http://youtu.be/iXk1ogJLDjcகாதலை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் பல படங்கள் வந்துள்ளது.
காதலர் தினமான இன்று 14-2-2013 முக்கியமாக மக்கள் திலகம் நடித்த அன்பேவா படம் ஒரு சிறந்த காதலை மையபடுத்தி வெளிவந்த படங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை .
மென்மையான காதல் கதை - காதலர்களுக்கு இடையே தோன்றும் மோதல்கள் - பின்னர் காதலாக மாறிய பின்னர் ஏற்படும் ஊடல்கள் - இனிய முடிவு என்று மிகவும் காதல் பொழுது போக்கு படமாக 1966 பொங்கல் அன்று வந்த அன்பே வா - மறக்க முடியாது .
மக்கள் திலகம் மிகவும் இயற்கையாக - மென்மையான காதல் புரியும் காட்சிகளிலும்
ஊடல் புரியும் காட்சிகளிலும் , ஏக்கமான காட்சிகளிலும் பிரமாதமாக நடித்திருப்பார் .
தன்னுடைய காதலி க்கு தன்னுடய நண்பனே கணவனாக வர போகிறார் என்று அறிந்த போதும் , நட்புக்காக தன காதலை விட்டு கொடுக்க காதலியிடம் ஓட்டலில் உருக்கமாக சரோஜதேவியிடம் மக்கள் திலகம் பேசும் சில நிமிட காட்சிகள் உண்மையிலே ஒரு காதல் ஓவியம் படைத்திருப்பார் .
இனிமையான காதல் பாடல்கள் -
மொத்தத்தில் காதல் காவியம் - மக்கள் திலகம் நடித்த அன்பேவா படம்
என்றென்றும் பேசப்படும் தமிழ் காதல் காவியங்களில் மக்கள் திலகத்தின் அருமையான இயற்கையான நடிப்பில் சாதனை புரிந்த அன்பே வா திரைப்படம் . -மிக சிறந்த படம் .