எம்.ஜி.ஆர் ரசிக நண்பர்களுக்கு,
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இன்று நம்மிடம் உடலால் இல்லை .. அவர்களின் புதிய திரைப்படங்களும் இனிமேல் வரப்போவதில்லை ..எனவே நாம் ஒன்றும் அஜித்-விஜய் ரசிகர்கள் அல்ல . இங்கிருக்கும் பலர் நான் உட்பட விவரம் தெரியும் போது மக்க்ள் திலகம் திரைத்துறையில் இல்லை .
நானெல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் புடை சூழ வளர்ந்தவன் .. நான் பிறந்து வளர்ந்த மீனவகிராமம் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை .. அதிலே விதிவிலககாக சிவாஜி ரசிகனாக வளர்ந்தவகளில் நானும் ஒருவன் .. சிறு வயதில் சிவாஜி ரசிகனென்றால் எம்.ஜி.ஆரை பிடிக்காது , எம்.ஜி.ஆர் ரசிகனென்றால் சிவாஜியை பிடிக்காது என்ற வளமைக்கேற்ப எனக்கும் எம்.ஜி.ஆர் பிடிக்காது ..ஆனாலும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் நிறைந்த நண்பர் குழாமிடையே என்னால் எம்.ஜி.ஆரை தவிர்க்க முடியவில்லை .. நாளெல்லாம் ஒலிக்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள் நெஞசிலே ஆணி போல பதிந்து விட்டது .
காலப்போக்கில் எம்.ஜி.ஆர் வெறுப்பு என்பது மாறி அவர் மேல் இனம் புரியாத மதிப்பு ..அர்சியல் ரீதியாக கூட நான் எதிர்நிலையில் உள்ளவன் தான் என்றாலும் , இன்றும் மூன்றாம் வகையினர் எம்.ஜி.ஆரை ஏளனமாக பேசினால் விட்டுக்கொடுக்காதவன் நான் .
இந்த மன்றத்தில் கூட பல ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது இருப்பது போல எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வந்து சேரவில்லை ..இன்னும் சொல்லப்போனால்
எம்.ஜி.ஆர் திரிக்கு பங்களிக்கக் கூட ஆளில்லா சமயத்தில் அதை விடாப்பிடியாக பங்களித்து தொடங்கி வைத்தவர்களில் நானும் ஒருவன்
http://www.mayyam.com/talk/showthrea...M-MGR-(Part-2)
கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியோடு அணுகுவோம் .. நல்லிணக்கம் காப்போம்.