Very Good and Novel suggestion. Atleast we go in ascending order one movie a week, the ultimate will happen after 4 years only.(200 weeks saved atleast)
Printable View
கார்த்திக்,
ஒரு முறைப்படுத்தல் ஆலோசனை மட்டும் தான் பதிவிடப் பட்டிருக்கிறது. இதனை நம் நண்பர்கள் எல்லோரும் பரிசீலனை செய்து அவர்களுக்குத் தோன்றக் கூடிய - உங்களையும் சேர்த்தே - கருத்துக்களும் ஆலோசனைகளும் ஒருங்கிணைத்து நாம் ஒரு வழிமுறையைக் கடைப்பிடித்த பிறகே அந்த புதிய பாணியில் தொடரலாம். தற்போதைக்கு நம் தன்மை இப்போதுள்ளவாறே உள்ளது. எனவே தங்களுடைய மேலான பதிவுகளை எழுதுங்கள். நாம் அநைவருமே அதில் பங்கு கொள்ளலாம். இதன்றி இன்னும் நமக்கு 1972ன் படங்கள் பாக்கியுள்ளன. இவையெல்லாம் விவாதிக்கும் சமயத்திலேயே புதிய தன்மைக்கான கருத்துக்களும் பெறப் பட்டு அதனை ஒருங்கிணைத்து மேற்கொள்ளலாம். அது கூட என்னுடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமே நான் கூறியுள்ளேன். இது போன்று ஒவ்வொருவரின் கருத்தையும் நாம் அறிந்தால் தான் புதிய ஐடியாக்கள் கிடைக்கும்.
After our friends' discussions in our thread, WATCHING RAJA in jaya tv today was more interesting just like watching AFRESH. HATS OFF TO OUR FRIENDS.
சிவன் சார்
தங்களின் ஆலோசனை மிகவும் சிறப்பாக உள்ளது. நம்முடைய திரைப்படப் பட்டியல் திரியில் வரிசைக்கிரமமாக படங்கள் விவரங்கள் தரப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு படத்துடையும் தொடர்புடைய அனுபவங்கள், தகவல் பகிர்வுகள் அங்கே இடம் பெறலாம். படங்களைப் பற்றிய விமர்சனங்கள், ஆய்வுகள் இந்தத் திரியில் இடம் பெறலாம். அந்த வகையில் திரைப்படப் பட்டியல் திரியில் தாங்கள் நடிகர் திலகத்தின் அந்தந்த படங்களை முதலில் எங்கு பார்த்தீர்கள், அது தொடர்பான தங்கள் அனுபவங்கள், தகவல்கள் போன்றவற்றை அங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். இந்த வேண்டுகோளை நம் ஒவ்வொருவருக்குமே நான் வைக்கிறேன். கோபால் கிட்டத் தட்ட ஒவ்வொரு படத்திற்கும் தன் பங்களிப்பை சிறப்பாக தந்து வருகிறார். அதே போல் அனைவரும் வர வேண்டும்.
நன்றிகள் கோடி ராகவேந்தர் சார்.
என்னையும் அங்கீகரித்து இந்த ஜாம்பவான்கள் பட்டியலில் சேர்த்துகொண்டதற்கு!
சரி இந்த ஜாம்பவான்கள் தங்கள் அனுபவத்தை எழுதுவது போல நாமும் முயற்சித்தால் என்ன என நினைத்தபோது..
தோன்றிய முத்து#1..
தெனாலிராமன்:
பிஸ்கட்,சாக்கொலேட்,வாழை,த்ராஷை, பட்சணங்கள் (இனிப்பு காரம்)வறுவல் போன்ற லஞ்ச பொருட்களுடன், மூன்று வயதான
என்னை கூட்டிக்கொண்டு என் தாயார் காசினோ அரங்கிற்கு சென்ற கதையை இன்றும் பரணி பாடுவார்.news reel முடியும் வரை அமைதியாக சாப்பிட்டுகொண்டிருந்த நான், titles தொடங்கியதும் தீவிர வாதியாக மாறி, கையில் கொடுத்த பழங்களை விட்டெறிந்து, "இந்த நிமிடம் வீட்டிற்கு போக வேண்டும்" என அலற,Titlecards ஓடும்போது,நான் பழங்களை screen நோக்கி விட்டெறிந்ததை பார்த்த மற்றவர்கள்
இந்த சிறு வயதில் இப்படி ஒரு தீவிர சிவாஜி ரசிகனா.!!என வியந்திருக்க,சாம தான பேத தண்ட உபாயங்கள் எதுவும் உதவாத நிலையில் 'தாயார்' 'அம்மா'வாகி என்னை இழுத்துக்கொண்டு வெளிநடப்பு செய்தார்.ஆனால் அடுத்த சந்தர்ப்பத்திற்கு அவர் சுமார் 55 ஆண்டுகள் காத்திருக்க நேரிட்டது.சென்ற ஆண்டு Raj TVயில் இதை போடும் போது கூட ஒரு வித பயத்துடன்தான் அவர் என்னுடன் அமர்ந்து பார்த்தார்.
இது அருமையான படம்..தலைவர் வசன உச்சரிப்பில் கவனமாக இருந்த காலம்.ஒவ்வொரு வார்த்தையும் தேன் போல காதில் ஒலிக்கும்.தெனாலி ராமன் என்பதால் படம் முழுவதும் அவர் முகத்தில் குறும்பு கொப்பளிக்கும்."தில காஷ்ட மகிஷ பந்தனம்" ஒன்று போதும்..
தலைவர் எனும் ஜம்போ ஜெட் தமிழ் திரையுலகம் எனும் ஓடு பாதையில் மெதுவாக ஓடத்தொடங்கி takeoffக்கு தயாரான படங்களில் ஒன்று.
A great entertainer.
ஜமுனா கூட அந்த படத்தில் படு அழகாக cute ஆக இருப்பார்.
பானுமதி நல்ல வில்லி என்பதை தெனாலி ராமன்,ராஜபக்தி படங்களில் நிரூபித்திருப்பார்.
ஒரு படத்திற்கே அவர் வில்லியாக மாறிய கொடுமை அம்பிகாபதியில் நிகழ்ந்தது.
நினைத்ததை சாதித்து விட்டீர்களே ராகவேந்தர் சார்.நடிகர்திலகத்தின் ஆத்மா உங்களை வாழ்த்தட்டும். கல கல வென்று சென்று கொண்டிருந்த திரியை ஆள் அரவமில்லாமல் பண்ணி விடும் உங்கள் நோக்கம் மிக உயர்ந்தது.
இவ்வளவு அரசியல் கூர்மையும் நாட்டுக்கு பயன் படாமல் போய் விட்டதே?