அன்பு ராமஜெயம் சார்,
எனக்கு தெரிந்தவரை இப்போது இங்கே யாரும் கோப/தாப வருத்தங்களினால் பதிவிடாமல் இருக்கவில்லை. அருமை நண்பர் நெய்வேலி வாசுதேவனைப் பொறுத்தவரை அவரது அலுவலக பணி நிமித்தமாக ஒரு மாத கால training programme-ஐ attend செய்துக் கொண்டிருப்பதால் அவரால் திரிக்கு வரமுடியவில்லை என்பதுதான் எனக்கு கிடைத்த செய்தி. வலது கை மணிக்கட்டில் ஏற்பட்ட வலியின் காரணமாக பதிவிடாமல் இருந்த சுவாமி இன்னும் அந்த சுகவீனத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை. தவிரவும் அவர் வேறு ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருப்பதால் சிறிது காலத்திற்கு அவரிடமிருந்து பதிவுகள் முன் போல அதிகமான அளவில் வரும் வாய்ப்புகள் குறைவு. கார்த்திக் அவர்கள் என்ன காரணத்தினாலேயோ பதிவிடுவதில்லை. பார்த்தசாரதி, கோபால் போன்றவர்களும் பிசியாக இருக்கின்றனர்.
என்னைப் பொறுத்தவரை நம்முடைய பதிவுகளின் மூலமாக அதை படிக்கிறவர்களுக்கு ஒரு செய்தி, அவர்கள் கேட்டிராத படித்திராத விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு communication-ஆக அமைய வேண்டும். Quality Content ஆக நம்முடைய பதிவுகள் அமைந்திருப்பதனால்தான் இன்று வரை இந்த மய்யத்தின் சிறந்த திரி என்ற பெயரும் புகழும் நமது நடிகர் திலகம் திரிக்கு கிடைத்திருகிறது. தொடர்ந்தும் இந்த பெயரையும் புகழையும் தக்க வைக்க நாம் முனைந்து செயல்படுவோம். பதிவாளர்களில் சிலரை உயர்த்தி சிலரை குறைத்து காட்டும் வேலைகளை நாம் என்றுமே ஆதரிப்பதில்லை.
ராகவேந்தர் சார் சொன்ன ஒரு கருத்துடன் உடன்படுகிறேன். ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்ற அவர் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். அதற்கான என்னுடைய முயற்சியையும் செய்கிறேன்.
அன்புடன்