இனிய நண்பர் திரு மாசானம் சார்
மக்கள் திலகத்தின் அரசியல் வெற்றி உலகறிந்தது .
மக்கள் திலகத்தின் திரைப்படங்களின் வெற்றி - மறு வெளியீடுகளின் தொடர் வெற்றி - அன்றும் இன்றும் ஓடிகொண்டிருப்பது ஒரு வள்ளலின் வரலாறு .
திரியில் சுவாரஸ்யமாக மக்கள் திலகத்தின் படங்களை ஆய்வு செய்து மதிப்பெண் தருவது ஒரு மாறுதலான பதிவு .
நீங்களும் ஏதாவது வித்தியாசமாக மக்கள் திலகத்தின் படங்களை பற்றி பதிவிடவும் .
புதுமைக்கு பெயர் போனவர் நம் மக்கள் திலகம் .
அவர் ரசிகர்களாகிய நாம் அவ்வழியே பயணிப்போம் .
அந்நிய மண்ணில் வசிப்பவருக்கு நம் பதிவுகள் விநோதமாக தோன்றலாம் . ஏக்கமாகவும் இருக்கலாம் .பாவம் .அவரால் முடிந்தது நம்மை கேலி செய்ய மட்டும்தான் முடியும் .
நாளை என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் ?
அவரே மக்கள் திலகத்தின் படங்களை பிரமாதமாக ஆய்வு செய்து பதிவிடலாம் . பார்ப்போம் .

