-
20th April 2015, 09:24 AM
#11
Junior Member
Seasoned Hubber
வினோத் சார்
எனக்கு நினைவு தெரிந்தவரை காஞ்சிபுரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தில் 1967 முதல் 1977 வரை தீவிரமாக இருந்துள்ளேன் .அதே போல் என்னுடைய நண்பர்கள் சிலர் சிவாஜி மன்றத்தில் ரசிகராக இருந்தார்கள்.மறந்து கூட எம்ஜிஆர் பெயரை சொல்ல மாட்டார்கள் அதே போல் நாங்கள் கூட சிவாஜி பேரை சொல்ல மாட்டோம் .இரு சாராரும் அடை மொழியில் பெயரை கூறுவோம். காவல்காரன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை 11 ஆண்டுகள் மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் வெளியான நேரத்தில் காஞ்சிபுரம் நகரம் திருவிழாவாகவே காட்சி தந்தது . சிவாஜி ரசிகர்கள் நம் படத்தை பல் வேறு கோணங்களில் விமர்சனம் செய்தார்கள். பதிலுக்கு நாமும் அவர்கள் படம் வந்த நேரத்தில் விமர்சனம் செய்தோம் . சில சமயங்கள் நாகரீகம் எல்லை மீறி போனதுண்டு .
காலங்கள் மாறியது
மக்கள் திலகமும் முதல்வரானார் .எல்லா துறையிலும் புகழுடன் வாழ்ந்து பல சரித்திர சாதனைகள்
புரிந்து தெய்வமாகி விட்டார் .மக்கள் திலகமும் சிவாஜியின் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .இருவரும் மேடையில் அண்ணன் - தம்பி என்று பாச மழையில் நனைந்தார்கள் .மக்கள் திலகம் உடல் நலன் குன்றிய போது சர்வ மத பிராத்தனையில் திரு சிவாஜி கலந்து கொண்டு பிராத்தனை செய்தார். அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த மக்கள் திலகத்தை சந்தித்தார். இதுதான் அன்பு . இருவரும் பரஸ்பர உறவில் தங்களை அடையாளம் காட்டிய போது ஒரு சில ரசிகர்கள் இரண்டு பக்கமும் இன்னும் அந்த கால கட்டத்தில் நிறப்து வியப்பாக உள்ளது .
நகைச்ச்சுவை என்ற பெயரால் நாமும் பல உதாரணங்களை கூறலாம்.கிண்டல்செய்யலாம்.நமக்கு அது தேவை இல்லை .திரு கோபால் அவர்கள் திரியில் அவருடைய அபிமான திரு சிவாஜி படங்களை
தோற்றத்தை ,கருப்பு தினம் ,குப்பை படங்கள் , என்று கூறியதை போல் நம் ரசிகர்கள் ஒரு நாளும் கூற மாட்டார்கள் .எம்ஜிஆர் என்ற அந்த மூன்றெழுத்து கோபாலுக்கு மட்டும் சிம்ம சொப்பனமாக இருப்பது வியப்பில்லை.அவர் 50 ஆண்டுகள் பின் நோக்கியே வாழ்கிறார் .அப்படியே இருந்து போகட்டும்.
-
20th April 2015 09:24 AM
# ADS
Circuit advertisement
Bookmarks