Originally Posted by
NTthreesixty Degree
இன்று வழக்கம் போல வேலைக்கு சென்று வரும்போது ரோட்டில் 100வது வருட இந்திய சினிமா cutout பார்க்க நேர்ந்தது. அதில் வழக்கம் போல நம் நடிகர் திலகத்தின் படம் இருட்டடிப்பு. சிரிப்புதான் வந்தது அதை பார்க்கும்போது.
இப்படி ஒரு பயந்தாங்கொள்ளிகள், நடிகர் திலகத்தின் படத்தை போட்டால் எங்கே மவுசு இன்னும் கூடிவிடுமோ என்ற குளிர்ஜுரத்தில் நடிகர் திலகத்தின் படத்தை போடாமல் அதே நேரத்தில் சில இத்துப்போன படங்களை என்னமோ சாதனை படங்கள் போல போட்டிருக்கிறார்கள் மூடர்கள். என்னமோ இந்திய திரைவானின் மைல்கல் படங்கள் போல ஒரு பாவ்லா, ஒரு போலி சித்தரிப்பு..! அய்யோபாவம் ! இவ்வளவு தரம் தாழ்ந்திருக்கவேண்டாம் !
இவர்களுக்கென்ன தெரியும் ? பொய், பித்தலாட்டம், உண்மையை இருட்டடிப்பு இதுதானே ? Such a mean minded fellows ! அவருடைய பெயரை, புகழை மறைத்ததாக இவர்கள் நினைகிறார்கள். இதில் இவர்கள் பெயர் தான் மேலும் கெட்டு போகிறதென்று இந்த மடையர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஏற்கனவே நிறைய பேர் பேச தொடங்கிவிட்டார்கள். என்னப்பா கர்ணன் தவிர கட்டபொம்மன், திருவிளையாடல், திருவருட்செல்வர் போன்ற கலர் படங்களை போடவில்லை ...இவனுங்க வேணும்னே பண்றாங்கப்பா என்று..!
கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு ஒருநாள் வந்துதான் தீரும். உண்மை என்றிருந்தாலும் திரும்ப ஒரு அடி அடிக்கும் அப்போது தெரியும் உண்மையின் வலிமையை.