நேற்றிரவு நமது ஆனந்தை தரிசிக்க சென்றிருந்தேன் .படம் வெளியானதர்க்கான எந்த ஒரு விளம்பரமும் எந்த பேப்பரிலும் வராத நிலையில் தியேட்டரை சுற்றி ஒரு 200 மீட்டர் வட்டத்தில் மட்டுமே ஒரு சில இடங்களில் போஸ்டர் ஒட்டி இருந்தார்கள்.இந்த நிலையிலும் ஒரு கணிசமான கூட்டம் வந்திருந்தது .வழக்கமான மாலை சாத்துதல் ,கோஷங்கள் ,பேனர்களுக்கு பஞ்சமில்லை .சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ஒரு பிளாஸ்டிக் பை நிறைய ஒரு ருபாய் இரண்டு ருபாய் நாணயங்களுடன் வந்திருந்தார்.அவரிடம் பேச்சு கொடுத்ததில் தான் ஒய்ட்பீல்டிலிருந்து (அருணா தியேட்டரிலிருந்து சுமார் 25 கி.மீ )வந்திருப்பதாக சொன்னார் .சிறு வயதிலிருந்தே தான் நடிகர்திலகத்தின் ரசிகன் என்றும் தான் அவரை பலமுறை நேரில் பார்த்திருப்பதாகவும் ,நீ நன்றாக வருவாய் என அவர் வாழ்த்தியதாகவும் அந்த தெய்வத்தின் வாக்குப்படி தான் ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிவதாவும் சொன்னார் .வசந்த மாளிகை பார்க்கும் ஆவலில் தனியாக அவ்வளவு தூரத்தில் இருந்து டூ வீலரில் வந்ததாகவும் சொன்னார்.காகஸ் டவுனிலிருந்து வந்திருந்த திரு சண்முகம் என்பவர் மிகவும் உணர்சிவயப்பட்டவராக இருந்தார் (உபயம் உற்சாகபானம்?)அரசியலில் எவரிடமும் கை நீட்டி ஒரு பைசாவும் வாங்காத ஒரே உத்தமதலைவர் சிவாஜி என்றும் அவர் உழைத்த காங்கிரஸ் கட்சி அவரை கடைசி வரை கண்டுகொள்ளவில்லைஎன்றும் திட்டிகொண்டிருந்தார்.நடிகர்திலகம் தனிக்கட்சி ஆரம்பித்தபோது தமிழின தலைவர் பிரபாகரன் அவர்கள் கட்சியை வாழ்த்தி நடிகர்திலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் ,தங்களால் ஈழத்தில் நிச்சயம் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கமுடியும் என்று தான் நம்புவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் சொன்னார் .மேலும் தான் சிலகாலம் குஜராத்தில் தமிழர்கள் கணிசமாக வாழும் ஒரு பகுதியில் இருந்ததாகவும் ,ஒரு முறை அங்கே வசந்தமாளிகை திரையிடப்பட்டபோது அங்கேயும் தான் மாலைகள் அணிவித்ததாகவும் பெருமையுடன் கூறிக்கொண்டிருந்தார் .உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு இரண்டே இரண்டு பேர்களால் மட்டுமே பெருமை,அதில் ஒருவர் பிரபாகரன் மற்றவர் நமது நடிகர்திலகம் என்றார்
வேலூர் மாவட்டத்திலிருந்து ஒரு சிலர் ஒரு காரில் வந்திருந்தனர் .அவர்கள் அச்சடித்த ஒரு நோட்டிசை விநியோகித்து கொண்டிருந்தார்கள் .என்னிடம் ஸ்கேனர் இல்லாததால் அதை இங்கு தரவேற்ற முடியவில்லை .அதில் இருந்ததென்னவென்றால் ,அவர்கள் திரு கிருபானந்த வாரியாரின் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம் ,காங்கேயனல்லுரில் வாரியார் சுவாமிகளுக்கு ஞானத்திருவளாகம் அமைத்திருப்பதாகவும் அதன் அருகிலேயே காமராஜர் சிலை அமைத்திருப்பதாகவும் அதன் பக்கத்திலேயே நடிகர்திலகத்தின் சிலை நிறுவ முயற்சி மேற்கொண்டிருப்பதால் ரசிகர்கள் தங்களால் ஆன நிதிஉதவி அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர் அந்த சிவாஜி மன்றத்தின் பொருளாளர் திரு டி.ஏ.சொக்கலிங்கம் (செல்.9442279094) மற்றும் துணை பொதுசெயலாளர் திரு கே.எம்.அம்மையப்பன் (செல்.9344119280) என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது
தொடரும்....