Sister,
Thankkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk you!
Sister,
Thankkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk you!
அன்புள்ள திருவாளர்கள். ராகவேந்தர், நெய்வேலி வாசுதேவன், கோபால், ராதாகிருஷ்ணன், காவேரி கண்ணன், வாசுதேவன், சந்திரசேகர், கண்பட், ஆதிராம் மற்றும் வனஜா மேடம் அவர்களே,
எனது "எல்லோரும் கொண்டாடுவோம்" பாடல் ஆய்வைக் கொண்டாடிய உங்கள் எல்லோருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
தங்கள் எல்லோருடைய ஊக்கமும், நடிகர் திலகத்தின் ஆளுமையும், என்னை மேலும் மேலும் எழுத வைக்கும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
dear vasu
பார்வை உவராணி கண்ணோவியம் பாடல் அந்த காலங்களிலே எனக்கும் ஒரு பிடித்த பாடல் நீங்க சொன்ன மாதிரி இனம் புரியாத இன்பம் வருவது உண்மை
ஒரு வேளை பாடல் வரிகளும், ராகமும் ஒரு காரணமா இருக்கலாம்
அண்ணன் அட்டகாசமா இருப்பார்
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
நடிகர் திலகத்தின் திரைப்படங்களை முழுவதுமாக ஒன்றன் பின் ஒன்றாகத் தொகுத்து அற்புதமாக பதிந்து வருகிறீர்கள். அவரது அனைத்து படங்களையும் பதிந்த பின், இந்த ஒன்றே அவரது அனைத்து ரசிகர்களுக்கும், உலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழனுக்கும், வரும் தலைமுறையினருக்கும் ஒரு மிகச் சிறந்த விலை மதிப்பில்லாத ஆவணப் பெட்டகமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
அவரது பல சாதனைகளைப் புரிந்த 1954-ஆம் ஆண்டின், மிகச் சிறந்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுக்க ஆரம்பித்ததைப் பார்க்கப் பார்க்க மனம் உவகையில் துள்ளுகிறது.
கூடவே, திரு. நெய்வேலி வாசுதேவனும் அந்தந்தப் படங்களின் நிழற்படங்களைப் பதிந்து ஒரு முழுமையைக் கொடுத்து மேலும் சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு சிறிய ஆலோசனை. கூடவே, அந்தந்தப் படங்களின் சாதனைகளையும் (பத்திரிகைகளில் வந்தவை) பதிந்தால் முழுமை பெறும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
டியர் வினோத் சார்,
தங்களின் பாராட்டிற்குப் பிறகே எண்ணிக்கையை நானே கவனித்தேன். தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்
டியர் சாரதி,
தங்களுடைய அன்பான பாராட்டிற்கும் ஆதரவான வார்த்தைகளுக்கும் உளமார்ந்த நன்றிகள். இத்திரியின் பக்க பலமே நமது ஆவணத்திலகம் பம்மலாரின் ஆவணங்கள் தான். எனவே அவர் மற்றொரு திரியில் அளித்துள்ள சாதனை விளம்பர, செய்தி நிழற்படங்கள் இங்கேயும் அந்தந்தப் படங்களின் தகவல்களுடன் இடம் பெறும்.
மீண்டும் தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்
முத்தான மூவாயிரம் பதிவுகளைத் தாண்டிய மூத்த ரசிக வேந்தர் எங்கள் ராகவேந்திரன் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
http://i1087.photobucket.com/albums/...432be66f46.jpg
http://padamhosting.com/out.php/i780...-sundari-8.jpg
பசி நோக்காமல், கண் துஞ்சாமல் எந்நேரமும் காவியத்தலைவரின் புகழ்பாடும் எங்கள் அன்பு ராகவேந்திரன் சார் அவர்களே!
உழைப்பதில் நீங்கள் எங்களுக்கு வழிகாட்டி.
வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்குகிறேன்.