டியர் ஜீவ் சார்,
அரிய புள்ளிவிவரத்துக்கு கனிவான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
Printable View
வருகிறார் தியாகசீலர்...
http://i1094.photobucket.com/albums/...KTColor1-2.jpg
டியர் முரளி சார்,
தங்களுடைய பைலட் பிரேம் நாத் அனுபவங்கள் சுவாரஸ்யமாய் உள்ளன. 31ம் தேதி அன்று மாலை சாந்தியில் நமது மதுரை நிலவரம் வந்து விட்டது. படம் நல்ல ரிப்போர்ட். நிச்சயம் 100 நாள் என்று. ஆனால் ஜஸ்டிஸ் கோபிநாத் களேபரத்திலும், சிகப்பு ரோஜாக்கள் பரபரப்பிலும் 50 நாட்கள் கழித்து பரவலாக சற்று தொய்வு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படம் ஏற்படுத்திய பாதிப்பு எல்லா படங்களையும் பாதித்தது என்றால் அது உண்மை. அதுவும் குறிப்பாக சென்னையில் அப்படம் மிகப் பெரிய அளவில் பேசப் பட்டது. இருந்தாலும் ஈகா திரையரங்கில் கடைசி வரை நன்றாகப் போனது பைலட் பிரேம்நாத்.
டியர் பம்மலார்,
தங்களுடைய விஸ்வரூபம் விளம்பரம் தங்களுடைய விஸ்வரூபத்தை எங்களுக்குக் காட்டி விட்டது. கர்ணனில் நடிகர் திலகம் அமர்ந்தவாறே கிருஷ்ண பரமாத்மாவை அண்ணாந்து பார்ப்பது போல் நாங்கள் தங்களை அண்ணாந்து பார்க்கிறோம்.
அன்பு சகோதரி சாரதா,
பம்மலார் கூறியதை நான் வழிமொழிகிறேன். விஸ்வரூபம் 100வது நாள் விழா நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் பதிவை எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்
இன்று இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும், அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களின் புதலவர் திரு துஷ்யந்த்-திருமதி அபிராமி தம்பதிகளுக்கு நமது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
http://www.jointscene.com/php/image...._17_dush10.jpg
"காத்தவராயன்" 54வது பிறந்த நாள் தொடக்க விழா.
http://icdn.raaga.com/Catalog/CD/T/T0001649.jpg
http://www.geocities.ws/ganeshkumar_r/bg58kath.jpg
http://icdn1.indiaglitz.com/tamil/ga...rayan/main.jpg
http://i1087.photobucket.com/albums/...g?t=1320636615
http://i1087.photobucket.com/albums/...g?t=1320638570
http://www.buycinemovies.com/images/...297-vcd-44.jpg
http://upload.wikimedia.org/wikipedi...9%E0%AF%8D.jpg
http://padamhosting.com/out.php/i513...3h24m08s30.png
அன்புடன்,
வாசுதேவன்.
தமிழ்த் திரையுலகைக் கட்டிக் காத்த எங்கள் "காத்தவராயன்"
http://i1087.photobucket.com/albums/..._001750195.jpg
http://i1087.photobucket.com/albums/..._002108960.jpg
http://i1087.photobucket.com/albums/..._002346275.jpg
http://i1087.photobucket.com/albums/..._000816676.jpg
http://i1087.photobucket.com/albums/..._001849850.jpg
http://i1087.photobucket.com/albums/..._002366250.jpg
http://i1087.photobucket.com/albums/..._062628909.jpg
http://i1087.photobucket.com/albums/..._000439644.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
"காத்தவராயன்" காவியத்தின் மனதைக் கொள்ளை கொள்ளும் அற்புதப் பாடல்கள்.
"வா கலாப மயிலே"....
http://www.youtube.com/watch?feature...&v=FsYj-3IzQRs
"நிறைவேறுமா...எண்ணம் நிறைவேறுமா"....
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uAPRrWJDHMs
"தானே தந்தானனே"...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5V33dkromps
"மூனா..அசல் முக்காலணா"...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vj7Z-1EYAAs
"நித்திரை இல்லையடி சகியே"...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xF5pbouEzCY
அன்புடன்,
வாசுதேவன்.
"கப்பலோட்டிய தமிழன்" 51- ஆவது ஆண்டுத் தொடக்கம்.
http://awardakodukkaranga.files.word..._thamizhan.jpg
http://4.bp.blogspot.com/_yV3Sn8nXDF...s1600/voc6.jpg
http://www.freewebs.com/pammalar/VOC1.jpg
http://www.bollymarket.com/images/kd...athamizhan.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
காவிய நாயகரின் கனவுத் திரைப்படம்.
http://www.shotpix.com/images/08466572400423607725.jpg
http://www.shotpix.com/images/88498287404291723468.jpg
http://www.shotpix.com/images/65137544071873211731.png
http://www.shotpix.com/images/04849944400596138107.png
அன்புடன்,
வாசுதேவன்.
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
தங்கள் பாராட்டுதல்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி. சற்று இடைவேளைக்குப் பின் வந்துள்ள தங்கள் பதிவு திரிக்கு உற்சாகத்தை அளிக்கிறது. தொடந்து தங்கள் பதிவுகளை எதிர்நோக்குகிறோம். தங்களைப் போலவே வைரநெஞ்சம் படத்தின் 'நீராட நேரம் நல்ல நேரம்' பாடல் எனக்கும் உயிர்ப் பாடல். நன்றி!
அன்பு பம்மலார் சார்,
தங்களின் உண்மையான பாராட்டுதல்களுக்கு மனமுவந்த நன்றி.
"கப்பலோட்டிய தமிழன்" தியாக சீலர் திவ்ய தரிசனம்.
"விஸ்வரூபம்" நாளிதழ் விளம்பரங்கள் அசத்தல்.
முரசொலி 100வது நாள் விழா நிழற்படம் அரிதான ஒன்று.
"காத்தவராயன்" சிறப்புப் புகைப்படம் மற்றும் ஹிந்து முதல் வெளியீட்டு விளம்பரங்கள் ஓஹோ!
வழக்கம் போல் அசுர சாதனைப் பதிவுகள். நன்றி! நன்றி! நன்றி! நன்றி!
அன்பு முரளி சார்,
"பைலட்" பற்றிய தங்களுடைய நீங்கா நினைவுகள் அற்புதம். கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மனதில் இடம் பிடித்து பின் நீங்கா இடத்தைப்
'பைலட்' ஆக்கிரமித்த விதம் பைலட்டுக்கு கிடைத்த வெற்றி. சூப்பர் பதிவு. ஆனால் என்றாவது ஒருநாள் தான் இப்படிப்பட்ட ஜோரான விருந்து கிடைக்கிறது. தினம் ஒரு விருந்து அளியுங்களேன். இது என் தாழ்மையான வேண்டுகோள்.
அன்புடன்,
வாசுதேவன்.
Ah! It's been quite a while since I've been here...........got to catch up.
There's a wonderful scene after the " Theru koothu ". Nadigar Thilagam has a casual chat with the drama agent (E.R. Sahadevan), who is slightly under the influence of alcohol....and with an obvious eagerness to meet the new found girl in the team. E.R.Sahadevan who normally plays a ruffian or a baddy in most of the films, plays the agent character in a simply way laced with a tinge of humour......though he appears for a few minutes only. Credit goes to APN ayya,
Our beloved Ganesan ayya, steals the scene by simply sitting and chatting with ERS. A side kick is seen monotonously fanning the Rajapart with a palm fan (in fact, in the beginning of the scene this man is seen having a quick nap on Rajapart's bed....enjoying the so called luxury !! available only to the Rajapart's in those days !!!!......beautifully conceived by APN ayya and wonderfully executed by NT). NT then asks him, " enna? sogama irukka ?? ".
An obviously frustrated side kick, hits the Rajapart with the fan quite often while fanning. Initially NT doesn't mind it but after some time when the same treatment continues he retaliates in his own way. Again, brilliantly analysed / conceived and excellent portrayal by NT. You can notice that there is a box aka "trunku petti " kept in the Rajapart's room which has the words " Rajapart dress petti " boldly written on it.
Without having proper training in film making (of course, the discipline and training that they have gained during their stage play days is matchless ) and not knowing the exact terminologies like mise en scene, mac guffin etc., our directors and actors, in those days have done a marvellous job. What a great period !!!
Dear Pammalar sir,
The first picture really captures my attention. One can understand the feelings of the actors to perform in public that too, to do a romantic duet song !!!
I personally feel that Sridhar shouldn't have done Vaira Nanjam.......I was wondering whether this movie really has got NT in it, for more than half an hour since the movie started to run, his character will not appear on screen. A very dull movie.
Hmm rangan, well observed. I don't remember this scene at all though I've watched Navarathri fully a couple of times.
Must watch it.
the therukkootthu is just fantastic. I will never tire of watching it. What a stupendous performance.
Sivaji adopting the 'bad acting' aesthetics of therukkoothu and demonstrating it to perfection.
Savithri - who is not an actor in the film - falling short of even that standard by being totally graceless.
What nuance I say!! A delight.
Mohan,
Welcome back. As is your wont you immediately make a mark of your own and the observation regarding the Rajapart and the co-artists is spot on. Hope you get more holidays for us to enjoy such nuances.
Prabhu,
That again brings me back to the elaborate post you made on the therukoothu scene some time back, pinpointing the way it was enacted. Need to read it again.
Regards
Thanks Murali sir.....it's always been a great pleasure to visit the thread and keep myself updated by reading excellent posts written by ardent fans like you.
Great screenshots from Kathavarayan vasudevan!
For those who haven't seen the fantasy film, this will surely tap their interest.
The pose of him flexing his shoulders and circling the ring is from the highly realistic wrestling scene.
The wrestling scene is worth watching in itself. No drama. Just pure wrestling, Sivaji gets lifted and thrown about and also really lifts the wrestler.
Are you taking screenshots from your DVD? If so one nEyar viruppam: when initially Kathavarayn goes exploring the world (thanjavur periya kovil, boat race etc.) they impose the visuals on the frame with Sivaji's face. He acts as if he is really following a close boat race! We will get that impression simply from the his facial reactions and exultation at the victory :lol: Beautiful one.
'விஸ்வரூபம்' 100-வது நாள் வெற்றி விழா.
நடிகர்திலகத்தின் 1980 தீபாவளி வெளியீடான விஸ்வரூபம் வெற்றிவிழாவில் கலந்து கொண்டது எதிர்பாராமல் கிடைத்த இனிய வாய்ப்பு. அந்த தீபாவளி என் பெர்சனல் வாழ்க்கையிலும் ஒரு சின்ன் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதுவரை பாவாடை தாவணியில் இருந்த நான், உடன் படித்த தோழிகளின் நச்சரிப்பு தாங்காமல், கொஞ்சம் கூட விருப்பமில்லாமல் ஜீன்ஸ், டி-ஷர்ட்டுக்கு மாறியது அப்போதுதான். (அதன்பின்னர் கல்லூரி நாட்களில் அதுவே பிடித்த உடையாகப்போனது வேறு விஷயம்).
விஸ்வரூபம் ஓடிக்கொண்டிரும்போதே சாந்தியில் குடும்பத்தோடு ஒரு முறையும், என் பெரியப்பாமகன் ரவியோடு ஒருமுறையுமாக இரண்டு முறை அப்படத்தைப் பார்த்துவிட்டேன். ரவி அப்போதே பைக் வைத்திருந்த கல்லூரி மாணவன். பைக் வைத்திருந்தானே தவிர வேறு தப்பு தண்டாவெல்லாம் பண்ணாத சாது. என் தந்தைக்கு அடுத்து சாந்திக்கு ரெகுலாகச்சென்று வரும் வழக்கமுள்ளவன். அப்படிப்போனபோதுதான், சாந்தியில் விஸ்வரூபம் படத்தின் 100-வது நாள் விழா நடக்க இருப்பதாகவும், அந்த விழாவில் ரசிகர்களும் கலந்துகொள்ள வசதியாக, தலைமை மன்றத்தின் சார்பில் சாந்தியில் ரசிகர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டதாகவும், தான் இரண்டு டோக்கன் வாங்கியதாகவும் சொல்லி என் தந்தையிடம், 'சித்தப்பா, நாளை நாம் ரெண்டு பேரும் போவோம்' என்றான். அப்போது அப்பா, 'எனக்கும் வர ஆசைதான். ஆனால் சாரதா இதற்கெல்லாம் ரொம்ப ஆசைப்படுவாள். அவளை நீ அழைச்சிக்கிட்டு போ' அப்படீன்னு அனுமதி கொடுத்து விட்டார். எனக்கோ பிடிபடாத சந்தோஷம். கொஞ்சமும் எதிர்பாராத வாய்ப்பு அல்லவா?.
அது காலை நேர விழா. ஞாயிற்றுக்கிழமை என்பதாக நினைவு. முதல்நாள் மாலைதான் 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தின் 100-வது நாள் விழா நடந்திருந்தது. மறுநாள் காலை விஸ்வரூபம் 100-வது நாள் விழா, அன்று மாலை ரஜினியின் 'பொல்லாதவன்' 100-வது நாள் விழா. (தீபாவளி ராசிக்காரரான மெல்லிசை மன்னருக்கு மூன்று படங்களும் வெற்றி. அடுத்த ஆண்டும் கீழ்வானம் சிவக்கும், அந்த 7 நாட்கள், தண்ணீர் தண்ணீர் என மூன்றும் 100 நாட்கள். ராணுவ வீரன் 50 நாட்களைக்கடந்தது. இத்தனைக்கும் இசைஞானி உச்சத்தில் இருந்த நேரம்).
காலை விடிந்தது முதலே மனதில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காலையிலேயே குளித்து உணவருந்தி, ஜீன்ஸ், டி.ஷர்ட், கூலிங் கிளாஸ் சகிதம் ரவியண்ணனின் பைக்கில் தொற்றிக்கொண்டு சாந்தி போய்ச்சேர்ந்தேன். அந்தக்காலை நேரத்திலேயே சாந்தியில் கார்பார்க்கிங்கில் சரியான கூட்டம். ரவிக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் அங்கே நின்றிருக்க என்னையும் இழுத்துக்கொண்டு கூட்டத்தில் கலந்து விட்டான். அடுத்து வரவிருக்கும் 'சத்திய சுந்தரம்' படம் பற்றி பேச்சு நடந்துகொண்டிருந்தது. ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டு நின்றேன். அத்துடன் அப்போது ஓடிக்கொண்டிருந்த 'மோகனப்புன்னகை' படத்தின் ரிசல்ட் அவ்வளவு திருப்தியளிக்கவில்லை என்று வருத்தத்துடன் பேசினர்.. நண்பர்களில் சிலர், 'யாருடா இது புதுசா இருக்கு?' என்று கேட்க, 'என் தங்கச்சிடா, எங்க சித்தப்பா வருவாரில்லையா?. அவர் பொண்ணு. பேரு சாரதா' என்று அறிமுகப்படுத்தினான்.
தியேட்டருக்குள் ரசிகர்களுக்காக பால்கனி முழுவதையும் ஒதுக்கி விட்டு, கீழ்த்தளம் முழுவதையும் விருந்தினர்களுக்கு ஒதுக்கியிருந்தார்கள். திரையுலகத்தினரும், பத்திரிகையாளர்களும் கார்களில் வந்து இறங்கிய வண்ணம் இருந்தனர். படத்தில் பங்கேற்ற கலைஞர்கள் மட்டுமல்லாது திரையுலகினர் பலரும் வந்தனர். முதலில் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான கிருஷ்ணா, விஜயநிர்மலா தம்பதியினர் வந்திறங்க, அவர்களை 'மாப்பிள்ளை' வேணுகோபால் வரவேற்று அழைத்துச்சென்றார். பின்னர் அவர்கள் மூவரும் பிரதான வாயிலில் நின்று, வந்த வி.ஐ.பி.க்களை வரவேற்றுக்கொண்டிருந்தனர். தயாரிப்பாளர் பி.எஸ்.வீரப்பா, நடிகை சுஜாதா போன்றோர் காரிலிருந்து இறங்கும்போதே நாலாபக்கமும் திரும்பி ரசிககளைப்பார்த்து கைகூப்பினர். நடிகர் பிரேம் ஆனந்த் காரிலிருந்து இறங்கி வந்து ரசிகர்களோடு ஒருவராக நின்று பேசிக்கொண்டிருந்தார். நடிகர் எஸ்.வி.ராமதாஸ், என்னைப்போலவே ஒரு நண்பரின் பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்தார்.
இதனிடையே டோக்கன் வைத்திருந்த ரசிகர்களை பால்கனிக்கு அனுமதிக்கத்துவங்கி விட, கூட்டம் மொத்தமும் வாயிலுக்கு முன்னேறியது. 'இப்போதே போனால்தான், ஸ்டேஜ் நன்றாகத்தெரிகிற மாதிரி இடமாகப்பார்த்து உட்காரலாம், வா' என்று ரவி கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போனான். டோக்கனைப்பார்த்து உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். முதல் வகுப்பு டிக்கட் கவுண்ட்டரைக்கடந்து மாடிப்படிக்கு திரும்பும் இடத்தில் நடிகர் ஆர்.எஸ்.மனோகர் நின்று நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தார். அவரை அவ்வளவு கிட்டத்தில் பார்த்தது அதுதான் முதலும் கடைசியும். மேலே போய் நல்ல இடமாகப்பார்த்து உட்கார்ந்து கொண்டோம்.
விழாத்தலைவர் கலைஞர் கருணாநிதியும், சிறப்பு விருந்தினராக வந்திருந்த சௌகார் ஜானகியும் தியேட்டருக்குள் வந்ததும், வி.ஐ.பி.க்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு நடிகர் கிருஷ்ணா மாலைகளை அணிவித்தார். விழாவைத்தொகுத்து வழங்கிய கதை வசனகர்தா ஆரூர்தாஸ் ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்தார். கலைஞரும், நடிகர்திலகமும் சேர்ந்தே மேடைக்கு வந்தபோது ஒட்டுமொத்தக் கூட்டமும் எழுந்து நின்று விண்ணதிர கைதட்டியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 'சிறந்த ஒளிப்பதிவாளர் எம்.விஸ்வநாத் ராய், சிறந்த படத்தொகுப்பாளர் பி.கந்தசாமி' என்று ஆரூர்தாஸ் அழைத்தபோது அவ்வளவு சலசலப்பில்லாத கூட்டத்தில், 'சிறந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்' என்று அழைத்ததும் மீண்டும் பலத்த கைதட்டல் எழுந்தது. பணிவுக்குப்பேர்போன மெல்லிசை மன்னர் மேடையேறியதும் கலைஞரின் கைகளையும், நடிகர்திலகத்தின் கைகளையும் பிடித்து மரியாதை செலுத்தியவர், கூட்டத்தினரைப்பார்த்து நன்றாகப்பணிந்து கும்பிட்டு அமர்ந்தார்.
பி.சுசீலா தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட, விழா துவங்கியது. முக்தா சீனிவாசன், ஏ.வி.எம்.சரவணன் ஆகியோர் பேசினார்கள். ஒரு கட்டத்தில் சரவணன், '........இதுபோலத்தான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும்' என்று ஏதோ சொல்ல வந்தபோது கூட்டத்தினர் (குறிப்பாக பால்கனியில் இருந்த ரசிகர்கள்) பலத்த கூச்சலிட்டதால், சட்டென்று அதை நிறுத்திக்கொண்டு வேறு சப்ஜெக்ட்டுக்குத்தாவினார். மேடையில் நின்ற 'மாப்பிள்ளை' ரசிகர்களை நோக்கி, அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார்.
'விஸ்வரூபம்' 100-வது நாள் வெற்றி விழா (தொடர்ச்சி)
அவரையடுத்துப்பேசிய முக்தா சீனிவாசன் சிறப்பாகப்பேசினார். 'நடிகர்திலகம் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அவற்றில் 100 நாட்களுக்கு மேல் ஓடியவை 100க்கு மேல் இருக்கின்றன, வெள்ளிவிழாப்படங்களும் ஏராளமாக இருக்கின்றன. மேலும், நிறுத்தவே முடியாமல் ஓடிய திரிசூலம் போன்ற படங்களும் (பலத்த கைதட்டல்) அவரது பட்டியலில் உள்ளன. அத்தகைய வெற்றிப்பட வரிசையில் இந்த (விஸ்வரூபம்) படமும் இணைவது, இன்றைய சூழ்நிலையில் மகத்தான நிகழ்வு. நடிகர்திலகத்தின் படங்களைப்பார்த்தால் அவர் முக பாவத்தைப்பார்த்தே அவரது மன உணர்வுகளைச்சொல்லிவிட முடியும். இப்போது நடிப்பவர்களெல்லாம் சோகத்திலும் அதே நடிப்பு, கோபத்திலும் அதே நடிப்பு என்று ஒரே மாதிரி செய்கிறார்கள். விஸ்வநாதன் மியூஸிக் பண்றதை வச்சுத்தான் அவன் சோகமாக நடிக்கிறானா, கோபமாக நடிக்கிறானா என்பதையே கண்டுபிடிக்க முடிகிறது' என்று சொல்லி வந்தவர், 'உங்களுக்கெல்லாம் ஒரு சந்தோஷமான செய்தி. என்னுடைய அடுத்த படத்தில் நமது நடிகர்திலகம் கதாநாயகனாக நடிக்கிறார்' என்றதும் பலத்த கைதட்டல் எழ, 'இன்னும் பலமாக கைதட்டுங்கள்' என்று சொல்லி பேச்சை முடித்துக்கொண்டார். ('இமயம்' படத்துக்குப்பின் 'அவன்,அவள், அது', 'பொல்லாதவன்' போன்ற வெளிப்படங்களை இயக்கினார். விழாவில் அவர் குறிப்பிட்ட படம்தான் 'கீழ்வானம் சிவக்கும்' படமாக உருவானது).
விழாவில் கலந்துகொண்டு, அனைவருக்கும் கேடயம் வழங்க வந்திருந்த சௌகார் ஜானகி, ஆங்கிலத்தில் பேசினார். அதனால் அவர் பேச்சு முழுவதற்கும் அரங்கம் அமைதியாக இருந்தது. இறுதியாக கலைஞர் கருணாநிதி பேசியபின், நடிகர்திலகம் நன்றியுரை நிக்ழத்தினார். கலைஞர் கருணாநிதி பேசத்துவங்கியபோது...
'தம்பி ஆரூர்தாஸ் என்னைப்பேச அழைத்தபோது, சிங்கம் கர்ஜிக்கப்போகிறது என்று சொன்னார். இரண்டு சிங்கங்கள் ஒரே காட்டில் கர்ஜிப்பது (பலத்த கைதட்டல்) திரையுலக மேடையை விட அரசியல் மேடைக்கே பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்' என்று துவங்கியவர், வழக்கம்போல பராசக்தி, மனோகரா காலங்களை நினைவு கூர்ந்தார். மீண்டும் அந்தக்காலம் திரும்பி வரும் வகையில் மாடி வீட்டு ஏழை உருவாகி வருவதைக் குறிப்பிட்டார்.
கலைஞர் பேசி முடித்ததும், படத்தில் இடம்பெற்ற கலைஞர்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்கும் நிகழ்ச்சி துவங்கியது. நடிகர்திலகத்துக்கு, கலைஞர் கருணாநிதி கேடயம் வழங்கியதும், படப்பிடிப்புக்குச் செல்வதற்காக கிருஷ்ணா, அனைவரிடமும் விடைபெற்றுப் புறப்பட்டார். ஆனால் விஜயநிர்மலா விழாவில் இருந்தார். மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் நடிகை சௌகார் ஜானகி கேடயங்களை வழங்கினார்.
நடிகர்திலகம் நன்றியுரை நிகழ்த்தினார். அவரும், தனக்கும் கலைஞருக்குமான நெடுநாளைய நட்பைப் போற்றிப்பேசினார். மற்ற கலைஞர்களையும் பாராட்டியவர், படத்தை வெற்றிப்படமாக்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
விழா முடிந்து வெளியே வருபோது பார்த்தால், போகும்போது இருந்ததைவிட நாலு மடங்கு கூட்டம் கார்பார்க்கிங் முழுவது நிறைந்து காணப்பட்டது. விழாவுக்கு அனைத்து கலைஞர்களும் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவர்கள் வெளியே போகும்போது பார்ப்பதற்காக திரளாக கூடி நின்றனர். போலீஸார் தலையிட்டு கார்கள் செல்ல வழியேற்படுத்தித் தந்தனர். சிலர், தங்கள் அபிமான கலைஞர்களின் கார்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் வண்டியேறும்போது பார்த்துவிடலாம் என்று அவர்கள் வாகனங்களின் அருகே கூட்டமாக நின்றனர். கலைஞர் கருணாநிதி வந்திருந்ததால் அவரைப்பார்க்க தி.மு.க.வினரும், நடிகர்திலகத்தைக்காண ரசிகர்களும், காங்கிரஸாரும் கூடி நிற்க, அந்த வளாகமே கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்தது. மவுண்ட் ரோட்டில் பேருந்துகளில் செல்வோர் அனைவரும் சாந்தி வளாகத்தை ஆச்சரியமாக எட்டிப்பார்த்த வண்ணம் சென்றனர்.
ரவியண்ணனின் பைக், பார்க்கிங் நடுவில் மாட்டிக்கொண்டதால் மட்டுமல்ல, கூட்டம் அனைத்தும் செல்லும் வரை பார்த்து விட்டுப்போகலாம் என்று நாங்கள் நின்றிருக்க, அதே மனநிலையில் ரசிகர்கள் பலரும் நின்றதால், கூட்டம் கலைய வெகுநேரம் ஆனது. வீட்டுக்குத்திரும்பியதும், அனைத்து விஷயங்களையும் அப்பாவிடம் ஒன்றுவிடாமல் சொன்னபோது அவர் ரொம்பவே மகிழ்ந்தார், குறிப்பாக என் குதூகலத்தைப் பார்த்து.
நினைத்துப்பார்க்க எவ்வளவு இனிமையான நாட்கள் அவை.
சகோதரி சாரதா,
"விஸ்வரூபம்" 100வது நாள் விழா சிறப்புப்பதிவு மூலம் எங்களையெல்லாம் அந்த 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கே அழைத்துச் சென்றுவிட்டீர்கள். நாங்களும் அன்று சென்னை 'சாந்தி'யில் இருந்ததாகவே தோன்றியது. விழாப்பதிவு உண்மையிலேயே அற்புதம். தாங்கள் எழுதுவதற்கு கேட்கவா வேண்டும் ! விழா தொடங்குவதற்கு முன் சாந்தி வளாகத்தில் நடந்த சம்பவங்கள், விழாவில் விழாத்தலைவர் கலைஞர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆற்றிய உரைகள், நடிகர் திலகத்தின் நன்றியுரை, விழா நிகழ்வுகள் மற்றும் விழா முடிந்ததும் ஏற்படும் உற்சாகக் களேபரங்கள் என எதையும் விட்டு வைக்காமல் தங்களின் personal நினைவுகளோடு இந்த சிறப்புப்பதிவை அளித்திருந்த விதம் அதியற்புதம். [அன்றைய பத்திரிகைகளில்கூட இந்த விழா இவ்வளவு சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்காது.]
எங்களது அன்பு வேண்டுகோளை ஏற்று உடனுக்குடன் விழாத் தொகுப்புப் பதிவை மிகச் சிறப்பாக வழங்கிய தங்களுக்கு எண்ணிலடங்கா நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகத்தின் நவம்பர் திரைமலர்கள்
கப்பலோட்டிய தமிழன்
[7.11.1961 - 7.11.2011] : பொன்விழா நிறைவு : 51வது ஜெயந்தி
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள் : சிறப்புப் புகைப்படங்கள்
http://i1110.photobucket.com/albums/...aar/VOC1-1.jpg
http://i1110.photobucket.com/albums/...aar/VOC2-1.jpg
வருவார்...
பக்தியுடன்,
பம்மலார்.
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும்
இனிய 'பக்ரீத்' திருநாள் நல்வாழ்த்துக்கள் !
http://i1110.photobucket.com/albums/...annippu1-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
டியர் பம்மலார், நடிகர்திலகத்தின் சிறப்பான புகைப்படத்துடன் பக்ரித் வாழ்த்துக்களை அளித்தமைக்கு நன்றி.
நவராத்திரி, வெள்ளை ரோஜா, கண்கள், விஸ்வரூபம், கப்பலோட்டிய தமிழன், காத்தவராயன் என்று தங்களுடைய பதிவுகள் வழக்கம்போல அசத்தல், அருமை.
திரு. வாசுதேவன் சார், விஸ்வரூபம், காத்தவராயன் புகைப்படங்கள் மற்றும் பாடல் காட்சி இணைப்புகள் அருமை.
திரு.முரளி சார், தங்களின் பைலட் பிரேம்நாத் நினைவுகள் பதிவு அருமை.
டியர் பம்மலார்,
தங்கள் சித்தம் என் பாக்கியம். 'விஸ்வரூபம்' விழாப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. காத்தவராயன், கப்பலோட்டிய தமிழன் பதிவுகளனைத்தும் வழக்கம்போல நன்றிக்கு அப்பாற்பட்டவை.
ஆனால்,
1961 தீபாவளி, நான் மறக்க விரும்பும் தீபாவளி.
தமிழர்களின் ரசனையுணர்வை உலகமே வியப்புடன் திரும்பிப்பார்த்த தீபாவளி
இவர்கள்தானே இதே ஆண்டில் மூன்று 'பா' படங்களையும் வெற்றியாக்கித்தந்தவர்கள், இப்போது என்னவாயிற்று என்று ஆச்சரியப்பட வைத்த தீபாவளி.
தீபாவளி வெளியீடுகளான ஒரு சித்ரா பௌர்ணமி, ஒரு வைர நெஞ்சம் தோல்வியுறலாம், தவறில்லை. ஆனால் கப்பலோட்டிய தமிழன்...?.
திரைப்படத்திலேயே நடித்திராதவர்கள் என்று சொல்லப்பட்ட வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும், பாரதியும், திலகரும் மீண்டும் நமக்காக உயிருடன் வந்து நடித்து விட்டுப்போன 'கப்பலோட்டிய தமிழன்'......????.
1961 தீபாவளி.... நான் மறக்க விரும்பும் தீபாவளி.
டியர் முரளி,
'பைலட் பிரேம்நாத்' வெளியீட்டன்று தங்கள் அனுபவப்பதிவு மிகவும் அருமை. அதிர்ச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகியதை நீங்கள் விவரித்திருந்த விதம் நன்றாக இருந்தது.
பைலட்டின் கதையைத் தெரிந்துகொண்டு, வேண்டுமென்றே அதே சமயத்தில் மதுரையில் பார் மகளே பார் படத்தை திரையிட்டது தற்செயலான நிகழ்வா அல்லது ஏதும் சதி வேலையா?. முன்பு நான் சொன்ன 'பாட்டும் பரதமும்' வெளியீட்டின்போது நடந்த 'நாட்டியமும் நாதசுரமும்' (தில்லானா மோகனாம்பாள்) போன்ற உள்ளடி வேலையா?.
எப்படியிருந்தபோதிலும் படம் நன்றாக ஓடியது. அது போதும். தங்களின் அனுபவங்கள் மிகவும் சுவையாக இருந்தன. நன்றி.
'காத்தவராயன்' மல்யுத்தக் காட்சி ஒரு ஆய்வுக் கட்டுரை.
http://i1087.photobucket.com/albums/..._001942112.jpg
http://i1087.photobucket.com/albums/..._002126228.jpg
'காத்தவராயன்' திரைப்படத்தில் வரும் நடிகர் திலகம் அவர்கள் செய்வதாக வரும் மல்யுத்தக் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு அற்புதக் காட்சியாகும். அக்காலத்தில் அனைவராலும் மிகவும் சிலாகித்து பேசப்பட்ட ஒரு அரிய அற்புதமான மல்யுத்த சீன். ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் ஒரிஜினலாக மல்யுத்தக் காட்சியில் அசத்தியிருப்பார் N.T. ஒரு ஒரிஜினல் மல்யுத்த வீரனின் மல்யுத்த அசைவுகளை இம்மி அளவு கூட பிசகாமல் ஏன் அதற்கு ஒருபடி மேலாகவே தந்து கலக்கியிருப்பார் நடிகர் திலகம். மல்யுத்த வீரனுக்குரிய உடல்வாகும்,தோற்றமும் அப்படியே அவருக்குப் பொருந்தி இருப்பது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.
மல்யுத்தக் காட்சியின் தொடக்கத்தில் N.T. முதலில் களத்தில் இறங்கும்போது வலது கையால் வலது தொடையைத் தட்டி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வலது காலை மட்டும் சற்றுத் தூக்கி, காலை உள்வாங்கி மடித்தபடி ஓடி வந்து ,சற்று உடலைத் தளர்வாக தொய்யவிட்டு யுத்தத்திற்கு ரெடி ஆகும் போதே மிகுந்த எதிர்பார்ப்புகள் நமக்கு ஏற்படத் துவங்கிவிடும். பின் போட்டியாள வீரருடன் அவர் மோதத் துவங்கும் போது அந்த வீரர் இருமுறை நடிகர் திலகத்தை கழுத்தையும், உடம்பையும் ஒருசேரப் பிடித்து இடதுபக்கவாட்டில் தூக்கி வீசுவார். தூக்கி வீசப்பட்ட மறு கணமே புள்ளிமான் போலத் துள்ளி எழுந்து நிற்பார் நடிகர் திலகம். பின் மறுமுறை எதிர்வீரர் N.T. யை வலதுபக்கமாக தன் தோள்பட்டை வழியாக தூக்கி வீசும்போதும் அதே சுறுசுறுப்புடன் எழுந்து கொள்வார் N.T. மூன்றாம் முறை எதிர்வீரர் N.T.யின் இரு தொடைப்பகுதிகளையும் இடுப்போடு பிடித்து தூக்க முயற்சி செய்யும் போது, N.T. அந்த வீரரின் கால்களைப் பிடித்து அவரை தலை கீழாக தூக்கிப் போட்டுவிட்டு கைகளைத் தரையில் ஊன்றி நொடிப் பொழுதில் எழுந்து கைகளை நீட்டி யுத்தத்திற்கு மீண்டும் தயாராவது அருமை. பின் அந்த எதிரியின் இரு கைகளோடு தன் இரு கைகளையும் கோர்த்தவாறு பலப்பரீட்சை செய்வதும், பின் எதிராளியின் இடதுகையை தன் தலைக்குமேலாகக் பின்பக்கக் கழுத்து வழியே கொண்டுவந்து,அவர் கீழ் ஆடையைப் பற்றி அவரைத் தூக்க முயற்சிக்கும் போதே அந்த எதிராளி கொஞ்சமும் எதிர்பாராத வகையில் N.T. யின் முதுகைப் பிடித்து திருப்பி முறுக்கியவாறு பக்கவாட்டில் N.T. யைத் தூக்கிக் கிடாசும் போதும் நம் இதயமே சில்லிட்டுப் போகும். அப்படியே மனிதர் நேச்சுராக தரையில் விழுந்து எழுந்திருப்பார் பாருங்கள்! அடடா! தன் தொழிலின் மீது தான் எத்துனை ஈடுபாடு! எழுந்தவுடன் சற்று ரிலாக்ஸ் செய்வதற்காக அந்தப் போட்டிக் களத்தில் கொட்டிக் கிடக்கும் மணலின் மேல் N.T. ரவுண்டடித்து ஓடிவரும் அழகு இருக்கிறதே! காணக் கண் கோடி வேண்டும். (இடையிடையே கீழே விழுந்து எழுந்தவுடன் மறக்காமல் இரு கைகளிலும் ஒட்டியிருக்கும் மண்ணைத் தன் இரு தொடைப்பகுதிகளின் பக்கவாட்டில் தட்டித் துடைத்துக் கொள்வார்.)
பின் போட்டியாளரின் பின்புறம் நின்று அவர் உடம்பை உடும்புப் பிடியாகப் பிடித்து அவரை மூன்று முறை தூக்கித் தூக்கி நிறுத்தி நிலை குனிய வைப்பதும், அவரை இரண்டு முறை தலை கீழாகத் தூக்கி வீசுவதும் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகள். அடுத்து N.T. எதிரியின் கழுத்தைப் பிடித்து வளைத்து சர்வ சாதரணமாக மண்ணைக் கவ்வ வைப்பது மிரள வைக்கும் தத்ரூபக் காட்சி. எதிரி தன் முதுகின் மேலே படர்ந்து படுத்தவாறு இம்சை தர ,அப்படியே படுத்தவாக்கில் அவரை தலைகீழாக மாற்றிப் புரட்டிப் போட்டுப் படுக்கவைத்து, தான் அவர் முதுகின் மீது அமர்ந்து கொண்டு அவரது கைகளைப் பிடித்துப் பிடிபோட்டு அவரை தலை கீழாக நிறுத்தி (சிரசாசன பொசிஷனில்) அவரது இரு தூண் போன்ற தொடைகளுக்கிடையே தன் கழுத்தும்,முகமும் பதிந்திருக்க எதிரி அப்படியே தனது தொடைகளால் N.T. யின்கழுத்தை இறுக்கி அப்படியே புரட்டிப் போட, தூரமாகப் போய் டூப்பே இல்லாமல் N.T. விழுவது நம்மை திடுக்கிட வைக்கிறது. பின் எதிரி கொஞ்சம் கொஞ்சமாக தன் பலத்தை இழக்க ஆரம்பிக்க, N.T. யின் கை ஓங்க, தான் வெற்றி பெறப் போவது உறுதி என்று நிச்சயமாகத் தெரிந்து விட்ட நிலையில், வெற்றி பெறப் போகும் களிப்பை முகத்தில் காட்டி, எதிரியை சர்வ அலட்சியமாக பலமுறை தூக்கிப் போட்டு பந்தாட வைத்து மண்ணைக் கவ்வச் செய்வதும், எதிரி சோர்ந்து போய் ஒவ்வொருமுறையும் தட்டுத் தடுமாறி எழுந்திருக்கையில், இடைப்பட்ட அந்த நேரத்தில் அந்த இடத்தை வெகு அழகாக,அலட்சியமாய் ஓடியவாறு சுற்றி வருவதும்,தோள்பட்டைகளை சற்று துவளவிட்டு, உடலை சற்று தளர விட்டு,வலது தொடையைத் தட்டி வெற்றிக்கான அறிகுறியை முகத்தில் காட்டத் தொடங்குவதும், இறுதியில் அப்படியே அலாக்காக எதிரியை தூக்கி மனிதர் என்னமாய் தூக்கிச் சுழற்றுகிறார்!) தோள்பட்டையில் வைத்துக் கொண்டு மூன்று முறை சுற்றி கீழே தூக்கிப் போட்டு வெற்றி வாகை சூடுவதும் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத அபாரமான அரிய காட்சிகள். அதே போல எதிரி தன்னை இம்சிக்கும் நேரங்களில் வலியின் வேதனையைக் காட்டியவாறும், காட்டாதவாறும் அவர் முகத்தில் பிரதிபலிக்கும் உணர்ச்சிகள் உன்னதமானவை. குறிப்பாக ஒரு இடத்தில் கூட 'டூப்' போடாமல் அவர் மிகுந்த சிரத்தை எடுத்து செய்த சண்டைக் காட்சி (மல்யுத்தக் காட்சி) இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
அந்த அற்புத, மனதை உறைய வைக்கும் மல்யுத்தக் காட்சி முதன் முதலாக இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uOOftnJMs0Y
அன்புடன்,
வாசுதேவன்.
:exactly: Excellent :clap:
மதிப்பிற்குரிய சாரதா மேடம்,
தங்களின் "விஸ்வரூபம்" 100வது நாள் விழா சிறப்புப்பதிவால் நமது திரியே விழாக்கோலம் பூண்டு விட்டது. அருமையான பதிவு. எல்லோருக்கும் ஆனந்த விருந்தளித்து விட்டீர்கள். இப்படிப் பட்டப் பதிவுகளுக்காக தவமிருக்கிறோம். நன்றிகளும், மனமுவந்த பாராட்டுக்களும்.
மகிழ்ச்சியுடன்,
வாசுதேவன்.