மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நல்ல நேரம் படத்தின் நிழற்படங்கள் - கண்ணுக்கு விருந்து . நன்றி திரு முத்தையன் சார் .
Printable View
மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை - நல்ல நேரம் இரண்டு படங்களின் மற்ற மொழி படங்களுடன் ஒப்பிட்டு பதிவிட்ட நிழற் படங்கள் எல்லாமே சிறப்பாக இருந்தது . குறிப்பாக நல்ல நேரம் மக்கள் திலகத்தின் நிழற் படங்கள் அபாரம் . மக்கள் திலகத்தின் எழிலான தோற்றத்தை அழகாக படம் பிடித்து பதிவிட்ட இனிய நண்பர் திரு முத்தையன் அவர்களுக்கு என்னுடைய இதயங்கனிந்த நன்றி நன்றி நன்றி
ராமன் தேடிய சீதை படத்தில் மக்கள் திலகம் அணிந்திருந்த 43 உடைகளில் தோன்றும் நிழற் படங்களை தாங்கள் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்
please watch from 21:52
http://www.suntamil.net/2015/03/nigh...n-tv-news.html
1977 மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தல்
தமிழ் நாட்டில் 39 தொகுதிகளில் 35 தொகுதிகளை அதிமுக - காங்
கூட்டணி கைப்பற்றியது . வடசென்னை - மத்திய சென்னை - வேலூர் - நாகர் கோயில் 4 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது .புதுவை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது .
1973ல் திண்டுக்கல் , 1974ல் கோவை - நாடாளுமன்ற இடைதேர்தல்களில் மக்கள் திலகம் தீவிர பிரச்சாரம் செய்து
வெற்றிகளை குவித்தார் . 1977 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ் நாடு மற்றும் புதுவை மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் .
தேர்தல் நேரத்தில் பல் வேறு யூகங்கள் , தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை ஒரு விவாதமாக மக்கள் எடுத்து கொண்டார்கள் .திமுக கூட்டணி மாபெரும் கூட்டணி வெற்றி பெறும் என்று ஒரு தரப்பினரும் , அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்று மற்ற தரப்பினரும் கூறி வந்தார்கள் .
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் தேர்தலில் முழு மூச்சுடன் ஈடு பட்டு அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பம்பரமாக சுழன்று வாக்குகள் சேகரித்தார்கள் .
ஒட்டு எண்ணிக்கை
தமிழ் நாடு - புதுவை 40 தொகுதிகள் ஒட்டு எண்ணிக்கை நடந்த அன்று ஆரம்பம் முதல் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தார்கள் .இறுதியில் வேலூர் தொகுதியில் 3000 வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை காங் ஆதரவு அப்துல் சமத் இழந்தார் . வட சென்னையில் அதிமுக வேட்பாளர்
நாஞ்சிலார் - மத்திய சென்னை வேட்பாளர் திரு ராஜ முகமது குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை
இழந்தார்கள் . நாகர் கோயிலில் காங் வேட்பாளர் தோல்வியை தழுவினார் .
35 தொகுதிகள் - வெற்றிக்கனியை பறித்த மக்கள் திலகம் எம்ஜிஆர் - நிகழ்த்திய அரசியல் வெற்றி .
தமிழ்நாட்டில் 18 மற்றும் புதுவை நாடாளுமன்றம் = 19 உறுப்பினர்களை வெற்றி பெற செய்தார் .அகில இந்திய அரசியலில் புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்களின் அரசியல் சக்தி - பற்றி பல் வேறுகட்சியினரும் பத்திரிகைகளும்
பாராட்டினார்கள் .
1957 தேர்தலில் மக்கள் திலகத்தின் பிரச்சாரம் - 15 திமுக உறுப்பினர்கள் வெற்றி
1962 தேர்தலில் மக்கள் திலகத்தின் பிரச்சாரம் 50 திமுக உறுப்பினர்கள் வெற்றி
1967 தேர்தலில் மக்கள் திலகத்தின் பிரச்சாரம் & நிழற் படம் - திமுக ஆட்சி .வெற்றி
1971 தேர்தலில் மக்கள் திலகத்தின் பிரச்சாரம் - மீண்டும் திமுக ஆட்சி .வெற்றி
1977 தேர்தலில் மக்கள் திலகத்தின் பிரச்சாரம்- மக்கள் திலகமே ஆட்சி கண்டார் - அதிமுக ஆட்சி .வெற்றி
1980 தேர்தலில் மக்கள் திலகத்தின் பிரச்சாரம்-- மீண்டும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆட்சி .வெற்றி
1984 மக்கள் திலகம் எம்ஜிஆர் நல்லாட்சி - மீண்டும் மூன்றாவது முறை அதிமுக ஆட்சி .வெற்றி
1989 முதல் 2015 ஸ்ரீரங்கம் சந்தித்த தேர்தல்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நிறுவிய அதிமுக - இரட்டை இலை
மக்கள் திலகம் உருவாக்கிய புரட்சிகரமான திட்டத்தினால் முன்னேறிய சமுதாயத்தின் ஆதரவு மூலம் வெற்றிகள்
.
யுகேஸ் பாபு நீங்கள்
சிங்கபுர் மலேசியா கனடா நாடுகளில்ஒரே மறவெனியீட்டு காவியம்
ஆ ஒருவன் என்றும் எந்த ஒரு நடிகராலும் சாத்தியமா என்றும் கேட்கிறீர்கள்?
நீஙகள் குறிப்பிட்ட 3 நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கவிலும் திரையிடப்பட்டது கர்ணன்
இதனை முதல்முதலில் சாத்தியமாக்கியவரே எங்கள் திலகம்தான்
அறிந்துகொள்ளுங்கள்
27.7.12 முதல்
அமெரிக்கா-கனடா-மலேசியா-சிங்கப்பூர் : கர்ணன்
http://i1110.photobucket.com/albums/...arnanDi3-1.jpg
http://i1110.photobucket.com/albums/.../KarnanDi6.jpg
லண்டன் மாநகரில் உலகமே களமிறங்கி, புவியின் எடை ஒரே பக்கமாகச் சாய்வதால், எதிர்திசையில் எடையைச் சமன் செய்ய, விண்ணுலகில் இருந்து கலைக்கடவுள் வந்துள்ளார் "கர்ண"னாக..!
ஏதேனும் ஒரு பெரிய மாநில-தேசிய-உலக நிகழ்வு குறுக்கிட்டாலே, தங்களது திரைப்படங்களை சற்று தள்ளி வெளியிட்டுக் கொள்ளலாம் என்கின்ற மனோபாவம்/சென்டிமென்ட் உள்ள திரையுலகில், அன்றும்-இன்றும்-என்றென்றும் இதுகுறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல், தமது திரைப்படங்களை மிகமிக துணிச்சலுடன் வெளியிட்டு வெற்றிக்கொடி நாட்டுகின்ற ராஜதைரியம் நமது நடிகர் திலகம் ஒருவருக்கே..!
லண்டனில் 'ஒலிம்பிக்ஸ்' களைகட்ட அமெரிக்கா-கனடா-மலேசியா-சிங்கையில் "கர்ணன்" கொடி நாட்டுகிறார்.
கனடாவில் உங்கள் ஆ.ஒருவன் 2 நாட்கள் ஓடுவதாக விளம்பரம் செய்தும்
ஆட்கள் வராததால் தூக்கிவிட்டார்கள்
கர்ணன் 3 வாரங்கள் ஓடி சாதனை செய்தது