-
4th February 2013, 06:02 PM
#11
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. ராகவேந்தர் அவர்களே,
நடிகர் திலகத்தின் திரைப்படங்களை முழுவதுமாக ஒன்றன் பின் ஒன்றாகத் தொகுத்து அற்புதமாக பதிந்து வருகிறீர்கள். அவரது அனைத்து படங்களையும் பதிந்த பின், இந்த ஒன்றே அவரது அனைத்து ரசிகர்களுக்கும், உலகின் எந்த மூலையில் இருக்கும் தமிழனுக்கும், வரும் தலைமுறையினருக்கும் ஒரு மிகச் சிறந்த விலை மதிப்பில்லாத ஆவணப் பெட்டகமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
அவரது பல சாதனைகளைப் புரிந்த 1954-ஆம் ஆண்டின், மிகச் சிறந்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுக்க ஆரம்பித்ததைப் பார்க்கப் பார்க்க மனம் உவகையில் துள்ளுகிறது.
கூடவே, திரு. நெய்வேலி வாசுதேவனும் அந்தந்தப் படங்களின் நிழற்படங்களைப் பதிந்து ஒரு முழுமையைக் கொடுத்து மேலும் சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு சிறிய ஆலோசனை. கூடவே, அந்தந்தப் படங்களின் சாதனைகளையும் (பத்திரிகைகளில் வந்தவை) பதிந்தால் முழுமை பெறும்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
4th February 2013 06:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks