வாசு சார்
என் உள்ளத்தை அப்படியே பிரதி பலித்து விட்டீர்கள். தங்களுக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் வலைப்பூவில் எழுதிக் கொண்டு இருப்பர். இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லி சாத்தியமில்லை. வேண்டுமென்றே சொல்பவர்கள் புதிது புதிதாக ஏதாவது விமர்சனங்களை செய்து கொண்டு தான் இருப்பார்கள்.
சாதனைகளைப் பற்றி முன்பு செய்யப் பட்ட விமர்சனங்களெல்லாம் பம்மலாரின் ஆவணங்கள் மூலம் தவிடு பொடியாக்கப் பட்டு விட்டது. எனவே இன்றைய தலைமுறை என்கிற கேடயத்தின் மூலம் நடிகர் திலகத்தின் நடிப்பை விமர்சிக்கிறார்கள். இதற்கும் நாம் அவ்வப்போது தகுந்த காணொளிகள், நிழற்படங்கள், என்று அவற்றை எதிர் கொண்டு வருகிறோம். இதற்குப் பின்னால் நம்முடைய உழைப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை புரிந்து கொள்பவர்களுக்குத் தான் அவற்றின் அருமை தெரியும். காணொளிகள், நிழற்படங்கள், ஆவணங்கள் இவற்றை நம் திரியிலேயே கேலி செய்ததும் தேவையில்லை என்றும் பயனற்றவை என்றும் கூறியதும் நாம் கண்டது தானே. இன்று ஒவ்வொன்றிற்கும் ஆவணம் தேவைப் படும் போது நாம் பம்மலாரின் பொக்கிஷத்தைத் தானே பயன் படுத்துகிறோம்.
இது போல கடும் உழைப்புடன் பதிவுகள் இடப் படும் போது திசை திரும்பும் வகையில் விவாதங்கள் இடம் பெறாமல் இருந்தால் நாம் சொல்ல வந்ததை இன்னும் விவரமாக சொல்லலாம் என்கிற நோக்கில் தான் பதிவுகளை முறைப் படுத்தக் கேட்டுக் கொள்ளப் பட்டது.
அதே போல தான் தேர்ந்தெடுத்த சிலரின் பதிவுகளை மட்டும் சிலர் பாராட்டுவதும் இங்கே அவ்வப்போது நடைபெறுகிறது. இதனை சுட்டிக் காட்டிய போது எனக்கும் கண்டனங்கள் வந்தன.
இதில் அவ்வப்போது அரசியல் வேறு. நடிகர் திலகம் 1952ல் பராசக்தி வெளியான நாளிலிருந்தே இந்த இருட்டடிப்பு செய்வதையெல்லாம் சந்தித்துத் தானே வந்தார். அவர் என்ன புதியதாகவா இருட்டடிப்பு செய்யப் படுகிறார்.
நம்மைப் போன்ற உள்ளங்களில் உள்ளதை அப்படியே தாங்கள் உரைத்திருக்கிறீர்கள்.