-
19th September 2013, 09:52 PM
#2191
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Thala_rasigan
kuppai endru sollappadum sila padangalil sivaji sir'in nadippil kurai ondrum irunthathillai.. vayathil siriyavan kooruvathaaga ninaikka vendaam.. ther r number of 'young sivaji fans cum silent readers' r reading all ur posts..

I second this........ enakku pidikkatha characters such as Deivamagan younger son, namma Gopal sir ku antha padathulaye romba pidicha character ah irunthathu......... so it just depends...athe pola I dont like Sivaji's roles in films such as Sivantha Mann , inga niraya pesapatta Raja et al... which i believe is more of a stereotype (imho of course)... I love his characters such as Babu, Gnana Oli, navarathiri (esp the forest officer [or is it police officer?]) and so on and on .... So there are so many unexplored areas of Sivaji sir's filmography which certain section of readers would be interested in nu ninaikaren
other than that, dont want to comment on the tussle happening here, as it is more like arguments between two professors, while most of us here are students just overlooking these and going on
-
19th September 2013 09:52 PM
# ADS
Circuit advertisement
-
19th September 2013, 10:34 PM
#2192
Senior Member
Diamond Hubber
கோபால் சொல்லமுயல்வதை நான் புரிந்து கொள்கிறேன். அதை நான் வழிமொழிகிறேன். எந்த ஒரு கலையும் உச்சம் தொட முயலும்போது அது ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தும் அதிர்வுகள் கணக்கிட முடியாதவாறு காலச் சக்கரத்தில் சிக்கிச் சிதறாது தொடர்ந்து நம்மை பல தளங்களில் திருப்தி படுத்திக் கொண்டே இருக்கும். ஒரு செவ்வியல் தன்மையை அடைந்துவிடும் அதுபோன்ற சிவாஜி படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அதை தானும் பகுப்பாய்வு செய்து, மற்றவர்களையும் பகுப்பாய்வு செய்யத் தூண்டும் ஒரு மெழுகு வர்த்தியாகவே கோபாலைப் பார்க்கிறேன். ரசனைத் தளத்தில் மேலெழும்பிக் கொண்டே இருக்க முயல்கிறார், நம்மையும் அங்கிருந்து தூக்கிவிட முயன்று கொண்டே இருக்கிறார். அதற்கு சரியான தீனி கிடைக்காத பட்சத்தில் சினம் கொள்கிறார். அச்சினத்தை நாம் பொருட்படுத்தாது ஆரோக்யமாக விமர்சனத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நாமும் முன்வர வேண்டும்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
19th September 2013, 10:46 PM
#2193
Junior Member
Devoted Hubber
இன்று வழக்கம் போல வேலைக்கு சென்று வரும்போது ரோட்டில் 100வது வருட இந்திய சினிமா cutout பார்க்க நேர்ந்தது. அதில் வழக்கம் போல நம் நடிகர் திலகத்தின் படம் இருட்டடிப்பு. சிரிப்புதான் வந்தது அதை பார்க்கும்போது.
இப்படி ஒரு பயந்தாங்கொள்ளிகள், நடிகர் திலகத்தின் படத்தை போட்டால் எங்கே மவுசு இன்னும் கூடிவிடுமோ என்ற குளிர்ஜுரத்தில் நடிகர் திலகத்தின் படத்தை போடாமல் அதே நேரத்தில் புதுமை இயக்குனர்கள் என்று திரையுலகை ஆக்ரமித்தவர்களின் தரமில்லாத படங்களின் ஹோர்டிங் (HOARDING) என்னமோ சாதனை படங்கள் போல போட்டிருக்கிறார்கள் மூடர்கள். என்னமோ இந்திய திரைவானின் மைல்கல் படங்கள் போல ஒரு பாவ்லா, ஒரு போலி சித்தரிப்பு..! அய்யோபாவம் ! இவ்வளவு தரம் தாழ்ந்திருக்கவேண்டாம் !
இவர்களுக்கென்ன தெரியும் ? பொய், பித்தலாட்டம், உண்மையை இருட்டடிப்பு இதுதானே ? Such a mean minded fellows ! அவருடைய பெயரை, புகழை மறைத்ததாக இவர்கள் நினைகிறார்கள். இதில் இவர்கள் பெயர் தான் மேலும் கெட்டு போகிறதென்று இந்த மடையர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் நடுநிலையாக இந்திய சினிமாவின் 100ஆம் ஆண்டு விழா என்றால் அதற்க்கு தகுந்தாற்போல எல்லா நடிகர்களின் படங்களையும் போட்டிருக்கவேண்டும். மேலும் நல்லதிரைப்படங்களான கல்யாண பரிசு, சிவகங்கை சீமை, சம்பூர்ண ராமாயணம், பட்டணத்தில் பூதம், நெஞ்சில் ஓர் ஆலயம், தேன் நிலவு மற்றும் பல படங்களின் HOARDING இவர்களுக்கு வைக்க தெரியவில்லை. நடிகர் திலகத்தின் ஆண்டவன் கட்டளை கலாட்டா கல்யாணம் திரைப்படத்தை சம்பந்தமே இல்லாமல் எதற்கு போட்டார்கள் என்று புரியவில்லை. 1952இல் வந்த பராசக்தி, அல்லது அதற்க்கு பின்னர் வந்த மனோஹரா அல்லது இரட்டை வேட புதுமை படைப்பு உத்தம புத்திரன் அல்லது அந்த நாள் இப்படி திரைப்படங்களை போட்டிருக்கலாம்.
என்னமோ ஏனோ தானோ என்று கேட்பதற்கு ஆள் இல்லை என்றால் எப்படியும் நடந்துகொள்ளலாம் என்ற எண்ணம். ஏற்கனவே நிறைய பேர் பேச தொடங்கிவிட்டார்கள். என்னப்பா கர்ணன் தவிர கட்டபொம்மன், திருவிளையாடல், திருவருட்செல்வர் போன்ற கலர் படங்களை போடவில்லை ...இவனுங்க வேணும்னே பண்றாங்கப்பா என்று..!
கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு ஒருநாள் வந்துதான் தீரும். உண்மை என்றிருந்தாலும் திரும்ப ஒரு அடி அடிக்கும் அப்போது தெரியும் உண்மையின் வலிமையை.
Last edited by NTthreesixty Degree; 20th September 2013 at 09:42 AM.
-
19th September 2013, 10:48 PM
#2194
Junior Member
Devoted Hubber

Originally Posted by
venkkiram
பகுப்பாய்வு செய்யத் தூண்டும் ஒரு மெழுகு வர்த்தியாகவே கோபாலைப் பார்க்கிறேன்.
-
19th September 2013, 10:58 PM
#2195
Junior Member
Devoted Hubber
இனிய நண்பர் நெய்வேலியார் அவர்கள் கைவண்ணத்தில் உயிர் பெற்ற நான் வாழ வைப்பேன் திரை ஒலி ஒளி கண்ணோட்டம் YOUTUBE இல் 2437 இதுவரை கண்டுகளித்துள்ளார்கள் என்பதை பெருமையுடன் கூற கர்வபடுகிறேன். !
நன்றி நெய்வேலி வாசுதேவன் சார் !
-
20th September 2013, 06:38 AM
#2196
Junior Member
Newbie Hubber
நம் வாசுவின் தேர்வு அலாதி. அபாரம். சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நிறைய shot சிவாஜி நடித்து கொண்டிருந்த நேரம்.அப்படியே ஒன்றிரண்டு ஷாட் duel வந்தாலும் ,அவரோடு அடுத்த ஷாட் merge ஆகி உறுத்தல் வராமல் நடிகர்திலகம் நடிக்கும் பாங்கு. நாலு பேரை சுறன்று தாக்கும் லாவகம்,கம்பியில் தொங்கும் ஷாட் ,பயில்வானை தூக்கி தூணில் மொத்தும் ஷாட், என்ன ஒரு இளமை சுறுசுறுப்பு.
இன்றைய டெக்னாலஜி ,கேமரா இவைகள் சண்டை காட்சிகளை மனித முயற்சிக்கு மீறியதாக கம்ப்யூட்டர் கேம்ஸ் போல ஆக்கி விட்டன.
-
20th September 2013, 06:49 AM
#2197
Junior Member
Newbie Hubber
வாசு ,
நான் வாழ வைப்பேன் ஒரு neat professional presentation . மிக அழகாக தொகுத்து, வெட்டி,சுவாரஸ்யம் கூட்டி உள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்.
சுப்பு,
நான் வாழ வைப்பேன் வெற்றி பெற்று வீடு நிறைய பொருள் குவிந்து,அடுத்த முறை ஊருக்கு வரும் போதாவது ட்ரீட் கொடு.(நான் என்ன பெரிசா கேக்க போறேன் ராகவேந்தர் சார் பேட்டையில் ரத்னா கபே போண்டா,இட்லி,காபி.)
-
20th September 2013, 07:02 AM
#2198
Senior Member
Diamond Hubber

Originally Posted by
NTthreesixty Degree
இன்று வழக்கம் போல வேலைக்கு சென்று வரும்போது ரோட்டில் 100வது வருட இந்திய சினிமா cutout பார்க்க நேர்ந்தது. அதில் வழக்கம் போல நம் நடிகர் திலகத்தின் படம் இருட்டடிப்பு. சிரிப்புதான் வந்தது அதை பார்க்கும்போது.
இப்படி ஒரு பயந்தாங்கொள்ளிகள், நடிகர் திலகத்தின் படத்தை போட்டால் எங்கே மவுசு இன்னும் கூடிவிடுமோ என்ற குளிர்ஜுரத்தில் நடிகர் திலகத்தின் படத்தை போடாமல் அதே நேரத்தில் சில இத்துப்போன படங்களை என்னமோ சாதனை படங்கள் போல போட்டிருக்கிறார்கள் மூடர்கள். என்னமோ இந்திய திரைவானின் மைல்கல் படங்கள் போல ஒரு பாவ்லா, ஒரு போலி சித்தரிப்பு..! அய்யோபாவம் ! இவ்வளவு தரம் தாழ்ந்திருக்கவேண்டாம் !
இவர்களுக்கென்ன தெரியும் ? பொய், பித்தலாட்டம், உண்மையை இருட்டடிப்பு இதுதானே ? Such a mean minded fellows ! அவருடைய பெயரை, புகழை மறைத்ததாக இவர்கள் நினைகிறார்கள். இதில் இவர்கள் பெயர் தான் மேலும் கெட்டு போகிறதென்று இந்த மடையர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஏற்கனவே நிறைய பேர் பேச தொடங்கிவிட்டார்கள். என்னப்பா கர்ணன் தவிர கட்டபொம்மன், திருவிளையாடல், திருவருட்செல்வர் போன்ற கலர் படங்களை போடவில்லை ...இவனுங்க வேணும்னே பண்றாங்கப்பா என்று..!
கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு ஒருநாள் வந்துதான் தீரும். உண்மை என்றிருந்தாலும் திரும்ப ஒரு அடி அடிக்கும் அப்போது தெரியும் உண்மையின் வலிமையை.
சவுரி சார்,
மூடர் கூட்டம்?!
Last edited by vasudevan31355; 20th September 2013 at 07:06 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
20th September 2013, 07:02 AM
#2199
Junior Member
Newbie Hubber
வெங்கி ராம்,
தங்கள் பதிவுகளை படித்ததும், எனக்கு சிறிதே கண்கள் கலங்கி விட்டன. என்ன ஒரு மாயம்?? என் ரசனை மனத்தை பிரதிபலித்த கண்ணாடி. நான் என் சிறிய வயது முதலே புரிந்து கொள்ள படாத மனிதனாகவே இருந்து வந்துள்ளேன். வயதுக்கு மீறிய பக்குவமும்,ரசனைகளும்,பல முடிச்சு சிக்கல்கள் கொண்ட கட்டுடைக்கும் மன நிலையும்,எனக்கு தொடர்ந்த மன உளைச்சலை மட்டுமே கொடுத்துள்ளது. உங்களுக்கு என் பிரத்யேக நன்றி.நண்பர்கள் இதை எப்படி புரிந்து கொண்டாலும் எனக்கு மகிழ்ச்சியே.
-
20th September 2013, 07:04 AM
#2200
Senior Member
Diamond Hubber

Originally Posted by
NTthreesixty Degree
இனிய நண்பர் நெய்வேலியார் அவர்கள் கைவண்ணத்தில் உயிர் பெற்ற நான் வாழ வைப்பேன் திரை ஒலி ஒளி கண்ணோட்டம் YOUTUBE இல் 2437 இதுவரை கண்டுகளித்துள்ளார்கள் என்பதை பெருமையுடன் கூற கர்வபடுகிறேன். !
நன்றி நெய்வேலி வாசுதேவன் சார் !
நன்றி சவுரி சார். நான்தான் தங்களுக்கு நன்றி கூற வேண்டும் இப்படிப்பட்ட நல்ல வாய்ப்பை வழங்கியமைக்கு.
Bookmarks