yO yO yO :rotfl: TFML !!
Printable View
yO yO yO :rotfl: TFML !!
பாடல்: பேசாமல் வா என் பக்கம் நெருங்கு
திரைப்படம்: உங்க வீட்டு கல்யாணம்
பாடியவர்கள்: கோவை சௌந்தரராஜன் ( ? ), L R ஈஸ்வரி
இசை: விஜய பாஸ்கர்
நடிப்பு: தேங்காய் சீனிவாசன் ( ? ), சுபா ( ? )
வருடம்: 1975
http://www.inbaminge.com/t/u/Unga%20...akkam.eng.html
இந்த பாடலை பாடிய ஆண் குரல் கோவை சௌந்தரராஜன் என்று நினைக்கிறேன். TMS போல தெரியவில்லை. முக்கிய நடிகர் நடிகை தேங்காய் சீனிவாசன் மற்றும் சுபா (கேள்விப்பட்டதே இல்லை) என்பது சரியா?
மிகவும் சரியே...
சுபா கேள்விப்பட்டதில்லையா ? சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் மூத்த அக்காவாக வந்து "சொல்லத்தான் நினைக்கிறேன்" மற்றும் "பல்லவி ஒன்று" பாடல் காட்சிகளில் நடிப்பவர். நடிகர் திலகத்தின் பட்டிக்காடா பட்டணமாவில் "என்னடி ராக்கம்மா" பாடலின் ராக்கம்மா இவரல்லவோ ?
மேலும் உங்க வீட்டு கல்யாணத்தில் வில்லன் கிடையாது. ஜோதிலட்சுமிதான் வில்லன் வேஷத்தில் வருபவர். இன்னும் "அய்யராத்து பொண்ணு சொன்னா" மற்றும் "கண்ணழகில் நீயும் ஒரு காமாட்சி" முதலிய பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
நன்றி, மது. சுபா பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. உங்கள் அளவுக்கு எனக்கு "திரை ஞானம்" இல்லை. :)
ஹா ஹா.. எனக்கும் திரை ஞானம் எல்லாம் கிடையாது. சில விஷயங்கள் நினைவில் இருக்கும் பல விஷயங்கள் மறந்து போய்விடும். :wink:
இந்த இழையில் சில காலம் முன்னால் Que Sera Sera என்ற ஆங்கில படப்பாடலை பற்றி சொல்லியிருந்தது. அதன் தமிழ் திரை வடிவம் இதோ :
http://www.youtube.com/watch?v=kGPO7CCU8eA
பாடல்: சின்னப்பெண்ணான போதிலே
திரைப்படம்: ஆரவல்லி
இசை: G ராமநாதன்
பாடியவர்: ஜிக்கி, A M ராஜா
வருடம்: 1957
நடித்தவர்கள்: G வரலக்ஷ்மி, R V ஈஸ்வர்.
பாடல் வரிகள்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
Posted by mistake in this thread. Moved here:
http://www.mayyam.com/talk/showthrea...021#post993021
innoru yOgam madhu
http://www.youtube.com/watch?v=xiSsontWSbI
Regards
:ty: TFML
தேவரின் மகராசி 1967
முற்றும் முழுதாய் ஷங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையமைப்பில்
வந்த முதல் திரைப்படம்
தேவரிடம் அறிமுகம் செய்து வைத்த கண்ணதாஸனுக்கும்
நம்பி வாய்ப்பு அளித்த தேவருக்கும் நன்றியாக
அன்று தொட்டு கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ் என்று ஆரம்பித்தார்கள்
வாழ்வில் புது மணம் மணம்
வந்ததம்மா சுகம் சுகம்
நினைத்ததெல்லாம் வரும் வரும்
கிடைத்ததெல்லாம் வளரும் (மலரும் ? ) பெருகும் உயரும் ..
http://www.inbaminge.com/t/m/Maharas...Pudhu.vid.html
ஆரம்பமே பி சுஷீலாவின் மென்மையான இனிய ஹம்மிங்க் சேர
டி எம் எஸ் பி சுஷீலா இனிய குரலில் ஜெயலலிதா ரவிச்ச்சந்திரனுக்காக பாடியது
காதல் கீதமாக இருந்த போதிலும் இரட்டையர்களையும் கூட வாழ்த்துவது போல
கண்ணதாதாஸனும் அவர்களுக்காக எழுதிக் கொடுத்த பாடல்
தேடிய நாள் என்னிடம் வந்தது
திருமகள் புன்னைகையில் தந்தது
நான் ஆயிரம் காலமும் வாழ
உன் ஆதரவிருந்தால் போதும்
நெஞ்சம் நாளும் வாழ்கவென பாடுவோம்
இன்பச்சோலை மலரெடுத்து சூடுவோம் ...
வாழ்வில் புது மணம் மணம் ...
எனக்கென நீ பிறந்தாய் மன்னவா
உனக்கென நான் வளர்ந்தேன் அல்லவா
என் உள்ளத்தில் ஆடிடும் கலையே
இந்த உலகத்தில் உனக்கிணை இலையே
நல்ல காலம் சேர்ந்ததென கூறுவோம்
அந்த கருணை நதியில் ஒன்று கூடுவோம்
....வாழ்வில் புது மணம் மணம்
வந்ததம்மா சுகம் சுகம் ...
http://i871.photobucket.com/albums/a...ps6bf5dafa.gif
அன்பர்கள் அனைவருக்கும்
நினைத்ததெல்லாம் வரும் வரும்
கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும் ..
இனிய 2013 நல்வாழ்த்துக்கள்
Regards
:wow:
one of my fav songs.. so soft, sweet and romantic.
( I think thats மலரும் only ) :p
பாடல்: தங்கச்சலங்கை
திரைப்படம்: ஓடும் நதி
பாடியவர்: TMS
இசை: MSV
நடித்தவர்கள்: ரவிச்சந்திரன், B சரோஜா தேவி
வருடம்: 1969
http://www.inbaminge.com/t/k/Kanni%20Penn/Thanga%20Salangai.vid.html
இந்த வலைத்தளத்தில் திரைப்படத்தின் பெயர் "கன்னிப்பெண்" என்று போட்டிருந்தாலும் இந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் "ஓடும் நதி" என்றுதான் நினைக்கிறேன்.
நன்றி மது.
இந்தப்பாடலை இயற்றியவர் யார் என்று தெரியுமா? கண்ணதாசன் மாதிரி தெரியவில்லை.
"பெண் குலத்தின் பொன் விளக்கு" திரைப்படத்தில் வரும் பாடல்: விழி வாசல் அழகான மணி மண்டபம்
இப்படத்தின் தகவல்கள் மற்றும் ஒலி வடிவத்தை இந்த இழையில் வேறு ஒரு இடத்தில் தந்திருக்கிறேன்.
http://www.youtube.com/watch?v=wyQANaiGr8E
நன்றி: பேராசிரியர் SSK அவர்கள்.
பாடல்: நெஞ்சுக்கு நிம்மதி
திரைப்படம்: நான்கு கில்லாடிகள்
பாடியவர்: P சுசீலா
இசை: S வேதா
நடித்தவர்கள்: ஜெய்சங்கர், பாரதி
வருடம்: 1969
http://www.youtube.com/watch?v=Pepw5EqZbT4
பாடல்: பொழுதும் விடியும் பூவும் மலரும்
திரைப்படம்: வல்லவனுக்கு வல்லவன்
பாடியவர்: P சுசீலா
இசை: S வேதா
பாடல் வரிகள்: கண்ணதாசன்
நடித்தவர்கள்: S A அசோகன், மணிமாலா
வருடம்: 1965
http://www.youtube.com/watch?v=gnfiSdbuATM
பாடல்: ஒரிஜினலிட்டி ஒசந்த குவாலிட்டி
திரைப்படம்: நீலாவுக்கு நெறஞ்ச மனசு
பாடியவர்: திருச்சி லோகநாதன்
வருடம்: 1958
இசை: KV மகாதேவன்
K A தங்கவேலுவின் நடனத்தை இந்த பாட்டில் பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=cK1pHaRBYtM
அதே படத்தில் மீண்டும் ஒரு பாடல்:
பாடல்: கண்ணைக்கவரும் கலையே பரதக்கலை
பாடியவர்: சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
நடனம்: ராகினி குழுவினர்
http://www.youtube.com/watch?v=wYNz09Vp4-g
Thank u nga isairasigan for #802...enjoyed it all infact...:-)
திரைப்படம்: இரு சகோதரிகள்
பாடல்: தாயே உன் செயல் அல்லவோ
பாடியவர்கள்: ML வசந்த குமாரி, P லீலா
நடித்தவர்கள்: சாவித்திரி, பாலாஜி
வருடம்: 1957
http://www.youtube.com/watch?v=f0fHKhfC2bI&list=UUK4a5pwEZJaF990UcyQ95eg
பாடலின் ராகம் மற்றும் இசை அமைப்பாளர் தெரியவில்லை.
அதே திரைப்படத்தில் மீண்டும் ஒரு பாடல்.
பாடல்: தங்கச்சிலையே வாடா
http://www.youtube.com/watch?v=uluWZ9rGs20&list=UUK4a5pwEZJaF990UcyQ95eg& index=11
பாடல்: நான் தேடும் போது
திரைப்படம்: அவள் யார்
பாடியவர்: பண்டிட் ரகுநாத் பானிக்ரஹி
நடித்தவர்கள்: சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி
இசை: ராஜேஸ்வர ராவ்
வருடம்: 1959
கேட்டு ரசிக்க:
http://www.inbaminge.com/t/a/Aval%20...oothu.eng.html
இந்தப்பாடலை பாடியவர் யார் என்று தெரியவில்லை. (T A Mothi?)
Edit: The singer is Pt Ragunath Panigrahi, not T A Mothi. Thanks to Madhu for info. Info added.
நான் தேடும்போது பாடலைப் பாடியவர் பாணிக்கிரஹி என்பவர்.
அவர் ஒரிசாவைச் சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் வளர்ந்தவர் என்று எங்கேயோ படித்த ஞாபகம்.
hello nga isairasigan & madhu....ty for the song #807.....first time hearing & i have to say that the voice/music/raagam.....ellaamey very very melodious.....:-) ....its so heart warming to hear very very very old songs...i guess music has no boundaries...:-)
Yes suvai, music has no boundaries. Good to see that there are people around to appreciate such old songs.
பாடல்: தாயே யசோதா
திரைப்படம்: குல தெய்வம்
பாடியவர்:M L வசந்தகுமாரி
நடனம்: கமலா
இசை: R சுதர்சனம்
திரைக்கலைஞர்கள்: SS ராஜேந்திரன், விஜயகுமாரி, MN ராஜம்
வருடம்: 1956
http://www.youtube.com/watch?v=ERtsK3wj0yU
அனேகமாக தோடி ராகத்தில் பாடப்படும் தாயே யசோதா இங்கே குந்தலவராளி ராகத்தில் ( சரிதானா ? ) இருப்பது ஒரு இனிமையான மாறுதல்.
Classic songs, sung in classic way.
http://www.youtube.com/watch?v=jmkTxstPmO4
பகிர்வுக்கு நன்றி நண்பரே..
(உங்களை எப்படி அழைப்பது?????!!!!!! காட்டுப் பூ - வனமலர்)
என் நண்பர் நேற்று அலைபேசினார் - இந்தப் பாடகர் அழகேசன் செல்லக்கிளிகளாம் பள்ளியிலே அருமையாய்ப் பாடி அசத்தினார் என்று..
அதன் காணொளி கிடைக்குமா?
அமரர் திருமதி ராஜசுலோச்சனா அவர்களுக்கு அஞ்சலியாக
பறக்கும் பறவைகள் நீயே
படரும் கொடிகளும் நீயே
சிரிக்கும் மலர்களும் நீயே
சித்திரம் போல வந்தாயே
http://youtu.be/V7dSEdVw0Vo
Rajasulochana ninaivaanjali thankyou so much.
kaveri அவர்களே, நீங்கள் காட்டுப்பூச்சி என்றே அழைக்கலாம்!
பாடல்: தேவன் வந்தான் மழலை வடிவிலே
திரைப்படம்: குழந்தைக்காக
இசை: MSV
பாடல் வரிகள்: கண்ணதாசன்
நடித்தவர்கள்: பத்மினி, பேபி ராணி, RS மனோகர், மேஜர் சுந்தரராஜன், ராமதாஸ்
வருடம்: 1968
இந்தப்பாடலுக்காக கண்ணதாசன் தேசிய விருது பெற்றதாக நினைவு.
இந்த திரைப்பாடலில் ஒளியும் ஒலியும் ஒத்துப்போகவில்லை. ஆனாலும் அருமையான பாடல்.
http://www.youtube.com/watch?v=pCyi8pKyCzk
வெகு நாளாய் தேடிய ஒரு பாடலின் திரை வடிவம்:
பாடல்: உலகம் இதிலே அடங்குது
திரைப்படம்: குலமகள் ராதை
பாடியவர்: TMS
நடித்தவர்கள்: சிவாஜி கணேசன், B சரோஜா தேவி
இசை: K V மகாதேவன்
வருடம்: 1963
http://www.youtube.com/watch?v=ePriq_xpWLo