-
ramanathan kalyan
இதற்கு முன் பலமுறை பார்த்த படம் ரொம்ப நல்ல படம். ஆணால் நேற்று இரவு பார்த்தது முதல் இப்போது வரை சோகம் மீளவில்லை. நடிகர்திலகமும் நடிகையர்திலகமும் வெறும் மூன்றே மூன்று காட்சி தான் சேர்ந்து தோன்றுவார்கள். சாவித்திரி கொஞ்சம் அசந்தால் அண்ணனையே தூக்கி சாப்பிடும் அன்பான அரக்கி. ஆணால் இந்த படத்தில் SSR ம் பி(ந)டித்திருக்கிறார். சின்ன வயதில் திரையில் அண்ணனை பார்த்தால் பூ இறைப்பது கற்பூரம் காட்டுவது கைத்தட்டுவது காட்டுத்தனமாக ரசிப்பது ஒருவாரம் ஒருபடம் ஓடினால் நான்கு முறை இரவு காட்சி ...பார்ப்பது. . இப்படித்தான் எங்கள் சிவாஜி ரசனை. ஆணால் இந்த பகுதியில் ஆருயிரின் அன்பு இதயங்கள் தலைவனை பற்றி வரி வரி யாக வர்ணிக்கும் போது நான் ஏதோ கடைசி பெஞ்சு மக்கு மாணவனாக இருந்து விட்டோமோ என்று ஏங்குகிறேன். நான் சுவாசித்த என் தெய்வத்தை இனி புதிதாக வாசிக்கிறேன். ஒரு பத்துபடம் மட்டுமே பாக்கி உள்ளது என்ற இருமாப்பில் இருந்தேன். இல்லை இனிமேல் தான் பராசத்தி யில் இருந்து பிள்ளையார் சுழி போடனும்.
-
தனது முதல்படத்தை வெள்ளி விழா படமாகக் கொடுத்ததுடன்,
அதிக வெள்ளிவிழா படங்களை தமிழ் திரை உலகிற்கு கொடுத்த,
வெள்ளிவிழா நாயகன்,
தமிழ் திரை உலகின் விடி வெள்ளி
திரைஉலக நாயகன் சிவாஜி கணேசன் அவர்களின்
104 வது திரை காவியம்
திருவிளையாடல்
வெளிவந்து வசூலில் சாதனை படைத்த நாள் இன்று
திருவிளையாடல் யூலை 31 1965
http://www.filmibeat.com/img/2015/02...ajiganesan.jpg
https://encrypted-tbn0.gstatic.com/i...R9WCk_NVDjLzNA
https://d12isas74y2r2y.cloudfront.net/173/3.jpghttps://upload.wikimedia.org/wikiped...dal_Sivaji.jpg
http://s9.tinypic.com/2ir9et4_th.jpg
-
Quote:
Originally Posted by
sivaa
தனது முதல்படத்தை வெள்ளி விழா படமாகக் கொடுத்ததுடன்,
அதிக வெள்ளிவிழா படங்களை தமிழ் திரை உலகிற்கு கொடுத்த,
வெள்ளிவிழா நாயகன்,
தமிழ் திரை உலகின் விடி வெள்ளி
திரைஉலக நாயகன் சிவாஜி கணேசன் அவர்களின்
104 வது திரை காவியம்
திருவிளையாடல்
வெளிவந்து வசூலில் சாதனை படைத்த நாள் இன்று
[/SIZE]
[/COLOR]
http://s9.tinypic.com/2ir9et4_th.jpg
திருவிளையாடல்- 1965.
சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.
1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.
திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)
முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).
இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)
இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.
உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.
"இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).
இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )
நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.
கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.
இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.
இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.
முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.
அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.
அடுத்த episode love teasing பிரச்சினை.
அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.
இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.
இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )
முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.
என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.
சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.
சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)
குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).
மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.
அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.
கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.
நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?
ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.
இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.
-
natarajen pachaiappan
"கல்வியா ? செல்வமா ? வீரமா ?"
**************************************
"சரஸ்வதி சபதம்" இது படமல்ல... வாழ்க்கையின் பாடம்...ஆம் இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்ற படம்... எந்தகால சூழ்நிலைக்கும் பொறுத்தமான பாடம்...
இது போன்ற அறிவுச் சொல்லும எத்தனையோ சிவாஜியின் இணையற்ற நடிப்பால் மக்களுக்கு அறிவுரை
வழங்கிய படங்கள் 'நடிகர் திலகத்தை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.
அன்றைக்கு உச்ச கட்ட காட்சிக்கு தயாராக இருந்தது "சரஸ்வதி சபதம்"
சிவாஜி அய்யாவை யானை மிதிக்கின்ற காட்சி... ஆனால் யானை மிதிக்க கூடாது. இது கதை...
ஒரு சரிந்த மேடையில் கைகளை சங்கிலியால் பிணைத்து கட்டி படுக்க வைக்கபட்டிருக்கிறார் நடிகர் திலகம்.
அப்போது யானை மிதிக்க வருவதற்கு வருகின்ற வேளை. சிவாஜி அய்யா பேச வேண்டிய அழகு தமிழ் வீர வசனம்...
யானைக்கு பயந்தால் வசனம் மறந்து போய்விடும்.
பயம் முகத்தை காட்டி கொடுத்து விடும்.
அதெல்லாம் பராவாயில்லை டப் செய்யும் போது சமாளித்துக் கொள்ளலாம். யானை மிதிக்கும் போது
உண்மையிலே சிவாஜியை மிதித்து விட்டால்... ஒரு மாபெரும் கலைஞனின் கதி இதுதானா ?
ஆகவே இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அய்யா டூப் போட்டுக்கொள்ளலாம் என்று சிவாஜிஅய்யாவிடம்... சொல்ல அவர் ஒத்துக்கொள்ள மறுத்தார்.
காட்சி இயல்பாய் அமையாது... "நானே டூப் இன்றி நடிக்கிறேன்" என்றார் அய்யன் சிவாஜி.
யானை வந்தது... காலை மிதிக்க தூக்கியது கேமரா இயங்கிக் கொண்டேயிருந்தது. இயக்குனருக்கு
முகம் இறுகியது... ஒவ்வொருவருக்கும் பதட்டமாயிருந்தது...
பதட்டபடாதவர் ஒருவர் அங்கிருந்தார் என்று சொன்னால், அது அய்யன் சிவாஜி மட்டுமே...
அவர் சிவாஜியாக இல்லை. பாத்திரத்தில் ஒன்றிணைந்திருந்தார். நில் என்றார்... யானை நின்றது. திரும்பிசெல் என்றார்... யானை திரும்பி சென்றது...
எல்லாருக்கும் ஆச்சரியம். இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அவர்களுக்கு உயிர்வந்தது.
அய்யனே... கணேசன்! அந்த கணேசன் என்ன செய்வான் அவரை...? அவரின் குரலில் மனிதர்கள் மட்டும் மயங்குவதில்லை.... விலங்குகளும் விதி விலக்கில்லை.
சரி என்ன வசனங்களை நம் அய்யன் பேசினார் ?
அதையும் கொஞ்சம் பார்ப்போமே...
"அவிழ்த்து விடுங்கள் பட்டத்து யானையை... வில்லா ? எனது சொல்லா ? எதுவென்று பார்த்து விடுகிறேன்."
(விநாயகர் அவருக்கு காட்சியளித்து
ஆசிர்வதிக்கின்றார்)
"விநாயகப் பெருமானே.... பிரணவத்தின் பீடமே...
ஞானத்தின் பரம்பொருளே... வேண்டும் வரம் தரும்
வேலவனின் தமையனே... வேத நாயகனின் தலைமகனே... என் அன்னை கொடுத்த கன்னித் தமிழால்... உன்னை வருக வருகவென வரவேற்கின்றேன்.
வணக்கம் !
எழுத பாரதத்திற்கு நீர் பிறவி எடுத்தது உண்மையானால்...
அந்த மாபெரும் காவியம் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக புலமைக்கு முதலிடம் கொடுத்து நீரே சுவடி எடுத்து.... எழுத்தாணியாய் உன் கொம்பை ஒடித்து... பாரதத்தை ஏட்டினிலே பதித்தது உண்மையானால்....
ஆற்று நீரை கமண்டலத்தில் அடக்கி அகத்திய முனிவன் எடுத்துச் செல்கிறான் என்பதை அறிந்து.... காக்கை வடிவெடுத்து கமண்டலத்து நீரை கவிழ்த்து... அதன் காரணமாக காவேரி ஆறு பரந்து ஓடுவது உண்மையானால்...
அன்னை தந்தையே உலகம் என்பது மற்றவருக்கு எடுத்துக்காட்ட... அவர்களையே வலம் வந்து நீரே ஞானப்பழம் பெற்றது உறுதியானால்...
கல்வி கற்ற சான்றோர்கள் முதலில் உம்மை நினைத்து... உனக்கு காப்பு செய்யுள் இயற்றிய பின்பே... மற்றவைகளை எழுதுவது உறுதியானால்...
தமிழ் மகளாம் வள்ளியை தம்பி முருகனுக்கு மணமுடிக்க... நீரே யானை வடிவில் வந்து நீரே திருமணத்தை நடத்திவைத்தது நிச்சயமானால்....
ஞானத்தின் பீடத்திலே அமர்ந்து ஓம் என்ற பிரவணத்தின் வடிவத்தில் நீரே என்பது திண்ணமானால்...
பாலும் தேனும் பாகும் பருப்பும் இவை நாலையும் தந்த தமிழ் மூதாட்டி ஔவைக்கு நீரே தங்க தமிழ் மூன்றையும் தந்தது சத்தியமானால்...
நில் ! என் கல்வி மீது ஆணையிட்டு கூறுகிறேன். வந்த வழியே பின்னுக்கு செல் !"
( அய்யன் கணேசன் வசனத்தை கேட்டு ஆனை கணேசன் திரும்பாமலே பின்னுக்கு சென்றது)
இன்றைய தினத்திலும் மெய் சிலிர்க்கும் காட்சிகளை இவரை தவிர வேறு ஒருவர் நிகழ்த்தி காட்ட முடியுமா? வீரம் என்பது அவருடன் பிறந்தது. விவேகம் என்பது
அவர் மனதில் நிறைந்தது. ஆச்சரியமான நடிகர் மடுமல்ல, ஆச்சரியப்பட வைக்கும் தன்னிகரில்லா மாமனிதன்.
வாழ்க அய்யன் சிவாஜி்!
அன்புடன்....
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f0&oe=5A30B0C1
-
Sekar Parasuram
"மக்கள் செல்வாக்கு"
கண் மூடித்தனமாக விவாதிக்கும் செய்தி சேனல் விவாதிகள் அறிந்து கொள்ள,
எந்த விதத்திலும் குறைந்தவர் கிடையாது எங்கள் நடிகர் திலகம்,
.................. வாக்குச் சாவடிகளை கைப்பற்றும் வித்தையை அறிந்து வைத்து இருந்தார்கள்,
... நடிகர்திலகத்துக்கு அமைந்த ரசிகர்கள் வாக்குச் சாவடிக்கு வருவதையே தவிர்த்து வந்தார்கள்
இது தான் வரலாறு
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c8&oe=59F0A855
-
திரை உலக அதிசயம் செவேலியர்
சிவாஜி கணேசனின் ஆகஸ்ட் மாத வெளியீடுகள் https://encrypted-tbn0.gstatic.com/i...UZ7mdSuiUraj-A
1) குங்குமம் 02 1963
2)மன்னவன் வந்தானடி 02 1975
3)மர்ம வீரன் 03 1956
4)மக்கள ராஜ்ஜிய (கன்னடம்) 05 1960
3)நிறைகுடம் 08 1969
4)நான் வாழவைப்பேன் 10 1979
5)ஜீவன தீராலு 12 1977
6)சுமங்கலி 12 1983
7)மூன்று தெய்வங்கள் 14 1971
8)அக்கி புத்துரு (தெலுங்கு) 14 1987
9)முதல் குரல் 14 1992
10)சாரங்கதாரா 15 1958
11)ராமன் எத்தகை ராமனடி 15 1970 https://i.ytimg.com/vi/cLqkI1ijrjY/hqdefault.jpg
12)எழுதாத சட்டங்கள் 15 1984
13)முதல் மரியாதை 15 1985
14)மகா கவி காளிதாஸ் 19 1966
15)ஒரு யாத்திரா மொழி (மலையாளம்) 19 1996
16)மரகதம் 21 1959http://media-images.mio.to/various_a...29/Art-350.jpg
17)என் மகன் 21 1974
18) மாடி வீட்டு ஏழை 22 1984
19)மருதநாட்டு வீரன் 24 1961
20)கூண்டுக்கிளி 26 1954
21) தூக்குத் தூக்கி 26 1954
22)மங்கையர் திலகம் 26 1955
23)தவப்புதல்வன் 26 1972
24)தாயே உனக்காக (கெளரவ தோற்றம்) 28 1966
25)ஜல்லிக்கட்டு 28 1987
26)கிருஷ்ணன் வந்தான் 28 1987
27)என் ஆசை ராசாவே 28 1998
-
-
-
Sundar Rajan
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...cf&oe=5A341F87
Sundar Rajan அன்பு இதயங்களே,
வரும் ஞாயிறு 6.08.2017 அன்று திருச்சியில், திருச்சி சிவாஜி பிலிம்ஸ் கிளப் சார்பில் வழங்கப்படும் சிவாஜி விருதினைப் பெறும் நமது மக்கள்தலைவர் சிவாஜ...ி அவர்களின் புகழ்பாடும் அன்பு இதயங்கள் சுப்பு, ஆதவன் ரவி அவர்களை வாழ்த்துகிறேன்.
சென்னையைச் சேர்ந்த சுப்பு அவர்கள்,
சென்னையில் நமது நடிகர்திலகத்தின் திரையிடுவதில் இடைவெளி ஏற்பட்ட போது, தானே படத்தை வாங்கி திரையிட்டு, நடிகர்திலகத்தின் படங்கள் வசூலை வாரி குவிக்கும் என்று உணர்த்தியவர்.
மேலும் திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற பல மாவட்டங்களில் நமது நடிகர்திலகத்தின் படங்களை வெளியிட்டு நமது ரசிர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருப்பவர்.
சிவகங்கையைச் சேர்ந்த
ஆதவன் ரவி அவர்கள், தனது கவித்திறமையால் நமது மக்கள்தலைவரின் புகழ் பாடி வருபவர்.
நமது நடிகர்திலகத்தைப் பற்றி இவர் எழுதும் கவிதையை வாழ்த்த வார்த்தைகளே இல்லை.
நடிகர்திலகத்தின் விழா எங்கு நடந்தாலும் அங்கு முதல் ஆளாக இருப்பவர் ஆதவன் ரவி அவர்கள். இவரை இனி சிவாஜி கவி என்றே அழைக்கலாம்.
சிவாஜி விருது கொடுப்பதற்கு இவர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்த திருச்சி சிவாஜி பிலிம்ஸ் கிளப் - அண்ணாதுரை அவர்களுக்கு
நமது சிவாஜிகணேசன்.இன் சார்பில்
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
Sundar Rajan
அன்பு இதயங்களே,
சினிமா 720 யூ டியூப் சேனலில் தலைவருடன் நான் நிகழ்ச்சியில் என்னுடைய பேட்டி வெளி வந்துள்ளது.
எனக்கு தெரிந்த அளவிலும்,...
நான் நேசித்த அளவிலும், பகிர்ந்துள்ளேன்.
தவறேதும் இருப்பின் மன்னித்து விடுங்கள்.
கடைக்கோடி ரசிகனுக்கு இந்த வாய்ப்பை கொடுத்த நான் வணங்கும் தெய்வம் மக்கள்தலைவர் சிவாஜி அவர்களுக்கும், சினமா 720 சேனலுக்கும் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
இதயங்களே, வீடியோவைப் பார்த்து விட்டு தங்கள் கருத்தைக் கூறவும்.
<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/QC0dSkqVLoM" frameborder="0" allowfullscreen></iframe>
https://external.fybz1-1.fna.fbcdn.n...DFMU_ta6EgZoZs
SIVAJI GANESAN | தலைவனுடன் நான் | Cinema720
Watch & Share.... Like & Comment #IAmWithUOviya To Promote Your Videos Contact : cinemaa720@gmail.com For Latest Hot Cine Updated Send "Hi" Whatsapp to +9190...
youtube.com
-
-
-
-
கலை உலக சக்கரவர்த்தி நடிகர் திலகம்
சிவாஜி கணேசனின் 90 வது திரைக்காவியம்
குங்குமம் வெளிவந்த நாள் இன்று
குங்குமம் 02 ஆகஸ்ட் 1963
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...df&oe=59C41B82
-
தமிழ் திரைஉலக வசூல் சக்கரவர்த்தி,
கலைக்குரிசில் ,செவேலியர்
சிவாஜி கணேசனின் 176 வது திரைக்காவியம்
மன்னவன் வந்தானடி வெளியான நாள் இன்று
மன்னவன் வந்தானடி 02 ஆகஸ்ட் 1975
https://upload.wikimedia.org/wikiped...anthaanadi.jpg
http://ecx.images-amazon.com/images/...OL._SY445_.jpg
-
-
Sekar Parasuram
நடிகர் திலகம் நமது தமிழக முன்னேற்ற முன்னணி கொடியை ஏற்றும் அறிய காட்சி,
வேறு எந்த தலைவர்களாவது தாம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அருகே வேறு கட்சிகளின் கொடி, தோரணங்களை அனுமதிப்பது உண்டா?
இது தான் நடிகர் திலகம் பண்பு
அறிய படம் உதவி:- திரு. ஆர்.சி. பிரபு அவர்கள்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...04&oe=59F0C551
-
ramakrishnan .s
கும்பகோணத்தில் ரசிக்ர் மன்ற மாநாடு இயக்குநர் திலகம் கே எஸ் ஜி பேசுகிறார் மேடை யில் நடிக்க தெரியாத இருவர்உண்டு ஒருவர் பெருந்தலைவர் மற்றவர் நடிகர் திலகம் மேடையில இலவச திருமணம் நடந்தது வாழ்த்திய நடிகர் திலகததின் செயதி இருட்டடிப்பு காரணம் அன்றைய ஆடசி
-
Ganapathy Ram
அண்ணே மாற்றுக்கட்சி சார்ந்த ஒருவர் கூறியது. "சிவாஜி ரசிகர்கள் எல்லாம் மெழுகு வர்த்தி போன்றவர்கள். ஆதி முதல் இன்றுவரை எந்த எதிர்பார்ப்பும் இன்றி தங்களை வருத்தி மற்றவர்களுக்கு நன்மை செய்து விழா எடுக்கின்றனர்"
-
-
murali srinivasan
குங்குமம் - Small Recap
02.08.1963 அன்று வெளியாகி இன்று (02.08.2017) 54 வருடங்களை கடந்து போகும் குங்குமம் பற்றியும் அதை சிறு வயதில் பார்த்தது அதன் பிறகு மறு வெளியீட்டில் பார்த்தது பற்றியும் ஒரு சின்ன recap.
குங்குமம் மோகன் ஆர்ட்ஸ் மோகன் தயாரித்த படம். பாசமலர் என்ற காவியத்திற்கு பிறகு ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்த படம். பாசமலர் படத்தை M .R சந்தானத்துடன் இணைந்து தயாரித்த மோகன் இந்தப் படத்தை தனியாக தயாரித்தார். பாச மலர் யூனிட் முற்றிலுமாக மாறியது. நடிகர் திலகம் தவிர அனைத்து கலைஞர்களும் ஏன் தொழில்நுட்ப கலைஞர்களும் கூட மாறி விட்டனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால் படம் தணிக்கையில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க கதையின் முக்கிய திருப்பத்தினால் தணிக்கை அதிகாரிகள் காட்சிகளில் போட்ட கத்திரிகள் அதனால் படத்தின் கோர்வையான திரைக்கதையில் உண்டான jump, ரீ ஷூட் பண்ணுவதற்கும் வழியில்லாமல் ஜெய்பூரில் கர்ணன் படத்திற்காக இரண்டு மாதங்களுக்கு மேலாக நடிகர் திலகம் சென்று விட்டது பற்றியெல்லாம் நாம் இங்கே பேசியிருக்கிறோம். படத்தின் வெட்டப்பட்ட காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தால் குங்குமம் பெரிய வெற்றி பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த பிரச்சனை போதாதென்று வழக்கம் போல் நமது படங்களே முன்னும் பின்னும் அணிவகுத்து வந்த நிலைமை. 1963 ஜூலை 12 அன்று பார் மகளே பார் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. 20 நாட்கள் இடைவெளியில் ஆகஸ்ட் 2 அன்று குங்குமம் வெளியாகிறது. குங்குமம் வெளியாகி ஒரு மாத காலத்தில் 1963 செப் 14 அன்று இரத்த திலகம் வெளியாகிறது. இரத்த திலகம் வெளியான் 6 நாட்களிலேயே செப் 20 அன்று கல்யாணியின் கணவன் வெளியாகிறது. ஆக இரண்டு மாத இடைவெளியில் ஒரே ஹீரோவின் 4 படங்கள் வெளியானது என்று சொன்னால் கூடுதலாக ஒன்றும் சொல்லாமலே அனைவருக்கும் நிலைமை புரியும்.
குங்குமம் முதல் வெளியீட்டில் மதுரையில் பரமேஸ்வரி திரையரங்கில் வெளியானது. பொதுவாகவே ஆங்கிலப் படங்கள் மட்டுமே வெளியாகும் அரங்கம். அதுவும் அன்றைய காலகட்டத்தில் நகரை விட்டு சற்றே தள்ளி அமைந்திருக்கின்றது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த அரங்கம் கூட.[அந்த படம் வெளியாகி பத்து வருடத்துக்குள் அந்த ஏரியா பக்கா டவுன் ஆகிப் போனது வேறு விஷயம். வெகு சிறிய வயதில் தாய் மற்றும் உறவினர்களுடன் படம் பார்த்தது ஒரு சின்ன தீற்றலாய் நினைவு அடுக்குகளில். குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் பாடல் காட்சி மட்டும் நினைவில் இருந்தது. விவரம் தெரிந்த பிறகு படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில் படத்தின் பாடல்கள் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டன.
1979 ஆகஸ்ட் 10 வெள்ளியன்று நான் வாழ வைப்பேன் வெளியாகிறது. மதுரையில் ஸ்ரீதேவியில் ரிலீஸ். எத்தனையோ மறு வெளியீடு கண்ட குங்குமம் அவற்றில் ஒன்றாக அதே நாளன்று மதுரை அலங்காரில் வெளியானது. ஆகஸ்ட் 12 ஞாயிறு மாலைக்காட்சி அலங்காருக்கு சில நண்பர்களாக சென்றோம். அங்கே ஸ்ரீதேவியில் புது படம் வெளியாகியும் கூட இங்கே சரியான கூட்டம். நான் வாழ வைப்பேன் மாலை 5.30க்கே House full. அது மட்டுமா அதே நேரத்தில் வெற்றிகரமான 4வது வாரமாக இமயம் மதுரை சென்ட்ரலில் ஓடிக் கொண்டிருக்கிறது. சென்ட்ரல் தியேட்டருக்கு போய் கூட்டம் எப்படி இருக்கிறது என்று பார்க்கிறோம். நல்ல கூட்டம். பிறகு அலங்காருக்கு போகிறோம்.[இரவு திரும்பி வரும்போது இமயம் அன்றைய மாலைக் காட்சி ஹவுஸ்புல் என்ற செய்தி கிடைத்தது. 79 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து இமயத்திற்காக மாறிக் கொடுத்த நல்லதொரு குடும்பம் ஷிப்ட் செய்யப்பட்ட திரையரங்கமான வெள்ளைக்கண்ணுவில் [அல்லது மிட்லண்ட்?] 100 நாட்களை நிறைவு செய்கிறது. அந்த ஏரியாவிலிருந்து குங்குமம் பார்க்க வந்த நண்பன் அங்கேயும் நல்ல கூட்டம் என்கிறான். எல்லாவற்றிருக்கும் மேலாக அன்றைய தினம் [ஆகஸ்ட் 12,1979] திரிசூலம் 198-வது நாளாக மதுரை சிந்தாமணியில் ஓடிக் கொண்டிருக்கிறது. அலங்கார போவதற்கு முன் அங்கேயும் போய் பார்த்தோம். 198-வது நாள் என்று நம்பவே முடியவில்லை. அங்கேயும் ஹவுஸ்புல் போர்டு விழுந்தது என்பதை அலங்காருக்கு தாமதமாக வந்த ஒருவர் சொன்னார். அந்த சூழலிலும் குங்குமம் ஹவுஸ் புல். எத்தனை நடிகர் திலகத்தின் படங்கள் எத்தனை அரங்குகளில் திரையிடப்பட்டாலும் அவை அனைத்தும் மக்கள் ஆதரவோடு வெற்றி நடை போடுவது பல்லாண்டுகளாக நாம் பார்த்து வருவதுதானே! அதுதான் குங்குமம் படத்திற்கும் நடந்தது.
படத்தின்ப கதை பற்றி இன்ன பிற விவரங்களை பற்றி அண்மையில் ஓரிரண்டு பதிவுகளில் எழுதிய காரணத்தினால் படத்திற்கு உள்ளே செல்ல போவதில்லை. பாடல்களை பற்றி மட்டும் அதற்கு அன்று கிடைத்த வரவேற்பு பற்றி மட்டும் சொல்கிறேன். டைட்டில் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன். 1962 மார்ச் தொடங்கி 3 மாதங்கள் நடிகர் திலகம் அமெரிக்க நாட்டின் அழைப்பையேற்று கலாச்சார தூதுவராக சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த படத்தின் டைட்டில் ஓடும்போது அதற்கு பின்னணியாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.
பூந்தோட்ட காவல்காரா முதல் பாடல். முதலில் விஜயகுமாரி பாடும்போது அமைதியாகயிருந்த அரங்கம் முறைப்பெண்ணை தேடி நாயகன் தோட்டத்தில் நுழைந்து பருத்திக்காட்டில் என்று ஆரம்பிக்கும்போது இங்கே ஆரம்பித்தது அலப்பறை. அதிலும் ஒரு நடை நடப்பார் நடிகர் திலகம். அரங்கம் அதிர ஆரவார ஓசைகள்
படத்தின் பாடல்கள் மனதில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டன என்று சொன்னேன். அதிலும் தூங்காத கண்ணின்று ஒன்று பாடல் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. சிறு வயது முதலே மனதில் இனம் புரியாத இன்பத்தை விதைத்த பாடல் இது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளி, கல்லூரி காலங்களில் மிகவும் ரம்மியமாக மனதிற்கு நெருக்கமான பாடலாக மாறிப்போனது. இந்த பாடல் எப்போது வரும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். பாடலை அந்த ஸ்டைலை ரசித்துப் பார்த்தேன். ஒருவர் பாட ஒருவர் பதில் சொல்ல என்ற முறையில் அமைந்த பாடல். பாடல் காட்சியின்போது உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள். அதிலும் அந்த அறை கதவை திறந்துக் கொண்டு ஸ்டைல் நடை நடந்து முற்றாத இரவொன்றில் என்று வாயசைத்தபோது அரங்கமே இரண்டுபட்டதை அந்த சந்தோஷத்தை உடல் சிலிர்த்ததை 38 வருடங்களுக்கு பிறகு இப்போது எழுதும்போது கூட அப்படியே நினைவுக்கு கொண்டு வர முடிகிறது.பாடலின் சரணங்களின் இடையில் வரும் நாகேஷ் மனோரமா ஏ கருணாநிதி தோன்றும் காட்சிகளை தவிர்த்திருந்தால் பாடல் காட்சி இன்னமும் பெரிய காவிய அந்தஸ்து பெற்றிருக்கும்.
சின்னஞ்சிறிய வண்ணப்பறவை பாடல் அடுத்த அலப்பறை. மேடையில் தடுமாறும் சாரதாவிற்கு கைகொடுக்க (குரல் கொடுக்க?) நடிகர் திலகம் இருக்கையிலிருந்து எழுந்து போவதில் தொடங்கிய கைதட்டல் மென்மேலும் பெரிதானது. அதிலும் நடிகர் திலகம் ஸ்வரப்ரஸ்தாரங்களை ஆலாபனை செய்யும்போது தியேட்டருக்குள்ளே கோடையிடி. சின்ன வயதில் பார்த்தது நினைவில் இல்லாததனால் இந்தக் காட்சியை பிரமித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கடைசியில் வந்த பாடலுக்கு என்ன வரவேற்பு தெரியுமா?
திரை மூடிய சிலை நான்
துன்ப சிறையில் மலர்ந்த மலர் நான்
என்ற வரிகளுக்கும்
நானே எனக்கு பகையானேன்
என் நாடகத்தில் நான் திரை ஆனேன்
தேனே உனக்கு புரியாது அந்த
தெய்வம் வராமல் விளங்காது
போன்ற வரிகளுக்கெல்லாம் பயங்கர அமர்க்களம்தான்!
கடற்கரை மணலில் நடந்துக்கொண்டே [என்ன ஸ்டைல்!] நடிகர் திலகம் பாடும்
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
பாடலைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
இந்த படத்திற்கு மாமாவின் இசை ஒரு மிகப் பெரிய பலம். இந்தப் படம் மட்டுமல்ல. அந்த 1963-ம் ஆண்டு வெளியான இருவர் உள்ளம், குலமகள் ராதை, குங்குமம் மற்றும் அன்னை இல்லம் போன்ற மாமா இசையமைத்த நடிகர் திலகத்தின் அனைத்து படங்களிலும் மாமா மகாதேவன் தூள் கிளப்பியிருப்பார். இந்த 1963 படங்களை பற்றி சொல்லும்போது ஒரு சுவையான விஷயம் நினைவிற்கு வருகிறது. சற்று கவனித்து பார்த்தோமென்றால் குங்குமமும் சரி, அன்னை இல்லமும் சரி கிட்டத்தட்ட ஒரே மாதிரி கதையமைப்பு கொண்ட படங்களாகவே இருக்கும். (கதையின் முக்கிய முடிச்சு செய்யாத கொலையை செய்ததாக பழி சாட்டப்பட்டும் தந்தை பாத்திரம்) அதிலும் நடிகர் திலகம், ரங்காராவ், எம்.வி.ராஜம்மா ஆகியோர் இரண்டு படங்களிலும் ஒரே மாதிரி பாத்திரங்களை ஏற்றிருப்பார்கள். இதில் மற்றொரு சுவாரஸ்யம் பாச மலர் படத்தை ராஜாமணி பிக்சர்ஸ் தயாரித்தபோது மோகன் ஆர்ட்ஸ் மோகனும் எம்.ஆர். சந்தானமும் சேர்ந்து தயாரித்தனர். அவர்கள் இருவரும் பிரிந்து தனியாக படம் தயாரித்தபோது மோகன் குங்குமத்தை எடுக்கிறார். சந்தானம் அன்னை இல்லத்தை எடுக்கிறார். பிரிந்தாலும் ஒரே மாதிரி கதையை எடுத்தார்கள் என்பதுதான் சுவாரஸ்யமே! ஆனால் அன்னை இல்லம் வெற்றி பெற்று 100 நாட்களை கடந்தது. குங்குமமோ சென்சார் புண்ணியத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இயக்குனர் நடிகர் ஆர். சுந்தர்ராஜன் இந்தப் தூங்காத கண்ணின்று ஒன்று பாடலின் பரம ரசிகர். எந்தளவிற்கு என்றால் தான் இயக்கிய ஒரு படத்திற்கு தூங்காத கண்ணின்று ஒன்று என்று பெயர் சூட்டுமளவிற்கு! அவரது இயக்கத்தில் பிரபு முதன்முதலாக காலையும் நீயே மாலையும் நீயே படத்தில் நடித்தபோது கல்லூரி மாணவனான பிரபுவும் ரேகாவும் கல்லூரி விழாவில் மேடையில் இந்த தூங்காத கண்ணின்று ஒன்று பாடலை பாடுவது போல் காட்சி அமைக்குமளவிற்கு!
பல சுவையான மலரும் நினைவுகளை அசை போட வாய்பளித்தற்கு நன்றி!
அன்புடன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0e&oe=59FFD871
-
bala krishnan
35 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறேன்.
சரியாக வருடம் ஞாபகம் இல்லை குங்குமம் படம் ரீரிலீஸ் செய்து மூன்று வாரங்கள் ஓடியது
அது அப்போது பெரிய சாதனையாகப் பேசப்பட்டது.
அதே போல்தான் இருவர் உள்ளம் படமும் கோவையில் மூன்று வாரங்கள் ஓடியது.
அப்போதைய காலகட்டத்தில் ரீரிலீஸ் படங்கள் ஒருவாரம் மட்டுமே ஓடும்.
தலைவரின் சாதனைகள் எண்ணிலிடங்காதது.
-
சிவாஜி மணிமண்டபமும், சிலையும் தனித்தனியாக இருக்க வேண்டும் - திருநாவுக்கரசர்
http://cms-img.puthiyathalaimurai.co...x400/25919.jpg
நடிகர் சிவாஜி கணேசன் சிலையை, சென்னை கடற்கரை சாலையிலேயே மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களை போன்று, சிவாஜி கணேசனுக்கும், மணிமண்டபமும், சிலையும் தனித்தனியாக இருக்க வேண்டும் என்பதே பொருத்தமானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். கடற்கரை சாலையில் அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் அதே சாலையில் நிறுவப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், நீதிமன்ற உத்தரவி*ன் அடிப்படையில் சிவாஜி சிலையை மாற்றியமைக்கும்போது, சென்னை கடற்கரை சாலையிலேயே காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் நடுவில் அமைக்க வேண்டும் என தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிய தலைமுறை
-
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ba&oe=59F454A7
Sundar Rajan
அன்பிற்குரிய சிவாஜியவாதிகளே,
30.07.2017 ஞாயிறு தந்தி டிவியில் கமல் அவர்கள் பங்குபெற்ற கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
கமல் பங்குபெறும் எந்த நிகழ்ச்...சியானாலும் அவசியம் பார்த்து விடுவேன். ஏனென்றால், அதில் நமது தலைவர் சிவாஜி அவர்களைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசி விடுவார். ஆனால் இது அவர் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் இதில் நமது தலைவரைப் பற்றி பேசமாட்டார் என்று நினைத்துப் பார்க்கவில்லை.
எனது பையன் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு, கமல் அவர்கள் இரண்டு முறை சிவாஜியைப் பற்றி பேசினார், என்று கூறியவுடன் யூ டியூப்பில் நிகழ்ச்சியைப் பார்த்தேன்.
அதில் இரண்டு முறை நமது தலைவரைப் பற்றி கமல் அவர்கள் பேசினார்.
என்னை மிரட்டினால் நான் யார் காலிலும் விழமாட்டேன், எனக்கு மூத்தவர்களிடம் நான் காலில் விழுவேன். சிவாஜி, எம்.ஜி.ஆர் மேலும் மூத்தவர்கள் காலில் நான் விழுந்து வணங்கியிருக்கிறேன் என்று சொன்னார். இதில் அவர் முதலில் சொன்னது நமது நடிகர்திலகத்தை தான்.
அதே போல் படிக்காமல் உலக அளவில் பெயர் பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்ற போது அதற்கும் நமது தலைவர் சிவாஜி அவர்களைத் தான் உதாரணப்படுத்தினார்.
அதிலும் அவர் சிவாஜி என்ற வார்த்தையை சொல்லும் போது அவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி இருந்ததைப் பார்த்தேன்.
அன்பு இதயங்களே,
நமது தலைவர் சிவாஜி அவர்களைப் பற்றி நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் யார் பேசினாலும் சரி, அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
சென்னையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்று ஒரு வார்த்தையை தாங்கள் பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் கமல் சார்.
-
Gopalakrishnan Sundararaman
நடிகர்திலகத்தின் சாதனை வருடங்கள் பல 1952 இல் தொடங்கி 2000 வரை அவர் வருடங்களே. அதில் மறக்க முடியாத வருடமாக நான் நினைக்கும் வருடம் 1969.
இந்த வருடம் அவர் படங்களின் variety சொல்லி மாளாதது.
அன்பளிப்பு,குருதட்சிணை - கிராமிய படங்கள்.
... தங்க சுரங்கம்- jamebond படம்.
சிவந்த மண் - Action படம் .
காவல் தெய்வம்- ரியலிச படம்.
தெய்வமகன்- குடும்ப செண்டிமெண்ட் படம்.
திருடன்- ஆக்க்ஷன் -செண்டிமெண்ட் கலந்த Anti -hero படம்.
நிறைகுடம்- காமெடி கலந்த செண்டிமெண்ட் .
அஞ்சல் பெட்டி 520- முழு நீள காமெடி.
கிட்டத்தட்ட 9 கதாநாயகிகளுடன் நடித்தார்.
அன்பளிப்பு, அஞ்சல் பெட்டி 520 - சரோஜாதேவி.
தங்கசுரங்கம்- பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா.
குருதட்சிணை - பத்மினி,ஜெயலலிதா.
தெய்வ மகன்- பண்டரி பாய்,ஜெயலலிதா.
திருடன்- கே.ஆர்.விஜயா.
நிறைகுடம்- வாணிஸ்ரீ.
சிவந்த மண் -காஞ்சனா.
7 இயக்குனர்களுடன் பணியாற்றினார்.
ஏ.சி.திருலோக சந்தர்- அன்பளிப்பு,தெய்வ மகன்,திருடன்.
ராமண்ணா- தங்க சுரங்கம்.
ஏ.பீ.நாகராஜன்- குருதட்சினை.
டி.என்.பாலு -அஞ்சல் பெட்டி 520 (அறிமுகம்)
முக்தா ஸ்ரீனிவாசன்- நிறை குடம் (முதல் படம் நடிகர்திலகத்துடன்)
கே. விஜயன் - காவல் தெய்வம்( முதல் படம் நடிகர்திலகத்துடன்)
ஸ்ரீதர் - சிவந்த மண் .
7 இசையமைப்பாளர்களுடன் பணியாற்றினார்.
அன்பளிப்பு,தெய்வ மகன்,திருடன்,சிவந்த மண் - எம்.எஸ்.விஸ்வநாதன்.
தங்க சுரங்கம்- டி.கே.ராமமூர்த்தி (ஒரே படம்)
குருதட்சினை- புகழேந்தி(ஒரே படம்),கே.வீ.மகாதேவன்.(மேற்பார்வை)
காவல் தெய்வம்- தேவ ராஜன் (ஒரே படம்)
அஞ்சல் பெட்டி 520 - கோவர்தன் (ஒரே படம்)
நிறை குடம்- வீ.குமார் (ஒரே படம்)
-
படுபாவிகளா!
கலைமகளின் விலையில்லாக் கலைமகன்
தமிழர்களின் தலைமகன் சிலையை
நிலையில்லாமல் செய்து விட்டீர்களேடா
நிர்மூலம் ஆக்கி விட்டீர்களேடா
சிவன் சொத்து குலநாசமடா
சிவனாகவே எங்களுடன் வாழ்ந்த
சிம்மத்தின் சிலையில் கைவைத்து விட்டீர்களேடா
விவரம் புரியாமல் விளையாடி விட்டீர்களேடா
மெரினா மங்கையை விதவையாகி விட்டீர்களேடா
என்னடா லாபம் கண்டீர்கள்?
தேன் கூட்டில் கை வைத்து விட்டீர்களேடா
தேள் கொடுக்கோடு விளையாடி விட்டீர்களேடா
என்னடா பாவம் செய்தான் அவன்!
என்னடா பாவம் செய்தோம் நாங்கள்
எத்துணை கெளரவம் வாய்ந்தவனின்
சிலையில் கை வைத்து விட்டீர்களேடா
அவன் உயிருடன் இருந்தபோதுதான் மதிக்கவில்லை
சிலையாய் நின்ற பின்னும் மிதித்து விட்டீர்களேடா
இனிமேல்தாண்டா உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும்
ஊதப் போகிறது சாவின் சங்கு
அனுபவிப்பீர்களடா அனுபவிப்பீர்கள்
எழுதி வைத்துக் கொள்ளுங்களடா எத்தர்களே
எண்ணி மூன்றே மாதத்திற்குள் பூண்டோடு
அழிந்து போகிறீர்களா இல்லையா பாருங்களடா
அன்னை பவானி முன் என் தெய்வம் கர்ஜித்ததே
அது போலவே சாபமிடுகிறேனடா
அழியட்டும் உங்கள் கோட்டைகள்
இடியட்டும் உங்கள் வீட்டு மதிற்சுவர்கள்
சிலை தொட்ட கைகள் புழு பூக்குமடா
குஷ்டம் பிடிக்குமடா புற்று அண்டுமடா
மண்ணாகிப் போவீர்களடா எங்கள்
மனம் நொந்த சாபமடா
யாரை நம்பி நான் பொறந்தேன்
இது எங்கள் தெய்வம் சொன்னதடா
அதையேதானாடா சொல்கிறோம் நாங்களுமடா
எங்கள் காலம் வெல்லுமடா
பணியில் இருந்த போது செய்தி கேட்டு
பதறிப் போனோமடா துடித்து வெந்தோமடா
ஆனால் துவளவில்லையடா உங்கள்
துன்பம் காணாமல் போக மாட்டோமடா
லட்சம் ரசிகர்களடா இனி கோடியாகுமடா
உங்கள் ஆட்சியை மாற்றுமடா
உங்கள் அகந்தையை அழிக்குமடா
உங்கள் முகத்திரையைக் கிழிக்குமடா
தமிழனைத் தலை குனிய வைக்கும்
தரம் கெட்ட தமிழர்களே
நீங்கள் தமிழ்த் தாய் வயிற்றில் தான் பிறந்தீர்களா
தமிழ்ப் பால் குடித்துத்தான் வளர்ந்தீர்களா
இதுவரை உங்கள் ராஜ்ஜியமடா
இனி எங்கள் ராஜ்ஜியமடா
நீங்கள் இனி படப் போகும் பாட்டை
இப்போதே இனிக்க கற்பனையாய் தெரியுதடா
அழிந்தீர்களடா ஒழிந்தீர்களடா கை வைத்த
பாவம் இந்நொடி முதல் ஆரம்பமடா
எங்கள் ஆட்டமும் இந்நொடி முதல் ஆரம்பமடா
கடவுள் ஒருவன் இருக்கிறானடா
எங்கள் கணேசன் வடிவில்.
-
நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கும்போது இவ்வளவு அவசர அவசரமாக தமிழ் சமுதாயத்தின் அடையாள சின்னம் சிவாஜி சிலையை அதுவும் கலைஞர் அவர்கள் நிறுவிநார் என்ற ஒரே காரணத்துக்காக சிலையை எடுத்திருக்கிறார்கள் -சிலையை எடுக்க வேண்டும் என்று கூறியதாலேயே உங்கள் கட்சியின் தலைவரை இழந்தீர்கள் இருந்தும் மறக்காமல் சிலையை அகற்றி உள்ளீர்கள் - அரசியல் வரலாற்றில் குற்றவாளி முதல்வர் என்ற சாதனை படைத்த ஒரே கட்சி mgr அவர்கள் ஆரம்பித்த அதிமுக இன்று இளைய சமுதாயத்தால் எவ்வளவு தூற்றுதலுக்கு ஆளாகி அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது உலகம் அறியும் --சிவாஜி சிலையை அகற்றியதால் உங்கள் கட்சியின் இறுதி காலம் இன்னும் சில நாட்கள் தான் என்பதை உலகம் உணர்த்தும் வந்தாரை வாழ வைத்த தமிழகத்தில் தமிழன் தமிழனை கேவலப்படுத்திய துக்க நாள் 03.08.2017 எங்களுக்கு எந்த அரசியல் வாதியும் காசு கொடுக்க வேண்டாம் --எந்த கட்சியும் கொள்ளை அடித்த காசை கொடுத்து பின்னால் வரவேண்டாம் -ஆள் பலம் பண பலமின்றி ஒவ்வொரு சிவாஜி ரசிகனும் சிவாஜி அவர்களின் புகழை தன உழைப்பால் வந்த பணத்தால் விண்ணுயர பரப்பி கொண்டே இருப்பான்
-
-
From Vikatan
நாய்..நரிக்கெல்லாம்.. சிலை இருக்கும்.. இம் மண்ணில்!’ - சிவாஜி சிலையும் சேரனின் கவிதைச் சீற்றமும்!
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இருந்து சிவாஜி சிலை அகற்றப்பட்ட விவகாரம் எல்லா திசைகளிலும் ஒருவித அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. அரசும் நடிகர் சங்கமும் சிலை விவகாரத்தில் மெத்தனமாக நடந்துகொண்டதாக வெளிப்படையாகவே பேசப்படுகிறது. சிவாஜிக்கு நேர்ந்த இந்த அவமதிப்பை வெளிப்படுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் முடங்கிக்கிடக்க, சிவாஜி ரசிகர் மன்றங்கள், சிவாஜி சமூக நலப்பேரவை ஆகிய அமைப்புகள் இதைக் கடுமையாக எதிர்த்துவருகின்றன.
இதனிடையே மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலிருந்து சிவாஜிசிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து இயக்குநர் சேரன் காட்டமாக ஓர் கவிதையை எழுதியுள்ளார். தம் நண்பர்களுக்கும் நெருங்கிய வட்டத்துக்கும் அனுப்பிவைத்துள்ள அந்தக் கவிதை சிலை அரசியலை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளார். தமிழக மக்களால் பேசியும் பேசப்படாமலும் விடப்பட்ட ஷோபன்பாபுவையும் அவர் தன் கவிதையில் விட்டுவைக்கவில்லை.
அந்தப்பாடல் இதோ...
நாய்..நரிக்கெல்லாம்..
சிலை இருக்கும்..
இம் மண்ணில்..
எம் காவிய நாயகனுக்கு
சிலை இருக்கக் கூடாதா..?
கடற்கரை முழுக்க
ஊழல் கறைப் பட்டோர்
கல்லறைகளாய் கிடக்க..
இம் மண்ணின்
வைர மகனுக்கு
எம் மண்ணில்
சிலை இருக்கக்
கூடாதா..
சோபன்பாபுக்கு சிலை..
வீரம் பேசி கலை
வளர்த்த எம்
திரைத் திலகத்திற்கு
சிலை இருக்கக் கூடாதா..
காறித் துப்பக்கூட
வெறுப்பாக இருக்கிறது..
உள்ளுக்குள் சினமேறி
நெருப்பாக கொதிக்கிறது...
கவிதையோடு மட்டுமின்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் நேற்று பல விரக்தியான பதிவுகளை இட்டு தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். சிலை அகற்றப்பட்ட ஆகஸ்ட் 3-ம் தேதியை கறுப்பு நாள் என வர்ணித்துள்ள சேரனின் இன்னொரு ட்வீட்டில், “தமிழ்நாட்டுல கைய நீட்டிக்கிட்டு தப்பா வழிகாமிச்சவுங்க சிலை நூறுஇருக்கு இதுல சிவாஜி சிலைமட்டும் இடஞ்சலாம்?” என கொதித்திருக்கிறார். முன்னதாக கடந்த மாதம் அனுசரிக்கப்பட்ட சிவாஜி நினைவுதினமான 21-ம் தேதி சிவாஜி பற்றிய 5 மணிநேரம் 45 நிமிடங்கள் ஓடும் சிறப்பு வீடியோ ஒன்றை தயாரித்துள்ளார். சிவாஜியின் நடிப்பு ஆளுமையை சிறப்பாகக்கூறும் இந்த வீடியோ பலராலும் பாராட்டப்பட்டது.
http://img.vikatan.com/news/2017/08/...st_3_16235.jpg
இந்தப் பாடலை உருவாக்க 4 மாதங்கள் ஆனதாக குறிப்பிடும் சேரன், வீடியோவுக்கான ஒவ்வொரு ஷாட்களையும் தேடித்தேடி எடுத்ததற்கு ஒரு காரணம் உண்டு எனவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கவனமாக பார்ப்பவர்களுக்கு அது புரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் சிவகுமார், மனோபாலா , YGM , MS பாஸ்கர், , விக்ரம்பிரபு, ஜெயப்ரகாஷ் இயக்குநர்கள் ரவிகுமார் சார், உதயகுமார், பிரபுசாலமன் மீரா கதிரவன் ஆகியோர் வீடியோவைப் பார்த்துவிட்டு உடனடியாக சேரனைத்தொடர்புகொண்டு பாராட்டியுள்ளனர்.
“வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் முரண்பாடான மனிதர்களுள் ஒரேமுகமாய் வாழ்ந்துகாட்டியவர் நடிகர்திலகம். அவர் ரசிகன் என சொல்லிக்கொள்வதில் பெருமையே” என வீடியோவை வெளியிடுவதற்கு முன் சேரன் தெரிவித்துள்ளார். சிவாஜி சிலை அகற்றத்துக்கு காட்டமான கவிதை எழுதும் அளவுக்குச் சென்ற சேரனின் சிவாஜிப்பற்று எத்தகையது என்பது கவிதையைப் பார்க்கும்போது தெரிகிறது.
சிவாஜி குறித்து சேரன் வெளியிட்டுள்ள வீடியோ...
https://youtu.be/Lvb40Hay-DA
-
நடிகர் திலகத்தின் சிலை
வைப்பதற்கு முன்னரான செய்தி
மீள் பதிவு
Sukumar Shan
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை கடற்கரைச் சாலையில் சிலை வைக்கப்படும்’ _ என்று முதல்வர் கலைஞர் ஆளுநர் உரை வாயிலாக அறிவித்த போதே, சிவாஜி ரசிகர்களும் திரை உலகினரும் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள்.
இந்நிலையில், ஜூன் 25_ம் தேதியன்று சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், நடிகர் சிவகுமார் பேசும்போது, ‘பராசக்தி படம் வெளியானபோது இருந்த சிவாஜி மாதிரி, இளமையும் அழகும் நிறைந்த சிவாஜியின் உருவத்தைச் சிலையாக வைக்க வேண்டும்’ என்று கலைஞரிடம் கோரிக்கை வைத்தார். இறுதியில் கலைஞர் பேசும்போது, இதை ஏற்க இயலாததைக் குறிப்பிட்டார். ‘‘பெரியார் என்றால், முதிர்ந்த வயதில் தாடி, தடியுடன் இருந்தால்தான் அடையாளம் தெரியும். சாக்ரடீஸ் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் உருவம், அவரது இறுதிக்கால உருவம்தான். என் படத்தையே எனது இளமைக்கால உருவம் போல வரைந்தால் பலருக்கும் அடையாளம் தெரியாது. எனவே, சிவாஜி மறையும் காலத்தில் இருந்ததுபோல, அவருக்குச் சிலை வைப்பதுதான் சரி. அப்படித்தான் சிலையும் தயாராகி வருகிறது?’’ என்றார் கலைஞர்.
கூடவே, ‘‘அந்தச் சிலை அமைக்கப்பட்டவுடன் இந்த இடத்திலா? என்று எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அது’’ என்று சொல்லி, இடத்தையும் சொல்லாமல் ஒட்டுமொத்த திரை உலகினரின் ஆர்வத்தையும் அவ்விழாவில் தூண்டிவிட்டு விட்டார் கலைஞர்.
‘அந்த இடமா....? இந்த இடமா?’ என்று நடிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், நமக்கும் ஆர்வம் மேலிட விசாரித்தோம்.
சிலை வைப்பது என்று அறிவிப்பு வெளியானவுடன், சிவாஜி குடும்பத்தினர் கலைஞரைச் சந்தித்து நன்றி சொல்லப் போயிருக்கிறார்கள். ‘‘எங்கள் குடும்பத்தின் சார்பில் தனிப்பட்ட முறையில் நன்றி’’ என்று ராம்குமாரும் பிரபும் சொல்லும்போதே இடைமறித்த கலைஞர், ‘‘எனக்கு எதற்கு நன்றி? நான் வாழும் காலத்தில் கணேசனுக்கு நான் சிலை வைக்காமல் வேறு யார் வைப்பது? அவருடன் நான் கொண்டிருந்த நட்புதான் உங்களுக்குத் தெரியுமே...’’ என்று சொல்லி உடைந்து கண்ணீர் சிந்தியிருக்கிறார்.
இதைப் பார்த்து சிவாஜியின் மகள்களான சாந்தி, தேன்மொழி என்று எல்லோருமே கண்ணீர் வடிக்க, அந்தச் சந்திப்பே உணர்ச்சிப் பிழம்பாக நடந்து முடிந்திருக்கிறது.
அதன் பிறகுதான் சிலையை எப்படி, எங்கே அமைப்பது என்று கலைஞர் தன் மனதுக்குள்ளேயே விவாதித்திருக்கிறார் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். சமீபத்தில் தன் சொந்த ஊரான திருக்குவளை போனபோது, பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜியின் சிலையை, தான் பயணம் செய்த வேனை நிறுத்திப் பார்த்தார் கலைஞர்.
தான் இறந்த பிறகு இந்த ‘போஸில்’தான் சிலை வைக்க வேண்டும் என்று சிவாஜியே தன் குடும்பத்தினரிடம் சொல்லி, ஒரு ஸ்டில்லைக் கொடுத்திருந்தார். அந்த போட்டோவில் உள்ளபடியே செய்த சிலைதான், தற்போது பாண்டிச்சேரியில் உள்ள சிலை. இதைக் கேள்விப்பட்ட கலைஞர், அதேபோல் சென்னையிலும் அமைக்க முடிவெடுத்தார்.
அதன்பிறகுதான் இடம் பற்றிய கேள்வி எழுந்தது. கடற்கரைச் சாலையிலேயே பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் கலைஞரே ஆசைப்பட்டு, ஓர் இடத்தை முடிவு செய்து, முதலில் சிவாஜி குடும்பத்தினரிடம் அந்த இடத்தைக் குறிப்பிட்டு, அவர்களின் எண்ணத்தைக் கேட்டிருக்கிறார். அவர்களும் ஆச்சரியத்துடன் சந்தோஷமும் அடைந்து ‘முழு திருப்தி’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதுபற்றி நாம் சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபுவிடம் பேசினோம்.
‘‘சிவாஜி சாருக்கு சிலை வைக்க எல்லோருமே ஆசைப்படுகிறார்கள். ஆனால் அரசே வைப்பது அவரை அங்கீகரித்து, கௌரவப்படுத்துவது மாதிரி உள்ளது. இது பெரியப்பா (கலைஞர்), அப்பா மீது வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு. எங்கள் இரு குடும்பத்தின் உறவு நீண்ட கால வரலாறு கொண்டது. குறிப்பாக, அப்பாவுக்கும் பெரியப்பாவுக்குமான உறவு பற்றி நாடறியும். அதனால்தான் நாங்கள் நன்றி சொல்ல அவரைச் சந்தித்தபோதுகூட, ‘சிலை வைப்பது என் கடமை’ என்று சொன்ன பெரியப்பா, ‘‘இப்போதும் டி.வி.யில் கணேசனைப் பார்க்கும்போது, திரையிலேயே அவர் கன்னத்தைக் கிள்ளத் தோன்றுகிறது’’ என்று சொல்லி, கண்ணீர் வடித்தார். அந்த அன்பின் வெளிப்பாடாக, சிலை வைப்பதையே பெருமையாக நினைத்தோம். ஒரு முக்கியமான இடத்தில் அதை நிறுவ முடிவு செய்திருப்பது, எங்களை இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது’’ என்றார் பிரபு. ‘‘எந்த இடம் என்பதை அரசே அறிவிப்பதுதான் முறை. நான் சொல்வது சரியல்ல’’ என்று மறுத்த பிரபு, கடைசிவரை இடத்தைச் சொல்லவேயில்லை. எனினும், செய்தித்துறை வட்டாரங்களில் தொடர்ந்து விசாரித்ததன் பலனாக இடத்தை அடையாளம் காட்டினார் ஓர் அதிகாரி. கடற்கரை காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் முன்பாக, ராதாகிருஷ்ணன் சாலையும் கடற்கரைச் சாலையும் சந்திக்கும் இடம்தான் தன் நண்பனுக்காக கலைஞர் தேர்வு செய்துள்ள இடம். அந்த இடத்தில், ரோட்டின் மையத்திலேயே இந்தியக் குடியரசின் பொன்விழா நினைவாக ஒரு அசோகர் ஸ்தூபி இருக்கிறது. அதன் அருகிலேயே உள்ள மணிக்கூண்டை எடுத்துவிட்டு அந்த இடத்தில் சிலையை வைக்க ஏற்பாடாகியிருக்கிறது. மூன்று சாலைகள் சந்திக்கும் அந்த இடத்தில், ராதாகிருஷ்ணன் சாலையை நோக்கி சிலையை வைக்க தற்போது ஏற்பாடாகியிருக்கிறது. ஆனாலும் இடம் பற்றிய சர்ச்சையைத் தவிர்க்க, இப்போதைக்கு இடத்தை வெளியே சொல்லவேண்டாம் என்று கலைஞரே, செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியிடமும், சிவாஜி குடும்பத்தினரிடமும் கேட்டுக்கொண்டாராம்.
பாண்டிச்சேரியில் உள்ள சிலையைச் செய்த ஸ்தபதி மணி நாகப்பாதான் இந்தச் சிலையையும் செய்கிறார். தற்போது அவர் அமெரிக்காவில் இருப்பதால், அவரது உதவியாளர், ஸ்தபதி ரவிதான் இறுதிக்கட்ட வேலைகளைச் செய்துவருகிறார்.
‘‘சிவாஜி விருப்பப்பட்ட போஸில்தான் பாண்டிச்சேரியில் சிலையைச் செய்தோம். இந்தச் சிலையும் அதே மாதிரிதான். 750 கிலோ எடை கொண்ட வெண்கலத்தில் சிலை தயாராகி வருகிறது. நடிகர்களில் எம்.ஜி.ஆர். தவிர்த்து என்.எஸ்.கே. மற்றும் சிவாஜிக்குத்தான் சிலை உள்ளது. ஒரு மகா கலைஞனின் சிலையை வடிக்கும் பொறுப்பை, ஒரு பெருமையாகவே உணர்கிறேன்’’ என்கிறார் ஸ்தபதி ரவி.
மிக விரைவில் திறப்புவிழா காண இருக்கிறது இந்தச் சிலை. இடத்தைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை கலைஞர் அந்த விழாவில் விவரிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
நாராயணி
Philosopher
நாராயணி
Active Members
0
1,550 posts
Posted 30 Jun 2006
mayoori said:
முள்ளை வளைத்தது மகுடம் அணிந்தது
ஆணி அடித்தது சிலுவையில் அறைந்தது
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது....
-
Vino Mohan shared a link.
·
வீரபாண்டிய கட்டபொம்மனில் கடைசி காட்சி ...தூக்கில் இடும் முன்னர் விலகி போங்கள் ! துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சுமெத்தை என அந்த பாஞ்சை சிங்கம் சீறும் .................
அந்த சிம்மக்குரலோன் சிலையை சாக்குத்துணியால் மூடி , சங்கிலியால் பிணைத்து , பீடத்தோடு அகற்றி கிரேனில் ஊசல் ஆடவிட்டு ........................
சோபன்பாபுவின் சிலை அசடு தட்டிய முகத்தோடு நெல்சன் மாணிக்கம் சாலையில் நிற்க ------------
அதே கட்டபொம்மனில் கர்ஜிப்பார் நடிகர் திலகம் , வெட்கம் ! என ............
ஆம் . வெட்கமாய்த்தான் இருக்கிறது இந்த மாநிலத்தில் வாழ்வதற்கு.
https://external.fybz1-1.fna.fbcdn.n...AjQVUcZVUonY9O
-
Abdul Razack
ஒருமனித சிலையை எப்போது அகற்றுவார்கள் ஒரு நாட்டில் சர்வாதிகாரமாக கொடுங்கோலன் ஆட்சி புரிவான் அங்கு புரட்சி ஏற்பட்டு ஜனநாயகம் மலர்ந்த பின் அந்த கொடுங்கோலனின் சிலையை அகற்றுவார்கள் அதே போல் இங்கு உங்கள் ஆட்சியை அகற்றும் புரட்சி ஏற்பட்டு பஞ்சம் பிழைக்க வந்தவர்களின் சிலையை அகற்றி இருக்க வேண்டும் ஆனால் சாரயத்துக்கும் பணத்துக்கும் தன் மானத்தையே விற்பவன் எதை புரட்சி என்று அழைக்கிறான் திருட்டு கொள்ளை துரோகம் ஆணவம் இதை செய்பவர்களைத்தானே புரட்சி என்று சொல்லி அதன் அர்த்ததையே கேவலபடுத்துகிறான்,
-
-
-
Natarajen Pachaiappan
அய்யன் சிவாஜியின் தன்மை
++++++++++++++++++++++++++
எத்தனை தோற்றங்கள்,
எத்தனை மாற்றங்கள்...
இமை பொழுதில் !?
இனி யார்தான் செய்வார்
இப்படி? உமக்குத்தான்
இவையெல்லாம்
அத்துப்படி, மற்றோருக்கு
அவையெல்லாம் படிப்புடி!
படிப்படியாய் முன்னேறி
பாடம் படித்தாய்,
படங்கள் கொடுத்தாய்
பாடமாய் ஆனவரே...
ஆசிரியன் இல்லாதவன் நீ!
ஆச்சரியந்தான், நாம்
அவரை படித்தவர்தானே?
அவரோ படைப்பாளியான
ஆண்டவன். அவர் கட்டளை
'ஆண்டவன் கட்டளை'
அய்யா நீ! ஆண்டவன்தான்!
ஆண்டது நம்மையல்லவா?
அது நன்மையல்லவா?
அவை உண்மைல்லவா?
அது உம், தன்மையல்லவா?
அன்புடன்...
சிவாஜியின் பக்தன்
ப.நடராசன்/:
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...26&oe=59FF6C62
-
சிவாஜியின் புதிய சிலையை மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும்: ராமதாஸ்
http://tamil.thehindu.com/migration_...EE_700/ramdoss
Published : 03 Aug 2017 16:53 IST
Updated : 03 Aug 2017 16:55 IST
சிவாஜியின் புதிய சிலை ஒன்றை தயாரித்து அதை மெரினா கடற்கரையில் காந்தி, காமராசர் சிலைகளுக்கு இடையில் நிறுவ வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை கடற்கரை சாலையில் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நின்று கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது நீதிமன்ற ஆணைப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூறப்பட்டாலும் கூட, இதன் பின்னணியில் சில சதிகள் அரங்கேற்றப்பட்டதை மறுக்க முடியாது.
தொடர்புடையவை
வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார் உள்ளிட்ட வரலாற்றுப் பாத்திரங்களுக்கு திரையில் உயிரூட்டிய நடிகர் திலகத்திற்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பியதைத் தொடர்ந்து கடந்த 2006-ஆம் ஆண்டு அவரது நினைவுநாளான ஜூலை 21-ஆம் தேதி கடற்கரை சாலையில் காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது.
அப்போதே இச்சிலையால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால் அதை அகற்றக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், சிவாஜி சிலையை அகற்ற முடியாது என்று உயர் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்தது. அதன்பின் 7 ஆண்டுகள் கழித்து 2013-ஆம் ஆண்டு இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சிவாஜி சிலையால் சாலை விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சிவாஜி சிலையை அகற்றத் தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட தமிழக அரசு சிவாஜி சிலையால்தான் அப்பகுதியில் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதனால் சிலையை அகற்றலாம் என்றும் கூறியது. இதன் அடிப்படையில் தான் சிவாஜி சிலையை அகற்ற உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. சிலை அமைக்கப்பட்ட 7 ஆண்டுகளில் அப்பகுதியில் எந்த விபத்தும் ஏற்படாத நிலையில், விபத்துகள் ஏற்பட்டதாக பொய்யான தகவலை நீதிமன்றத்துக்கு வழங்கி சிலை அகற்றும்படி நீதிமன்றமே உத்தரவிடும் நிலையை ஏற்படுத்தியது அப்போதைய ஜெயலலிதா அரசு திட்டமிட்டு செய்த சதி என்பதில் ஐயமில்லை.
இப்போதும் கூட சிலையை அகற்ற வேண்டும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அந்த சிலையை சிவாஜி மணிமண்டபத்தில் வைப்பதற்கு பதிலாக கடற்கரைச் சாலைக்கும், சர்வீஸ் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் காந்தி சிலை, காமராசர் சிலைக்கு நடுவில் அமைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அவ்வழக்கு கடந்த 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இதுகுறித்து ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்த தமிழக அரசு, அதன் முடிவை தெரிவிக்காமலேயே சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றியிருப்பது இரண்டாவது சதி என பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன்.
கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலை இருந்ததால் விபத்துகளோ, போக்குவரத்து பாதிப்புகளோ ஏற்பட்டதில்லை. சென்னை அண்ணா சாலையின் நடுவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் சாலைகளின் நடுவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இவற்றால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று கூறிவரும் தமிழக அரசு, இந்த உண்மையை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து சிவாஜி சிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்க வகை செய்திருக்க முடியும். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.
இவ்வாறாக சிவாஜி சிலையை அகற்றுவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு பல நடவடிக்கைகளை எடுத்ததை அவரது ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள். இப்போது கடற்கரை சாலையிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை அவரது மணி மண்டபத்தில் வைக்கப்பட்டு விட்ட நிலையில், அதேபோன்ற புதிய சிலை ஒன்றை தயாரித்து அதை மெரினா கடற்கரையில் காந்தி, காமராசர் சிலைகளுக்கு இடையில் நிறுவ வேண்டும். சிவாஜி கணேசனின் 90-ஆவது பிறந்தநாள் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் அவரது புதிய சிலையை அரசு திறக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
Gopalakrishnan Sundararaman
திருவிளையாடல்- 1965.(31/07/1965)