நன்றி திரு. சுந்தரராஜன் சார்,
சகோதரர் திரு.முத்தையன் அம்மு போலவே கண்ணிமைக்கும் நேரத்தில் நீங்களும் பல பதிவுகள் போடுகிறீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
Senthil Sir,
"Sorgam" song reminds me of 1970's. In madras [ Poonamalee High Road] there is RBI Staff and Offiers quarters, next to EGA. There is RBI Prepratory school with open auditorium. They used to screen one movie per month. 90% NT movies, balance GG movie and religious movies. Many movies I have seen many a times! The simple reason it in those days it used to rain. So If it rains, the same movie will be screened the following week. Sorgam was screen nearly 4 times before they managed to screen the complete movie. Generaly RBI staff/their family and children used to come; some with chair, some with carpet[jamakalam] and reserve the place. Even persons, not staying in the quarters, from the same locality used to be present. The Open ground and all the surrounds used to be full. I can recall Sorgam/Ooty varai uravu/thangaikkaga/raja/enga mama/saraswathi sabatham being screened many times because of rain. As regards GG movie, it was Santhi Nilayam/Ramu which was screen more than three time again because of rain.
Yes, one may wonder why I have not mentioned about MT movies. Yes, they screened MT movie only once, that day no idea from where the rush came it was something like a public meeting, the staff members who were staying right opp to the auditorium were fortunate because they watched from their residence. There was no place left blank including behind the screen. They decided NOT to screen MT movies thereafter.
All things changed after 1975 [ Doordarshan TV came] and they stopped screening movies like before.
Could I request you to post the same Sorgam Video but Ponmagal Vandhal - KJ Yesudas Version please.
தூத்துக்குடி திரையரங்கம் ஏற்படுத்திய கின்னஸ் சாதனை அதனைத் தொடர்ந்த விழாச் செய்திகளை அழகுறப் பதிவு செய்த அருமைச் சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றிகள். தங்களது பதிவு ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
https://www.youtube.com/watch?v=uGDqJH4hfPc
மக்கள் திலகம் நாட்டியப் பேரொளி பற்றிய கட்டுரைக்கு நன்றி. ஆனால் அதில் ஏற்கனவே இந்தத் திரியில் நான் சுட்டிக் காட்டிய தவறு மறுபடியும் மேலும் பல தவறுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. தசாவதாரப் பாடல் காட்சி இடம் பெற்ற படம் மதுரைவீரன் அல்ல. ராஜாதேசிங்கு. மதுரைவீரன் படத்தில் ஆடல் காணீரோ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது . மக்கள் திலகம் அதற்கு மறுப்பேதும் சொல்ல வில்லை. ராஜாதேசிங்கு படத்தில் நாட்டியப் பேரொளி இஸ்லாமியப் பெண்மணி. கதைக்குச் சம்பந்தமே இல்லாத , பொருத்தமும் இல்லாத தசாவதாரப் பாடல் படத்தில் இடம்பெற வாய்ப்பே இல்லை. எனவே தான் இடைவேளையின் போதும் சில திரையரங்குகளில் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்னரும் திரையிடப்பட்டன. மக்கள் திலகத்தின் நடனத் திறன் பற்றி பலரும் பல விதமாகக் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். குடியிருந்த கோவில் படத்தில் ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடலுக்கு நடனமாட எம்.ஜி.ஆர் பயந்தார் என ஒரு கதையும், மக்கள் திலகமாவது பயப்படுவதாவது அந்தப் பாடலில் என்னை உடனாட தேர்வு செய்ததோடு அருமையாக ஆடி அசத்தியவர் எம்.ஜி.ஆர் என்று விஜயலட்சுமி.எல். அவர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். அந்தப் பாடலுக்கு நான் தான் நடன அமைப்பு செய்தேன் என்று ரகுராம் முதல் புலியூர் சரோஜா வரை அனைவருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஸ்ரீமுருகன் படத்திலேயே மூன்று அருமையான நடனங்கள் இடம் பெற்றதென்றும் அதற்காக கடுமையான பயிற்சி மேற்கொண்டதாகவும் முறையாக பரதநாட்டியம் பயின்றதாகவும் மக்கள் திலகம் அவர்களே பதிவு செய்திருக்கிறார். வீரதீரமாக கதாநாயகன் நளினமாக நடனமாடுவது கம்பீரமாக இருக்காது என்ற எண்ணத்தில் சில படங்களில் நடனக் காட்சிகளை தவிர்த்தார். ஆனால் தேவைப் படும் காட்சிகளில் நடனத்தில் நம்மை கட்டிப் போட்டு வைத்தது என்றுமே மறக்க இயலாதது.
இனிய நண்பர் திரு சுந்தராஜன் அவர்களின் பதிவுகள் அருமை .நன்றி .
இனிய நண்பர்திரு முத்தையனின் ''விவசாயி '' ஸ்டில்ஸ் மிகவும் அருமை .
நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் பதிவிட்ட இனிய நண்பர்திருஜெய்சங்கர் அவர்களை
அன்புடன் வரவேற்கிறேன் . தொடர்ந்து திரியில் பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் .
கலைவேந்தன் சார்
மக்கள் திலகம் அல்லது எம்ஜிஆர் என்ற பெயரை எழுதவோ அல்லது உச்சரிக்கவோ தயங்கும் ஒரு சில நண்பர்கள் இருக்கிறார்கள் . ஆனால் நம்மைவிட உள்ளுக்குள் அதிமாக எம்ஜிஆர் நினைவில் வாழ்பவர்கள் அவர்கள் .விட்டு விடுங்கள் கலைவேந்தரே .உங்கள் அழைப்பு அவருக்கு வலையாக தெரிகிறது .உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் .