எடுத்துக்கிட்டு இருந்தீங்க... அப்ப சோமுதான் உங்களைக் காமிச்சாரு.''
''எந்த சோமு?''
''விநாயகா ஃபைனான்ஸ் சோமு.''
குமாரின் மனதுக்குள் ஒரு குரல் ஒலித்தது. யார் இந்த விநாயகா ஃபைனான்ஸ் சோமு? இந்தப் பேரை எங்கே கேட்டோம்? நேற்று வந்த போன். அந்தக் கிறுக்குப் பயல்... சிற்பி!
பாவை புன்னகையுடன் பேசினாள், ''நேத்து அப்பா பேசினாராம். நீங்க பேட்டி எல்லாம் எடுக்க முடியாதுனு சொன்னீங்களாம். அதான், 'நேர்லயே
நீ போய் சாரைப் பார்த்துக் கேளும்மா’னு அப்பா சொன்னார். அதான்...''
குமார் மனதுக்குள் ஓர் அணு உலை வெடித்து புல் பூண்டுகள் பொசுங்கின.
30 ஆண்டுகள் கழித்து முதன்முதலாக தன்னைப் பார்த்து ஒருத்தி சிரித்தாள் என்கிற பெருமிதம், அவள் ஒரு காரியம் வேண்டித்தான் சிரித்திருக்கிறாள் என உணர்ந்ததும் நொடியில் ஆவியானது. முகம் சுருங்கினான்.
குமாரின் முகம் மாறியதை பாவை படித்துவிட்டாள். கெஞ்சலான குரலில் பேசினாள் ''ஸாரி சார். நீங்க எரிச்சலாவீங்கனு தெரிஞ்சுதான் வந்தேன். இதை ஒரு உதவியா நினைச்சு செய்ங்க. நீங்க பேட்டி போடறது ரெண்டாவது. முதல்ல வந்து என் அப்பாவைப் பாருங்க சார். அவர்கிட்ட பேசுங்க... ப்ளீஸ்!''
'இதுக்கெல்லாம் வேற ஆளைப் பாரு’ என சொல்ல எத்தனித்து தலைநிமிர்ந்த குமார், பாவையின் கண்களைப் பார்த்தான். தேவிகாவும் மதுபாலாவும் கண்களில் நீர் கோக்க பார்வையால் இறைஞ்சும்போது கதாநாயகனால் என்ன செய்ய முடியும்?
''வர்றேங்க.''
https://ci3.googleusercontent.com/pr...44b%281%29.jpg
திருவல்லிக்கேணியின் சல்லடை சந்துகளின் வழியாக நடந்துபோய், 'இங்கே சிறுநீர் கழித்தால் செருப்படி கிடைக்கும்’ என்ற ஒரு சுவரைக் கடந்து, ஒரு சின்ன கேட்டைத் திறந்து சந்துக்குள்ளே போனதும் அந்த வீடு இருந்தது. திருவல்லிக்கேணி கிராமமாக இருந்தபோது உருவான வீடாக இருக்க வேண்டும். ஹாலின் மேல்புறம் திறந்திருந்தது. அந்த வெளிச்சத்தின் கீழ் தங்கராஜ் உட்கார்ந்திருந்தார். 55 வயது இருக்கலாம். பாவையுடன் குமார் உள்ளே நுழைந்ததும், எழுந்து நின்று கை கூப்பி வணங்கினார். மூக்குப்பொடியும் வெற்றிலையும் கலந்த ஒரு வாசம் அவரைச் சூழ்ந்திருந்தது.
குமார் அவர் எதிரே அமரவும் பாவை உள்ளே போய்விட்டாள். குமார் தனது பத்திரிகைப் பார்வையால் அந்த வீட்டை அளந்தான். அவரது மனைவியின் படம் மாலை போட்டு மாட்டி இருந்தது. அந்த வீட்டின் வறுமையை உடனடியாக அவனால் உணர முடிந்தது. சுருட்டி வைக்கப்பட்ட கிழிந்த பாயும் மண்ணெண்ணெய் ஸ்டவ்வின் வாசமும், அறையின் மூலையிலேயே வைக்கப்பட்டிருந்த சொற்ப பாத்திரங்களும் எல்லாவற்றையும் சொல்லிவிட்டன. குமாரின் பார்வையைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் தங்கராஜ் பேச ஆரம்பித்தார்.
''நேத்து கோவமாப் பேசிட்டேன். மனசில வெச்சுக்கிடாம வந்திருக்கே. சந்தோஷம். எல்லாம் ஒரு ஆத்தாமையில பேசறதுதான். பாரிஸ்ல என்னை மாதிரி ஒருத்தன் இருந்தா, அவன் கோடீஸ்வரன். ஆனா, நான் திருவல்லிக்கேணியில இருக்கேன். பாரதியாரையே அலையவிட்ட ஊர்ல இது'' - குமார் அவரைப் பார்த்துச் சிரித்தான்.
''சாருநிவேதிதா மாதிரி பேசறீங்க. என்ன படிச்சிருக்கீங்க?''
''அப்ப ப்ளஸ் டூ கிடையாது. பி.யூ.சி-னு சொல்வாங்க. அதுவரைக்கும் படிச்சேன். படிப்பில புத்தி போகலை. வீட்டுல சண்டை போட்டுட்டு ஓடிப்போய் ஊர் ஊரா அலைஞ்சேன். நல்லா படம் வரைவேன். சிலதெல்லாம் பிறவியிலேயே வருமில்லையா? பானை செய்யுற ஒரு ஆள்கிட்ட கொஞ்ச நாள் இருந்தேன். அந்தாளு கோயில் திருவிழாவுக்கு ரூபம் எல்லாம் செய்வாரு. அவர்கிட்ட கொஞ்ச நாளு, அப்புறம் ஆந்திராவில் ஒரு ஆள்கிட்ட கொஞ்ச நாள்னு இருந்து கத்துக்கிட்டதுதான் இந்தத் தொழில். முறைப்படி படிக்கலை. ஆனா, எப்படியோ எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். ஆல்பம் பாக்கிறியா?''
ஓர் அலமாரியைத் திறந்து ஆல்பத்தை எடுத்து வந்தார். ஆயிரக்கணக்கான தடவை புரட்டிப் புரட்டி ஆல்பம் நொந்துபோய் இருந்தது. அதன் பக்கங்களை குமார் புரட்டினான். அவன் கண்கள் பிரகாசித்தன.
எல்லாம் மங்கிய புகைப்படங்கள். ஆனால், அவற்றில் இருந்த சிலைகள் அனைத்தும் அவ்வளவு திருத்தமாக இருந்தன. இந்த மனிதனா இவற்றை வடித்தான் என்கிற சந்தேகம் தோன்றும் அளவுக்கு அழகாக இருந்தன.
''இந்தச் சிலை எல்லாம் எங்கே?''
''இது எல்லாமே நான் ஒரு ஏஜென்ட்டுக்கு செஞ்சுக்கொடுத்தது. ரொம்ப சொற்பமாத்தான் காசு தருவான். நான் எல்லாரையும் நம்பிருவேன். அதனால இழந்தது நிறைய. ஏமாந்ததுக்கு அளவே இல்லை'' - பாவை உள்ளே வந்தாள். கையில் இருந்த தூக்கில் இருந்து காபி ஊற்றிக்கொடுத்தாள்.
''கடையில வாங்கினேன். இனிப்பு போதுமா?''
குமார் அவளை நிமிர்ந்து பார்த்தான். 30 வயது ஆகியும் அவளுக்குத் திருமணம் ஆகாதது ஏன் எனப் புரிந்தது.
'இங்க வாப்பா’ என தங்கராஜ் அவனை இன்னோர் அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறையின் மூலையில் இருந்த பழைய மரப் பெட்டியைத் திறந்தார். உள்ளே 10, 20 சிலைகள் கிடந்தன. ஒரு அடி, அரை அடி உயரமுள்ள பல்வேறு சிலைகள்.
''இது எல்லாமே நான் பண்ணதுதான். மண்ணுல பண்ணுவேன். அப்புறம் பித்தளையில, ஐம்பொன்ல எல்லாத்திலயும் பண்ணுவேன். அச்சு பண்ணி ஊத்தி பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்ல பண்ண புத்தர் இது. பாருங்க.''
தங்கராஜ் ஒரு புத்தரின் சிலையை எடுத்து நீட்ட, குமார் அதைப் பார்த்து அசந்துபோனான். அவன் இதுவரை கண் மூடிய புத்தர் சிலையைத்தான் அதிகம் பார்த்திருக்கிறான். இந்தப் புத்தர் கண்களைத் திறந்திருந்தார். மென்மையாக இமைகளை விலக்கியும் விலகாமலும் கருணை வழியும் கண்கள். கண்களை மூடியிருக்கும் புத்தரின் சிலையில் காணும் அதே சாந்தமும், தியானத்தில் லயித்த அழகிய புன்னகையும் அற்புதம். தங்கராஜை வியப்புடன் பார்த்தான் குமார். அவர் இவனது பிரமிப்பைக் கண்டுகொள்ளாமல் மற்றொரு சிறிய சிலையை எடுத்து, தனது வேஷ்டியில் துடைத்து அவனிடம் நீட்டினார்.
https://ci4.googleusercontent.com/pr...ages/p144c.jpg
''இந்த அம்மனைப் பாருங்க... ஃபைபர்ல பண்ணது. பன்னிரண்டு வருஷங்கள் ஆச்சு.''
குமார், அதை கையில் வாங்கினான். மிகவும் லேசாக இருந்தது. மீனாட்சி அம்மன். ஒரு அடி உயரம்தான் இருக்கும். கையில் இருக்கும் கிளியும் டாலடிக்க, மின்னும் மூக்குத்தியுடன், அழகிய பச்சை நிறத்தில்... அந்தச் சிலையில் தென்பட்ட உயிர்ப்பு, குமாரைப் பிரமிக்கவைத்தது.
''என்ன சார் சொல்றீங்க... இது ஃபைபர்ல பண்ணதா?!''
''ஆமா தம்பி... அச்சு பண்ணி மோல்டு எடுத்துப் பண்ணது. ஃபைபர். பொதுவா மோல்டு எடுத்துப் பண்ணா, அது அவ்வளவு சிறப்பா இருக்காதுனு சொல்வாங்க. ஆனா நான் பண்ணது, செதுக்கினது மாதிரி இருக்கும். அதுதான் நம்ம தனித்திறமை. நீங்க பெங்களூரு போயிருக்கீங்களா?'
''போயிருக்கேன்.''
''அங்க தும்கூர் போற ரூட்ல ஒரு தீம் பார்க் இருக்கு... தெரியுமா?''
''தெரியாதுங்க.''
''அந்த தீம் பார்க்ல நிறைய அனிமல்ஸ் வெச்சிருக்காங்க. ஒவ்வொண்ணும் 20 அடி,
30 அடி உயரம். எல்லாமே நான் செஞ்சது. ஃபைபர்ல பண்ணது. போட்டோ பாருங்க.''
மற்றோர் ஆல்பத்தை எடுத்துக் காட்டினார். அதில் டைனோசர், யானை, திமிங்கலம் ஆகியவை பிரமாண்டமாக உயிர்பெற்றிருந்தன.
''இதுக்கெல்லாம் நான் காசே வாங்கலை. 'குழந்தைகளுக்காக பண்ணிக்கொடுங்க’னு கேட்டாங்க. 'சரி’னு பண்ணிக்கொடுத்தேன்.''
''சார்... நீங்க உங்க தொழில்ல திறமையானவர்தான். அதுல இப்ப எனக்கு சந்தேகம் இல்லை.''
''தொழில் இல்லை தம்பி... கலை. நான் கலைஞன். இன்னமும் அப்படித்தான் நினைக்கிறேன். தொழிலா நினைச்சுப் பண்ணியிருந்தா, நிறையக் காசு சேர்த்திருப்பேனே.''
''சரிங்க... இப்ப நான் என்ன செய்யணும்?'
அவர் பெருமூச்சுவிட்டார். போனில் பேசியபோது தென்படாத ஒரு தயக்கம், இப்போது அவர் முகத்தில் இருந்தது. பாவைதான் பேசினாள்.
''சார்... சில வருஷங்களாவே அப்பா வேலையில்லாம சும்மா இருக்கார். நைட்ல தூங்க மாட்டேங்கிறாரு. சமயத்தில தனியா உக்காந்துக்கிட்டு அவராவே பேசிக்கிட்டு இருக்காரு. ரொம்பக் கஷ்டமா இருக்கு. அதான் ஒரு பேட்டி எடுத்துப் போட்டீங்கன்னா, ஏதாச்சும் வேலை வரும்னு...''
குமார், தங்கராஜைப் பார்த்தான். உடனே அவசரமான குரலில் பாவை பேசினாள்.
''இது நான் சொன்ன ஐடியாதான். நேத்து நான் கம்ப்பெல் பண்ணதாலதான் போன்ல உங்ககிட்ட பேசினாரு. இப்பப் பாருங்க... பேசாம நிக்கிறதை...''
தங்கராஜ் லேசான குரலில் பேசினார். ''இவ சொல்றா. ஆனா, எனக்கு கொஞ்சம் கூச்சமாத்தான் இருக்கு. நேத்துக்கூட போன்ல ஒரு வேகத்தில பேசினேனே தவிர, என் சுபாவம் அது கிடையாது. பேட்டி எல்லாம் வேணாம். விட்டுத்தள்ளுங்க கழுதையை.''
குமார், பாவையைப் பார்த்தான். அவள் கண்களில் இருந்த சோகமும் கெஞ்சலும் குமாரை உருக்கின. தங்கராஜைப் பார்த்து தீர்மானமான குரலில் சொன்னான்
''நான் உங்களைப் பேட்டி எடுக்கிறேன் சார்!''
பேட்டி எடுத்துக்கொண்டு எடிட்டரிடம் போனான் குமார். வாங்கிப் பார்த்தார்.
''இதை எதுக்கு நாம போடணும்?''
''நல்லா சிலை செய்றார் சார். கஷ்டப்படுறார்.''
''தொழில் நல்லாத் தெரிஞ்சவன்... சிரமப்படுறவன் லட்சம் பேர் இருக்கான் நம்ம ஊர்ல. எல்லாரையும் நாம பேட்டி எடுக்க முடியுமா?''
''நீங்க படிச்சுப் பாருங்க சார். படிச்சுட்டு டிஸைட் பண்ணுங்க.''
அவர் படிக்கத் தொடங்கினார். குமார் பிரமாதமாக எழுதுவான். தங்கராஜ் அவரே பேசுவதுபோல் அந்தப் பேட்டியை எழுதியிருந்தான். எடிட்டர் படித்துவிட்டுப் புன்னகைத்தார்.
''இதை நான் போடுறேன், இந்த ஆளுக்காக இல்லை; உன் அருமையான ரைட்டிங்குக்காக.''
அடுத்த வாரமே பேட்டி பிரசுரமானது. அச்சாகி வந்த புத்தகத்தை எடுத்துக்ªகாண்டு குமார் போனான். தங்கராஜ் புத்தகத்தை வாங்கியதும் கண்களில் நீர் கசிய, அதை மறுபடி மறுபடி படிக்கத் தொடங்கினார். குமார், பாவையைத் தேடினான். வீட்டுக்குப் பின்னால் இருந்த அடிபம்ப்பில் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்தாள். குமார், அவளிடம் கண்களில் காதலை வெளிப்படுத்தியவாறு பேசிக்கொண்டிருந்தான். அவள் தண்ணீர் அடித்தபடி புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தாள். சூட்சுமமானவள். அவளுக்கு குமாரின் காதல் புரிந்துவிட்டது.
அடுத்த ஓரிரு தினங்களில் மறுபடியும் அந்த வீட்டுக்குப் போனான். அப்போது தங்கராஜ் வீட்டில் இல்லை. ஸ்வீட் வாங்கிக்கொண்டு போயிருந்தான்.
''ஜஸ்ட் இந்தப் பக்கம் வந்தேன். உங்களைப் பார்த்துட்டுப் போலாம்னு தோணுச்சு'' என்றவனைப் பார்த்து பாவை சிரித்தாள்.
''சார்... உங்ககிட்ட ஓப்பனா பேசலாமா?''
''தாராளமா.''
''நீங்க என்னைப் பார்க்கத்தானே வந்தீங்க?'' - குமார் உடல் லேசாகச் சிலிர்த்தது. சொல்லிவிட வேண்டியதுதான்.
''ஆமா பாவை. உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.''
''என்னை லவ் பண்றீங்களா?''
குமாருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. கண்களில் மையல் வழிய, ''ஆமா பாவை. நீங்க பைக்ல என்னைப் பார்த்து சிரிச்சீங்க இல்லையா... அதுல இருந்து என் மைண்ட் ஃபுல்லா நீங்கதான்...' - பாவை சிரித்தாள்.
''இந்த வீடு, நிலைமை எல்லாத்தையும் பார்த்த பிறகுமா?''
''இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை பாவை.''
''இன்னொரு மேட்டர் இருக்கு.''
''என்ன மேட்டர்?''
பாவையின் குரலில் லேசான தயக்கம் தெரிந்தாலும், இதைச் சொல்லியே ஆக வேண்டும் என்பதுபோல் மெல்லிய குரலில் சொன்னாள்.
''எனக்கு வயசு 31. அப்பாவுக்கு வருமானம்னு ஒண்ணு வந்து கிட்டத்தட்ட நாலைஞ்சு வருஷங்கள் ஆகிருச்சு. எனக்கு கல்யாணம் ஆகலையே தவிர, ஒருத்தர்கூடத்தான் நான் இருக்கேன். அவர்தான் இந்தக் குடும்பத்தை சப்போர்ட் பண்றாரு.''
குமாரின் உடல் எங்கும் லேசான பதற்றம் பரவியது.
''என்ன சொல்றீங்க?''
''விநாயகா ஃபைனான்ஸ் சோமுனு சொன்னேனே... அவர்தான். வட்டிக்குப் பணம் கொடுக்கிறவர். அவருக்குக் கல்யாணம் ஆகி ப்ளஸ் டூ படிக்கிற பசங்க இருக்காங்க. அதனால கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு சொல்லிட்டாரு. எனக்கும் வேற வழி இல்லாம இப்படி இருக்கேன். ஆக்ச்சுவலா இந்த மேட்டர் அப்பாவுக்கும் ஓரளவு தெரியும்'' - குமார் அதிர்ந்தான்.
''அவருக்கும் தெரியுமா?''
''ம்... நீங்க என்கிட்ட 'ஐ லவ் யூ’னு என்னத்தையாவது சொல்றதுக்கு முன்னாடியே இதைச் சொல்லிடணும்னு நினைச்சேன். அதான் சொன்னேன். ஸாரி...'' -குமாருக்கு உள்ளுக்குள் தோல்வியும் அழுகையும் பீறிட்டன.
''நான் கிளம்பறேன்'' எனத் தடுமாற்றத்துடன் சொன்னவனின், முகத்தை அவள் கவனித்தாள்.
''ஏன் இவ்வளவு அப்செட் ஆகணும்? ஜஸ்ட் மூணு தடவைதானே பாத்திருக்கோம்.''
குமார் அவள் கண்களைப் பார்க்காமல் சொன்னான், ''அது அப்படித்தான்... ப்ச்! வர்றேன்' - திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டான் குமார்.
அடுத்த வாரம் தேர்தல் அறிவிக்கப்பட, அதன் பின் பத்திரிகை வேலைகளில் மும்முரமாகி மெள்ள அவர்களை மறந்துவிட்டான். சில மாதங்களுக்குப் பின்னர் கர்நாடகாவுக்கு ஒரு வேலையாகச் சென்றபோது தும்கூர் செல்லும் பாதையில் அந்த தீம் பார்க்கைப் பார்த்தான். தங்கராஜ் நினைவு வந்தது. தீம் பார்க்குக்கு உள்ளே போனான்.
முகப்பில் இவன் போட்டோவில் பார்த்த சுறா மீனும் யானையும் டைனோசரும் உயரமாக நின்றிருந்தன. என்ன ஒரு நேர்த்தி. அதைத் தொட்டுப்பார்த்தான். கல்லில் செதுக்கியதுபோல சின்னச் சின்ன நெளிவுகளும் நுட்பங்களும் தங்கராஜின் திறமையை, அர்ப்பணிப்பைச் சொல்லின. ஒரு பெண்ணின் சிலையையும் தங்கராஜ் வடித்திருந்தார். அதன் வடிவும் வனப்பும் உயிர்ப்பும் இவனுக்கு பாவையை நினைவுபடுத்தின. ஊருக்குப் போனதும் அவர்களைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது.
சென்னை திரும்பியதும் காலையிலேயே பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். வீட்டை அடைந்து உள்ளே நுழைந்தான். வீடு அமைதியாக இருந்தது. குரல்கொடுத்தான். தங்கராஜ் பின்னால் இருந்து வந்தார்.
''வாங்க தம்பி வாங்க... உக்காருங்க'' இவன் அமர்ந்தான்.
''நல்லா இருக்கீங்களா?''
''இருக்கேன் தம்பி...''
''பாவை இல்லீங்களா?''
''அவ இப்ப இங்க இல்லை'' என்றவர் குரலில் சின்னத் தடுமாற்றம். பிறகு சொன்னார்.
''சோமுனு தெரிஞ்சவர் ஒருத்தர்...'' எனத் தயங்கினார்.
''தெரியும் சார். சொல்லுங்க...''
''அவர் ஒய்ஃப் திடீர்னு செத்துப்போச்சு. அடுத்த மாசத்துல இருந்து இவளை அவர் கூட்டிக்கிட்டுப் போய்ட்டார். அவருக்கு பெரிய பசங்கள்லாம் இருக்கு. அதனால தனி வீடு எடுத்துவெச்சிருக்கார்...' - தங்கராஜின் குரலில் கூச்சமும் குற்றஉணர்வும் அப்பட்டமாகத் தெரிந்தன. குமார் மறுபடியும் ஏதோ ஓர் இழப்பை உணர்ந்தான்.
''அந்தாளு ஒய்ஃப் எப்படிச் செத்தாங்க?''
''சூஸைட்னு சொல்லிக்கிறாங்க...'
சிறிதுநேரம் கனத்த மௌனம் நிலவியது. அவர் பேச்சை மாற்றினார்.
''ரொம்ப நன்றி தம்பி. எனக்கு உங்களால மறுபடியும் வேலை வந்திருச்சு.''
''அப்படியா..? பரவால்லையே... சிலை செய்யிறதுக்குக் கூப்பிட்டாங்களா?''
''இல்லை... இது வேறமாதிரி வொர்க்கு. இதைப் பாருங்க.''
பின்புறம் கூட்டிப்போனார். அங்கே சின்னச் சின்னதாக மனித உறுப்புகள் சிதறிக் கிடந்தன. இதயம், நுரையீரல், மூளை, கை, கால்...
''இதெல்லாம் நான் செஞ்சது. மாணவர்களுக்குச் சொல்லித்தர்றதுக்காக ஒரு கம்பெனி இதைத் தயார் பண்ணுது. எல்லாம் ரியல் சைஸ். இதைப் பாருங்க... எல்லாமே கரெக்ட்டா ஃபிக்ஸ் பண்ற மாதிரி பண்ணிருக்கேன்.''
அவர் கட கடவென இதயம், நுரையீரல், கல்லீரல் என எல்லாவற்றையும் எடுத்துப் பொருத்தினார்.
https://ci6.googleusercontent.com/pr...ages/p144d.jpg
''பாத்தீங்களா? மனுஷனோட மார்புக்கூடு. இது மூளை. பசங்களுக்கு இதைவெச்சு சொல்லித்தர்றது ரொம்ப ஈஸி. என் வேலை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. மாசாமாசம் இனிமேல் காசு பிரச்னை இல்லை. மெள்ள மெள்ள கடனை எல்லாம் அடைக்கணும்.''
குமார் அவரை வியப்புடன் பார்த்தான்.
''என்ன பாக்குறீங்க?''
''இல்லை... நீங்க செஞ்ச புத்தர், மீனாட்சி அம்மன்... அந்த தீம் பார்க் யானை, டைனோசர்லாம்...''
''எனக்கும் அது மாதிரி செய்யத்தான் ஆசை. என்ன பண்றது தம்பி? வாழ்க்கைதான் நம்மளைப் பிச்சுப்போட்டுருச்சே. மூளை, இதயம், குடல், குந்தாணினு அக்கக்கா பிரிச்சுப்போட்டுருச்சே? என்ன பண்றது..?''
அவர், தான் இணைத்த உடல் உறுப்புகளை தனித்தனியாகப் பிரிக்கத் தொடங்கினார்!
****************
இப்போதெல்லாம் ஆனந்த விகடனைப் படிப்பதெல்லாம் கிடையாது..புரட்டுவதோடு சரி.. முப்பதுக்கும் மேலான வருடப் பழக்கம்..வாங்குவதை நிறுத்தவும் மனமில்லை.. சிறுகதைகள் அவ்வளவாகக் கவர்வதில்லை.. விகடன் மேடை மற்ற பகுதிகள் எல்லாம் கொஞ்சம் பழையதையே புதுமை என்ற பெயரில் ஜல்லிதான் அடிக்கின்றன வெகு அபூர்வமாகத் தான் நல்லகதை தென்படுவதுண்டு.
கிருஷ்ணாஜி.. தாங்கள் இட்டதை பார்த்த பிறகு வாங்கி வைத்திருந்த ப்ரிண்ட்டட் வெர்ஷனை எடுத்து இந்தக் கதையைப் படித்தேன்.. ரொம்ப ஓஹோ எனச் சொல்ல முடியாவிட்டாலும் ஓ.கே கதை. நவீன இலக்கியங்களின் தாக்கங்கள் சிறுகதைகளிலும் வந்திருப்பது தெரிகிறது. ம்ம் இந்த எடிட்டர் சொல்வது போல - அவன் செய்யற விஷயத்துக்காக்ப் பிரசுரிக்கலை.. நீ அழகா எழுதியிருக்க அதற்காகச் செய்கிறேன் - என்றபடி பிரசுரித்திருப்பார்கள் போல. வாழ்க்கை பிச்சுப் போடத்தான்செய்யும்..அதிலும் அழகியல் பார்த்து ஓடிக் கொண்டு தானிருக்க வேண்டும்..
நன்றி சின்ன கண்ணன் சார்
'யாக்கை' கதை படித்து வெளியிட்ட கருத்துகளுக்கு .