Originally Posted by
saradhaa_sn
நாதஸ்வர வித்தையில் சக்கரவர்த்தியாக விளங்கினாலும், சாதாரண மனிதனாக பலவீனங்கள் நிறைந்த கதாபாத்திரமாக சண்முக சுந்தரத்தை கொத்தமங்கலம் சுப்புவும், ஏ.பி.நாகராஜனும் படைத்திருந்தது, நடிகர்திலகத்துக்கு பலமா பலவீனமா என்பது இன்றுவரை புதிராக உள்ளது.
படம் Highly Classical and Technical என்பதில் சந்தேகமில்லை, எனினும் நடிகர்திலகத்தின் தீவிர வெறியர்களுக்கு சற்று சறுக்கலாகத் தோன்றும் பலவீனங்கள்.....
** திருவிழாவில் வேட்டு சத்தத்துக்காக கோபப்பட்டு ஒப்பந்தத்தை மீறி பாதியில் எழுந்து செல்வது.
** ரயிலில் அவ்வளவு தீர்க்கமாக காதலைப் பறிமாறியபின்னரும், மோகனா வீட்டு வாசலில் மைனரைப் பார்த்ததும் மோகனா மீது சந்தேகப்பட்டு, கோயிலில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கும் மோகனாவைப் பார்த்ததும் எதுவும் கேட்காமல், முகத்தை மறைத்துக்கொண்டு குதிரை வண்டியில் செல்வது.
** ஆஸ்பத்திரியில் தனக்கு சிகிச்சையளிக்கும் நர்ஸ் எம்.பானுமதியின் பணிவிடைகளைப்பார்த்து, அவசரப்பட்டு காதல் என்று முடிவு பண்ணுவது....
** மனது திடமில்லாமல், பலவீனப்பட்டு ரமாமணி (மனோரமா) வுடன் மலேயா போக எத்தனிப்பது....
** மதன்பூருக்கு மோகனாவும் வருகிறாள் என்று சவடால் வைத்தி சொன்ன பொய்யை நம்பி, ஒப்பந்தப்பத்திரத்தைப் படித்துப்பார்க்காமல் கையெழுத்துப்போடுவது...
** 'நலந்தானா' பாடி மோகனா தன் தூய காதலைப் புரியவைத்த பின்னரும், உச்சகட்ட கொடுமையாக, மதன்பூர் மாளிகையிலிருந்து வரும் மோகனாவை சந்தேகப்படுவது.....