-
19th April 2015, 06:29 PM
#241
Junior Member
Platinum Hubber
-
19th April 2015 06:29 PM
# ADS
Circuit advertisement
-
19th April 2015, 06:30 PM
#242
Junior Member
Platinum Hubber
-
19th April 2015, 08:32 PM
#243
Junior Member
Senior Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரி பாகம் 15 துவங்கி இருக்கும் நண்பர் திரு சி.எஸ்.குமார் அவர்களுக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் சார்.
-
19th April 2015, 08:38 PM
#244
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
SUNDARAJAN
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரி பாகம் 15 துவங்கி இருக்கும் நண்பர் திரு சி.எஸ்.குமார் அவர்களுக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் சார்.

வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.சுந்தரராஜன் சார்.
மதுரையில் சிவாஜி மன்றத்தின் சார்பில் நீங்கள் செய்த நற்பணிகளுக்கு தமிழ் புத்தாண்டு அன்று பாராட்டு தெரிவித்திருந்தேன். கவனித்தீர்களா? தங்களின் அவன் ஒரு சரித்திரம் தொடரும், கவியரசர் கண்ணதாசன் தேவிகா பற்றி கூறியதை விளக்கியிருந்த விதமும் அருமை. வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
19th April 2015, 08:40 PM
#245
Junior Member
Senior Hubber
பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்
காதல் என்றொரு நாடகத்தை
என் கண் வழி மேடையில் நடித்ததில்லை
கற்றுத் தந்தவன் திரு முகத்தை
கன்னியின் நெஞ்சம் மறப்பதில்லை
இதழில் வைத்த ஒரு புன்னகையில்
என் இதயத்தை அளந்து விட்டான்
இரவில் வந்த பல கனவுகளில்
என் இறைவன் வளர்ந்து விட்டான்
எனக்கு எனக்கென்று இருந்த இளமையை
தனக்கென்று கேட்டு விட்டான்
இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல்
என்னைக் கொடுத்து விட்டேன்
என்னைக் கொடுத்து விட்டேன்
கொடியின் இடையில் ஒரு பாரமில்லை
என் வழியில் நடந்து வந்தேன்
குழந்தை மனதில் ஒரு கலக்கமில்லை
என் காலம் கடந்து வந்தேன்
மாலைப் பொழுதில் இளம் தென்றல்
தொடாத மலராய் நானிருந்தேன்
மன்னன் வந்த அந்த வேளையிலே
அவன் மடியில் ஏன் விழுந்தேன்
மடியில் ஏன் விழுந்தேன்
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
19th April 2015, 08:42 PM
#246
Junior Member
Senior Hubber
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும் அது சிரித்தோடி வரும் மாது
ஓடும் உனை நாடும் எனை உன் சொந்தம் என்று கூறும்
திரும்பும் எனை நெருங்கும் உன்தன் பதில் கொண்டு வந்து போடும்
இது தான் அந்த நிலவோ என்று முகம் பார்க்கும் வண்ணப் பந்து
இல்லை இது முல்லை என்று போராடும் கண்ணில் வண்டு
வருவார் இன்று வருவார் என்று மனதோடு சொல்லும் பந்து
வரட்டும் அவர் வரட்டும் என்று வழி பார்க்கும் காதல் செண்டு
முதல் நாள் இரவில் தனியே என்னை அழைத்தோடி வரும் தென்றல்
இவர் தான் கொஞ்சம் கவனி என்று இழுத்தோடி வரும் கண்கள்
அருகில் மிக அருகில் கண்டு அணைமீறி வரும் வெள்ளம்
அடங்கும் அன்று அடங்கும் இன்று அலைபாய்ந்து வரும் உள்ளம்
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
19th April 2015, 08:44 PM
#247
Junior Member
Senior Hubber
உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம்
கண்டவருண்டோ சொல் என் தோழா
கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம்
கண்டவருண்டோ சொல் என் தோழா
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
காண்பதில் தான் இன்பம் என் தோழா
காண்பதில் தான் இன்பம் என் தோழா
இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும்
இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும்
இன்பம் உண்டாவதில்லை என் தோழா
இன்பம் உண்டாவதில்லை என் தோழா
அரிய கைத் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா
அரிய கைத் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா
பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
கிட்டுவதே இல்லை என் தோழா
கிட்டுவதே இல்லை என் தோழா
உனை ஈன்ற தாய் நாடு ஆஆஆஆஆஆஆஆஆஆ
உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
உண்டாகும் என்றே சொல் என் தோழா
நாடோடி மன்னன்
Singers: Seerkazhi Govindarajan - பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
Lyrics: Pattukottai Kalyanasundaram
இயற்றியவர்: சி.ஏ. லக்ஷ்மணன்
Music: S.M. Subbiah Naidu - இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
Year: - ஆண்டு: 1958

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
19th April 2015, 08:45 PM
#248
Junior Member
Senior Hubber
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்
வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு..
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு,..
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை-
இது நான்குமறை தீர்ப்பு
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
பாடல் :கண்ணதாசன்
இசை :கே .வி .மகாதேவன்
பாடியவர் :டி .எம் .சௌந்தராஜன்

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
19th April 2015, 08:49 PM
#249
Junior Member
Senior Hubber
ரிக்ஷாக்காரன் படத்துக்காக தேசிய அளவில் சிறந்த நடிகர் விருதான "பாரத்" விருதைப் பெற்ற மக்கள் திலகம், விருதுடன்...

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
19th April 2015, 08:52 PM
#250
Junior Member
Senior Hubber
கணேசனுக்கு முன்பாகவே பத்மினிக்கு நன்கு அறிமுகமானவர் எம்ஜிஆர். ‘மோகினி’ சினிமாவில் நாட்டியம் ஆட, கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு சென்றனர் திருவாங்கூர் சகோதரிகள். அந்த நொடி முதலே, எம்.ஜி.ஆர். - பத்மினி நட்பு அரும்பு விட்டது.
எம்.ஜி.ஆர். பிரபலமாகி மிக நீண்ட காலம் கடந்தே, எம்.ஜி.ஆரின் நிழல் காதலி பத்மினி ஆனார். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம், 1956 ஏப்ரலில் வெளியான மதுரை வீரன். அதில் பத்மினி, வெள்ளையம்மாளாகத் தோன்றினார். மதுரை வீரனின் முதல் மனைவி பொம்மியாக பானுமதி நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பானுமதி - பத்மினி இருவரும் இணை சேர்ந்தது, மதுரைவீரனுக்குப் புது மகத்துவத்தை ஏற்படுத்தியது. புரட்சி நடிகரின் முதல் வெள்ளிவிழாப் படம் என்கிற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது.
மதுரை வீரன்
பத்மினி நாயகியாக நடித்த படங்களில் நாட்டியங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. மதுரை வீரன், கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரிப்பு. செலவைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர் அதன் முதலாளி லேனா செட்டியார். அதில், பத்மினிக்கு மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆரின் முழங்கால்களுக்கும் வேலை சற்றுக் கூடுதல்.
‘உத்தமவில்லன்’ கமலுக்கு அறியாப் பருவத்தில் நடனத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது, ‘ஏச்சிப் பிழைக்கும்…’ பாடலுக்கான எம்.ஜி.ஆர். - பத்மினியின் அங்க அசைவுகள்தான். அந்தக் காட்சிக்காகவே, மதுரை வீரனை மறக்காமல் நூறு நாள்களுக்கு மேல் பார்த்து ரசித்து, அதேபோல் பாதம் தூக்கி ஆடினார் பரமக்குடி கூத்தபிரான். கமலின் கலை வாழ்க்கைக்குப் பிள்ளையார் சுழி, மதுரை வீரனில் இருந்து மையம் கொண்டது.
அந்நாளில், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான டான்ஸ் மாஸ்டர் தங்கராஜ். மதுரை வீரனில் எம்.ஜி.ஆரும் – பத்மினியும் தனக்கு அளித்த ஒத்துழைப்பு குறித்து கூறியுள்ளார் –
‘பட்சிராஜா ஸ்டுடியோஸ் ஏழை படும் பாடு, பிரசன்னா படங்களின்போதே பத்மினிக்கு சினிமா நடனம் சொல்லித் தந்துள்ளேன். பத்மினி நல்ல டான்ஸர். அவரை மாதிரி பரதம் தெரிந்தவர்களுக்கு, ஒருமுறை சொல்லிக்கொடுத்தால் போதும். புரிந்துகொண்டு ஆடி பிரமாதப்படுத்திவிடுவார்கள்.
‘ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க…’ பாடலுக்கான ஒத்திகையில் நான் ஆடிக்காட்டியதும், இந்த மூவ்மென்ட் கஷ்டமாக இருக்கும்போலிருக்கிறதே’ என எம்ஜிஆர் முணுமுணுத்தார். பிறகு அவரே, ’எனக்குத்தானே பெயர் கிடைக்கும்; நானே முயற்சி செய்து ஆடிடறேன்’ என்று சொன்னபடியே நன்றாக ஆடினார். எம்.ஜி.ஆர். தயங்கியதுகூட, பத்மினியுடன் ஆடும்போது நம் ஆட்டம் அவருக்கு இணையாக இருக்க வேண்டும் என்றுதான்’.
எம்.எல்.வசந்தகுமாரியின் குரலில் ஒலித்த, 'ஆடல் காணீரோ...' சூப்பர் ஹிட் பாடலுக்கு பத்மினி ஆடிய திருவிளையாடல் நடனம், மிகப் பிரமாதமாகப் படமாக்கப்பட்டது. ஒப்பற்ற அந்த நாட்டியம், படத்தின் வேகமான ஓட்டத்துக்குத் தடையாக இருக்கும் என்று, எம்.ஜி.ஆர். அதை நீக்கி விடுமாறு சொல்லி விட்டார்.
செட்டியார், பப்பியின் பரம விசிறி. அதேநேரத்தில், எம்.ஜி.ஆரின் உத்தரவை அவரால் உதாசீனம் செய்யவும் முடியவில்லை. யவ்வன பம்பரமாகச் சுழன்றாடும் பப்பியின் பாதங்களை விட்டுத்தர முடியாது என மனத்தின் குரல் கூவியது. ஹீரோவின் தயவும் தேவை. வேறு வழியின்றி, இடைவேளையில் தசாவதார பாடல் காட்சி காட்டப்பட்டது.
எம்.ஜி.ஆர். - பத்மினி ஜோடியாக நடித்த ஐந்தும் சமூகப்படங்கள் அல்ல. அத்தனையும் ராஜா - ராணி கதைகள். மதுரைவீரனுக்கு அடுத்து, மெர்ரிலாண்ட் ஸ்டுடியோ தயாரித்த ராஜராஜன், மன்னாதி மன்னன், ராணிசம்யுக்தா, விக்ரமாதித்தன் ஆகியவை மற்ற நான்கு படங்கள்.
டாக்டர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் - ஏ.பி.கோமளா ரேர் காம்பினேஷனில், ‘நிலவோடு வான் முகில் விளையாடுதே…’ பாடல் மட்டும் ராஜராஜனை ஞாபகப்படுத்துகிறது.
ராஜராஜனில் ஒரு விசேஷம். அண்ணன் - தம்பிகளான எம்.ஜி.சக்ரபாணியும் எம்.ஜி.ராமச்சந்திரனும், அக்கா - தங்கைகளான லலிதா, பத்மினியுடன் நடித்த ஒரே படம். ‘ஆடும் அழகே அழகு…’ எனத் தொடங்கும் பாடலுக்கு, லலிதா - பத்மினியின் நடனம் நிறைவாக இடம் பெற்றது. அதன்பின்னர், லலிதா திருமணமாகிச் சென்றுவிட்டார். மீண்டும் நடிக்க வரவில்லை.
1960-ல் ராஜா தேசிங்கு - எஸ்.எஸ்.ஆர்., 1961-ல் அரசிளங்குமரி - எம்.என்.நம்பியார், 1971-ல் ரிக்ஷாகாரன் - ஆர்.எஸ்.மனோகர் ஆகியோரது மனைவியாகவும் பத்மினி, எம்.ஜி.ஆர். படங்களில் நடித்துள்ளார். சகோதரி பத்மினியுடன் கடைசியாக நடித்த ராசியோ என்னவோ, ரிக்ஷாக்காரனுக்காக எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான பாரத் விருது கிடைத்தது.
தனக்கு முக்கியத்துவம் தராத எந்த சீனிலும் தான் இடம் பெறுவதை எம்.ஜி.ஆர். அனுமதிக்கமாட்டார். நாயகன் வெறும் காட்சிப் பொருளாகக் காட்டப்படுவதை விரும்பாதவர். அவரது ஆரம்ப சினிமா நாள்களில், வசனம் பேசவும் வாய்ப்பு கிடைக்காமல் வதைக்கப்பட்டிருக்கிறார். முந்தைய உள்குத்துக் காயங்களின் எதிரொலியால், எப்போதும் எச்சரிக்கையாக இருப்பார். ஆனால், அதற்கு விதிவிலக்கு மன்னாதி மன்னன்.
மன்னாதி மன்னன்
கறந்த பால் போல் கொஞ்சமும் கலப்படமற்ற லதாங்கி ராகப் பாடல், ‘ஆடாத மனமும் உண்டோ…’
எம்.எல்.வசந்தகுமாரி - டி.எம்.சௌந்தரராஜன் குரல்களில் அது ஒரு கோமள கீதம்! கேட்கக் கேட்கத் திகட்டாத கானம் என்பார்களே அப்படி.
காட்சியைச் சற்றே மனத்தில் இருத்திப் பாருங்கள். பத்மினியும் எம்.ஜி.ஆரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொண்டே பாடும், பப்பி அற்புதமாக ஆடும் அபிநயச் சித்திரம்! அதில் ஒரே இடத்தில் உதயசூரியன்போல் தகதகக்கும் திறந்த மார்போடு அமர்ந்து, எம்.ஜி.ஆர். வாத்தியம் வாசிக்க, அதற்கேற்ப பத்மினியின் பாதங்களும் ஒலிக்கும். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் நூற்றுக்கான சினிமாக்களில், அவர் இதுபோல் வேறு எந்தப் படத்திலாவது சும்மா உட்கார்ந்து பாடியதை யாரும் பார்ப்பது துர்லபம்.
நாடோடி மன்னனுக்கும் மன்னாதி மன்னனுக்கும் ஒரே வசனகர்த்தா கண்ணதாசன். மன்னாதி மன்னனில், ‘அச்சம் என்பது மடமையடா…’ உள்ளிட்ட பெரும்பாலான பாடல்கள் அவர் எழுதியவை. ஆனால், ‘ஆடாத மனமும்…’ மட்டும், மருதகாசியின் கை வண்ணம். எத்தனை முயன்றும் கவிஞருக்கு வார்த்தைகள் சரியாக அமையாததால், மருதகாசியிடம் எழுதி வாங்கினர்.
கடந்த வார தினமணி நாளிதழில் தொடர் கட்டுரையின் ஒரு பகுதி---1
[IMG]https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11059855_952951704726525_858736799331440147_n.jpg?
oh=53bc5e2a5f6060008edc7941df1ec35e&oe=559A7E9F&__ gda__=1439995486_bbe6f073d3a076869f0ea270895efd63[/IMG]
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
Bookmarks