-
18th September 2013, 08:37 PM
#11
Junior Member
Regular Hubber
Dear Ganpat Sir.very short and sweet flashback.Especially the punch,"Thaayaar" Amma" vaagi.

Originally Posted by
Ganpat
நன்றிகள் கோடி ராகவேந்தர் சார்.
என்னையும் அங்கீகரித்து இந்த ஜாம்பவான்கள் பட்டியலில் சேர்த்துகொண்டதற்கு!
சரி இந்த ஜாம்பவான்கள் தங்கள் அனுபவத்தை எழுதுவது போல நாமும் முயற்சித்தால் என்ன என நினைத்தபோது..
தோன்றிய முத்து#1..
தெனாலிராமன்:
பிஸ்கட்,சாக்கொலேட்,வாழை,த்ராஷை, பட்சணங்கள் (இனிப்பு காரம்)வறுவல் போன்ற லஞ்ச பொருட்களுடன், மூன்று வயதான
என்னை கூட்டிக்கொண்டு என் தாயார் காசினோ அரங்கிற்கு சென்ற கதையை இன்றும் பரணி பாடுவார்.news reel முடியும் வரை அமைதியாக சாப்பிட்டுகொண்டிருந்த நான், titles தொடங்கியதும் தீவிர வாதியாக மாறி, கையில் கொடுத்த பழங்களை விட்டெறிந்து, "இந்த நிமிடம் வீட்டிற்கு போக வேண்டும்" என அலற,Titlecards ஓடும்போது,நான் பழங்களை screen நோக்கி விட்டெறிந்ததை பார்த்த மற்றவர்கள்
இந்த சிறு வயதில் இப்படி ஒரு தீவிர சிவாஜி ரசிகனா.!!என வியந்திருக்க,சாம தான பேத தண்ட உபாயங்கள் எதுவும் உதவாத நிலையில் 'தாயார்' 'அம்மா'வாகி என்னை இழுத்துக்கொண்டு வெளிநடப்பு செய்தார்.ஆனால் அடுத்த சந்தர்ப்பத்திற்கு அவர் சுமார் 55 ஆண்டுகள் காத்திருக்க நேரிட்டது.சென்ற ஆண்டு Raj TVயில் இதை போடும் போது கூட ஒரு வித பயத்துடன்தான் அவர் என்னுடன் அமர்ந்து பார்த்தார்.
இது அருமையான படம்..தலைவர் வசன உச்சரிப்பில் கவனமாக இருந்த காலம்.ஒவ்வொரு வார்த்தையும் தேன் போல காதில் ஒலிக்கும்.தெனாலி ராமன் என்பதால் படம் முழுவதும் அவர் முகத்தில் குறும்பு கொப்பளிக்கும்."தில காஷ்ட மகிஷ பந்தனம்" ஒன்று போதும்..
தலைவர் எனும் ஜம்போ ஜெட் தமிழ் திரையுலகம் எனும் ஓடு பாதையில் மெதுவாக ஓடத்தொடங்கி takeoffக்கு தயாரான படங்களில் ஒன்று.
A great entertainer.
-
18th September 2013 08:37 PM
# ADS
Circuit advertisement
Bookmarks