சிகரத்தை தொட்ட இயக்குனர் சிகரம்
கைலாசம் பாலசந்தர். இதுதான் இவரது முழுப்பெயர். கடந்த 1930ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் பிறந்த இந்த இயக்குனர் சிகரம், சிகரத்தையும் தாண்டி சொர்க்கத்தை அடைந்த நாள் இன்று. ஆம் இந்த சிகரம் இன்று நம்மை விட்டு பிரிந்துவிட்டது.
http://img.indiaglitz.com/tamil/news/mgr_kb_2412_m1.jpg
சிறுவயதிலேயே மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி, சர்வர் சுந்தரம், நவக்கிரகம் போன்ற நாடகங்களை இயக்கி அவற்றை சென்னையில் நடத்தி வந்தார். பின்னர் முதன்முதலாக எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய் என்ற படத்திற்காக பாலசந்தர் வசனம் எழுதினார். இவருடைய திறமையை பார்த்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார் இவருடைய நாடகங்களுள் ஒன்றான சர்வர் சுந்தரம்' நாடகத்தின் கதை உரிமையை பெற்று திரைப்படமாக்கினார். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்.
http://img.indiaglitz.com/tamil/news...ndar_sl33m.jpg
தமிழ்த் திரையுலகிற்கு வசனகர்த்தாவாகவும், திரைக்கதை ஆசிரியராகவும் இருந்த பாலசந்தர் முதன்முதலில் இயக்குனர் ஆனது நீர்க்குமிழி என்ற படத்தின் மூலம்தான். அந்த படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து தனது நாடகங்களான மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், பாமா விஜயம், இரு கோடுகள் போன்ற படங்களை இயக்கினார்.
http://img.indiaglitz.com/tamil/news...ni_introm3.jpg
பாலசந்தரின் பெண்ணிய புரட்சி கருத்துக்கள் வெளிவர காரணமாக இருந்த படம் அரங்கேற்றம். பிராமின் குடும்பத்தில் ஆச்சாரமாக சூழ்நிலையில் பிறந்த ஒரு பெண், குடும்பத்தினர்களின் நலனுக்காக விபச்சாரத்திற்கு தள்ளப்படும் புரட்சி திரைக்கதை கொண்ட படமாக இது அமைந்தது. அதன் பின்னர் பாலசந்தர் இயக்கிய சொல்லத்தான் நினைக்கின்றேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் ஆகியவை முக்கிய படங்களாகும். இதில் இன்று சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படுகின்ற ரஜினிகாந்த் அறிமுகமான படம் அபூர்வ ராகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரங்கேற்றம் படத்திற்கு பின்னர் பெண்மைப்புரட்சி மற்றொரு செய்த படம் என்று அவள் ஒரு தொடர்கதை படத்தை கூறலாம். இந்த படத்தில் அறிமுகமான சுஜாதா பின்னாளில் பெரிய நடிகையானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சுஜாதா வேடத்தில் ஜெயப்ரதா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது
பின்னர் விதவைபெண்ணின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் "அவர்கள்", வேலையில்லா பட்டதாரிகளின் உணர்வுகளை வெளிப்படுத்திய 'வறுமையின் நிறம் சிகப்பு, ஆகியவை 1980களில் வந்த குறிப்பிடத்தக்க படங்களாகும்
http://img.indiaglitz.com/tamil/news...r_sivajim1.jpg
எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் படத்தில் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய பாலசந்தர், சிவாஜி கணேசனை வைத்து இயக்கிய ஒரே திரைப்படம் எதிரொலி. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு நல்லவன் எப்படி படிப்படியாக கெட்டவனாக மாறி கொலை செய்ய துணியும் அளவுக்கு போகிறான் என்பதே இந்த படத்தின் கதை.
அதன்பின்னர் பாலசந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர், அக்னி சாட்சி, அச்சமில்லை அச்சமில்லை, சிந்து பைரவி, புதுப்புது அர்த்தங்கள், புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி, போன்ற பல படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஒரு புரட்சி கருத்து இருக்க தவறுவதில்லை.
பெரிய திரையை போலவே சின்னத்திரையிலும் தனது தனி முத்திரையை பதித்தவர் பாலசந்தர். முதன்முதலாக சின்னத்திரையில் கையளவு மனசு என்ற தொடரை இயக்கினார். அதன் பின்னர் ரயில் சினேகம், ரமணி vs ரமணி, காதல் பகடை, ஒரு கூடை பாசம், பிரேமி, ஜனனி, அண்ணி போன்ற தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார்.
பாலசந்தர் இயக்கிய 100வது படம் பார்த்தாலே பரவசம் மற்றும் அவர் இயக்கிய கடைசி படம் பொய். இது அவரது 101வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருசில படங்களில் அவர் நடிகராகவும் ஜொலித்துள்ளார். பாரதிராஜாவுடன் இவர் நடித்த ஒரே படம் ரெட்டைச்சுழி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் வெளிவரவுள்ள கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் பாலசந்தர். அதுவே அவர் நடித்த கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://img.indiaglitz.com/tamil/news/rettasuli_24m.jpg
அவள் ஒரு தொடர்கதை, வறுமையின் நிறம் சிகப்பு, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை,புதுப்புது அர்த்தங்கள் போன்ற படங்களுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற பாலசந்தர், 1994ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதையும் பெற்றுள்ளார். மேலும் அண்ணமலை, அழகப்பா, மற்றும் சென்னை பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவித்துள்ளன.
உலக சினிமா வரலாறு என்ற புத்தகம் எழுதப்பட்டால் அதில் பாலசந்தரின் பெயர் ஒரு பக்கம் அளவுக்காவது இருக்கும். அந்த அளவிற்கு உலகத்தரம் வாய்ந்த படங்களை இயக்கிய பாலசந்தரை பற்றி சொல்ல இந்த ஒரு பக்கம் போதாது. எனினும் அவரை பற்றி அவர் மறைந்த இந்நாளில் ஒருசில துளிகளை எடுத்து கூறியதில் பெருமைப்படுகிறோம். பாலசந்தரின் பூத உடல் வேண்டுமானால் மறையலாம். ஆனால் அவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் என்றுமே அழியாது. அழியாப்புகழ் பெற்ற பாலசந்தரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
Thanks:http://www.indiaglitz.com