அதை மெண்டல் ஹாஸ்பிடலுக்கு உடனே அனுப்பவும். செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
Printable View
Dear Joe,
அந்த அறிவு ஜீவியின் மற்றொரு பதிவு:
நூற்றாண்டுக் கொண்டாட்டம் - நிதியுதவி...
நண்பர்களே இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடுவது பற்றி நேற்று அறிவித்திருந்தேன். அதற்காக கொஞ்சம் பணமும் தேவை என்று எழுதியிருந்தேன். நேற்று இரவே நண்பர் ராம்குமார் கோவிந்தராசுலூ ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருந்தார். அவருக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மன்னிக்கவும், தமிழ்நாடு திரைப்படக் கலைஞர்கள் கொண்டாடிய விழாவில் தமிழ் சினிமாவில் சாதித்தவர்கள் பற்றி ஒரு குறிப்பும் இல்லை, தவிர அவர்கள் யாருடைய புகைப்படமும் எங்கேயும் காணப்படவுமில்லை. எனவே தமிழ் திரைப்படத் துறையின் சாதனையாளர்களை அவர்களின் புகைப்படங்களோடு நிறைய இடங்களில் அச்சிட்டு மக்களுக்கு தெரிவிக்கவும், அவர்களின் சாதனைப் பற்றி கூட்டம் நடத்தவும் நிறைய பணம் தேவை. எனவே நண்பர்கள் நிறைய பண உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். பண உதவி செய்ய இயலாவிட்டாலும், அச்சிட்டுக் கொடுக்கவும், வடிவமைத்துக் கொடுக்கவும் உதவ முடிந்த நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள். ****************
சின்னக் கண்ணன் சார்,
கவிதை மழை பொழிந்து காமெடிச் சாரலையும் கூடவே பொழிகிறீர்கள். எல்லோரையும் கவிஞர்களாக ஆக்கி விட்டுத்தான் மறு சோலியா? ஆண்டனியையும்,கோபாலையும் ஒப்பீடு செய்தது போல உங்களையும், கண்பத் சாரையும் ஒப்பிட்டு எழுதலாம். இருவருக்கும் அவ்வளவு ஒற்றுமைகள். இருவரும் வயிற்றைப் பதம் பார்க்கிறீர்கள்.
நண்பர் ஜோ அவர்கள் கொடுக்கச் சொன்ன தர்ம அடியை நீங்கள் இருவரும் எப்படித் தரப் போகிறீர்கள் என்பதை எண்ணும் போதே வயிறு வலிக்கத் ஆரம்பித்து விட்டது.
கோ,
நீ சொன்ன அந்த பானர்மேன்...யப்பா...தாங்க முடியல்ல.:) வயிறு வலி மாத்திரை இருந்தா அனுப்பி வை.
இங்கே சொல்லி பிரயோஜனம் இல்ல ..அங்க வந்து குடுங்க எல்லோரும்
வாசு சார்
ஈஸ்வரியின் பாடற் பட்டியல் சூப்பர்... இதில் பல பாடல்கள் நான் மிகவும் ரசிப்பவை.
தங்கள் பட்டியலில் ஒரு சில சின்ன திருத்தங்கள் சொல்ல விரும்புகிறேன்
1. மஞ்சள் பூசி மஞ்சம்.. இப்பாடலைப் பாடியவர் ஈஸ்வரியின் சகோதரி அஞ்சலி என எண்ணுகிறேன், உடன் பாடியவர் கோவை சௌந்தர்ராஜன்.
2. ருக்குமணியே பாடல் ஒளி விளக்கு படத்தில் தானே?
எனக்குப் பிடித்த பாடல்களில் இது போல் மேலும் சில உள்ளன
அன்னையும் பிதாவும் – பொன்னாலே வாழும்
என்ன முதலாளி சௌக்கியமா – எகிப்து நாட்டின் இளவரசி...
இன்னும் உண்டு .... பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
அது சரி.. சஸ்பென்ஸை சீக்கிரம் உடையுங்கள்....
நன்றி ராகவேந்திரன் சார்! திருத்தி விட்டேன்.
உண்மைதான் ராகவேந்திரன் சார்,
அது எல்.ஆர் அஞ்சலிதான். சகோதரிகளின் குரல் ஒன்று போல இருப்பதால்தான் இந்தக் குழப்பம். விஜயபாஸ்கர் அவர்கள் இசை என்று நினைக்கிறேன்.
கல் நாயக் சார், மன்னிக்க.. அந்தக் கவிதை (?) கிடுகிடென்று எழுதி இட்டேன்.. கோபால் சாரின் சார்பாக என எழுதி ஆலத்தின் இடுகையை அழைத்திருந்தேன். ஒருவேளை தவறாகி விடுமோ என டெலீட் செய்து விட்டேன்.(கோ வுடன் ஜாஸ்தி பழகியதில்லை.கோபித்துக் கொண்டால் என்ன செய்வது..இங்கு இருக்கும் அனைத்து நண்பர்களிடமும் தான்.).தற்சமயம் அது அலுவலகக் கோப்பில் இருக்கிறது. ஞாயிறன்று மறுபடி இடுகிறேன்.(எங்களுக்கு வெள்ளி சனி ஹாலிடே) அதற்குள் படித்துப் பாராட்டியதற்கு நன்றி. இன்ஃபேக்ட் நாளையும் நாளை மறு நாளும் சிலபடங்கள் பார்த்துவிட்டு பதிவிடப் பார்க்கிறேன்.
போங்க சின்னக்கண்ணன் சார், ஞாயிற்று கிழமை வரைக்கும் நாங்க எல்லாம் காத்திருக்கணுமா? கார்த்திக் சார் "அவர் கவிதையை முதலில் பதிக்கட்டும், நான் என் பதிவை இடுகிறேன்" அப்படின்னு ஞாயிற்று கிழமை வரைக்கும் தள்ளி போட்டுட்டார்னு வைங்க நம்ம எல்லாருக்கும்தானே கஷ்டம்!!! படங்களோட ஆய்வை நீங்க ஞாயிற்று கிழமை போட்டாப் போச்சு.
அப்புறம் கோபால் சாரை பத்தி என்ன சொன்னீங்க. அவர் கோவிச்சுக்குவாரா? அவர் கோவிச்சுக்கிட்டால்தான் ரொம்ப குளோஸ் ஆவாரு. நான்கூட அவரை ஒருதடவை கோவிச்சுக்கிட்டேன். அவரு கோவப்படலையே. என்ன குழப்பறேனா? விடுங்க. அவரு தங்கமான மனுஷன் சார். அவருக்கு ஆதரவா கவிதை எழுதறீங்கன்னு தலைக்கு மேலே வைச்சு கொண்டாடுவாரு. நீங்க உங்க கவிதையை வெளியிட்டுப்பாருங்க தெரியும்.