-
21st November 2012, 10:03 AM
#11
Senior Member
Devoted Hubber
அன்பார்ந்த அண்ணன் சிவாஜி கணேசனின் அன்பு ரசிகர்களே உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.
நான் இலங்கையைச் சேர்ந்தவன். அண்மையில் கர்ணன் மறுவெளியீட்டில் ஏற்படுத்திய சாதனைகள் இணையத்தளங்கள மற்றும் பத்திரிகை வாயிலாக அறிந்தேன் அதன்பொழுது நடிகர்திலகம் இணையத்தளத்தை தெரிந்துகொண்டேன் அதன்முலம் மையம் இணையத்தளத்தையும் அறிந்துகொண்டேன்
நீண்டநாட்களாக இதன் வாசகனாக இருந்தேன் தற்பொழுதுதான் இதில் உறுப்பினராக இணைந்துகொண்டுள்ளேன் நீங்கள் அனைவரும் பதிவிடும் அண்ணனின் சாதனைகளை வாசித்து வருகின்றேன்
என்னிடம் இருந்த அண்ணனின் அனைத்து பொக்கிசங்களும் அழிந்துவிட்டது. எனினும் என்னிடம் கைவசமுள்ள ஒருசிலவற்றைபதிவிடுவேன்
எனது முன்னைய இலங்கை இந்திய சிவாஜி ரசிகநண்பர்களை அவர்கள் அதேவிலாசத்தில் இருக்கும்பட்சத்தில் அவர்களுடன் தொடர்பை பேணி
அண்ணனின் சாதனைகள் அவர்கள்வசம் இருந்தால் அவற்றை பெற்றுக்கொண்டு இங்கு பதிவிட முயற்சிக்கின்றேன்.
அன்பான சிறினிவாசன் அவர்களே உங்கள் அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றிகள்.
-
21st November 2012 10:03 AM
# ADS
Circuit advertisement
Bookmarks