-
18th March 2013, 02:17 PM
#2171
Senior Member
Devoted Hubber
நேற்றிரவு நமது ஆனந்தை தரிசிக்க சென்றிருந்தேன் .படம் வெளியானதர்க்கான எந்த ஒரு விளம்பரமும் எந்த பேப்பரிலும் வராத நிலையில் தியேட்டரை சுற்றி ஒரு 200 மீட்டர் வட்டத்தில் மட்டுமே ஒரு சில இடங்களில் போஸ்டர் ஒட்டி இருந்தார்கள்.இந்த நிலையிலும் ஒரு கணிசமான கூட்டம் வந்திருந்தது .வழக்கமான மாலை சாத்துதல் ,கோஷங்கள் ,பேனர்களுக்கு பஞ்சமில்லை .சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் ஒரு பிளாஸ்டிக் பை நிறைய ஒரு ருபாய் இரண்டு ருபாய் நாணயங்களுடன் வந்திருந்தார்.அவரிடம் பேச்சு கொடுத்ததில் தான் ஒய்ட்பீல்டிலிருந்து (அருணா தியேட்டரிலிருந்து சுமார் 25 கி.மீ )வந்திருப்பதாக சொன்னார் .சிறு வயதிலிருந்தே தான் நடிகர்திலகத்தின் ரசிகன் என்றும் தான் அவரை பலமுறை நேரில் பார்த்திருப்பதாகவும் ,நீ நன்றாக வருவாய் என அவர் வாழ்த்தியதாகவும் அந்த தெய்வத்தின் வாக்குப்படி தான் ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிவதாவும் சொன்னார் .வசந்த மாளிகை பார்க்கும் ஆவலில் தனியாக அவ்வளவு தூரத்தில் இருந்து டூ வீலரில் வந்ததாகவும் சொன்னார்.காகஸ் டவுனிலிருந்து வந்திருந்த திரு சண்முகம் என்பவர் மிகவும் உணர்சிவயப்பட்டவராக இருந்தார் (உபயம் உற்சாகபானம்?)அரசியலில் எவரிடமும் கை நீட்டி ஒரு பைசாவும் வாங்காத ஒரே உத்தமதலைவர் சிவாஜி என்றும் அவர் உழைத்த காங்கிரஸ் கட்சி அவரை கடைசி வரை கண்டுகொள்ளவில்லைஎன்றும் திட்டிகொண்டிருந்தார்.நடிகர்திலகம் தனிக்கட்சி ஆரம்பித்தபோது தமிழின தலைவர் பிரபாகரன் அவர்கள் கட்சியை வாழ்த்தி நடிகர்திலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் ,தங்களால் ஈழத்தில் நிச்சயம் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கமுடியும் என்று தான் நம்புவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் சொன்னார் .மேலும் தான் சிலகாலம் குஜராத்தில் தமிழர்கள் கணிசமாக வாழும் ஒரு பகுதியில் இருந்ததாகவும் ,ஒரு முறை அங்கே வசந்தமாளிகை திரையிடப்பட்டபோது அங்கேயும் தான் மாலைகள் அணிவித்ததாகவும் பெருமையுடன் கூறிக்கொண்டிருந்தார் .உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு இரண்டே இரண்டு பேர்களால் மட்டுமே பெருமை,அதில் ஒருவர் பிரபாகரன் மற்றவர் நமது நடிகர்திலகம் என்றார்
வேலூர் மாவட்டத்திலிருந்து ஒரு சிலர் ஒரு காரில் வந்திருந்தனர் .அவர்கள் அச்சடித்த ஒரு நோட்டிசை விநியோகித்து கொண்டிருந்தார்கள் .என்னிடம் ஸ்கேனர் இல்லாததால் அதை இங்கு தரவேற்ற முடியவில்லை .அதில் இருந்ததென்னவென்றால் ,அவர்கள் திரு கிருபானந்த வாரியாரின் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம் ,காங்கேயனல்லுரில் வாரியார் சுவாமிகளுக்கு ஞானத்திருவளாகம் அமைத்திருப்பதாகவும் அதன் அருகிலேயே காமராஜர் சிலை அமைத்திருப்பதாகவும் அதன் பக்கத்திலேயே நடிகர்திலகத்தின் சிலை நிறுவ முயற்சி மேற்கொண்டிருப்பதால் ரசிகர்கள் தங்களால் ஆன நிதிஉதவி அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தனர் அந்த சிவாஜி மன்றத்தின் பொருளாளர் திரு டி.ஏ.சொக்கலிங்கம் (செல்.9442279094) மற்றும் துணை பொதுசெயலாளர் திரு கே.எம்.அம்மையப்பன் (செல்.9344119280) என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது
தொடரும்....
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
18th March 2013 02:17 PM
# ADS
Circuit advertisement
-
18th March 2013, 02:53 PM
#2172
Junior Member
Seasoned Hubber
Thank you very much
Murali sir, Ragavendran sir, KC Sekar sir, Vasudevan sir, Gopal Sir
Chevaliyar scans are too good, never seen before, big thanks to Mr. Gopal & MR. Vasudevan
-
18th March 2013, 04:09 PM
#2173
Junior Member
Seasoned Hubber
Mr Harish,
Aruna theatre is in Sriramapuram and to watch the movie from Whitefield is amazing
thing. This shows how fans are still treat NT's with due respect as well as affection.
Waiting for your continuation of VM experience.
-
18th March 2013, 11:48 PM
#2174
Senior Member
Seasoned Hubber
முரளி சார் சந்தடியில்லாமல் 2000 பதிவுகளைக் கடந்து விட்டார். தாமதமானாலும் பரவாயில்லை. அவருக்கு நம் உளமார்ந்த வாழ்த்துக்கள். 2000 முத்துக்களை அளித்த முரளி சாரை நாம் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம். இது வரை நமது திரியில் வராதவர்களும் வந்து அவரை ஒருவர் பாக்கியில்லாமல் வாழ்த்த வேண்டும்.. வாருங்கள் நண்பர்களே...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th March 2013, 11:53 PM
#2175
Senior Member
Seasoned Hubber
அருணாவில் ஆனந்தின் வெற்றி உலா -
அங்கே அழைத்துச் செல்லும் செந்திலின் எழுத்துலா ...
முக்கனிகள் வாழை, மா, பலா
தாராத இனிமை தந்ததே உங்கள் எண்ண உலா..
மேலும் தொடருங்கள் செந்தில்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
19th March 2013, 05:36 AM
#2176
Senior Member
Seasoned Hubber
-
19th March 2013, 05:41 AM
#2177
Junior Member
Platinum Hubber
-
19th March 2013, 06:24 AM
#2178
Junior Member
Senior Hubber

Originally Posted by
RAGHAVENDRA
முரளி சார் சந்தடியில்லாமல் 2000 பதிவுகளைக் கடந்து விட்டார். தாமதமானாலும் பரவாயில்லை. அவருக்கு நம் உளமார்ந்த வாழ்த்துக்கள். 2000 முத்துக்களை அளித்த முரளி சாரை நாம் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம். இது வரை நமது திரியில் வராதவர்களும் வந்து அவரை ஒருவர் பாக்கியில்லாமல் வாழ்த்த வேண்டும்.. வாருங்கள் நண்பர்களே...

Murali sir Great achievement done without any AARPATTAM like your personality SILENTLY given 2000 golden writeups which adds a pepto the feather in the NT hub. GREAT sir pl keep it up.
-
19th March 2013, 07:06 AM
#2179
Junior Member
Newbie Hubber
முரளி,
முதல் முறையாக, தமிழ் ,ஆங்கிலம் இரண்டிலும் ஒரு அதீத சம புலமை கொண்ட எழுத்துக்களை சந்தித்தேன். என்னை இந்த திரிக்கு ஈர்த்தவை உங்கள் எழுத்து, சாரதா,
பம்மலார்,என்றால் மிகையில்லை. நான் ஏற்கெனெவே குறிப்பிட்டது போல் நீங்கள் அனைத்து எண்ணங்கள்,ரசனைகள் கொண்ட பலருக்கும் இணைப்பு பாலம். நிறைய எழுதுங்கள். சமீபத்திய தியாகம் பதிவு, மிக சிறந்த ஒரு பதிவு.
இருபதாயிரம் வந்தாலும் ,எங்களுக்கு திருப்தி இராது. திகட்டாது.
நான் சொன்ன படியே,ஓரளவு குடும்ப கடமைகளை நிறைவேற்றிய பிறகு,முழு நேர எழுத்துக்கு வந்து விடுங்கள். நீங்கள் அடைய வேண்டிய உயரங்கள் உங்களுக்காக காத்திருக்கிறது.
-
19th March 2013, 07:43 AM
#2180
Senior Member
Devoted Hubber
Congratulations Murali. You are doing a phenomenal service to spread NT's fame and i wish you reach many more milestones in the future. Until then, make us enjoy about NT thru your fine writing.
Bookmarks