Originally Posted by
Murali Srinivas
இன்று தமிழகமெங்கும் கட்டபொம்மனுக்கு படு உற்சாக வரவேற்பு. சென்னையில்
எஸ்கேப் - 2 காட்சிகள் (ஒரு சிறப்பு காலைக்காட்சி உள்பட) ஹவுஸ் புல்
சத்யம் - மதியம் 3 மணிக் காட்சி ஹவுஸ் புல்
சாந்தி - மாலைக்காட்சி ஹவுஸ் புல்
PVR , AGS வில்லிவாக்கம், S 2 பெரம்பூர் அனைத்தும் புல் என்றே தகவல்கள் வந்திருக்கின்றன.
பேபி ஆல்பட் மற்றும் சக்தி அபிராமி ஆகியவையும் கூட அதே status இருக்கலாம் என்று அந்த திரையரங்களிலிருந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
மதுரை
Inox - புல் - மாலை
அண்ணாமலை - 520 டிக்கெட் மாலை
சினிப்ரியா - 280 [மதியம்]
சோலைமலை - 210 - மாலை
மதுரை மாநகரின் புறநகர் பகுதி என்று சொல்லப்படக்கூடிய திருநகர் கலைவாணியில் வெள்ளி முதல் ஒரு ஒரு புதிய படம் வெளியாகி இரண்டு நாட்களில் தூக்கப்பட்டு எந்த விளம்பரமும் இல்லாமல் இன்று முதல் கட்டபொம்மன் திரையிடப்பட்டு இன்றைய மாலைக்காட்சிக்கு மிக கணிசமான அளவில் மக்கள் வந்திருக்கின்றனர்
கோவை
சத்யம் - புல்
பல்லவி - புல்
கர்நாடிக் - 750 டிக்கெட் - ரோடு ப்ளாக், band இசை, வாண வேடிக்கை, போலீஸ் விரட்டல் எல்லாம் நடந்திருக்கிறது.
சேலம்
முதலில் ARAS (?) மல்டிப் ப்ளெக்ஸ் -ல் மட்டும் வெளியான படம் இன்று முதல் சுப்ரகீத் திரையரங்கிலும் திரையிடப்பட்டு இரண்டிலும் மாலைக்காட்சி ஹவுஸ் புல். அது தவிர இன்று முதல் நாமக்கல் K .S அரங்கிலும் திரையிடப்பட்டிருக்கிறது.
திருச்சி, நெல்லை மற்றும் நாஞ்சில் மாநகரிலும் நல்ல response என்று கேள்வி.
கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது அதை பகிர்ந்து கொள்கிறேன்
அன்புடன்