-
அமரராகி 26 ஆண்டுகள் ஆனபின்பும் உலகத்திலேயே ஒரு தலைவரை பற்றி இத்தனை மாத இதழ்களும் சாதனை ஆல்பங்களும் வெளிவரும் ஒரே தலைவர் எங்கள் இதய தெய்வம்தான். அதேபோல் ஒரே வருடத்தில் பல இடங்களில், பல தேதிகளில் பிறந்த நாள் கொண்டாடும் ஒரே தெய்வம் எங்கள் தெய்வம்தான்..பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல், அன்னதானம் போன்ற எண்ணற்ற சேவைகளை செய்து வருவது எங்கள் தெய்வத்தின் பெயரால் இயங்கும் நற்பணி, சமூக சேவை மன்றங்கள்தான்...17.06.2013ல் உரிமைக்குரல் இதழ் மற்றும் எம்ஜிஆர் பொது நல சங்கம் நடத்திய பிறந்த நாள் விழாவும், அதற்கு அடுத்த வாரமே 23.06.2013ல் இதயக்கனி நடத்திய விழாவும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் தெய்வத்தின் பிறந்த நாளை தினம் தினம் கொண்டாடும் பக்தர்கள் என்பதை நிரூபிக்கின்றன..இம்மாத இதயக்கனி இதழில் மக்கள் திலகம் 96 விழாவில் திருமதி சரோஜா தேவி மற்றும் திரையுலக பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்ட காட்சிகள் சிலவற்றை உங்கள் பார்வைக்கு...
http://i42.tinypic.com/2lvmgqs.jpg
-
-
http://i39.tinypic.com/2zp39j9.jpg
தலைவரின் பிறந்த நாளில் கலந்து கொண்ட நமது தெய்வத்தின் புகழ் பாடும் அபிநய சரஸ்வதி திருமதி சரோஜா தேவி.
-
-
courtesy- malaimalar .
நாடோடி மன்னன் கதை எவ்வாறு திருப்பங்களோடும், விறுவிறுப்பான சம்பவங்களோடும் உருவாக்கப்பட்டதோ, அதுபோல் "ஆயிரத்தில் ஒருவன்" கதையும் நவரசங்களுடன் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டது.
ஒரு சர்வாதிகாரியை எதிர்த்து மணிமாறன் என்ற இளைஞன் நடத்தும் போராட்டமே கதையின் மையக்கரு. கடல், கப்பல், அடிமைகள் என்று, மேல்நாட்டுப் படங்களைப் போன்ற பிரமாண்டமான பின்னணியில் கதை உருவாகியது. ஆர்.கே.சண்முகம் வசனம் எழுதினார்.
கண்ணதாசனும், வாலியும் பாடல்களை எழுத, விஸ்வநாதன் _ ராமமூர்த்தி இசை அமைத்தனர். பந்துலு டைரக்ட் செய்தார். படத்தின் பெரும் பகுதி கோவாவிலும், அதன் அருகே கடல் பகுதியிலும் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் கடல் சண்டை, ஏராளமான பொருட்செலவில் ஆங்கிலப்படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டது.
9_7_1965_ல் "ஆயிரத்தில் ஒருவன்" வெளிவந்தது. முதல் காட்சியிலேயே அது "மெகா ஹிட்" படம் என்பது தெரிந்து விட்டது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர். அவர்கள் ஏராளமான படங்களில் இணைந்து நடிக்க, "ஆயிரத்தில் ஒருவன்" வழிவகுத்தது.
கருத்தாழம் மிக்க இனிய பாடல்கள், படத்தின் வெற்றிக்குத் துணை புரிந்தன. கண்ணதாசன் எழுதிய அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்", "நாணமோ", "ஓடும் மேகங்களே" ஆகிய பாடல்களும், வாலி இயற்றிய "பருவம் எனது பாடல்", "உன்னை நான் சந்தித்தேன்", "ஆடாமல் ஆடுகிறேன்", "ஏன் என்ற கேள்வி" ஆகிய பாடல்களும் திக்கெட்டும் எதிரொலித்தன.
பி.ஆர்.பந்துலு, வசூல் மழையில் நனைந்தார். 1965_ல் எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் ஆகியவை தவிர, பணம் படைத்தவன், கலங்கரை விளக்கம், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களிலும் எம்.ஜி.ஆர். நடித்தார்.
-
courtesy - net
"ஆயிரத்தில் ஒருவன்" ஒரு க்ளாசிக்!
எம் ஜி ஆர் படங்களிலேயே சிறப்பான ஒரு படம்னா அது, பி ஆர் பந்துலு வின் ஆயிரத்தில் ஒருவன் தான் என்பேன் நான். 1965 ல் வந்த படம் இது. பாடல்கள் அனைத்துமே முத்தானவை. ஜெயலலிதா அறிமுகமான (வெண்ணிற ஆடை) அதே வருடத்தில் முதல் முதலாக எம் ஜி ஆர் வுடன் ஜோடியாக நடித்த படம் இதுதான். அதே வருடம் வந்த எங்க வீட்டுப் பிள்ளை யை விட இது நல்ல படம் ஆனால் ஆயிரத்தில் ஒருவன் எங்க வீட்டுப்பிள்ளை அளவுக்கு அன்று வெற்றியடையவில்லை என்கிறார்கள்!
நம்ம எம் ஜி ஆர், மணிமாறன், ஒரு நாட்டு வைத்தியர், பாம்புகடி விஷத்துக்கு மருந்து கண்டுபிடிப்பார். அவர் வாழும் நெய்தல் நாட்டில் ஒரு சர்வாதிகாரியின் கொடுமையால் புரட்சி வெடிக்கும். மணிமாறன் சில புரட்சியாளர்கள் உயிரைக் காப்பாற்றுவார். உடனே அங்கே உள்ள சர்வாதிகாரி மனோகர் அவரை குற்றம் சாட்டி அடிமையாக விற்க அவரை கன்னித்தீவுக்கு நாடுகடத்துவார். அடிமையோட அடிமையாக கன்னித்தீவுக்கு அனுப்பப்படுவார் அழகும், வீரமும் நிறைந்த மருத்துவர் மணிமாறன்.
கன்னித்தீவின் இளவரசி, பூங்கொடி (நம்ம அம்மையாருக்கு 16 வயது இருக்கும்).
* "பருவமெனது பாட"லில் அழகும் இளமையுமாக அறிமுகமாவார்!
* "ஏன் என்ற கேள்வி" கேட்கும் ஆயிரத்தில் ஒருவன், மணிமாறனின் அழகில் மயங்கி தன் இதயத்தைப் பறிகொடுப்பார்.
* "ஓடும் மேகங்களே" என்று பாடி, நாடாளும் வண்ண மயில் நீ, நாட்டிலுள்ள அடிமை நான்! உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று சொல்லி இளவரசியின் காதலை நிராகரித்துவிடுவார், மணிமாறன்.
* "உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்" என்று காதல் தோல்வியில் ஏங்குவார், பூங்கொடி!
காலச்சக்கரம் சுழலும், அடிமை மணிமாறன் கொள்ளைக்காரர் ஆவார் இல்லை ஆக்கப்படுவார். ஆனால் அவர் கொள்ளையரைத்தான் கொள்ளையடிப்பார்!! கொள்ளையர்போல் நடிக்கும் நல்லவர், பூங்கொடியின் இதயம் கவர்ந்த அடிமை, மணிமாறன், இன்று கொள்ளையராகி கொள்ளையர் கப்பல்போல் இருக்கும் உல்லாசக்கப்பலை- பூங்கொடியின் கப்பலையே- சூரையாடுவார்.
இளவரசி அடிமையாவார்! ஏலத்தில் விலைக்குப்போகும் (*ஆடாமல் ஆடுகிறேன்) அவர் இதயத்தைத் திருடிய “திருடன்” மற்றும் கொள்ளைக்காரன் மணிமாறன், தானே அவளை விலைக்கு வாங்கிக்கொள்வார்!
இருவருக்கும் இடையில் ஊடல், ஊடல் முடிந்து கூடலாகும்போது!
* நாணமோ இன்னும் நாணமோ பாடலில் ஜோடிப்பொருத்தம் நல்லாயிருக்கும்! ரொம்ப சிறப்பான டூயட் இது! மிகவும் ரசிக்கத்தக்க இருக்கும் இந்தப்பாடல்.
அதுக்கப்புறம் கொள்ளையர்களை நல்லவராக்கி "அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்" பாடல் பாடிக்கொண்டே சொந்த நாடான “நெய்தல் நாட்டுக்கு" திரும்பி வந்து சர்வாதிகாரியிடம் போராடி அவரையும் திருத்தி, குடியாட்சி கொண்டு வருவார்!
எடிட்டிங் பிரமாதம், காமெடி (நாகேஷ்), வில்லன்கள் (நம்பியார், மனோகர்) எல்லாமே அபாரம்!
சண்டைக்காட்சிகள் சிற்ப்பாக இருக்கும். எம் ஜி ஆர், இளமையாகவும் மிகவும் அழகாகவும் இருப்பார்! ஜெயலலிதாவும் சிறப்பா நடித்து இருப்பார்.
-
-
-
-
Quote:
Originally Posted by
kaliaperumal vinayagam
மக்கள் திலகத்தின் மணிமகுடத்தில் மற்றொமொரு மாணிக்கம்..
நெல்லை மாநகரப் பேருந்து நிலையத்திற்கு மக்கள் திலகத்தின் பெயர்.
http://i41.tinypic.com/5arkut.jpg
உலகத்தமிழர் அனைவரும் பெருமை கொள்ளும் செய்தி..நெல்லை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.. இந்த வெற்றிக்கும் பெரும் பாடுபாட்ட கவுன்சிலர் திரு. ஆறுமுகம் அவர்களின் செயல் பாராட்டுக்குரியது..தலைவரின் மேல் தீராத பற்று கொண்ட திரு. ஆறுமுகம் அவர்களுக்கு அனைத்துலக எம்ஜிஆர் ரசிகர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இந்த முயற்சியில் அயராது பாடுபட்ட உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜ் அவர்களுக்கும், நெல்லை மாநகர மேயர் மற்றும் தமிழக முதல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்...
தகவல் அளித்த உரிமைக்குரல் இதழ் ஆசிரியர் திரு. பி.எஸ்.ராஜ் அவர்களுக்கு நன்றி..
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
நெல்லை மாநகரப் பேருந்து நிலையத்திற்கு மக்கள் திலகத்தின் பெயர் - தகவலுக்கு நன்றி. தொடர்ந்து தலைவர் விழாக்களை நடத்தும் இனிய நண்பர் உரிமைக்குரல் திரு. Bsr அவர்ளுக்கு வாழ்த்துக்கள்.