Congratulaions! I had once a huge number of VHS collections of NT movies, but not in this numbers. Now started collecting in digitalized format. Is that a NT telugu movie, by the way?
வாழ்த்துக்கள் வாசு சார்.
அன்பு வாசுதேவன் சார்,
தலைவரின் அற்புத ஸ்டைலில் உருவான பாடலை எனக்களித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றி
Mr Sasi Sir & Mr Vasu Sir,
Of course it is a Telegu Movie where NT acted with Krishna & Thanks both for your wishes.
Thanks S.Vasudeven,Ravi,Anand and KCS.
Neyveli Vasu Sir,
Thanks for your warmth and for making me warmer with vanishree-sivaji duet.
Dear Sasi,
It was myself who had written about the political happenings during the release of Pattum Bharathamum and of course Raghavendran sir added to it. The post that I made during that time is here.
இனி அரசியல் உள்ளே புகுந்த கதை. பெருந்தலைவர் மறைந்து இரண்டு மாதங்களே ஆன சூழ்நிலையில் படம் வெளி வந்தது என்றாலும் கூட அந்நேரத்தில் நடிகர் திலகம் தன் அரசியல் முடிவை அறிவிக்கவில்லை. நடிகர் திலகம் இந்திரா காங்கிரஸில் சேரப் போகிறார் என்றும் இல்லையென்றும் செய்திகள் வந்து கொண்டிருந்த நேரம். பெரும்பான்மையான ரசிகர்களுக்கு நடிகர் திலகம் ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே அவா. இந்த நேரத்தில் அன்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பா.ரா. மற்றும் குமரி அனந்தன், தண்டாயுதபாணி போன்றார் ஸ்தாபன காங்கிரஸ் தன் நிலையில் தொடர வேண்டும் என்று நினைத்த போது, நெடுமாறன், தஞ்சை ராமமூர்த்தி, குடந்தை ராமலிங்கம் போன்றவர்கள் இந்திரா காங்கிரஸில் சேர வேண்டும் என்று பிரசாரம் செய்துக் கொண்டிருந்தனர். தங்களுக்கு சாதகமாக இருப்பதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த மகாதேவன் பிள்ளையை தலைவர் போலக் கொண்டு வந்தனர் [இணைப்பு நடந்த பிறகு இவர் கழட்டி விடப்பட்டது வேறு விஷயம்].
இந்நிலையில் வேறு ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நெடுமாறன் அந்த காலக்கட்டத்தில் தினசரி என்று ஒரு நாளிதழ் நடத்திக் கொண்டிருந்தார். ஏனோ தெரியவில்லை நெடுமாறனுக்கு நடிகர் திலகத்தின் மீதும் அவரது ரசிகர் மன்றத்தின் மீதும் கோவம். அவர்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்றும் அது கூடாது என்றும் கட்டுரைகள் எழுதினார். இவருக்கு ஒத்து ஊதினார் தஞ்சை ராமமூர்த்தி. இது நடப்பது 1975-ம் ஆண்டு ஜனவரியில். அந்நேரம் நடிகர் திலகம் மொரிஷியஸ் தீவுகளுக்கு சென்றிருந்தார். ரசிகர்கள் கொந்தளித்து பதில் அறிக்கை கொடுக்க காங்கிரசிலும் ஒரு 1972 புரட்சி ஏற்படுமோ என்று யூகங்கள்கிடையில் நடிகர் திலகம் திரும்பி வந்தவுடன் பெருந்தலைவரை சந்திக்க சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி விழுந்தது. [இன்னும் சொல்லப் போனால் 1972 -ம் ஆண்டு அக்டோபரில் மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கூட நடிகர் திலகமும் ரசிகர்களும் ஓரம் கட்டப்பட்டது நெடுமாறனால்தான் என்ற குற்றசாட்டு கூட உண்டு].
இப்போது மீண்டும் 1975 நவம்பர், டிசம்பருக்கு வருவோம். நடிகர் திலகத்தை தாக்கி எழுதிய நெடுமாறன் தன் செய்தி தினசரியில் அவரை உயர்த்தி எழுத ஆரம்பித்தனர். பல இடங்களிலும் நடிகர் திலகத்தின் மன்றங்கள் இந்திரா காங்கிரஸில் சேருவதாக தீர்மானங்கள் நிறைவேற்றுவதாகவும் இவர்களே செய்திகள் வெளியிட ஆரம்பித்தார்கள். இதற்கும் ஒரு படி மேலே போய் கேள்வி பதில் பகுதியில் ஒரு ரசிகர் கேள்வி கேட்டதை வெளியிட்டார்கள். எப்படி என்றால்
கேள்வி: நடிகர் திலகம் இந்திரா காங்கிரஸில் சேர விரும்புகிறாரா?
பதில்: சேர விரும்புவது மட்டுமல்ல, அதுதான் நாட்டிற்கு நன்மை பயக்கும் என உளமார நம்புகிறார்.
எந்த நெடுமாறன் நடிகர் திலகத்தை வசை பாடினாரோ அந்த நெடுமாறன் பேச்சை கேட்டு நடிகர் திலகம் நடக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. நடிகர் திலகமும் வாயே திறக்கவில்லை. பேசிய ஒரு கூட்டத்தில் [அன்று அவசர நிலை அமலில் இருந்ததால் பொதுக் கூட்டங்கள் கிடையாது. ஏதோ கல்யாணம் அல்லது ஊழியர் கூட்டம் என நினைவு] ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்து நீடிக்க போவது போல பேசினார்.
இந்த நேரத்தில் சபரி மலை செல்வதற்காக மாலை போட்டிருந்த அவர் கொல்லம் எக்ஸ்ப்ரஸில் மதுரை வழியாக வந்த போது வெள்ளமென ரசிகர் கூட்டம் அவரை ரயில்வே நிலையத்தில் சந்தித்து தங்கள் உள்ளக்குமுறலை சொன்ன போது உங்கள் விருப்பத்திற்கு மாறாக எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்று உறுதி கூறினார். கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடமும் இதையே சொன்னார். அந்த நேரத்தில் ரசிகர்களில் ஒரு பிரிவினர் நடிகர் திலகம் எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அவர் வழி நடப்பதாக ரத்தக் கையெழுத்து இட்டு மனுக் கொடுத்தனர்.
இவையெல்லாம் பாட்டும் பரதமும் வருவதற்கு ஒரு பத்து நாட்கள் முன்பு நடந்தது. ஆனால் சபரி மலை சென்று விட்டு வந்த பிறகு அவர் எதுவுமே சொல்லவில்லை என்பதுடன் செய்தி நாளிதழில் வெளியான செய்திகளுக்கு மறுப்பும் கொடுக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகுந்த கோவத்தை கொடுத்தது. அதுவே படம் வெளியான போது அதற்கு வினையாக மாறியது. படம் வெளியான 15 நாட்களில் படப்பிடிப்பில் அவருக்கு காலில் அடிப்பட்டுவிட்டது. வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அந்நேரம் [டிசம்பர் கடைசி] டெல்லியிலிருந்து இந்திராவின் சிறப்பு தூதுவராக வந்த மரகதம் சந்திரசேகர் அவர்கள் அன்னை இல்லத்திற்கு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் விஜயம் செய்து நடிகர் திலகத்தையும், வி.சி.சண்முகம் அவர்களையும் மூளை சலவை செய்து சம்மதிக்க வைத்தார். இவர் வந்ததும் பேசியதும் வெளியில் வராமல் பாதுகாக்கப்பட்டன.[எமர்ஜென்சி வேறு]. தன்னோடு நடிகர் திலகத்தையும் டெல்லி அழைத்து சென்ற மரகதம்மாள் ஜனவரி 1 அன்று இந்திராவிடம் அழைத்து செல்கிறார். அந்த சந்திப்பும் புகைப் படமும் வெளி வரும் போதுதான் அனைவருக்கும் நிலவரம் புரிகிறது. ஏற்கனவே நொண்டிக் கொண்டிருந்த பாட்டும் பரதமும் படம் ரசிகர்களால் அடியோடு கைவிடப்படுகிறது.
ஆனால் மதுரையில் தியேட்டர் முன்பு மறியல் எதுவும் நடைபெறவில்லை. சினிப்ரியா, மினிப்ரியா இரண்டு அரங்குகளிலும் அதற்கு முன்பு வெளியான மன்னவன் வந்தானடி படம் போலவே வெளியிடப்பட்டது. அக்டோபர் 31 அன்று வெளியான பல்லாண்டு வாழ்க படத்தை மாற்றி விட்டுதான் பாட்டும் பரதமும் வெளியிடப்பட்டது.[ப.வா. அலங்காரில் ஓடிக் கொண்டிருந்தது].
ஆனால் பெருந்தலைவரின் மீதும் ஸ்தாபன காங்கிரஸ் மீதும் பெறும் பற்றுக் கொண்ட ரசிகர்கள் தங்களுக்கு படத்தை விட கொள்கையே முக்கியம் என்று முடிவெடுக்க படம் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஒரு ஒன்பது வாரப் படமாக மாறிப் போனது.
இந்த சூழ்நிலையிலும் பாட்டும் பரதமும் சென்னையில் பெற்ற வசூலைப் பார்த்தால் ஆச்சர்யமளிக்கிறது. [வசூல் பற்றிய தகவல் உதவி பம்மல் சுவாமிநாதன்]
சிங்காரச் சென்னையில், முதல் வெளியீட்டில்[6.12.1975], "பாட்டும் பரதமும்" ஈட்டிய மொத்த வசூல்:
[அரங்கம் - ஓடிய நாட்கள் - வசூல்(ரூ.-பை.)]
1. சாந்தி - 69 நாட்கள் - 4,01,751-30
2. கிரௌன் - 62 நாட்கள் - 2,17,877-55
3. புவனேஸ்வரி - 60 நாட்கள் - 1,98,722-25
மொத்தம் - 191 நாட்கள் - 8,18,351-10.
அன்புடன்
நன்றி முரளி சார். பலருக்குத் தெரியாத விவரங்கள். fantastic.