எங்களுக்கு திக்கு ஏது? திசை ஏது?
மதுரை மாவட்டம் பொந்துகபட்டி கிராமத்தில் ஆடு மேய்த்த சுப்பையாவுக்கு ஆஸ்தியும், அந்தஸ்தும் வரக் காரணமாக இருந்தவர், நம் வள்ளல் பெருமகன். அந்த வள்ளல பற்றி,
கோவா கார்வார் பகுதியில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பு லைட்மேன், கார்பென்டர் போன்ற தொழிலாளர்கள் படப்பிடிப்புத் துவங்க ஒரு வாரத்திற்கு முன்பே சென்று விடுகிறார்கள். அவர்களுக்கு உணவு பரிமாற அந்த பகுதியைச் சேர்ந்த சமையற்காரர்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
அவர்கள் உணவு முறைப்படி பாதி வேக வைக்கப்பட்ட மீனையும், பாதி வேக்காட்டில் வடித்த சோற்றையும் பரிமாறுகிறார்கள். இதுபோன்ற உணவு முறையை சாப்பிட்டு பழக்கப்படாத டெக்னீஷியன்கள் சாப்பிட முடியாமல் மிகவும் அவஸ்தைப்படுகின்றனர்.
இந்த செய்தி சென்னையில் இருந்த நம் வள்ளலுக்கு தெரிய வருகிறது. உடனே தன் வீட்டு சமையற்காரர் காளிமுத்துவை கார்வாருக்கு அனுப்பி வைத்து, செட்டிநாடு ஸ்டைலில் உணவு கிடைக்க ஏற்பாடு செய்கிறார். குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளிதானே என்று குறைத்து மதிப்பிடாமல், விருந்தோம்பல் செய்து மகிழ்ந்தவர், நம் வள்ளல்.
ஆவடியில் இருந்து சென்னை, மீனம்பாக்கத்திற்கு இருபது நிமிடத்தில் வந்து சேர அண்ணா நகரில் இருந்து சாலையை விரிவுப்படுத்த திட்டம் தீட்டுகிறார்.
அப்படி விரிவுப்படுத்தும்போது, வடபழனிக்கும், கே.கே. நகருக்கும் இடையில் ஒட்டப்பாளையம் என்ற இடத்தில் நடு ரோட்டில் ஒரு அம்மன் கோயில் சாலைக்கு இடையூறாக இருக்கிறது. இதை எப்படி அப்புறப்படுத்துவது? அப்படி அப்புறப்படுத்தும்போது, மதப் பிரச்சினை வந்து விடுமோ? என்ற அச்சத்தில் வள்ளலிடம் நிலைமையை விளக்குகின்றனர்.
கேட்டுக்கொண்ட வள்ளல், மக்கள் பிரச்சினையை ஏற்படாத வண்ணம், மக்களின் மனம் புண்படாத வண்ணம், காஞ்சிப் பெரியவரை வைத்து, ‘இந்த கோயிலை சாலைக்கு இடையூறு இல்லாமல் இடம் பெயர்த்து வைக்க முடியுமா?’ என்று ஆலோசனை கேட்டு, அந்த மடாதிபதிளை வைத்தே, அத கோயிலை, இடம் பெயர்த்து வைக்க ஏற்பாடு செய்கிறார், நம் வள்ளல். வள்ளல் நினைத்திருந்தால், சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து கொள்ளுங்கள் என்று ஒரு ஆணை மட்டும் பிறப்பித்திருக்க முடியும். ஆனால்… எவர் மனத்தையும் புண்படுத்தாமல் சத்தியத்தில் அடிப்படையில் செயல்பட்டவர் நம் செம்மல். ‘அந்தச் செம்மலே, எங்கள் குலதெய்வம்’ என்கிறார் சுப்பையா.
“வானம் பொழியுது பூமி விளையுது தம்பிப்பயலே! நாம்
வாடி வதங்கி வளப்படுத்துவோம் வயல-ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையில-இது
தகாதுன்று எடுத்துச் சொல்லியும் புரியலே”