-
20th April 2015, 03:04 PM
#271
Junior Member
Seasoned Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றிய போட்டி கட்டுரைகள் சமீபத்தில் வல்லமை இணைய தளத்தில் வெளிவந்த தொகுப்பினை நான் திரியில் பதிவிட்டேன் .இன்று வல்லமை இணைய தளத்தில் திரு சசிகுமார் , துபாய் எழதிய கட்டுரை மிகவும் அற்புதமாக இருந்தது .
காலம் கடந்தாலும் கடல் தாண்டி வாழும் தமிழ் உள்ளங்கள் இன்றும் நம் மக்கள் திலகத்தை பற்றி நினைவு கூர்வது மகிழ்ச்சியான செய்தியாகும்.வல்லமை இணைய தளத்திற்கும் , திரு சசிகுமார் அவர்களுக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்வோம் .
-
20th April 2015 03:04 PM
# ADS
Circuit advertisement
-
20th April 2015, 03:23 PM
#272
Junior Member
Seasoned Hubber
திருச்சி -கெயிட்டி அரங்கில் அன்பே வா படம் பற்றிய தகவலை வழங்கிய திரு ரவிகிரண் அவர்களுக்கு நன்றி .
-
20th April 2015, 03:53 PM
#273
Junior Member
Seasoned Hubber
FROM MY PIC FILE
-
20th April 2015, 03:56 PM
#274
Junior Member
Seasoned Hubber
FROM MY PIC FILE
-
20th April 2015, 03:58 PM
#275
Junior Member
Seasoned Hubber
-
20th April 2015, 04:28 PM
#276
Junior Member
Veteran Hubber
இரு திலகங்களின் படம் ஒரு செயற்கையான பேட்டிக்காக ( for formality purpose )வைத்த ஒரு இடை சொருகலாகவே தெரிகிறது.

Originally Posted by
varadakumar sundaraman
from my pic file

-
20th April 2015, 04:45 PM
#277
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
saileshbasu
മനസിലായെ! In English understood.
திரு.சைலேஷ் சார், நீங்கள் பல மொழிகள் அறிந்தவர். சத்தியமாக எனக்கு மலையாளம் தெரியாது. என்ன இது?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th April 2015, 04:47 PM
#278
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
திருச்சி கெய்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகளாக சென்ற வெள்ளிகிழமை முதல் ஏவிஎம் வசம் உள்ள "அன்பேவா" திரையிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துகொள்கிறேன் !
ரசிகர்கள் சார்பில் ரசிகர்மன்ற வினைல் பேனேர் மற்றும் கட்சி வண்ணத்தில் காகித மாலை அணிவிக்கபட்டுளது !
தகவலுக்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
20th April 2015, 04:53 PM
#279
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
சட்டமன்ற நிகழ்வு - 1982
பொற்கால ஆட்சி தந்த நம் பொன்மனச்செம்மல் அவர்கள் 1982ம் வருடம் ஜூலை மாதம், உலகமே போற்று வியந்த "சத்துணவு" திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த சத்துணவு திட்டமானது, பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த "மதிய உணவு" திட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நம் புரட்சித்தலைவர் நடைமுறைப்படுத்திய "சத்துணவு" திட்டத்தின் படி, தமிழகமெங்குமுள்ள ஏழை குழந்தைகள், ஆண்டு முழுவதும் பயன் பெறுவர். இதற்காக, அப்போது தமிழக வரவு - செலவு திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இது குறித்த மான்ய கோரிக்கை விவாதம் நடந்த போழ்து, அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு. குமரி அனந்தன் அவர்கள், (1980 சட்டமன்ற தேர்தலில், இவர் தோற்றுவித்த காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டு, நம் புரட்சித்தலைவரின் ஆதரவுடன் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆனவர்) எழுந்து, இந்த சத்துணவு திட்டம் தேவையற்றது, இதற்கு ஒதுக்கப்படும் 200 கோடி ரூபாயில் ஒரு தொழிற்சாலை அமைத்தால் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். உடனே, நம் பொன்மனம் கொண்ட புரட்சித்தலைவர் அவர்கள், தனக்கே உரிய பெருந்தன்மையுடன், எழுந்து, "குமரி அனந்தன் அவர்களே ! தாங்கள் சொன்னபடி தொழிற்சாலை அமைத்தால் எத்தனை பேர்களுக்கு வேலை கிடைக்கும் ? என்று வினவினார்.
"எப்படியும் ஆயிரம் பேருக்காவது வேலை கிடைக்கும்" என்று பதிலுரைத்தார் திரு. குமரி அனந்தன்.
மீண்டும், நம் இதய தெய்வம், புன்னகை வேந்தன் புரட்சித்தலைவர் அவர்கள், சிரித்துக்கொண்டே, "தமிழ் நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகள் ஆகியவற்றில் ஒரு மையத்துக்கு ஒரு சத்துணவு அமைப்பாளர், அவர்களுக்கு உதவியாக 2 சமையல் செய்யும் ஆயாக்கள், என மொத்தம் 60,000 பேர், அதுவும் பெண்கள், வேலை பார்க்கிறார்கள் தெரியுமா" என்று புள்ளி விவரத்துடன் புட்டு புட்டு வைத்ததை கூறியதும், அமைதியாய் அமர்ந்து விட்டார் அனந்தன் அவர்கள்.
அன்று சட்டமன்றத்தில், சத்துணவு திட்டத்தை திரு. குமரி அனந்தன் போலவே கலைஞர் கருணாநிதி அவர்களும் குறை கூறினார். ஆனால், திரு. கலைஞர் கருணாநிதி அவர்களே பின்னாளில் முதல்வராக (அதுவும் புரட்சித்தலைவர் மறைந்த பிறகுதான்) பொறுப்பேற்ற பிறகு, கூடுதலாக ஒரு முட்டையுடன் இந்த சத்துணவு திட்டத்தை தொடர்ந்தார்.
இதை இப்போது குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால் -
தற்போது நடைமுறையில் இருக்கும் பல மக்கள் நல திட்டங்கள், தீர்க்க தரிசனத்துடன், நம் தமிழ் நாடாண்ட மன்னவனாம், மக்கள் நலத்தையே குறிக்கோளாக கொண்டு, ஓய்வே கொள்ளாத ஒப்பற்ற தெய்வமாய், மக்கள் என்றும் போற்றும் மக்களின் முதல்வரான நம் பொன்மனச்செம்மல் அவர்களால் தொடங்கப்பட்டு, அவருக்குப்பின் வந்தவர்களால் கைவிடப்படாத அளவுக்கு, வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
நன்றி திரு.செல்வகுமார் சார். சத்துணவு திட்டத்தை பிச்சைக்கார திட்டம் என்றவர்களே பின்னர், அத்திட்டத்தை தங்கள் ஆட்சியில் தொடர்ந்தனர்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
20th April 2015, 05:59 PM
#280
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
திரு.சைலேஷ் சார், நீங்கள் பல மொழிகள் அறிந்தவர். சத்தியமாக எனக்கு மலையாளம் தெரியாது. என்ன இது?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
MANASILAAYE.......means...Purindhukonden !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks