மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 8
http://i61.tinypic.com/dy26ia.jpg
திரி துவங்கி இன்றுடன் ஒரு மாதம் முடிந்த நிலையில் மக்கள் திலகத்தின் இனிய நண்பர்கள் எல்லோரின்
ஒத்துழைப்புடன் இன்று 200 பக்கங்கள் தொட்டு உள்ளோம் . மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் பார்வையாளர்களின்
எண்ணிக்கை 30 நாட்களில் 36,000 பேர்கள் பார்வையிட்டுள்ளார்கள் .கடந்த ஒரு மாதமாக இந்த திரியில் ஆயிரத்தில்
ஒருவன் படங்கள் பற்றிய விளம்பரங்கள் - செய்திகள் - வீடியோ - திரை அரங்கு கொண்டாட்டங்கள் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் என்று மக்கள் திலகத்தின் புகழை பல நண்பர்கள் இந்த திரியில் பதிவிட்டு பெருமைகள் சேர்த்தார்கள் . அனைவருக்கும் நன்றி .
.
இனி வரும் நாட்களில் நண்பர்கள் தொடர்ந்து பங்களித்து மக்கள் திலகத்தின் அரிய நிழற் படங்கள் - கட்டுரைகள்
மக்கள் திலகத்தின் படங்களை பற்றிய கருத்துக்கள் மக்கள் திலகத்தின் அன்றாட நிகழ்வுகள் என்று பதிவிட்டு
வருகின்ற மே மாதம் மக்கள் திலகத்தின் காவிய படைப்பான ''உலகம் சுற்றும் வாலிபன் '' வெளியாகி 42வது
ஆண்டு துவக்க நாளில் நமது ''மக்கள் திலகம் எம்ஜிஆர் '' பாகம் 8 நிறைவுற்று 'மக்கள் திலகம் எம்ஜிஆர் '' பாகம் -9
துவங்கிட நாம் எல்லோரும் புதிய பரிணாமத்தில் இந்த திரியினை வெற்றிகரமாக நடத்தி மக்கள் திலகத்தின்
புகழுக்கு புகழ் சேர்ப்போம் .
http://i62.tinypic.com/34ruopi.jpg
இந்த இனிய தருணத்தில் மையம் நிர்வாகிகளுக்கும் , பார்வையாளர்களுக்கும் , அனைத்து பதிவாளர்களுக்கும்
மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .

