Originally Posted by
Murali Srinivas
மீள் பதிவு.
தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய ஒரே முதல்வன்
தமிழகத்தில் ஏழைகளுக்கு வாழ்வாதாரம் அமைத்த ஒரே ஏழை பங்காளன்.
கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் கடமையை நிறைவேற்றிய ஒரே கர்ம வீரன்
தமிழகத்தில் தொழிற்புரட்சியை ஏற்படுத்திய ஒரே மனிதன். அந்த மனிதனின் ஆட்சியில்தான்
PRESTIGIOUS SCHEMES WITH FUTURISTIC VISION !
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் பிளான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
போன்றவை துவக்கப்பட்டன.
இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் அனைத்துமே பெருந்தலைவர் காமராஜ் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14.
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
இவை அமைக்கப்பட்டதும் அவரின் 9 ஆண்டு கால ஆட்சியில்தான்.
அது மட்டுமல்ல இன்றைக்கு Industrial clusters என்று அழைக்கப்படும்
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கிய ஒப்பற்ற நிர்வாகி.
இத்தனை சாதனைகள் புரிந்தும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ள தெரியாத எளிய மனிதன்.
எப்படி நடிகர் திலகத்தின் ரசிகன் என்பதை வாழ்நாள் பெருமையாக சொல்லிக் கொள்வோமோ அது போன்றே பெருந்தலைவரின் தொண்டன் என்பதையும் வாழ்நாள் பெருமையாக நெஞ்சில் சூடிக் கொண்டு நடக்கும் லட்சக்கணக்கான மனிதர்களில் ஒருவனாக அந்த மாமனிதனின் பிறந்த நாளன்று அவர் வாழ்ந்த திசை நோக்கி வணங்குகிறேன்.
மீண்டும் இது போன்ற தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒரு தலைவன் எப்போது தோன்றுவான்?
அன்புடன்