-
23rd August 2015, 09:01 PM
#2491
Senior Member
Diamond Hubber
எம்.ஜி.ஆர் ரசிக நண்பர்களுக்கு,
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இன்று நம்மிடம் உடலால் இல்லை .. அவர்களின் புதிய திரைப்படங்களும் இனிமேல் வரப்போவதில்லை ..எனவே நாம் ஒன்றும் அஜித்-விஜய் ரசிகர்கள் அல்ல . இங்கிருக்கும் பலர் நான் உட்பட விவரம் தெரியும் போது மக்க்ள் திலகம் திரைத்துறையில் இல்லை .
நானெல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் புடை சூழ வளர்ந்தவன் .. நான் பிறந்து வளர்ந்த மீனவகிராமம் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை .. அதிலே விதிவிலககாக சிவாஜி ரசிகனாக வளர்ந்தவகளில் நானும் ஒருவன் .. சிறு வயதில் சிவாஜி ரசிகனென்றால் எம்.ஜி.ஆரை பிடிக்காது , எம்.ஜி.ஆர் ரசிகனென்றால் சிவாஜியை பிடிக்காது என்ற வளமைக்கேற்ப எனக்கும் எம்.ஜி.ஆர் பிடிக்காது ..ஆனாலும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் நிறைந்த நண்பர் குழாமிடையே என்னால் எம்.ஜி.ஆரை தவிர்க்க முடியவில்லை .. நாளெல்லாம் ஒலிக்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள் நெஞசிலே ஆணி போல பதிந்து விட்டது .
காலப்போக்கில் எம்.ஜி.ஆர் வெறுப்பு என்பது மாறி அவர் மேல் இனம் புரியாத மதிப்பு ..அர்சியல் ரீதியாக கூட நான் எதிர்நிலையில் உள்ளவன் தான் என்றாலும் , இன்றும் மூன்றாம் வகையினர் எம்.ஜி.ஆரை ஏளனமாக பேசினால் விட்டுக்கொடுக்காதவன் நான் .
இந்த மன்றத்தில் கூட பல ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது இருப்பது போல எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வந்து சேரவில்லை ..இன்னும் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் திரிக்கு பங்களிக்கக் கூட ஆளில்லா சமயத்தில் அதை விடாப்பிடியாக பங்களித்து தொடங்கி வைத்தவர்களில் நானும் ஒருவன்
http://www.mayyam.com/talk/showthrea...M-MGR-(Part-2)
கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியோடு அணுகுவோம் .. நல்லிணக்கம் காப்போம்.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
Post Thanks / Like - 3 Thanks, 4 Likes
-
23rd August 2015 09:01 PM
# ADS
Circuit advertisement
-
23rd August 2015, 09:17 PM
#2492
Junior Member
Diamond Hubber
சக்தி குறைந்தவர்களிடம் வீரத்தைத் காட்டுவது சரியல்ல! வீரத்திற்கும் அது அழகல்ல.
- புரட்சித்தலைவர்
-
23rd August 2015, 09:20 PM
#2493
Junior Member
Diamond Hubber
மனிதர்கள் அத்தனை பெரும் நடிகர்களே. குழந்தையாக, குமாரனாக, இளைஞ்சனாக பின்னர் தந்தையாக, தாத்தாவாக, வயோதிகக் கிழவனாக, இறுதியில் பிரதமாக மனிதன் இத்தனை படிகளிலும் நடிக்கிறான். நாம் அனைவரும் ஒரு இனத்தவர்தான். இப்படி இருக்கும் பொழுது அவர் தான் சிறந்த நடிகர் இவர் சிறந்த நடிகர் இல்லை என்று கூக்குரலிடும் ரகளை செய்யும் பலருக்குக் துன்பமளிபதும் அநாகரிகமான செயலாகும்.
-
23rd August 2015, 09:33 PM
#2494
Junior Member
Diamond Hubber
கோவை ராயல் திரைஅரங்கில்
ஒளி விளக்கு
காவியத்தை காண இன்று மாலை காட்சிக்கு
வருகை தந்தவர்கள்
சுமார் 700 பேர்கள்
அரங்கு நிறைந்தது.
MSG FROM MR.HARIDAS - Coimbatore
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
23rd August 2015, 09:47 PM
#2495
Junior Member
Diamond Hubber
-
23rd August 2015, 10:02 PM
#2496
Junior Member
Diamond Hubber
எதிரிகளுக்கு புரட்சித்தலைவரின் நெத்தியடி வசனம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd August 2015, 10:10 PM
#2497
Junior Member
Diamond Hubber
"எங்களது ஒப்பட்ற்ற தலைவரை யாருடனும் ஒப்பிட்டு பேசமாட்டோம்" என்ற கொள்கையுடன் செயல்பட்டால் எங்கும் எந்த பிரச்னையும் இல்லை.
Last edited by saileshbasu; 23rd August 2015 at 11:14 PM.
-
Post Thanks / Like - 3 Thanks, 3 Likes
-
23rd August 2015, 10:33 PM
#2498
Junior Member
Diamond Hubber
வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு
எம்.ஜி.ஆர். முத்து
கலைஞர்களை ரசித்த மக்கள் திலகம்
மக்கள் திலகம் அவர்கள் ஒரு முக்கிய நண்பரிடம் சொன்ன விஷயம் எனக்கு டி.ஆர். மகாலிங்கம் அவர்களை பிடிக்கும். அவருடைய கர்நாடக இசையிலிருந்து சினிமா படங்கள் வரை நல்ல உயர்ந்த குரல் வளம் உடையவர். ஒருவர் சொந்த குரலில் பாடுவார். அந்த காலத்தில் சுதி, சுரம், என்று சொல்வார்கள். சுருக்கமாக கட்டை என்றும் இதற்கு ஒரு சொல் உண்டு. இதில் தமிழ்நாட்டிலேயே அந்த காலத்தில் மகாலிங்கம் அவர்கள் 8 கட்டை சுரத்தில் பாடிய ஓரே ஆள் இவர்தான். இம்மாதிரி நான் இன்னும் எவ்வளவோ பெயர்களைப் பற்றி சொல்லுவேன். இப்போ நேரம் இல்லை. இன்னொரு நாளைக்கு பேசலாம் என்று எம்.ஜி.ஆர். அவர்கள் முடித்துகொண்டார்.
அதே நபர் சில நாட்கள் கழித்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை மீண்டும் சந்திக்கிறார். வந்தவர் எம்.ஜி.ஆர். அவர்களை சார் என்று தான் அழைப்பார். வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு உங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறேன் என்று நினைக்காதீர்கள் எனக்காக அரைமணிநேரம் ஒதுக்கினால் போதும் என்று சொல்லி கொண்டே சார் உங்கள் வாழ்க்கையில் நாடகம், சினிமா, அரசியல் இப்படி மூன்று துறைகளிலும், இடையில் ஏற்பட்ட சிரமங்களையும் சமாளித்து கொண்டு வந்து இருக்கிறீர்கள். உங்களுடைய கொள்கை முயற்சியின் படி எல்லாவற்றிலும் நீங்களே முதல்வராக வெற்றி கொண்டு இருக்கிறீர்கள். இன்று உள்ள அரசியலைப் பற்றிபேசுவதை விட சினிமாவைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை விவரம் கேட்கிறேன். அதாவது இன்றைய தமிழ் சினிமா உலகத்தில் மக்கள் திலகம், நடிகர் திலகம் இந்த இருவரும் தான் முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கும், தங்களுக்கும் போட்டி பொறமை எப்போதாவது ஏற்பட்டது உண்டா? உடனே மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பதில் ஒரு அட்டகாசமான சிரிப்பை சிரித்து கொண்டு சார் என் உடன் பிறந்த அண்ணன் சக்கரபாணி அவர்கள் எப்படியோ, அதே போல்தான் சிவாஜியும் தொழிலில் ஒருவருக்கு ஒருவர் அக்கறை கொள்வது தான் முக்கியம் அதற்கு பெயர் போட்டி அல்ல.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
23rd August 2015, 10:49 PM
#2499
Junior Member
Veteran Hubber

Originally Posted by
joe
எம்.ஜி.ஆர் ரசிக நண்பர்களுக்கு,
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இன்று நம்மிடம் உடலால் இல்லை .. அவர்களின் புதிய திரைப்படங்களும் இனிமேல் வரப்போவதில்லை ..எனவே நாம் ஒன்றும் அஜித்-விஜய் ரசிகர்கள் அல்ல . இங்கிருக்கும் பலர் நான் உட்பட விவரம் தெரியும் போது மக்க்ள் திலகம் திரைத்துறையில் இல்லை .
நானெல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் புடை சூழ வளர்ந்தவன் .. நான் பிறந்து வளர்ந்த மீனவகிராமம் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் நிறைந்தது என சொல்லத் தேவையில்லை .. அதிலே விதிவிலககாக சிவாஜி ரசிகனாக வளர்ந்தவகளில் நானும் ஒருவன் .. சிறு வயதில் சிவாஜி ரசிகனென்றால் எம்.ஜி.ஆரை பிடிக்காது , எம்.ஜி.ஆர் ரசிகனென்றால் சிவாஜியை பிடிக்காது என்ற வளமைக்கேற்ப எனக்கும் எம்.ஜி.ஆர் பிடிக்காது ..ஆனாலும் எம்.ஜி.ஆர் பக்தர்கள் நிறைந்த நண்பர் குழாமிடையே என்னால் எம்.ஜி.ஆரை தவிர்க்க முடியவில்லை .. நாளெல்லாம் ஒலிக்கும் எம்.ஜி.ஆர் பாடல்கள் நெஞசிலே ஆணி போல பதிந்து விட்டது .
காலப்போக்கில் எம்.ஜி.ஆர் வெறுப்பு என்பது மாறி அவர் மேல் இனம் புரியாத மதிப்பு ..அர்சியல் ரீதியாக கூட நான் எதிர்நிலையில் உள்ளவன் தான் என்றாலும் , இன்றும் மூன்றாம் வகையினர் எம்.ஜி.ஆரை ஏளனமாக பேசினால் விட்டுக்கொடுக்காதவன் நான் .
இந்த மன்றத்தில் கூட பல ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது இருப்பது போல எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வந்து சேரவில்லை ..இன்னும் சொல்லப்போனால்
எம்.ஜி.ஆர் திரிக்கு பங்களிக்கக் கூட ஆளில்லா சமயத்தில் அதை விடாப்பிடியாக பங்களித்து தொடங்கி வைத்தவர்களில் நானும் ஒருவன்
http://www.mayyam.com/talk/showthrea...M-MGR-(Part-2)
கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியோடு அணுகுவோம் .. நல்லிணக்கம் காப்போம்.
சகோதரர் திரு. ஜோ அவர்கள் அறிவது :
தங்களின் அர்த்தமுள்ள பதிவு விரும்பத்தக்கது. மக்கள் திலகம் திரியின் ஆரம்ப கால பாகங்களை நடத்தி சென்றதற்கு, எங்கள் பொன்மனச்செம்மல் அன்பர்கள் சார்பில் முதலில் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்,
நடிகர் திலகம் திரியினில் சில பிற்போக்குவாதிகள், நாங்கள் வணங்கும் எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் சமீப காலமாய் , விமர்சிப்பதை பார்த்த பின்பு தான் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவரவர்கள் தங்கள் அபிமான நடிகரின் புகழ் பாடி விட்டு போகட்டுமே ! ஏன் எங்கள் புரட்சித்தலைவரை வம்புக்கிழுக்க வேண்டும் ? எங்கள் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களை விமர்சித்துதான் நடிகர் திலகம் புகழ் பாட வேண்டுமா ? அவர்கள் அவ்வாறு செய்வதினால் தான் பதிலுக்கு நாங்களும், எங்கள் தரப்பில் சில விளக்கங்களை அளிக்க வேண்டிய அவசியத்துக்கு ஆளாகிறோம்.
எங்கள் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தீவிர பங்காற்றிய காரணத்தால்தான், தி. மு. க. வை பிடிக்காத பலர், காங்கிரஸ் கட்சியினர் உட்பட, அவருக்கு வேண்டப்படாதவர்கள் ஆனார்கள். அந்த காழ்ப்புணர்ச்சியில் இன்னும் சிலர், பொற்கால ஆட்சி தந்த எங்கள் பொன்மனசெம்மலை விமர்சனம் செய்கின்றனர்.
எங்களை பொருத்தவரை திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை ஒரு போட்டியாளராக என்றுமே கருதியதில்லை. ஏன், சிவாஜி கணேசன் அவர்களே தனது அன்புக்குரிய அண்ணன் எம். ஜி. ஆர். அவர்களை ஒரு போட்டியாளராக கருதியிருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன். இல்லையென்றால், தனது அன்னையின் சிலையை திறப்பதற்கு தகுதியானவர் என்று எங்கள் கொள்கைத்தங்கம் குணக்குன்று எம். ஜி. ஆர். அவர்கள் தான் என்று நினைத்து அதை செயல்படுத்தியிருப்பாரா அல்லது, தஞ்சையில் தான் தனக்கு சொந்தமான திரையரங்குகளை அண்ணன் எம். ஜி. ஆர். தான் திறக்க வேண்டும் என்று அவரின் தேதிக்காக காத்து கொண்டிருந்திருந்து அந்த எண்ணத்தை ஈடேற்றியிருப்பாரா ?
நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு, அவர் அன்புடன் போற்றிய மக்கள் திலகத்தை விமர்சிப்பதன் மூலம்,. தங்களின் போலித்தனத்தை வெளிப்படுத்தி கொண்டு, முகவரியை தொலைத்து கொண்டிருக்கிருக்கும், விரல் விட்டு எண்ணக்கூடிய அந்த ஒரு சில பிற்போக்கு வாதிகளை நினைத்தால் அனுதாபம் தான் கொள்ள வேண்டியிருக்கிறது.
இவர்களுக்கு உண்மையிலேயே அவர் மீது அபிமானம் இருக்குமேயானால், மக்கள் திலகத்தை விமர்சிப்பதன் மூலம், அவர்களும் நம் அபிமான நடிகரை சீண்டுவார்களே என்று எண்ணியதுண்டா ? இந்த ஒரு சிலரால் தான் திரியின் மாண்பு காக்கப்படமால் போகிறது.
கருத்து வேறுபாடுகளை களைந்து நல்லிணக்கம் கொள்வதில் நாட்டம் கொள்ள விரும்பும் பல அன்பர்களில் நானும் ஒருவன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
மக்கள் திலகம் திரியின் ஆரம்ப கால பாகங்களை நடத்தி சென்றதற்கு, மீண்டும் எங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் !
பின் குறிப்பு : எனக்கு விவரம் தெரிந்த காலத்தில், மக்கள் திலகம் சில ஆண்டுகள் திரைத்துறையில் நீடித்த காரணத்தால் தான், அவரது மலைக்க வைத்த திரையுலக சாதனைகளை எண்ணி வியக்க நேர்ந்தது. அவரின் ப(பா)டங்களால் ஈர்க்கப்பட்டு அவரது தீவிர ரசிகனானேன்.
Last edited by makkal thilagam mgr; 23rd August 2015 at 10:51 PM.
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
-
23rd August 2015, 10:56 PM
#2500
Junior Member
Veteran Hubber

Originally Posted by
ravichandrran
கோவை ராயல் திரைஅரங்கில்
ஒளி விளக்கு
காவியத்தை காண இன்று மாலை காட்சிக்கு
வருகை தந்தவர்கள்
சுமார் 700 பேர்கள்
அரங்கு நிறைந்தது.
MSG FROM MR.HARIDAS - Coimbatore
WHAT A GLAD NEWS ? IN THE RECENT PAST ONLY, THIS GREAT MOVIE WAS SCREENED IN COIMBATORE. IT PROVES ONCE AGAIN THAT OUR MAKKAL THILAGAM M.G.R. IS EVER GREEN HERO.
THANK YOU FOR THE INFORMATION - My Dear Brother Mr. Ravichandran
Bookmarks