http://i1170.photobucket.com/albums/...ps000dd6ed.jpg
Printable View
எப்போது தேர்தல் வந்தாலும் எம்.ஜி.ஆருக்கு தனி மவுசுதான். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் எம்.ஜி.ஆரின் ஒளி–ஒலி காட்சிகள் பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.
http://i59.tinypic.com/1z2pqgn.jpg
மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை பரவை, ஊர்மெச்சிகுளம், சத்தியமூர்த்தி நகர், கோச்சடை, துவரிமான் மற்றும் 50–க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் எம்.ஜி.ஆரின் ஒளி–ஒலி காட்சி சினிமா வாகனம் சென்று வருகிறது.
சுமார் ஒரு மணி நேரம் இயக்கப்படும் இந்த ஒளி–ஒலி காட்சியில் எம்.ஜி.ஆரின் தத்துவப்பாடங்கள் மற்றும் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த பிரசார வியூகத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பேரூராட்சி தலைவர் பரவை ராஜா செய்துள்ளார்.
இந்த பிரசார வாகன தொடக்க விழாவில் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கை யன், முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி ஜெபராஜ், பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நூற்றாண்டுகள் கடந்தாலும், நீ வாழ்ந்த ஆண்டுகள் போல் வருமா? எதிரியை நோக்கிய வாள் வீச்சும், கொஞ்சும் உன் தமிழ் பேச்சும், அந்த சிரிப்புக்கு இடையே ரசிகனின் மூச்சும் இருந்ததை, யார் தான் மறப்பார்? "நாள் ஒரு மேனி, பொழுதொரு வண்ணம், ஒருவர் மனதிலே ஒருவரடி,' அது, எம்.ஜி.ஆர்., என்ற மக்கள் தலைவனின் திருவடி.
பெயரில் கூட, அவருக்கு சுமை வேண்டாம் என்பதால் தான், எம்.ஜி.ராமச்சந்திரனை, எம்.ஜி.ஆர்., ஆக்கியது தமிழகம். "நமக்கென்று யார் வருவார்... கேட்பதை இங்கு யார் தருவார்...' என, தமிழகம் தனித்திருந்த போது, திரையில் பார்த்த நாயகன், தரையில் இறங்கி வந்தார், மக்கள் திலகமாக!நடிகனாகவோ, அரசியல்வாதியாகவோ, முதல்வராகவோ பார்க்கவில்லை, வெகுஜனம்;
எங்கள் வீட்டு பிள்ளையாக, கலங்கரை விளக்கமாக, ஒளி விளக்காக, எங்கள் தங்கமாக, ஆசை முகமாக, ஆனந்த ஜோதியாக, இவ்வளவு ஏன், "ஆயிரத்தில் ஒருவனாகவே...' பார்த்தது. தன்னை நோக்கி வந்த சங்கடங்களைக் கூட, சாதனைகளாய் மாற்றிய எம்.ஜி.ஆர்.,யின் வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய பாடம். எம்.ஜி.ஆர்., என்ற சரித்திரத்தை படிக்க, புத்தகம் தேவையில்லை; அவர் நடித்த படங்களும், பாடல் வரிகளுமே போதும்."இதயம் எனது ஊராகும், இளமை எனது தேராகும், மான்கள் எனது உறவாகும், மானம் எனது உயிராகும், தென்றல் என்னைத் தொடலாம், குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம், மலர்கள் முத்தம் தரலாம், அதில் மயக்கம் கூட வரலாம்,' இந்த வரிகள் போதும், அந்த மாமனிதனின் எண்ணங்களை அறிய. "சிரித்து வாழ்ந்த போதும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாத...' அந்த சிவப்பு மனிதனின் கரங்கள், கட்டி அணைத்த கருப்பு மனிதர்களின் தோள்கள், எத்தனை! மக்களை மதிக்க தெரிந்த அந்த குணம் தான், "நமக்கென்று ஒருவன்;
அவனே நமக்கு இறைவன்,' என, எம்.ஜி.ஆர்., நினைவுகளை நம் மனதிலே, நிலை நிறுத்துகிறது.. காலத்தை வென்ற மனிதனை, காலன் வென்றதும், தகர்ந்தது தமிழக மக்கள் மனம். திரைக் காட்சியிலும், அரசு ஆட்சியிலும் மக்களோடு மக்களாய் வாழ்ந்த, அந்த மூன்று எழுத்து நாயகனை, இன்றும் நம் மூச்சில் சுமக்கிறோம்.
"வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்?; சரித்திரம் சொல்கிறது, அதுவே எம்.ஜி.ஆர்.,"என்னை எடுத்து, தன்னைக் கொடுத்து, போனவன் போனாண்டி... தன்னைக் கொடுத்து, என்னை அடைய... வந்தாலும் வருவாண்டி...' என காத்திருக்கும் கூட்டம் தனி!
courtesy - dinamalar
courtesy-omkaara sankaraa - lyon,பிரான்ஸ்
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம் மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு மாலைகள் விழவேண்டும் - ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும். "பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா" "நாள் ஒரு மேனி, பொழுதொரு வண்ணம், ஒருவர் மனதிலே ஒருவரடி, பொன்னின் நிறம், பிள்ளை மனம், வள்ளல் குணம், ,"என்னை எடுத்து, தன்னைக் கொடுத்து, போனவன் போனாண்டி... தன்னைக் கொடுத்து, என்னை அடைய... வந்தாலும் வருவாண்டி...'"சிரித்து வாழ்ந்த போதும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாத..உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே ..
"பொதிகை மலையில் பிறந்தவளாம் பூவை பருவம் அடைந்தவளாம் கருணை நதியிலே குளித்தவளாம் காவிரிக் கரையில் களித்தவளாம் தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம் – தமிழ்த் தாயின் மலரடி வணங்கிடுவோம்"... தமிழ்த்தாயின் மலரடி வணங்கிடுவோம்’....' "இதயம் எனது ஊராகும், இளமை எனது தேராகும், மான்கள் எனது உறவாகும், மானம் எனது உயிராகும், தென்றல் என்னைத் தொடலாம், குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம், மலர்கள் முத்தம் தரலாம், அதில் மயக்கம் கூட வரலாம்,' " வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி " மக்களின் மனதில் நின்றவர் யார் ? இருந்தாலும் மறைத்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாருன்று ஊர் சொல்ல வேண்டும். மாபெரும் சபையினில் நீ நடந்தால் மாலைகள் பல விழவேண்டும் வறுமையை கண்டு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே.
பாயும் புலியின் கோபத்தை அதன் முகத்தில் வைத்தானே பாழும் மனிதனின் கோபத்தை இதய பொர்வையில் வைத்தானே....எம். ஜி. ஆரின் பல நல்ல குணங்களில் மேன்மையானது நன்றி மறவாமை. அதற்கு ஒரு உதாரணம். தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம். கே. தியாகராஜ பாகவதரைக் காண ஒரு சமயம், அவர் தங்கியிருந்த ஹோட்டலில் காலை முதல் கிட்டத்தட்ட மாலை வரை காத்திருந்து, கண்டு, நாடகத்தில் நடிப்பது விஷயமாக சில உதவிகளை பெற்றாராம் எம்.ஜி. ஆர். அப்போது எம். ஜி. ஆருக்கு வயது பதினொன்று. வெகு காலங்கள் உருண்டோடி, பாகவதர் எல்லாம் இழந்து போண்டி ஆகிய நிலையில் ராமவரம் தோட்டத்தில் எம். ஜி. ஆரைக் காண வந்தபோது வாயிற்காவலரிடம் ஒரு சீட்டில் எம்.கே. டி. என எழுதிகொடுக்க, அதைப் பார்த்தவுடன் எம். ஜி. ஆர் ஓடோடி வந்து, தானே அவரை வரவேற்று உபசரித்து, பின் பல வேண்டிய உதவிகளை செய்தாராம்.
இதுவல்லவோ மனித நேயம். காலத்தினால் செய்த உதவியை மறக்காத மனிதப் பண்பு மிக்கவர் எம். ஜி. ஆ. காலத்தை வென்ற மனிதனை, காலன் வென்றதும், தகர்ந்தது தமிழக மக்கள் மனம்... ஒரு சூரியன், ஒரு நிலா, என்றும் ஒரே எம் ஜி ஆர். .... தமிழ் கூறும் நல்லுலகு உள்ளவரை வாழ்வார்.. என்றுமே மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்.... மிக சிறந்த மனிதாபிமானி. அடுத்தவர் பசி பொறுக்காத மனித தெய்வம். தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் நாட்டுக்காக பாடுபட்டவர். தனது திரைப்படங்கள் மூலம் நல்ல நல்ல கருத்துக்களை மக்களுக்கு கூறியவர். அவரது ஒவ்வொரு செயலும் தமிழ் நாட்டு நலனை சார்ந்தே இருந்தது. அவரை போல் இன்னொரு மாமனிதர் தோன்றுவது மிக கடினம். அண்ணா திமுக இன்றும் ஆட்சியில் இருக்கிறது என்றால் அதற்கு எம்.ஜி.ஆர் அவர்களின் மங்கா புகழும் அவர் மீது மக்கள் இன்றும் வைத்திருக்கும் அன்பும்தான் காரணம்.
இதை இன்று ஆட்சியில் இருக்கும் ஜெயா உணரவேண்டும். உணர்ந்து மக்களுக்காக ஆட்சி நடத்தவேண்டும்..ஆனால் அவர் பெயரை வைத்து கொள்ளை அடிப்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர்...10 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். செய்தது ஏராளம்......ஏராளம்.... எண்ணிலடங்காதவை..எம்.ஜி.ஆர். ஆட்சி செய்த கால கட்டம் (1977-1987) இந்திய நாடு மிக மிக ஏழை நாடு வறுமை பிடியில் சிக்கி தவித்த காலம். 1991 க்கு பிறகு தான் தாராளமயமாக்குதல் எனும் "உலகமயமாக்குதல்" (GLOBALIZATION) கொள்கை மூலமா இந்தியாவின் கதவுகள் திறக்கப்பட்டு அந்நிய முதலீடுகள் மூலமாக பல பில்லியன் டாலர் வரவு அரசு கஜானாவுக்கு வந்தது....... ஆனால் அன்று? இன்று ஆயிரம் ருபாய் கிடைக்குது ஆனா 100 பேர் தான் பயன் அடைகிறாங்க ஆனால் அன்று 100 ருபாய் தான் கிடைச்சுது ஆனால் ஆயிரம் பேர் பயன் அடைந்தாங்க...... அடைய வச்சவர் எம்.ஜி.ஆர். அதனால்தான் ஐநா சபையிலே அன்று வியந்து பாராட்டினாங்க எப்படி இந்தியா மாதிரி ஒரு ஏழை நாட்டிலே அதுவும் ஒரு மாநிலத்திலே தினசரி 65 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமா சத்துணவு அளிக்க முடிகிறது..... இது எப்படி சாத்தியம்? வியப்புக்குரியவர் எம்.ஜி.ஆர்.... ....
1) முல்லை பெரியாறு நவீன தொழில்நுட்ப முறையில் புதுப்பித்தல் 2) காவேரி நதி நீர் பங்கீடு 3) சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் 4) ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 5) இந்தியாவுக்கே வழிகாட்டியான சத்துணவு 6) மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை 7) மாணவ மாணவியர்களுக்கு இலவச காலனி மிதிவண்டி 8) 108 ஆம்புலன்ஸ் 9) அரிசி விலை பேருந்து கட்டணம் விலை கட்டுப்பாடு 10) கல்வி கொள்கையில் மாற்றங்கள் 11) உலக தமிழ் மாநாடு 12) தமிழ் மொழிக்கு என்று தனி பல்கலை கழகம் 13) உலக தமிழ் சங்கம் 14) கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 15) பெரியார் நூற்றாண்டு விழா 16) பெரியாரின் தமிழ் மொழி எழுத்து சீர் திருத்தம் 17) தொழில் வளர்ச்சி துறையில் புதிய கொள்கைகள் 18) கோயில் பூசாரி உதவி தொகை 19) ஓய்வு பெற்ற உலமாக்கள் (இஸ்லாமியர்) உதவி தொகை 20) சட்டம் ஒழுங்கு நேரிடை பார்வையில் முழுமையான பாதுகாப்பு 21) நிலையான ஆட்சி நிம்மதியான ஆட்சி 22) அண்டை மாநில உறவுகள் 23) மத்திய அரசு உறவு 24) அண்டை நாட்டுடன் உறவு... ..தந்தை பெரியாரும், இதயதெய்வம் எம்.ஜி.ஆரும் இயற்கையெய்திய நாள் டிசம்பர் 24. தேசத்தந்தை காந்தி பிறந்த நாளாகிய அக்டோபர் 2ம் நாள் கர்மவீரர் காமராஜர் மறைந்ததும், தேவகுமாரன் யேசு பிறந்த நாளான டிசம்பர் 25ல் மூதறிஞர் இராஜாஜி மறைந்ததும் நாம் அறிந்ததே....தான் அனுபவித்த வறுமையையும் ஏழ்மையையும் தான் இருந்தவரை மற்றவர்களுக்கு வரமால் பார்த்து கொண்ட மாபெரும் வள்ளல்.....சொக்க தங்கம்..சமயோசித சிந்தனை கொண்டவர்....பிரச்சனைகளை அவர் கையாண்டவிதம் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடம்....ஆ ஊன்னா தற்கொலை செய்ய முடிவு எடுப்பவர்கள் ஒரு நிமிடம் அவரையும் அவர் கடந்து வந்த பாதையையும் பார்த்தால் அந்நிலைக்கு போக மாட்டார்கள்... அவரை பற்றி கூறினால் ஒரு நாள் போதாது...இதய தெய்வம் என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர்... வாழ்க எம் ஜி ஆர் நாமம் ....... வாழ்க அவரது புகழ்.......வாழ்க மக்கள் திலகம்....
நாளைய தினத்தந்தி விளம்பரம் (06/06/2014)
---------------------------------------------------------------------------
http://i60.tinypic.com/2qscdbp.jpg
மறைந்த திரு.விஜயன் என்கிற விஜயகுமார் (புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் உறவினர் ) அவர்களின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தினை
முன்னிட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு
http://i59.tinypic.com/1o1wl3.jpg