-
20th April 2015, 10:30 AM
#11
Junior Member
Veteran Hubber
சட்டமன்ற நிகழ்வு - 1982
பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள் 1982ம் வருடம் ஜூலை மாதம், உலகமே போற்று வியந்த "சத்துணவு" திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த சத்துணவு திட்டமானது, பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த "மதிய உணவு" திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நம் புரட்சித்தலைவர் நடைமுறைப்படுத்திய "சத்துணவு" திட்டத்தின் படி, தமிழகமெங்குமுள்ள ஏழை குழந்தைகள், ஆண்டு முழுவதும் பயன் பெறுவர். இதற்காக, அப்போது தமிழக வரவு - செலவு திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இது குறித்த மான்ய கோரிக்கை விவாதம் நடந்த போழ்து, அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு. குமரி அனந்தன் அவர்கள், (1980 சட்டமன்ற தேர்தலில், இவர் தோற்றுவித்த காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு, நம் புரட்சித்தலைவரின் ஆதரவுடன் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆனவர்) எழுந்து, இந்த சத்துணவு திட்டம் தேவையற்றது, இதற்கு ஒதுக்கப்படும் 200 கோடி ரூபாயில் ஒரு தொழிற்சாலை அமைத்தால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். உடனே, நம் பொன்மனம் கொண்ட புரட்சித்தலைவர் அவர்கள், தனக்கே உரிய பெருந்தன்மையுடன், எழுந்து, "குமரி அனந்தன் அவர்களே ! தாங்கள் சொன்னபடி தொழிற்சாலை அமைத்தால் எத்தனை பேர்களுக்கு வேலை கிடைக்கும் ? என்று வினவினார்.
"எப்படியும் ஆயிரம் பேருக்காவது வேலை கிடைக்கும்" என்று பதிலுரைத்தார் திரு. குமரி அனந்தன்.
மீண்டும், நம் இதய தெய்வம், புன்னகை வேந்தன் புரட்சித்தலைவர் அவர்கள், சிரித்துக்கொண்டே, "தமிழ் நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள் ஆகியவற்றில் ஒரு மையத்துக்கு ஒரு சத்துணவு அமைப்பாளர், அவர்களுக்கு உதவியாக 2 சமையல் செய்யும் ஆயாக்கள், என மொத்தம் 60,000 பேர், அதுவும் பெண்கள், வேலை பார்க்கிறார்கள் தெரியுமா" என்று புள்ளி விவரத்துடன் புட்டு புட்டு வைத்ததை கூறியதும், அமைதியாய் அமர்ந்து விட்டார் அனந்தன் அவர்கள்.
அன்று சட்டமன்றத்தில், சத்துணவு திட்டத்தை திரு. குமரி அனந்தன் போலவே கலைஞர் கருணாநிதி அவர்களும் குறை கூறினார். ஆனால், திரு. கலைஞர் கருணாநிதி அவர்களே பின்னாளில் முதல்வராக (அதுவும் புரட்சித்தலைவர் மறைந்த பிறகுதான்) பொறுப்பேற்ற பிறகு, கூடுதலாக ஒரு முட்டையுடன் இந்த சத்துணவு திட்டத்தை தொடர்ந்தார்.
இதை இப்போது குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால் -
தற்போது நடைமுறையில் இருக்கும் பல மக்கள் நல திட்டங்கள், தீர்க்க தரிசனத்துடன், நம் தமிழ் நாடாண்ட மன்னவனாம், மக்கள் நலத்தையே குறிக்கோளாக கொண்டு, ஓய்வே கொள்ளாத ஒப்பற்ற தெய்வமாய், மக்கள் என்றும் போற்றும் மக்களின் முதல்வரான நம் பொன்மனச்செம்மல் அவர்களால் தொடங்கப்பட்டு, அவருக்குப்பின் வந்தவர்களால் கைவிடப்படாத அளவுக்கு, வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
Last edited by makkal thilagam mgr; 20th April 2015 at 10:38 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th April 2015 10:30 AM
# ADS
Circuit advertisement
Bookmarks