msvtimes.com இணைய தளத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி மெல்லிசை மன்னரின் புகழ் பாடும் மற்றுமோர் இணைய தளம்.
http://i872.photobucket.com/albums/a...pshvsdylau.jpg
மிக விரைவில்...
Printable View
msvtimes.com இணைய தளத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி மெல்லிசை மன்னரின் புகழ் பாடும் மற்றுமோர் இணைய தளம்.
http://i872.photobucket.com/albums/a...pshvsdylau.jpg
மிக விரைவில்...
vanakkam rhagav ji
வணக்கம் ராஜேஷ்
வெற்றிக்கு வாலி ஐயாவின் ரகசியம்
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்
https://www.youtube.com/watch?v=pQE6VM3yNxY
காலங்கள் கடந்தாலும் அன்றைய சூழலுக்கு ஏற்ப வெற்றியின் ரகசியம்
கேட்டுக்கோ
https://www.youtube.com/watch?v=HgIGnHbLGwI
கேட்டுக்கோ
லக்கு கால் கிலோ லாஸ் கால் கிலோ
லேபர் கால் கிலோ சேத்துக்கோ
பக்தி கால் கிலோ ஹோப்பு கால் கிலோ
டேலண்ட் கால் கிலோ
எல்லாம் தான் சேர்த்து கட்டினால்
பெரிய பொட்டலம்
சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்
அதே எதிர் நீச்சலை அனிருத் இப்படி உருவாக்கியுள்ளார்
https://www.youtube.com/watch?v=hO5lQX110zM
மதுண்ணா, ராகவேந்திரன் சார்,
எனக்கு மிக மிக பிடித்த எம்.எஸ்.முராரி இசையமைப்பில் 1991-ல் வெளிவந்த 'மலைச்சாரல்' என்ற படத்தில் அற்புதமான மலைப் பின்னணி இசையில் அட்டகாசமான ஒரு பாடல்.
ஷைலஜாவின் மென்கீற்றுக் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் இருக்கிறது. முராரியின் இசைக்கருவிகள் மனதில் முகாந்திரமிட்டு அமர்ந்து கொள்கின்றன.
இடைவிடாது ஒலித்து ஆரம்பிக்கும் அட்டகாச பாங்கோஸ் இசை. உடன் ஒலிக்கும் 'ஹோலே... ஹோலே' ஆண், பெண் காட்டுக் குரல் கோரஸ்கள்.
ஹோ ஹோ சாமி
ஓடி வந்தேன் சாமி
சேதி சொல்ல
தேடி வந்தேன் சாமி
நீதி சொல்ல இங்கே
நாதியில்லை சாமி
நாளை என்ன ஆகும்
நல்ல வழி காமி
ஷைலஜா கொன்னுட்டார் போங்க. ஒவ்வொரு இசைக்கருவியும் செய்யும் அமர்க்களம் அருமையோ அருமை.
கேட்கிறேன்...கேட்கிறேன்...கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
http://play.raaga.com/tamil/album/Ma...songs-T0003915
ஜி
நம்ம அடிபோடி பைத்தியக்காரி
ஆம் தாமரை நெஞ்சம் கன்னடத்தில் முகில மல்லிகே (வி.எஸ். நரசிம்மன் இசையில்)
இசையரசியுடன் வாணி
https://www.youtube.com/watch?v=Egdx-FKCYo8
முழுப்படம் இதோ
https://www.youtube.com/watch?v=4YFd0rGKffM
வித்யாசாகரின் அருமையான இசையில்
ஹரிஹரன் சித்ரா குரல்களில் அருமையான பாடல்
வித்யாசாகருக்கு மாநில விருது பெற்றுத்தந்த படம்
https://www.youtube.com/watch?v=JsjwxqSlezM
வாசு ஜி..
ஹோ ஹோ சாமி இப்போதான் கேட்கிறேன்... ( எல்லா பாட்டுமே இப்போதுதான் கேட்பதாக நினைக்கிறேன். நல்ல மலை மியூசிக்க்... டங்க் டக் ).. அருமையாக அந்த மூடைக் கொண்டு வந்திருக்கார் முராரி. மலைச்சாரல் என்றால் குயிலி போஸ்டர் மட்டும்தான் நினைவில் இருக்கு.. சிக்காவே சரணம்.
வாசுஜி..
பல்லாக்கு போல வண்டியைத் தள்ளிக்கிட்டு போய் சேர்க்கும் முன்.. இன்னொரு உதவி...
இது சுசீலாம்மா குரல் என்று ஞாபகம்... பாடலின் நடுவில் வரும் ரெண்டே வரிகள்...
" ஊடுதல் காமத்திற்கு இன்பம் என்று - அதை
உணர்ந்த பின் காதலர் சங்கம் என்று"
இதைப் பாடிப் பார்த்தால் டியூன் "தளதள தளதள தளவென அலையிருக்க - இளம் தாமரைப் பூவினில் மணமிருக்க" என்பது போல தோன்றியது. ஆனால் அவன் பித்தனா படத்தின் "மாப்பிள்ளை மனசுக்கு பிடிக்கலையா" பாட்டை யூடியூபில் பார்த்தால் இந்த வரிகள் வரலை. இது எந்தப் பாட்டில் வருகிறது என்று ஏதாவது சொல்லுங்க...
மதுண்ணா..
ஊடுதல் காமத்திற்கு ந்னு சர்ச் பண்னா இந்தப் பாட் வருது திருக்குறள்
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். #1330
காமத்திற்க்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
மு.வரதராசன்
உணர்ந்த பின் நு போட்டாலும் ஒரு பாட்டும் வரலை..
காதலர் சங்கம் நு போட்டா மதுரா நகரில் தமிழ் ச் சங்கம்னு வருது..ஹூம்..பெண் மனசு மட்டுமல்ல சமயத்தில் சக ஆணின் மனமும் புரி படுவதில்லை :)
சிக்கா... இப்படி பல விதமா சுவர்ணமுகி டான்ஸ் மாதிரி வளைச்சு வளைச்சு இந்தப் பாட்டைத் தேடி கூகுல் செஞ்சுட்டுதான் இங்கே வந்தேன்... சிக்காமல் போயிடுச்சு.. ஆனா நம்ம திரி வலையில் மாட்டாம போகாது...
மதுண்ணா!
"தளதள தளதள தளவென அழகிருக்க
இளம் தாமரைப் பூவினில் மணமிருக்க
கலகல கலகல கலவென ரதியிருக்க
இரு கைகளில் நடுவினில் இடம் இருக்க"
'அவன் பித்தனா' படத்தில் சச்சு பளபளவென பாடும் வரிகள்.
நீங்கள் சொல்வது?!....பார்ப்போம்.
ட்ரை பண்ணுவோம்.
அதுக்கு முன்னே ஒரு சின்ன சந்தோஷம்.
"பல்லாக்கு போல வண்டி பாதையிலே ஓடட்டும் தள்ளம்மா தள்ளம்மா தள்ளம்மா" என்று நீங்கள் கேட்ட பாடலின் படம் 'அன்னை சொன்ன சொல்'. ஒருவழியா நம்ம பேராசிரியர் உதவி செஞ்சாரு. அப்புறம் பாடலைத் தள்ளி விட்டவங்க நம்ம டி.எம்.எஸ்ஸும், ஜமுனாராணி அக்காவுமாம்.:) இசை மாமாவாம்.
மதுண்ணா!
அதுல ஒரு சுசீலாம்மா பாட்டு இருக்குது. கேட்டிருக்கீகளா?
'அடிக்கிறது டூப்பு
அதுல இவர் டாப்பு
புத்தியிலே ச்சீப்பு
பொண்ணே கண்டா சோப்பு'
ஈவ்னிங்தான் மொத தபா கேட்டேன். சுமார் ரகம்.
அது இல்லாம பல்லவியில பாடகர் திலகம் 'காதலுக்கு' எடுக்க சுசீலா 'நாலு பக்கம்' முடித்து நாலுவரி இப்படியே போகும் பாடல் ஒன்னு. நன்கு தெரிந்த பாடல்தான். (ஆமா! அது இந்தப்படம்தானா?)
காதலுக்கு...... நாலு பக்கம்
காதலுக்கு...... நாலு நடை
மாதருக்கு...... நாலு குணம்
மைவிழிக்கு... நாலு மொழி
நீங்க கேட்ட பாடலை நான் கேட்டிருக்கேன். காதாலேயும் அப்புறம் கையாலேயும்.:) கிடைச்சுடும்னு நம்பிக்கை இருக்கு. பொறுப்போம்...இசை ஆள்வோம்.
ஆமா! படம் பெயர் தெரிஞ்சுடுத்து. யார் நடிகர்கள்னு இப்போ ஏதாவது தெரியுதா?
அடுத்ததை தேடணும். இனிய வதை.:)
ஜி வணக்கம்
vanakkamji! vaango! nallaa thoongineengalaa?:)
வாசு சார்
ஒரு வழியாக பேராசிரியரின் உதவியால் பாடலைப் பற்றிய தகவல் கிடைத்து விட்டது.
அன்னை சொன்ன சொல் .. ஜோதி சித்ரா என்ற கம்பெனி எடுத்த படம்...
இவர்கள் பொய் சொல்லாதே என்று ஒரு படம் எடுத்து 1971ம் ஆண்டு வெளிவந்தது. இந்த இரண்டு படங்களும் ஞாபகம் உள்ளன. இரண்டுமே ரவி நடித்த படங்கள். அன்னை சொன்ன சொல் படம் வெளியானதா என்பது தெரியவில்லை. ஆனால் பேசும் படம் பத்திரிகையில் தொடர்ந்து செய்தியும் நிழற்படங்களும் இடம் பெற்று வந்தது மட்டும் ஞாபகம் இருக்கிறது.
பொய் சொல்லாதே படத்தில் ராஜஸ்ரீ ஜோடி. அதற்கும் கே.வி.எம். அவர்கள் தான் இசை. எடிட்டர் பாலு அவர்களின் இயக்கத்தில் வந்த படம் என நினைக்கிறேன்.
அன்னை சொன்ன சொல் படத்தில் ரவி குடுமியுடன் காட்சியளிக்கும் ஸ்டில் ஒன்று பேசும்படம் பத்திரிகையில் போட்டிருந்தார்கள்.
ஆனால் இந்தப் பாடலை ஓரிரு முறை மட்டுமே கேட்டிருக்கிறேன். நீண்ட நாட்களாக மறுபடியும் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
வாசுஜி, ராகவ்ஜி.....
அது ஜமுனா ராணி என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் டி.எம்.எஸ் என்பதில் எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கு. என் காதில் கேட்கும் பாடல் டி.எம்.எஸ் குரலாக இல்லியே ! ஐயகோ !
மேலும் இது அன்னை சொன்ன சொல்தானா ? ஏனென்றால் சத்தியம் தவறாதே படப் பெயரைக் கேட்டதும் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தது. இப்போ ராகவ்ஜி பொய் சொல்லாதே என்றதும் இது ஒரு வேளை பொய் சொல்லாதே படம்தானோ என்று ஒரு சந்தேகம் கூட வருது... ( இல்லாட்டி எனக்கு ஏன் சத்தியம் தவறாதே உடன் பொய் சொல்லாதேவை இணைத்து பட்டர்ஃப்ளை எஃபெக்ட் வந்திருக்கு ? )
பாட்டு கிடைச்சா அட்லீஸ்ட் பாடியவர்கள் யாருன்னு தெரிஞ்சுக்கலாம். வெயிட்டிங்,,,,
பாட்டு கிடைச்சு கேட்டுட்டா முடிவுக்கு வந்து விடலாம்.
மதுண்ணா!
மயங்கவே வேண்டாம். நிச்சயம் கண்டு பிடித்து விடலாம். ஆமாம்! மற்ற இரண்டு பாடல்கள் கேட்டாயிற்றா?
ராகவேந்திரன் சார்,
அன்னை சொன்ன சொல், பொய் சொல்லாதே இரண்டு படங்களைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அறிமுகத்திற்கு நன்றி! ஆனால் ரவி குடுமி வைத்த போஸ் சின்னா பாணியில் புகை.:smile:
காதலுக்கு...... நாலு பக்கம்
காதலுக்கு...... நாலு நடை
மாதருக்கு...... நாலு குணம்
மைவிழிக்கு... நாலு மொழி
இதை நிச்சயம் கேட்டிருப்பீங்க. இதுவும் அன்னை சொன்ன சொல்தானா என்று உறுதி செய்யுங்கள்.
http://cooltoad.com/music/song/ac651...2a71a89b9640e5
அடுத்தது சுசீலாவின் பி கிரேட் பாடல். இது வேற ஒரு பைலா கிடைச்சுது. அப்புறம் நான் மீடியா பயர்ல நேத்து அப்லோட் பண்ணினேன். கேட்டுட்டு சொல்லுங்கோ.:smile:
'அடிக்கிறது டூப்பு
அதுல இவர் டாப்பு
புத்தியிலே ச்சீப்பு
பொண்ணே கண்டா சோப்பு'
http://www.mediafire.com/download/j6...rathu_doopu.ra
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.
http://www.ishafoundation.org/blog/w...-6-640x360.jpg
'கலைமகன்' இன்று எனக்கிட்ட ஆணை.
'குழந்தையின் கோடுகள் ஓவியமா?
இந்த குருடன் வரைவது ஒரு காவியமா?
நினைந்ததை உரைத்தேன் புலவர்களே!
குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்!
கலைமக(ன்)ள் எனக்கொரு ஆணையிட்டாள்
சில காவியப் பொருள்களைத் தூது விட்டாள்
அலையெனும் எண்ணங்கள் ஓட விட்டாள்
அதை ஆயிரம் உவமையில் பாட விட்டாள்
பாட விட்டாள்'
'சாகுந்தல'த்தை சபையில் அரங்கேற்றும் சாகா வரம் பெற்ற புலவன். அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து சாதனை படைக்கும் கலைத் தெய்வம். பனை ஓலையில் எழுத்தாணி பிடித்து
பெற்ற வரத்தால் பிழை புரிந்த சூரனிடம்
பட்டதெலாம் தேவர் குலம் பதைத்தே
முறையுரைக்க
கற்றை சடை முடியான்
கண்ணைத் திறந்ததுவும்
கந்தன் பிறந்ததுவும்
கைவேல் எறிந்ததுவும்
சந்தக் கவிதையிலே சாற்றினேன்
தாய் கொடுத்த இந்த மழலையையும்
ஏற்றருள்வாய் தாயகமே!
தாயகமே! தாயகமே
என்று 'நடிகர் திலகம்' காவிய அரங்கேற்றம் பண்ணும் போது அது நிஜ சபையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 'கந்தன் பிறந்ததுவும்' வரியில் திலகம் பின் பக்கம் உடல், கழுத்து இவற்றறை பின்னிழுத்து ஓலையில் முன் எழுதும்போது மூவேந்தனும் மண்டியிட்டு அடிபணிய மாட்டானா இந்த நடிப்பு வேந்தனின் நயங்களைப் பார்த்து?
வீணை ஓசையிடையே சுசீலாம்மா,
'காதல் மணம் கொண்ட பாசம்
இந்த கவிஞனின் மேக சந்தேசம்'
பாடும் போது நாடி நரம்புகள் சிலிர்த்தெழாதோ!
'சூரசம்ஹார சம்பவம்
கவி சொல்லும் குமார சம்பவம்
தாரகன் வீழ்ந்த சம்பவம்
கவி தந்த குமார சம்பவம்'
என்று விறுவிறுப்புமாய், வீரக் கொப்பளிப்புமாய் இசையரசி பாடும்போது இன்னல்கள் அனைத்தும் அந்தக் கணத்தில் மறைந்து மாயமாகும்.
https://youtu.be/HpPOKaKrbrU
வாசுஜி... சர்க்கரைப் பொங்கல் பேஷ் பேஷ்...
எல்லோருக்கும் ஆயுத பூஜை / சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்
// காதலுக்கு நாலு பக்கம் ... கேட்ட நினைவே இல்லை.. ஆனா டமுக்குடப்பா டியாலோ...டியாலோ... அடிக்கிறது டூப்பு பாட்டு ஞாபகத்துக்கு வந்திருச்சு. படம் பெயர்தான் நினைவுக்கு வரலை :( //
hi happy saraswathi poojai
Bu t we are celebrating tomorrow only naalaikku thaan navami muzhukka irukkaam.. :)
aahaa கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள் என்னா பாட்.. நினைவூட்டலுக்கு நன்றி.. ரேர் சாங்க்ஸ் அப்புறம் நிறைய சாங்க்ஸ் இனிமே தான் கேக்கணும்.. நிறைய ஹோம் வொர்க் பெண்டிங்..
குடுமி ரவி யைப் பார்த்துபுகை வராது வாசு.. கூட ராஜஸ்ரீயும் இருக்குமே அதான் :)
காதலுக்கு...... நாலு பக்கம்
காதலுக்கு...... நாலு நடை
மாதருக்கு...... நாலு குணம்
மைவிழிக்கு... நாலு மொழி// வீட் போய் கேட் ஃபுல் பாட் லிரிக்ஸ் எழுதணும்.. :)
காணவில்லை
ரவி சார்
ஐந்தடி. நாலு அங்குலம். நல்ல சிகப்பு கலர். கொஞ்ச நாளாக திடீரென காணவில்லை. பகுதி பகுதியாக பதிவுகள் போடுபவர். ஹைதராபாதை சேர்ந்தவர். நல்ல ஆன்மீகவாதி. மகாபாரதக் கதைகள், ராமாயணக் கதைகள் சொல்வதில் வல்லவர். கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ஒரு நல்ல ராமன் புகைப்படம் பரிசாக அளிக்கப்படும்.
கிருஷ்ணா சார்!
நல்ல உயரம் பிளஸ் வெண்தாடி கொஞ்சம். ஒல்லி உருவம். சினிமா புள்ளி விவரங்கள் நன்கு தெரிந்தவர். காமெடி ரசனை அதிகம். தக்காளி மேல் பிரியம் கொண்டவர். கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு இன்றைய விலையில் ஒரு கிலோ துவரம்பருப்பு பரிசு. இவருக்குத்தான் காஸ்ட்லி பரிசு.
கல்நாயக்
அடிக்கடி காணாமல் போய் விடுவார். பூக்கள் மேல் பிரியம் ஜாஸ்தி. கடலூர்க்காரர். திடீரென வருவார். தொடர்ச்சியாகக் காணாமல் போய் விடுவார். எப்பவாவது வந்து லைக் போடுவார். ஒரு முழுத் திரியையும் தாங்கக் கூடிய சக்தி இருந்தும் இப்போது சக்தி இழந்து விட்டார். கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு கூடை ரோஜாப்பூ வழங்கப்படும்.
எஸ்.வி என்கிற வினோத் சார்
போட்டோ, ஆவணங்கள் போடுவதில் வல்லவர். எம்.ஜி.ஆர் மேல் பிரியம் ஜாஸ்தி. எப்படியாவது எதிலாவது சம்பந்தப்படுத்தி ஒரு எம்.ஜி.ஆர் வீடியோ பாடல் ஒன்று போட்டு விடுவார். அது கூட இப்போ இல்லை. கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு 'ஒளி விளக்கு' பரிசு.
கார்த்திக் சார்
போனால் திரும்பி வர ஒன்றிரண்டு வருடங்கள். 'இரும்பு' மனசு கொண்டவர். நாம்தான் அடிக்கடி 'கோட்டை' விடுகிறோம். நல்ல அறிவாளி. நடிகர் திலகம் மேல் பிரியம் ஜாஸ்தி. நிறைய வதந்திகளுக்கு உள்ளானவர். சா தா மனிதரே அல்ல. நல்ல பாராட்டும் குணம் இவரிடம் உண்டு. நல்ல விஷய ஞானம் உள்ளவர்.
பட்டியல் தொடரும்.
//ஒரு நல்ல ராமன் புகைப்படம் பரிசாக அளிக்கப்படும்.// family photo vaa single ramanaa :)
//இன்றைய விலையில் ஒரு கிலோ துவரம்பருப்பு பரிசு. இவருக்குத்தான் காஸ்ட்லி பரிசு. // :)
//கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு கூடை ரோஜாப்பூ வழங்கப்படும்.// நான் அடிஷனலா எப்போதாவ்து சந்திக்க நேர்ந்தால் அவருக்கு நிலாக் காட்டுவேன் - பேக் க்ரெளண்டில் தாஜ் மகால்... :)
//அது கூட இப்போ இல்லை. கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு ஒரு 'ஒளி விளக்கு' பரிசு. // :) வெள்ளி தானே..
//நல்ல பாராட்டும் குணம் இவரிடம் உண்டு. நல்ல விஷய ஞானம் உள்ளவர். // இவரைக் கண்டு பிடிச்சா ப்ரைஸ் தரமாட்டீங்களா.. சரி நான் தர்றேன்.. ஒரு ஆவணப் படம் ராகவேந்திரர் எஸ்.வி உங்களிடமிருந்து கேட்டு..அவருக்குப் பிடித்த நடிகை ஃபோட்டோ (யார்னு ஓலமிட்டுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன் :) )
https://youtu.be/9z5RZltyqaw
தோழர்களை அழைத்ததனால் தோழா தோழா பாட் போட்டேன் என்பதை :)
ஆஹக்கூடி என்னை மிஸ் பண்ணலயாங்காட்டியும் .. ம்ம்..வெச்சுக்கறேன் :sad: :)
//ஆஹக்கூடி என்னை மிஸ் பண்ணலயாங்காட்டியும் .. ம்ம்..வெச்சுக்கறேன்//
உம்மை மிஸ் பண்ணுவதா? நடக்குமா? அச்சச்சோ! ஒருபக்கம் குழந்தை அழுதுடுச்சே! ஒருவேளை நீங்கள் காணாமல் போய் இருந்தால் உங்களைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் பழைய விலை மதிக்க முடியாத 'பேசும்படம்' இதழ் ஐந்தும், 'பொம்மை' பத்திரிகை ஐந்தும் பரிசாக அறிவித்திருப்பேன். ஏனென்றால் அதுதான் உயர்ந்த பரிசு. எங்குமே கிடைக்காதது. வேண்டுமானால், செந்தில் வேலையும், ராகவேந்திரன் சாரையும் கேட்டுப் பாருங்கள்.
//(யார்னு ஓலமிட்டுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன் )
ஆலம் இட்டுக் கரைத்து கேட்டாலும் சொல்ல மாட்டீர்களோ!:p
மதுண்ணா!
'வண்டி' கிடைச்சுடுத்து. கொடுத்து உதவியவங்க நம்ம அருமை நண்பர் சுந்தரபாண்டியன் அவர்களும், பெரிய மனது கொண்ட பேராசிரியரும். சிரமம் பாராது தேடி அளித்த இருவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
நீங்கள் கூறியது உண்மை. அது டி.எம்.எஸ்.குரல் இல்லை. 'அய்யகோ!' சரிதான்.:smile: தாராபுரத்தார் குரல் மாதிரி இருக்கு.
இந்தாங்க உங்க ஆசைப்பாட்டு. தள்ளித் தள்ளி ஓட்டாதீங்க.:p
http://www.mediafire.com/listen/qw6e...ic+KVM+%40.mp3
'நீலாவுக்கு நெறஞ்ச மனசு'
தங்கவேலு பல கெட்-அப்களில்.
எல்லா வாத்தியங்களையும் வாசிச்சுக்ட்டு, டிப்டாப்பாக டிரெஸ் பண்ணி மேலை நாட்டு டான்ஸ் ஆடி..
யப்பா!
கொஞ்சம் வித்தியாசம்.
எஸ்.சி.கிருஷ்ணன் குரல் இல்லாம திருச்சி லோகநாதன். லோகநாதன் டிக் டிக் டிக் மியூசிக்கிற்கு நிறைய ஆங்கல வார்த்தைகள் கலந்து பாட்டிய பாட்டு இதுவாத்தான் இருக்கணும்.
ஒரிஜினாலிட்டி
ஒசந்த குவாலிட்டி
பார்டி
பியூட்டி
பெர்சனாலிட்டி
லவ்வுவதே என் டியூட்டி
நைஸ் கண்ணாட்டி
டிபிகல்டி
மேரேஜ் செய்யாட்டி
எம்ப்டி
'எஸ்'ன்னு சொல்லாட்டி
எல்லாம் 'டி'
எத்தனை இங்க்லீஷ் வார்த்தைகள் தமிழில் கலந்த தங்க்லீஷ் பாட்டு!
கையில தட்டு வச்சிருக்கும் வேலைக்காரி யார் தெரியுதா?
https://youtu.be/GKJypJCJW38
ஜி வணக்கம்