Thank you very much Pon Ravichandran Sir!
Printable View
தோஷம் அகன்று விட்டது. திரியின் மீது கண் பட்டிருக்கும். பம்மலாரின் பிறந்த நாள் நெருங்குகிறது. நாம் திரியை பழைய நிலைக்கு உயர்த்துவோம்.
கார்த்திக் சார், தயவு செய்து எனக்காக உங்கள் ஜெயகுமாரி,ஜம்பு, ரிஷிமூலம் பதிவுகளை போடுங்கள். ஒரு பிரத்யேக நண்பனின் அன்பு வேண்டுகோள்.
என் சார்பில்---
நீதி, பட்டிக்காடா பட்டணமா முடிந்ததும் ,சிவாஜியின் காதல் காட்சிகள்-நான் ரசித்தவை என்று ஒரு தொடர் ஆரம்பிக்க உள்ளேன். இது 1952 முதல் 1999 வரை அனைத்து(??) படங்களையும் அணைத்து(!!!) செல்லும் தொடர்.(ஒரு முப்பது எபிசொட் ஆவது வரும்).
குறுக்கே நந்திகள் மறைப்பதை பொருட்படுத்த வேண்டாம் என்று பல நண்பர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பிதற்றல்களை சட்டை செய்யாமல் போவதே நமக்கு மரியாதை.
மீண்டும் வலியுறுத்துகிறேன். Filmography என்பது வேறு. தேர்ந்தெடுத்த ஒத்த ரசனை உள்ளவர்களுடன் பகிர்வது என்பது வேறு. விமரிசனம் என்பது வேறு. புகழ் மாலை என்பது வேறு. ஆய்வு என்பது வேறு. எல்லா படங்களும் ஆய்வுக்குரியது அல்ல. பல நண்பர்கள் அதிருப்தியை வெளியிட்டும் ,அவ்வப்போது அனாவசிய தலையீடுகள் தொடர்கின்றன.
நான் மீண்டும் ஒன்றை குறிப்பிடுகிறேன். நண்பர்கள் அவர்களுக்கு பிடித்த எதை வேண்டுமானாலும் எழுதட்டும்.ஆனால் அவரவர் பாணியில் எழுதட்டும். கார்த்திக் சார் பாணியில் தராசு,முரளி சார் பாணியில் நாம் இருவர்,கோபால் பாணியில் நேர்மை, என்று மற்ற பதிவர்களை அவமதித்து ,இது வரை போட்ட பதிவுகளை கேலிக்குரியதாக்க வேண்டாம். இது சிவாஜியை ,விவேக் மிமிக்ரி செய்யும் போது நமக்கு உண்டாக்கும் கோபத்துக்கு நிகரானது.ராகுல் ராம் இதைத்தான் சிரஞ்சீவி பதிவில் செய்து வாசுவின் அற்புதமான, சுவையான ஞான ஒளி பதிவை அவமான படுத்தினார்(அதுவும் சூட்டோடு சூடாக. ரெண்டு வருஷம் கழித்து செய்திருந்தாலாவது சுமாராக மன்னித்து விடலாம்). இது தொடர வேண்டாம். அவரவர் சொந்த பாணியில் எதையேன் செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகிறேன்.
Where is domination? I told clearly that they can write about anything in their own way without mimicking anyone. Anything wrong?
ராகவேந்தர் சார்,
கூவி கூவி பலரை அழைக்கிறீர்களே? அவர்களில் பலர் தங்கள் மீது வருத்தத்தில் இருந்தும் ,உங்கள் வயது கருதி மௌனம் காத்து திரியில் பதிவதை தவிர்த்து மௌன வாசகர்களாய் தொடர்கின்றனர்.
மிக மிக ஆசையுடன்,passion உடன் பதிவிடும் என் போன்ற சிலரையும் irritate செய்து அடக்க பார்க்கிறீர்கள். என்னதான் சாதிக்க போகிறீர்கள்? தனிப்பட்ட முறையில் என்னிடம் பல தர பட்ட சிவாஜி ரசிகர்களும் நொந்து கொண்ட (ஏ.ஆர்.எஸ் போன்றோர்,உங்கள் மிக நெருங்கிய சகாக்கள் உட்பட) 80 களின் படங்களை தூக்கி பிடித்து எதை சாதிக்க எண்ணுகிறீர்கள்?நாமே விரும்பாத குப்பை பண்டங்களை இங்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு பரிமாறி ,என்ன காண போகிறோம்?ஏன் திரும்ப திரும்ப கீறல் விழுந்த ,பழைய தேவையில்லாத குப்பை கூடையில் போட வேண்டிய, ரெகார்ட் போல ஒரே பல்லவியை கீச்சு கீச்சென்று ஒரே விஷயம் ?????
எல்லாப் படங்களும் ஆய்வுக்குரியது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். தாங்கள் ஆய்வு செய்ய விரும்பவில்லை என்றால் விட்டு விடுங்கள். மற்றவர்களை உத்தரவிட தாங்கள் யார். நான் ஏற்கெனவே கூறியது போல் இங்கு ஒரு குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்கிற மனப்பான்மை நிலவுவது போல் உள்ளது. மாடரேட்டர் கூறட்டும் இந்தப் படங்களைப் பற்றி எழுதக் கூடாது என்று அல்லது குறிப்பிட்ட சிலர் எழுதக் கூடாது என்று. அதை விட்டு தாங்கள் கூறும் படங்கள் மட்டும் தான் இங்கு விவாதிக்கப் பட வேண்டும் என்றால் this seem like domination.Quote:
மீண்டும் வலியுறுத்துகிறேன். Filmography என்பது வேறு. தேர்ந்தெடுத்த ஒத்த ரசனை உள்ளவர்களுடன் பகிர்வது என்பது வேறு. விமரிசனம் என்பது வேறு. புகழ் மாலை என்பது வேறு. ஆய்வு என்பது வேறு. எல்லா படங்களும் ஆய்வுக்குரியது அல்ல. பல நண்பர்கள் அதிருப்தியை வெளியிட்டும் ,அவ்வப்போது அனாவசிய தலையீடுகள் தொடர்கின்றன.
நான் என் கருத்தை யார் மீதும் இது வரை திணித்ததில்லை. என்னுடைய அபிப்ராயத்தை ஏற்பதும் ஏற்காததும் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை. 200க்கு மேல் படங்களைப் பற்றிப் பேசமாட்டேன் என்பது எப்படி தங்களுக்குள்ள உரிமை அதே போல் அனைத்துப் படங்களைப் பற்றியும் அதில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றியும் விவாதிப்போம் என்பதற்கும் உரிமை உள்ளது. இதைத் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரே பாணியை ஒன்றுக்கு மேற்பட்டோர் எழுதலாம். அது உலகம் முழுதும் பொதுவானது. ஆனால் மற்றவர்களின் கருத்தைத் தன் கருத்தாக வெளியிடுவது தான் தவறு. இதை தாராளமாக சுட்டிக் காட்டலாம். ஒவ்வொருவர் தங்களைப் போல் எழுத்தில் மேதாவியாக இருப்பார்கள். ஒவ்வொருவர் மற்றவர்களின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு தாமும் அதே போல் எழுதினால் என்ன என விரும்புவார்கள். இது உலகில் உள்ளது தான்.
We can find fault in copying but not following a style.
புதியவர்கள் இளையவர்கள் அவர்கள் விரும்பிய படங்களை அல்லது அதில் நடிகர் திலகத்தின் நடிப்பை எழுத ஆர்வத்துடன் வரும் போது அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்பது மரபு சார்ந்த ஒன்று.
அவர்கள் எழுத்தில் தவறிருந்தால் சுட்டிக் காட்டி திருத்திக் கொள்ளச் செய்வது தான் மனிதாபிமானம்.
மீண்டும் மீண்டும் தங்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதும் விவாதம் செய்வதும் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. தங்களுடைய சிறந்த அறிவாற்றல், அற்புதமான எழுத்து நடை, நடிகர் திலகத்தின் நடிப்பில் தாங்கள் செய்யும் ஆய்வு முறை, அதனை வெளிப்படுத்தும் நேர்த்தி, இது யாருக்கும் இல்லாத சிறந்த விஷயமாகும். இதனைத் தங்களுடைய கோபமான பதிவுகள் மறைக்கின்றன என்பது வருத்தம் தருகிறது.
Irritate செய்வது யார் என்பது எல்லோருக்கும் தெரியும். குப்பை பண்டங்கள் என்பது போன்ற தங்களுடைய தனிப்பட்ட அபிப்ராயங்களுக்குத் துணை சேர்ப்பது தாங்களே அன்றி என்னை சொல்ல வேண்டாம். யார் எனக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்று பார்த்து நான் பதிவிடுவதில்லை. என் கருத்தை ஏற்பவர்களும் இருப்பார்கள் அல்லவா.
80களை எழுதாமல் தாங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்களோ அதைத் தான் 80களை எழுதி நான் சாதிக்கப் போகிறேன்.
தங்களுடைய ஆளுமை இங்கு இருக்க வேண்டும், தாங்கள் தான் இங்கு ஆட்சி செலுத்த வேண்டும், தங்கள் நட்பு வட்டாரம் மட்டுமே இங்கு பதிவிட வேண்டும் என்பதைத் தெளிவாக இங்கு உரைத்து விடுங்கள். இது சிவாஜி ரசிகர்கள் பங்கெடுக்க சரியான இடமல்ல என்பதை நான் தீர்மானித்து ஒதுங்கி விடுகிறேன்.
No more arguements and I give up. You won. Pl.Continue your way. As i expected here comes the threat of quitting .Nowadays ,you are predictable.
மன்னியுங்கள் ராகவேந்தர் சார் தங்கள் மனம் புண் பட்டிருந்தால். செப்டம்பர் மாதமானதால் தெய்வமகன்,புதிய பறவை,வசந்த மாளிகை போன்ற காவியங்களை தவிர்க்க இயலாது. தாங்கள் "போதும் இதெல்லாம்" என்ற பாணியில் பதிவு போட்டு ,மற்றதை கெடுத்ததில் எனக்கு வருத்தமே.
நான் இனி எதிலும் தலையிட போவதில்லை. தெய்வமாகி விட்ட அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அனைவரும் செயல் பட்டால் எனக்கு மகிழ்ச்சியே.
தங்களோடு நிறைய முரண் பட்ட போதிலும்,நடிகர்திலகம் ஒருவருக்காகவே உடல்,பொருள்,ஆவியை கொண்டிருக்கும் உங்களை போன்ற வழிகாட்டி எங்களுக்கு மிக அவசியம்.தடங்கலுக்கு வருந்துகிறேன்.
தொடரலாம்.