Originally Posted by
vasudevan31355
நன்றி சசிதரன் சார். நீங்கள் கூறியது போல அம்பிகாபதியின் வெற்றி பானுமதியால் பாதிக்கப்பட்டது என்று பலரும் கூறுவார்கள். அது ஓரளவு உண்மையும் கூட. நடிகர் திலகம் அம்பிகாபதியில் அட்டகாசமான தேஜஸுடன் வைரமாய் ஜொலிக்க, பானுமதி பருத்த உடலுடன், வயது முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் திலகத்திற்கு அக்கா போல தெரிவார். நடிகர் திலகத்திற்கேற்ப இளமையான சரியான ஜோடியைப் போட்டிருக்கலாம். பானுமதி மிகச் சிறந்த நடிகை. ஆனால் ஜோடிப் பொருத்தம் இல்லாமல் போய் விட்டது. பத்மினியை அந்த நேரங்களில் தலைவருடன் ஜோடியாய் நிறைய பார்த்தாகி விட்டது. எனவே என்னுடைய சாய்ஸ் அமராவதி கேரக்டருக்கு வைஜயந்திமாலா.
என்ன ஓகேவா?